WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Iran, imperialism, and the "left"
ஈரான், ஏகாதிபத்தியம் மற்றும் "இடது"
By Alex Lantier
7 July 2009
Use this
version to print | Send
feedback
சமீபத்திய நிகழ்வுகள் தோல்வியுற்ற சீர்திருத்தவாத ஜனாதிபதி வேட்பாளர் மீர்
ஹொசைன் மெளசவியின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஈரானிய எதிர்ப்பு இயக்கத்தின் முதலாளித்துவ,
அரசியல் பிற்போக்குத் தன்மையை சமீபத்திய நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதலாக உறுதிசெய்துள்ளன.
இஸ்லாமிய குடியரசின் பல பிளவுகளுக்கு இடையே அரசியல் போராட்டம் தீவிரம்
அடைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் ஈரானின் வெளிநாட்டுக் கொள்கை (மத்திய கிழக்கு மற்றும் மத்திய
ஆசியாவில் அமெரிக்க, ஐரோப்பிய குறிக்கோள்களுக்கு ஒத்துப் போதல்), மற்றும் பொருளாதார கொள்கையில்
(சந்தை சார்புடைய கொள்கைகளை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவு) கடும் மாற்றத்திற்கு ஆதரவான
"சீர்திருத்த போக்குகளுக்கு" ஆதரவு தரும் வகையில் அரசியல் சாதகத்தன்மையை மாற்ற அழுத்தம் கொடுத்து
வருகின்றன.
ஐரோப்பிய சக்திகள் ஈரானில் இருந்து தங்கள் தூதர்கள் அனைவரையும் திரும்பப் பெற்றுக்
கொள்ளுவது என்று கூட்டாக அச்சுறுத்தியுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இருக்கும் ஈரானின் தூதர்களை
தருவித்து பிரிட்டிஷ் தூதரக ஊழியர்களை காவலில் வைத்திருப்பது பற்றி எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இன்னும் கூடுதலான தூண்டுதல், அச்சுறுத்தல் என்ற நடவடிக்கையில், துணை ஜனாதிபதி
ஜோ பிடென், நியூ யோர்க் டைம்ஸிடம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை
எடுத்தால் அமெரிக்கா தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தாது என்று கூறியுள்ளார். பிடென் அறிக்கை வெளிவந்துள்ள
நேரம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரானிய அரசியல் நடைமுறைக்குள் தீவிர அதிகாரப் போராட்டத்திற்கு
இடையே, பிடெனுடைய செய்தி ஒரு எச்சரிக்கையாக --குறிப்பாக மதில்மேல் இன்னும் அமர்ந்திருக்கும், இஸ்லாமிய
குடியரசில் அதிகாரத்தில் பிறரை இருத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்களுக்கு--அமெரிக்காவும் அதன் வாடிக்கை
நாடுகளும் ஈரானில் கருத்துவேறுபாடு கொண்ட சக்திகள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு நீண்ட நாட்கள்
காத்திருக்கமாட்டா என்றும் -- உள்ளது.
பிடென் கருத்தை ஆணித்தரமாக காட்டும் வகையில், துணை ஜனாதிபதியின் உரையுடன்
ரோஜர் கோஹனுடைய கட்டுரை ஒன்றும் இணைந்து வந்திருந்தது; அவர் இப்பொழுதுதான் தெஹ்ரானில் வீரதீரச்
செயல்கள் நடத்திய பின்னர் திரும்பி வந்துள்ளார்; அங்கு அவர் நியூ யோர்க் டைம்ஸின் தேர்தலுக்கு
பிந்தைய பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார்; அதில் அவர் அஹ்மதிநெஜாட்டின் இஸ்லாமிய குடியரசில் இருக்கும்
எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியை "தூக்கியெறியச்" சொல்லி வலியுறுத்துகிறார்.
இவை, மற்றும் இத்தொடர்புடைய நிகழ்வுகள் தேர்தலுக்கு பிந்தைய
ஆர்ப்பாட்டங்களின் பிற்போக்கு அரசியல் தன்மை மற்றும் அதன் மட்டுப்படுத்தப்பட்ட, மத்தியதர வர்க்க சமூக
அடித்தளம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியிருக்கையில், பல்வேறு "இடது" குழுக்கள் தாங்கள் மெளசவிக்கு ஆதரவாக
நிற்பதை நியாயப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்பு முதல் பிரான்சின் (NPA)
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வரை, எதிர்ப்பு இயக்கங்கள் கொண்டுள்ள புரட்சிகர நற்சான்றுகள் எனக்
கூறப்படுபவற்றை புகழ்ந்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
பிரிட்டனின்
International Marxist Tendencies (IMT)
என்னும் அமைப்பின் வாசகர் ஒருவர் ஈரானிய நெருக்கடி பற்றி உலக சோசலிச வலைத் தளம் கொடுக்கும்
செய்திகளைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். "உலக வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் தங்கள்
ஆற்றலை இத்தேர்தல் மோசடி அல்ல என்றும், வேறுவிதமாகக் கூறும் இடதுகளை தாக்குவதையும் பார்த்து நான்
பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் இஸ்லாமிய குடியரசிற்கு ஆதரவாக
வந்துள்ளனர்."
இப்படி WSWS
ஐ குறைகூறுவதால் எழுந்துள்ள பிரச்சினை, மெளசவியின் "இடது" நண்பர்கள் எந்த வழிவகையில் தங்கள் அரசியல்
நோக்கங்களை அடைய நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும். இத்தாக்குதலை எழுதியவர்
WSWS அமெரிக்க,
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் அஹ்மெதிநெஜாட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய
முதலாளித்துவத்தின் கன்னைகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதில் பெரும் சீற்றம் கொண்டுள்ளார். இந்த
விமர்சகரின் நிலைப்பாடு, ஈரானிலும் சர்வதேச அளவிலும் இச்செயல்களை புரிந்து கொண்டுவரும் வர்க்க சக்திகளை
பற்றி பொருட்படுத்தாமல், இஸ்லாமிய குடியரசு அழிக்கப்படுவது வரவேற்கப்படவேண்டும் என்பதாகும்.
IMT ஒப்புதலுடன்
மேறகோளிட்டுள்ள கடிதத்தின் நிலைப்பாடு மட்டும் இல்லை இது. பிரெஞ்சு
NPA யும் ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டது, அதில்
இஸ்லாமிய குடியரசிற்கு எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஆதரவு கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு
ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தை திரட்ட பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி முயன்று கொண்டு
இருக்கும்போது வந்தது!
குட்டி முதலாளித்துவ இடதின் அரசியல் மற்றும் தத்துவார்த்த திவாலை குறிப்பிடத்தக்க
வகையில் பளிச்சென்று IMT
தலைவர் அலன் வூட்ஸ் ஈரானிய நெருக்கடி பற்றி எழுதிய, ஜூன் 26 வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் காணலாம்.
("மிக்ஷீணீஸீ க்ஷீமீரீவீனீமீ stமீஜீs uஜீ tமீக்ஷீக்ஷீஷீக்ஷீணீ
ரீமீஸீமீக்ஷீணீறீ stக்ஷீவீளீமீ வீs ஸீமீமீபீமீபீ!"). இது இன்னும்
விரிவான முறையில் WSWS
மீது IMT
வாசகரின் தாக்குதலில் இருக்கும் தவறான அரசியல் கருத்துக்களை பற்றி
விரிவான விளக்கத்தை கொடுக்கிறது.
மெளசவியின் எதிர்ப்பு இயக்கம் ஒரு வலதுசாரி இயக்கம் என்ற தெளிவான உண்மையை
வூட்ஸ் மறுக்க முற்படுகிறார். "இடதில் சிலர் ஈரானில் நடக்கும் இயக்கம் முற்போக்கானதா என்று வினா
எழுப்புகின்றனர். அவர்கள் இந்த இயக்கம் இஸ்லாமிய ஆட்சியை அகற்ற 'ஏகாதிபத்திய சதி' என்று கூறும்
பிரச்சாரத்தால் கவரப்பட்டவர்கள்."
எந்தப் "பிரச்சாரத்தை" வூட்ஸ் குறிப்பிடுகிறார்? பல வாரங்களாக
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் செய்தி ஊடகம் மக்கள் கருத்தை சிதைக்கவும் திரிக்கவும் ஒரு அயராப்
பிரச்சாரத்தை மேற்கொண்டன. இத்தகைய "முற்போக்கு" தாராண்மை வாதத்தின் தலைமைக் கப்பல் போன்ற
Nation,
முன்பு ஷாவினுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த நிருபர்
ஒருவர் அனுப்பிய அறிக்கைகளை கொண்டு செய்தி ஊடகப் பிரச்சாரத்தை நெறிப்படுத்தியது. இத்தகைய மகத்தான,
தவறான பிரச்சாரத்தின் முன் WSWS
உட்பட ஒரு சிறு எண்ணிக்கையான பதிப்புக்கள் மெளசவி தலைமையில் இருக்கும் எதிர்ப்புக்களின் சமூக, அரசியல்
தளத்தை பகுப்பாய முற்பட்டன. வூட்ஸைப் பொறுத்தவரையில், உத்தியோகபூர்வ வெகுஜன செய்தி ஊடகம்
அனுமதித்துள்ள கதையுடன் எது முரண்பட்டாலும் அது நெறியற்றது.
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை குறைகூறுபவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
"ஏகாதிபத்திய சதி" என்றுதான் விளக்குகின்றனர் என்ற வூட்ஸின் கூற்று பற்றிக் கூற வேண்டுமானால், இது ஒரு
சோளக்காட்டுப் பொம்மையை நிறுவும் முயற்சியாகும் எனலாம்.
WSWS அளித்த
பகுப்பாய்வு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஈரானிய ஆட்சியில் இருக்கும் உண்மையான பிளவுகளைப் பிரதிபலிக்கின்றன
என்பதை விளக்கியது. ஆர்பாட்டக்காரர்களிடையே இஸ்லாமிய ஆட்சியை நேர்மையாக எதிர்த்த கூறுபாடுகளும்
இருந்தன என்பதையும் நாம் குறித்தோம். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானிய முதலாளித்துவத்தின்
கன்னைகளால் அரசியலில் வழிநடத்தப்பட்டனர், நகர்ப்புற மத்தியதர வர்க்கங்களின் சலுகை பெற்ற பிரிவுகளின்
முக்கிய சக்திகளை ஈர்த்தனர், இது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்குடைய
திட்டத்தை அடிப்படையாக கொண்டது. மேலும் "ஏகாதிபத்திய சதி" என்ற பிரச்சினை வூட்ஸ் தன்னுடைய
வாசகர்கள் நம்ப வேண்டும் என விரும்பும் அளவிற்கு முக்கியத்துவம் அற்றது அல்ல. மெளசவியின் இயக்கத்திற்கு
IMT
கொடுக்கும் ஆதரவை வூட்ஸ் நியாயப்படுத்துவதற்குத்தான் அதன் தலைமையில் வர்க்கவேலைத் திட்டம் மற்றும்
ஏகாதிபத்திய சக்திகளுடன் தொடர்புடைய நோக்கங்களை பூசி மெழுகுகிறார்.
அவர் எழுதுகிறார்: "அமெரிக்கா ஈரானில் இரகசியமாக ஆட்சி மாற்றத்திற்கு
முயற்சி செய்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை; அது மூன்று தசாப்தங்களாக இதைத்தான் செய்து
வருகிறது. ஒரு சிறப்பு நிதியை இதற்கென வாஷிங்டன் ஒதுக்கியுள்ளது என்பதையும் நாம் அறிவோம்." ஆனால் இந்த
உண்மைகள் அனைத்தும் நிலைமையில் ஒரு பங்கை ஆற்றவில்லை என்பது போல், இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட
வேண்டியது இல்லை என்பது போல் எழுதுகிறார். "ஆனால், தற்போதைய நிலைமையில் வேடிக்கையான விஷயம்
அமெரிக்கர்கள் எவ்வளவு நிதானத்துடன் இருந்துள்ளனர் என்பதுதான்."
இது ஒரு அசாதாரணமான அறிக்கை ஆகும்.
IMT வழியின் மற்ற
கூறுபாட்டை போலவே, இது மக்கள் செய்தி ஊடக வழியை ஏற்கிறது; அது ஒபாமா ஈரான்மீது நிதானப் போக்கு
அணுகுமுறையை கொண்டுள்ளார் என்று கூறுகிறது. உண்மையில் ஈரானிய நெருக்கடிக்கு அமெரிக்க விடையிறுப்பு,
பிடெனின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் உட்பட, ஈரானை சூழ்ந்துள்ள அமெரிக்க கொள்கையின் அடிப்படை பின்னணியை
வெளிப்படுத்தியுள்ளது (அத்துடன் அண்டை ஈராக், ஆப்கானிஸ்தானும் சேரும், பாரசீக வளைகுடா முழுவதும் தளங்கள்
அமைத்திருப்பதும் சேரும்), இவை அனைத்தும் இடைவிடாத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படும் என்பது
வெளிவந்துள்ளது. இந்தக் கொள்கை ஒளிவு முறைவுடன் செய்யப்படவில்லை, ஆக்கிரோஷத்துடன் செய்யப்படுகிறது,
குற்றத்தன்மை நிறைந்தது.
ஈரானில் ஏகாதிபத்திய குறுக்கீடு பிரச்சினையை முற்றிலும் தவிர்ப்பதற்கு வூட்ஸ் இன்னும்
கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. Hugo Chavez
உடைய வெனிசூலா ஆட்சிக்கு இவர் ஆதரவு கொடுக்கிறார்; அவரோ ஒரு முதலாளித்துவ ஜனரஞ்சக அரசியல்வாதி,
அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு வாஷிங்டன் விரும்புகிறது. "வெனிசூலாவில் பல மக்களுடைய
எதிர்கொள்ளலை (ஷாவேஸ் மட்டும் அல்ல)" வூட்ஸ் ஒப்புக் கொள்ளுகிறார் அவர்கள் பொலிவிய அரசாங்கத்தின்
உறுதிப்பாட்டைக் குலைக்க விரும்பும் மத்தியதர வர்க்க விஷமிகளின் பிற்போக்கு இயக்கங்களோடு [அதாவது
ஷாவேஸ் ஆட்சியோடு] ஒரு ஒப்புநோக்கத்தக்க தன்மையை, ஈரானிய எதிர்ப்புக்களோடு வரைந்துள்ளனர்"
என்பதை வூட்ஸ் ஒப்புக் கொள்ளுகிறார்.
இதை வூட்ஸ் கோபத்துடன் எதிர்கொள்கிறார்; "ஈரான் நிலைமையுடன் இதற்கு என்ன
தொடர்பு? ஈரான் அரசாங்கம் ஒரு முன்னேற்றமான, தொழிலாள வர்க்க சார்புடைய அரசாங்கம் அல்ல, ஒரு
பிற்போக்கு மத சார்புடைய சர்வாதிகார ஆட்சியாகும்.... ஈரானில் முல்லாக்கள் ஆட்சியில் முற்போக்கு ஏதும்
இல்லை என்பதை உண்மைகள் காட்டுகின்றன; இதை வெனிசூலா மற்றும் பொலிவியாவுடன் ஒப்பிடுவதற்கு எந்த
அடிப்படையும் இல்லை."
பணயத்தில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது வூட்ஸின் ஏகாதிபத்தியத்தின் பால்
கொண்டுள்ள கொள்கையற்ற, கோழைத்தனமான அணுகுமுறை ஆகும். அனைத்து ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளிலும்
ஏகாதிபத்திய குறுக்கீடு தொடர்பாக ஒரு கொள்கையளவிலான வர்க்க எதிர்ப்பை இவர் ஏற்கவில்லை. மாறாக
மூன்றாம் உலகில் இவர் விரும்பும் முதாலாளித்துவ ஆட்சிகளில் இருக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சியை இவர்
எதிர்க்கிறார்; இவருக்கு பிடித்தம் இல்லாத ஆட்சிகளை அது பாதிக்கையில் அவற்றைப் புறக்கணிக்கிறார்.
வூட்ஸ் இதன்பின் மெளசவிய எதிர்ப்பு இயக்கத்திற்கான தன் முன்னோக்கை விளக்க
முற்படுகிறார். "இதனிடம் ஒரு குழப்பத் தன்மை நிலவுகிறது" என்று கூறும் அவர், "ஒரு புரட்சியின் துவக்க கட்டம்
எப்பொழுதும் ஒழுங்கற்ற, குழப்பமான நிலையைத்தான் கொண்டிருப்பதைக் காட்டும்." ஒரு குழப்பமான, சிக்கல்
வாய்ந்த நிலைக்கு உதாரணமாக அவர் 1917 பெப்ருவரி புரட்சியை மேற்கோளிடுகிறார் அதுதான் ஜாரை அகற்றி
சில மாதங்களுக்குப் பின்னர் அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சியை அதிகாரத்தை எடுக்க அரங்கு அமைந்துக்
கொடுத்தது.
இந்த ஒப்புமைகள் ஏற்கத்தக்கவை அல்ல. பெப்ரவரிப் புரட்சியானது ஜாரை
ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வெகுஜன தொழிலாள வர்க்க எழுச்சி ஆகும். மெளசவியின் எதிர்ப்பு இயக்கம்
ஒரு மத்தியதர வர்க்க எதிர்ப்பு, மக்கள் ஆதரவு இல்லாதது.
மெளசவியின் எதிர்ப்புக்கள் எப்படி வளரக்கூடும் என்பது பற்றி விளக்குகையில், வூட்ஸ்
இன்னும் அதிகமாக சிக்கலில் மாட்டிக் கொள்ளுகிறார். மெளசவி சார்பு எதிர்ப்பாளர்களின் "ஜனநாயக போலித்
தோற்றங்களை" குறிப்பிட்டு அவர் ஈரானியர்கள் " 'ஜனநாயகத்' தலைவர்கள் பற்றிய பெரும் பிரமைகள்" பற்றி
கடுமையான படிப்பினையை பெறுவர் என்று கூறுகிறார். இவர் விளக்குவதாவது: "முதலாளித்துவ தாராண்மைவாதிகள்
ஒரு வனப்பு பூச்சு மாற்றத்தைத்தான் விரும்புகின்றனர்; அது அவர்களை அதிகாரப் பதவியில் இருத்தி, இன்னும் திறமையான
கட்டுப்பாட்டின்மூலம் தங்கள் சலுகைகளைக் காக்க வைக்கும் என்று கருதுகின்றனர்."
முற்போக்கு இல்லை என்று கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக இவர்
காக்க முற்படும் இயக்கத்தின் அரசியல் தலைமை பற்றி இதுதான் அவருடைய கருத்து ஆகும்!
வூட்ஸ் கூறும் காரணம் முதலாளித்துவ மக்கள் கருத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்
கொள்ளும் ஒரு பிற்போக்கு குட்டி முதலாளித்துவ அரசியல்வாதி உடையதைப் போல் உள்ளது. இவருடைய கட்டுரை
மெளசவி இயக்கத்திற்கு ஆதரவு தரும் மிகப் பெரிய "இடது" குழுக்களின் பெரும்பான்மையின் அரசியலுக்கு தக்க
உதாரணம் ஆகும் --அந்த ஆதரவு அவற்றின் சொந்த சமூக மற்றும் அரசிசயல் சார்பு பற்றி நிறையக் கூறுகிறது.
இந்த குட்டி முதலாளித்துவ குழுக்கள் தாங்கள் ஆதரிக்கும் இயக்கங்கள் பற்றி வர்க்க பகுப்பாய்வு எதையும்
செய்யவில்லை; ஈரானின் வரலாறு ஒரு ஒடுக்கப்பட்ட, அரைக் காலனித்துவ நாட்டின் மெளனமான வரலாறு என்று
கூறி, மிகச் சமீபத்திய வண்ண உரு கொடுக்கப்பட்டுள்ள "ஜனநாயக" பிரச்சாரத்திற்கு ஆதரவு என்ற வழியில்
நிற்கின்றன. |