WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India's Lalgarh "uprising"
Rival Stalinist camps abet reaction
இந்தியாவின் லால்கர் "எழுச்சி'
போட்டி ஸ்ராலினிச முகாம்கள் பிற்போக்குத்தனத்திற்கு உடந்தை
By Deepal Jayasekera and Keith Jones
1 July 2009
Use this version
to print | Send
feedback
மேற்கு வங்கம் லால்கரில் நடந்த, சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிக் கொண்டு இந்திய
முதலாளித்துவ வர்க்கமானது, மாவோயிச கிளர்ச்சியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஏழ்மை நிறைந்த பழங்குடி பகுதியில்
--அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான சவால்-- மாநிலத்திலும் இந்தியா முழுவதிலும் அரசியலை தீவிர வலதிற்கு
தள்ள எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைமையிலான மத்திய அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகம்
"சட்டம் மற்றும் ஒழுங்கு" சீர்குலைந்துவிட்டது என்று கூறிய புகார்களுக்கு தலை வணங்கி, மேற்கு வங்கத்தின் ஸ்ராலினிச
தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் 1,000 மத்திய இருப்பு போலிஸ் பிரிவுகளையும்,
COBRA எனப்படும்
உயரடுக்கு எழுச்சி எதிர்ப்புப்படை பிரிவின் நான்கு பிரிவுகளையும், மாநில போலீசையும் திரட்டி லால்கரில் அரசாங்கத்தின்
ஆணையை இரத்தம் தோய்ந்த விதத்தில் மீண்டும் உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக இந்தியப் பாதுகாப்பு படைகள் லால்கரில் தாக்குதலில்
ஈடுபட்டுள்ளன; இப்பகுதி மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில் 60 கிராமங்களை கொண்டு
கிட்டத்தட்ட 150,000 மக்களையும் கொண்டுள்ளது. இன்றுவரை அதிக இறப்பு எண்ணிக்கை இல்லை என்பது வெளிப்படை;
ஏனெனில் மாவோயிச எழுச்சியாளர்கள் பெரிய, வலிமை மிகுந்த அரசாங்கப் படைகள் முன்னேறி வருவதைக் கண்டு
முறையாக பின்வாங்கிவிட்டனர். ஆனால் இதுவரை அரசாங்க அதிகாரத்திற்கு சாவால் விடும் இயக்கத்தை நசுக்காததற்காக
மேற்கு வங்க அரசாங்கத்தை கண்டித்து வந்த
Kolkata Telegraph கூட, பாதுகாப்புப் படைகள்
லால்கரின் 95 சதவிகிதம் கிராம மக்களை தவறாக நடத்துகின்றன என்றும் இப்பகுதிகளை அவை "விடுவித்ததாக"
கூறுகின்றன என்றும் எழுதியுள்ளது.
ஜூன் 29 பதிப்பில் "போலீசார் துன்புறுத்துகின்றனர், மாவோயிஸ்ட்டுக்கள் ஆதாயம்
பெறுகின்றனர்" என்ற தலைப்பில் டெலிகிராப் கூறுகிறது: "நேற்று பத்தர்டங்காவில் கிராமவாசிகளைப்
போலீசார் அடித்து, அவர்களுடைய தானியத்தை அழித்தனர்; அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏன் "இப்படைகளை
இவ்வளவு வெறுக்கிறோம்" என்பதை நினைவுறுத்தினர்; பின்வாங்கிச் செல்லும் மாவோயிஸ்ட்டுக்களுக்கு மீண்டும்
'காப்பாளர்களாக' செயல்படுவதற்கு வாய்ப்பை கொடுக்கின்றனர்."
இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின்
கொரில்லாக்கள் இன்னும் பிற நக்சலைட் எழுச்சியாளர்கள்மீது தாக்குதலை நடத்த நீண்ட காலமாகவே திட்டமிட்டு
வருகிறது. லால்கர் "எழுச்சியை" பயன்படுத்தி, இந்தத் தாக்குதலில் மேற்கு வங்க அரசாங்கம் மற்றும் இடது
முன்னணியின் முக்கிய பங்காளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) இத்தாக்குதலில்
ஈடுபடுத்தியுள்ளது; இதன் நோக்கம் அதன் எழுச்சி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஒரு "இடது" மறைப்பு அளிக்கும்
என்ற கணக்கும் அதை ஒட்டி கூடுதலான மக்களிடையே உடன்பாட்டைப் பெறுவதும் ஆகும்.
(See India bans CPI (Maoist) under
draconian "anti-terror" law)
இதற்கிடையில், இந்தியாவின் பெருநிறுவன செய்தி ஊடகம், மேற்கு வங்கத்தின் முக்கிய
எதிர்க்கட்சியான வலதுசாரி திருணமூல் [அடி வேர்கள்] காங்கிரசின் கோரிக்கையான மேற்கு வங்கத்தில்
"ஜனாதிபதி ஆட்சி" அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தருவதாக அறிவிப்பு கொடுத்துள்ளது; அதாவது
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை கலைத்துவிட்டு 2011ல் வரவேண்டிய மாநிலத் தேர்தலை முன்கூட்டியே
நடத்துதல் என்பதற்கு. (இந்தியாவின் அரசியலமைப்பு 356 விதியின்படி மாநில அரசாங்கத்தை அகற்றும் அதிகாரம்
மத்திய அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது; அது மாநிலத்தில் அரசியலமைப்பு முறையிலான அரசாங்கம்
இயங்காமற்போய் விட்டது என்று கருதினால், மாநிலத்தை தற்காலிகமாக ஆளலாம்.)
ஜூன் 19ம் தேதி டெலிகிராப் அறிவித்தது: "மேற்கு வங்க அரசாங்கம்
ஆளமுடியாது, ஆள இயலாது என்பதால், இப்பொழுது அது வெளியேற வேண்டும்." இதைவிட சற்று குறைவான
அப்பட்டமான தன்மையில் இந்துஸ்தான் டைம்ஸ் முந்தைய தினம் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது:
"இந்தவாரம் மேற்கு வங்க அரசாங்கத்தின் தடுமாற்றம், செயலற்ற தன்மை ஆகியவை இன்னும் இழிந்த வகையில்
கூறப்படலாம்: இரு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத் தேர்தல்களை நடத்தினால் மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்பவர்
எவரும் இல்லை."
ஏப்ரல்-மே தேசியத் தேர்தல்களில் இடது முன்னணி தோற்றதால் ஏற்பட்ட அவமானகரமான
சங்கடத்தை அடுத்து முதலாளித்துவ வர்க்கம் துணிவு பெற்றுள்ளது. பெருவணிகத்திற்காக அரசியல் குழப்ப முறையில்
விவசாயிகள் நிலங்களை எடுத்தல் மற்றும் "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகளினால், மேற்கு வங்கத்தின் உழைப்பாளிகளில்
முக்கிய பிரிவினர், பல வறிய முஸ்லிம்கள் உட்பட, TMC
திருணமூல் காங்கிஸிற்கும் அதன் தேர்தல் கூட்டாளிகளான காங்கிரஸ்,
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் ஆகியவற்றிற்கும் வாக்களித்தனர்.
TMC தன் தேர்தல் ஆதாயங்களுக்கு
விடையிறுக்கும் வகையிலும், காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் நுழைந்ததை எதிர்கொள்ளும்
வகையிலும், உடனடியாக "ஜனாதிபதி ஆட்சி" அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தைத் தொடக்கியது.
TMC
க்கும் CPI (மார்க்சிஸ்ட்டுக்கள்)
தொண்டர்களுக்கும் இடையே அலயென வன்முறைத் தாக்குதல்களுடன் இது பிணைந்திருந்தது.
TMC உயர்
தலைவியான மமதா பானர்ஜி CPM
தன் கட்சியை "நசுக்க" முற்படுவதாகக் குற்றம் சாட்டினார்; ஆனால் பெரும்பாலான நிகழ்வுகளில்
TMC
தொண்டர்கள்தான் பூசலைத் தூண்டிவிட்டு அதில் வெற்றியையும் கண்டனர். அரசியல் வன்முறை அலையை கட்டவிழ்த்த
விதத்தில், TMC
தலைமை மாநிலம் "ஆளமுடியாமற் போயுள்ளது" என்ற நிலைப்பாட்டை நிரூபிக்க முற்பட்டு அதையொட்டி
"ஜனாதிபதி ஆட்சி" அமல்படுத்தப்பட போலிக்காரணம் கொடுக்க முற்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை பல முறையும் அடுத்த மேற்கு வங்கத் தேர்தல்களை
TMC
கூட்டுடன் எதிர்கொள்ளும் தன் விருப்பத்தைக் கூறியுள்ளது. ஆனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று
இப்பொழுது இந்தியாவின் ரயில்வே மந்திரியாக இருக்கும் மமதா பானர்ஜியின் அழைப்புக்களைப்
பொருட்படுத்தவில்லை.
காங்கிரஸ் CPM
இன்னும் மற்ற ஸ்ராலினிச தேர்தலில் பங்கு பெறும் CPI
ஆகியவற்றுடன் நீண்ட காலமாக ஒத்துழைத்த அனுபவத்தைக் கொண்டுள்ளது; முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்த
அவற்றின் பணியை பலமுறையும் பயன்படுத்தியுள்ளது. 2004 தேர்தல்களை அடுத்து முதல் நான்கு ஆண்டுகள்
CPM
தலைமையிலான இடது முன்னணி இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான
UPA, ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு அதன் பாராளுமன்ற பெரும்பான்மையை அளித்தது.
காங்கிரஸும் இந்திய முதலாளித்துவமும் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தல் முடிவு
பற்றி பெரும் உவகை அடைந்துள்ளன. ஏனெனில் UPA
அரசாங்கம் இடது ஆதரவை நாடி நிற்க வேண்டிய தேவை இப்பொழுது இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில்
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்பில் பெரும் தவறாகிவிடும், மற்ற மாநில
அரசாங்கங்களுடன் அது கொண்டுள்ள உறவுகளை சிக்கலாக்கிவிடும் திறன் உடையது, உலகப் பொருளாதார
நெருக்கடியினால் வந்துள்ள வர்க்க பதட்ட நிலைமைகளை உயர்த்திவிடக்கூடும் என்ற திறனைக் கொண்டுள்ளது என்பதை
நன்கு அறியும்.
காங்கிரஸ் தலைமை மேற்கு வங்கத்தில் அரசியல் வலுவற்ற இடது முன்னணி
அரசாங்கத்தைப் பதவியில் தொடர அனுமதித்தல் அரசியல் அளவில் தனக்கு நல்லது என்ற முடிவிற்கு வந்துள்ளது;
அதே நேரத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்களை அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி ஆட்சி என்ற
அச்சுறுத்தலை வைத்து மிரட்டிக்க கொண்டும் இருக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் வலதுசாரித் தாக்குதலுக்கு, தேசிய காங்கிரஸ் கட்சித்
தலைமையில் இருக்கும் அரசாங்கத்துடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளுவதற்கான முக்கிய பொறுப்பு ஸ்ராலினிச
CPM, CPI
ஆகியவற்றுடன்தான் உள்ளது.
இவை சிறப்பு பொருளாதார பகுதிகளுக்காக நிலங்களை எடுத்துக் கொள்ளும்
முயற்சியை எதிர்த்த விவசாயிகளை சுட்டுக் கொன்றது உட்பட, இரக்கமற்ற முறையில் முதலீட்டாளர் சார்பு
கொள்கைகளை தொடர்ந்த விதம்தான்---- வலதுசாரியும், பெருமளவு மதிப்புக் குறைந்துவிட்ட, வெகுஜன
கட்சியும் மற்றும் இந்து தீவிரவெறி கொண்ட BJP
யின் நெருக்கமான கூட்டாளியுமான மமதா பானர்ஜியை வங்கத்தின் ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வறிய
முஸ்லிம்களின் காவலர் என்று தன்னைக் காட்டிக் கொள்ள வைக்க முடிந்தது.
மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் தன்மை லால்கர் நிகழ்வுகளில்
முன்மாதிரியாக உள்ளது
கடந்த நவம்பரில் லால்கர் பகுதிவழியே மேற்கு வங்க முதல் மந்திரி புத்ததேவ்
பட்டச்சார்ஜி பயணித்தபோது நிலக்கண்ணி வெடிக்கு இலக்காக கொள்ளப்பட்டிருந்ததை அடுத்து, போலீஸ் தன்
வலையை பெரிதும் விரித்ததுதான் லால்கர் எழுச்சிக்கு உந்ததுதல் கொடுத்தது . மாவோயிச இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி அத்தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றது.
போலீஸ் அடக்குமுறையில் ஒருதலைப்பட்ச கைது செய்தல்கள், நீண்டகாலம் காவலில்
வைத்திருத்தல், பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், மகளிர் உட்பட பலரையும் அடித்தல் ஆகியவை அடங்கியிருந்தன.
போலீஸ் நடவடிக்கைகளை எதிர்த்து BJMM
எனப்பட்ட Bharat Jakat Majhi Marwa
என்னுமை பழங்குடித் தலைவர்கள் வழிநடத்தும் அமைப்பு லால்கர் பகுதியில் சாலைத்தடுப்பு ஒன்றை ஏற்பாடு
செய்தது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அப்பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் சாலைகள் பள்ளம்
தோண்டப்படுதல், குறுக்கே மரங்களை வெட்டிச்சாய்த்துப் போட்டுவைத்தல் என்ற விதத்தில் தடுப்புகள்
போடப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்னும் தீவிரப் போக்குடை கூறுபாடுகள், மாவோயிச எழுச்சியாளர்களின்
ஆதரவிற்கு உட்பட்டவை PCPA
எனப்படும் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் குழுக்களை அமைத்தன.
PCPA விற்கான ஆதரவு
அதிகரித்ததுடன், அரசாங்கம் அதன் கோரிக்கைகளான போலீஸும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் லால்கரில்
இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டது. ஆனால் போலீஸின் நடவடிக்கைகள் பற்றி சுயாதீன
விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிடவில்லை.
ஒரு சில வாரங்களுக்குள் மேற்கு வங்க அதிகாரிகள் லால்கர் பகுதியில்
பெரும்பாலான இடங்களின் மீது திறமான கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர் என்றால் அதற்குக் காரணம், உள்ளூர்
மக்களில் அதிக பிரிவுகள் ஏற்கனவே இடது முன்னணி அரசாங்கத்திடம் இருந்து விரோதப்பட்டு கோபத்தையும்
கொண்டுள்ளன; இதற்குக் காரணம் முன்னணி தங்கள் கோரிக்கைகளை பொருட்படுத்தவில்லை, ஊழலில் ஆழ்ந்துள்ளது
என்று மக்கள் காண்பதுதான்.
அரசாங்கம் லால்கரின் வறிய மக்களின் மிக அடிப்படை வளர்ச்சித் தேவைகளைக் கூட
கவனிக்கத் தவறிவிட்டது.
மொத்த மக்கள் தொகையில் கால்பகுதியையும் விடக் குறைவானவர்களிடம்தான்
விவசாயம் செய்வதற்கான நிலம் உள்ளது. ஒரு தேசிய, ஆனால் மாநில நிர்வாகம் செயல்படுத்தும் திட்டமான
குறைந்தது 100 நாட்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தில், வறிய குடும்பத்திற்கு ஒரு நபருக்கேனும் வேலை என்பதில்
அதிகம் பேர் பலன் அடையவில்லை. அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், செய்தித்தாள் தகவல்கள் பல
பட்டினி இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் ஒரு உயர்நிலைப் பள்ளியோ கல்லூரியோ கிடையாது. மருத்துவ
வசதிகளும் மிகக் குறைவு, மிக எளியவையாகத்தான் உள்ளன. லால்கர் வாழ் மக்கள் பலர் குடிநீர் பெறக்கூட பல
கிலோமீட்டர்கள் தூரம் நடக்க வேண்டியுள்ளது.
இந்த நிலைமைகள்தான் கடந்த 32 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குறுக்கீடு
இல்லாமல் ஆட்சி செய்யும் இடது முன்னணி பற்றிய பெரும் குற்றச் சாட்டை ஏற்படுத்திவிட்டன.
முக்கிய ஸ்ராலினிச கட்சிகள் முதலாளித்துவ பிற்போக்கிற்கு உடந்தையாக இருக்கும்
விதத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அளவில் செயல்திறன் இல்லாமல் செய்துவிட்டு, மேற்கு வங்கத்தில் ஒரு
தசாப்தத்திற்கும் மேலாக முதலாளித்துவ ஆட்சியை நிர்வகிப்பதுடன், வெட்கம் கெட்ட தனமாக தொழிலாள
வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ள விவசாயிகளின் இழப்பில் முதலீட்டு சார்பு கொள்கைகளை தொடர்ந்தும் வந்தது.
ஆனால் மாவோயிஸ்ட்டுக்களும் உழைப்பாளிகளிடையே அரசியல் குழப்பத்தை விதைப்பதில் கணிச பங்கைக்
கொண்டுள்ளதோடு, வலதுசாரி சக்திகளின் வளர்ச்சிக்கும் ஆக்கம் தந்துள்ளனர்.
2007 ல் இருந்து,
CPI (மாவோவிஸ்ட்டுக்கள்)
இன்னும் பிற குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்குடைய குழுக்கள் திருணாமூல் காங்கிரஸுடன் ஒத்துழைத்து, "சமூக
பாசிச" மேற்கு வங்க அரசாங்கத்தின் நில பறிப்புத் திட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் அதற்கு ஒத்துழைப்பு
கொடுத்துள்ளன. இப்படிச் செய்கையில், அவை மம்தா பானார்ஜியின் முயற்சியான பெருகும் வெகுஜன சீற்றத்தை
இடது முன்னணிக்கு எதிராக இயக்கும் முயற்சிக்கு முக்கிய ஏற்றம் கொடுத்ததுடன், அதை கொல்கத்தாவின்
அதிகாரத்தைக் கைப்பற்றவும், மேற்கு வங்க அரசியலை இன்னும் வலதிற்குத் தள்ளவும் பயன்படுத்தியுள்ளன.
(தன்னுடைய பங்கிற்கு இடது முன்னணி அரசாங்கம் மாவோயிஸ்ட்டுக்கள் இருப்பதைக்
காரணம் காட்டி நந்திக்கிராமம் மற்றும் சிங்கூரில் விவசாயிகள் எதிர்ப்பை வலுவாக ஒடுக்க வேண்டியதை
நியாயப்படுத்தியுள்ளது.)
மாவோயிஸ்ட்டுக்கள் லால்கரில் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கியிருந்த
நேரம்--ஜூன் தொடக்கத்தில் அவர்கள் இப்பகுதியில் எஞ்சியிருந்த இடங்களில் இருந்து போலீசை விரட்டிவிட்டனர்--
இது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர்கள் மேற்கு வங்க அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை பயன்படுத்திக்
கொள்ள முற்பட்டனர்; மம்தா பானர்ஜியின் வலதுசாரித் தாக்குலைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், அல்லது
அதற்கு ஆதரவு கொடுக்கக் கூடிய வகையிலும், செயல்பட்டனர்.
UPA அரசங்கத்தில் மந்திரியாகி
சில வாரங்களுக்குள், "ஜனாதிபதி ஆட்சி" மேற்கு வங்கத்தில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று பானர்ஜி கூறிய
சூழ்நிலையில், CPI
(மாவோவிஸ்ட்டுக்கள்) லால்கரில் தங்களுக்கு எதிராக இயக்கப்படும் ஒடுக்குமுறையை எதிர்க்குமாறு அவரிடம்
முறையிட்டனர்; நந்திக்கிராம் போராட்டத்தின்போது தாங்கள் அவருக்குக் கொடுத்த ஆதரவையும்
நினைவுபடுத்தினர்.
தன்னுடைய பங்கிற்கு பனார்ஜி, இடது அரசாங்கம் மாவோயிஸ்ட்டுக்களுடன் தான்
இணைந்து செயல்படுவதாக கூறியிருப்பதை திரும்பப்பெறாவிட்டால் பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள
இருப்பதாக அச்சுறுத்தியுள்ளார். ஆனால் தன்னுடைய காங்கிரஸ் நண்பர்களும் லால்கரின் எழுச்சி எதிர்ப்பு
நடவடிக்கைகள் நடத்தும் நேரம் பற்றி தன்னிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும் குறைகூறியுள்ளார். மத்திய
அரசாங்க படைகளின் உண்மையான பணி மேற்குவங்கத்தில்
CPM ஐ ஆயுதங்களைக் களைய மேற்கொள்ள வேண்டிய
செயற்பாடு ஆகும் என்றும் கூறியுள்ளார்.
CPI, CPM ஆகியவற்றிற்கு எதிராக
குறைகூறல்கள் இருந்தாலும், மாவோயிஸ்ட்டுக்கள் ஸ்ராலினிச-தேசியவாத மரபில் இருந்து வெளிவந்தாலும் அதே பிற்போக்குத்தனத்தைத்தான்
பின்பற்றுகின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக "இரு கட்ட புரட்சி என்பதை--இக்கூற்று இந்திய சமூகம் தொடர்ந்து
கடந்த நிலப்பிரபுத்துவ முறை மற்றும் காலனித்துவ அம்சங்களில் நலிவுற்றிருப்பதால் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு
இந்திய உழைக்கும் மக்கள் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான பிரிவுகளுடன்" கட்டாயம் இணைந்து
செயல்பட வேண்டும் என்பதாகும்.
CPM, CPI இரண்டும் அவற்றின்
தொழிற்சங்க இணைப்புக்களுடன் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ பாராளுமன்ற முறை, எதிர்ப்பு அரசியல்
ஆகியவற்றிற்குள் அடக்கும்போது, மாவோயிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட ஆயுதமேந்திய
எழுச்சிகளில் வெறும் பார்வையாளர்கள் என்ற நிலைக்கு குறைக்கின்றனர்; இது மக்களில் மிக அதிகம் ஒடுக்கப்பட்ட
பிரிவுகளின் சீற்றத்தை சிதைப்பதுடன், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஏனைய வறியவர்களை பிரிக்கவும்
செய்கிறது. அதே நேரத்தில் மேற்கு வங்க நிகழ்வுகள் தெளிவாக காட்டியுள்ளதுபோல், அவர்கள் பல
முதலாளித்துவக் கட்சிகளுடனும் சேர்ந்து செயல்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள சமூக, அரசியல் நெருக்கடியானது, நிரந்தரப்
புரட்சி வேலைத்திட்டம் உட்பட லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் முன்னெடுக்கப்பட்ட
ஸ்ராலினிசம் பற்றிய புரட்சிகர விமர்சனத்தின்பால் இந்தியத் தொழிலாள வர்க்கம் உடனடியாக திரும்ப வேண்டும்
என்பதின் அவசரத்தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான
போராட்டத்தில் வறிய விவசாயிகள், பழங்குடி மக்கள் இன்னும் பல ஒடுக்கப்பட்ட பிரிவுகளை தனது தலைமையின்
கீழ் அணிதிரட்டும், அரசியல் ரீதியில் ஒரு சுயாதீனமான சக்தியாக கட்டாயம் அணி திரட்டப்பட வேண்டும்.
நிலப்பிரபுத்துவ முறை, சாதியம் ஒழிக்கப்படுதல் மற்றும் தெற்கு ஆசியாவில் இருக்கும் அனைத்து மக்களின்
சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்ததுல் மற்றும் எரியும் ஜனநாயகப்பணிகளுக்கான தீர்வு
சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்த வகையில் ஒரு சோசலிசப் புரட்சி மூலம்தான் சாத்தியமாக
முடியும்.
|