World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

How France's petty-bourgeois "left" betrays workers

The experience of Goodyear and Continental

பிரான்ஸின் குட்டி முதலாளித்துவ "இடது" தொழிலாளர்களை எப்படிக் காட்டிக் கொடுக்கிறது

குட் இயர் மற்றும் கொன்டினென்டலின் அனுபவம்

By Pierre Mabut and Antoine Lerougetel
24 June 2009

Use this version to print | Send feedback

பிரான்சில் வேலை நீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராக பெருகும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள், தொழிலாளர்களுக்கும் பிரான்சின் அரசியல் வாழ்வில் "தீவிர இடதை" பிரதிபலிப்பதாக கூறிக் கொள்ளும் லூத் ஊவ்றியேர் (LO), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற மத்தியதர வர்க்க எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையே உள்ள அரசியல் பிளவை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய போராட்டங்களின் வளர்ச்சி தொழிலாளர்களுக்கான சுயாதீன அரசியல் முன்னோக்கு மற்றும் ஒருங்கிணைப்பு இவற்றுக்கான தீவிரத் தேவையை முன்வைக்கையில், இக்குழுக்கள் அத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய தடைகளாக வெளிவந்துள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நடைமுறைக் கட்சிகளான PS சோசலிசக் கட்சி, (PCF) பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் சார்பு கொண்டு, இக்குழுக்கள் ஆட்கள் குறைக்கும் நடவடிக்கைகள், நீக்கும் நடவடிக்கைகள் என்று தொழிற்சங்கம் திட்டமிடுபவற்றிற்கு ஊக்கத்துடன் ஆதரவை கொடுக்கின்றன. முதலாளிகளும் பொருளாதார நெருக்கடியை ஒட்டி அரசாங்க அதிகாரிகளும் பெரும் வேலைக் குறைப்புக்களை செயல்படுத்த முற்படுகையில், குழுக்களின் இத்தகைய விடையிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையில் காட்டிக் கொடுப்பது ஆகும்.

இந்த ஆண்டு முதல் காலாண்டில் மிக அதிகமான 1.1 சதவிகித உயர்வை அடுத்து, வேலையின்மை 2009ன் இறுதியை ஒட்டி உழைக்கும் மக்களிடையே 9.8 சதவிகிதம் உயரக்கூடும் என்றும், 2010 இறுதிக்குள் 10.7 உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கார்த் தொழிலை முற்றிலும் நம்பியிருக்கும் டயர் உற்பத்தித் தொழில் இந்த வளர்ச்சிகளுக்கு அடையாளமாக உள்ளது. ஜூன் 17ம் தேதி Michelin பிரான்ஸில் 1,096 வேலைகள் அகற்றப்படும் என்று அறிவித்தது. இது 1,120 தொழிலாளர்களைக் கொண்ட Continental இன் Clairoix ஆலை மூடப்படும் மற்றும் அமியானில் குட் இயரில் 1,400 தொழிலாளர்களில் 820 தொழிலாளர்கள் அகற்றப்படுவர் என்ற நிலையில் மேலுக்கு உள்ளது.

2007 ம் ஆண்டில், தொழிற்சங்கங்களின் அழுத்தத்தின் பேரில், Continental Clairoix இன் தொழிலாளர்கள் 2012 வரை தங்கள் வேலைகள் காப்பாற்றப்படும் என்று கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்காக, எவ்வித அதிக ஊதியமும் இல்லாமல் தங்கள் பணி வாரத்தை 35ல் இருந்து 40 என அதிகரிக்க உடன்பட்டனர். ஆயினும், இந்த ஆண்டு மார்ச் 11 அன்று நிர்வாகம் 1,900 வேலைகளை Clairoix இல் உள்ள பயணிகள் வண்டிக்கான டயர் ஆலை மற்றும் ஹனோவரில் இருக்கும் வணிக வாகனங்களுக்கான டயர் ஆலையிலும் அகற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

Clairoix தொழிலாளர்கள் தங்கள் ஆலை மூடப்பட இருப்பதாக வந்த அறிவிப்பிற்கு பின்னர், பல மாதங்கள் தொடர்ச்சியான போர்க்குண நடவடிக்கைகளை எடுத்தனர். இவை ஸ்ராலினிஸ்ட் தலைமையிலான CGT (General Confederation of Labour) மற்றும் LO விற்கு பரிந்து நிற்கும் பிரதிநிதி சேவியர் மாத்தியூவின் கீழ் நடந்தன. ஏப்ரல் 23ம் தேதி அவர்கள் ஹனோவரில் தங்கள் ஜேர்மனிய சக ஊழியர்களுடன் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்; அந்த ஆலையும் மூடப்பட உள்ளது; பின்னர் மே 6ம் தேதி ஒரு குறுகிய காலத்திற்கு பிரான்சின் கொன்டினென்டல் தலைமையகம் உள்ள Sarreguemines இடத்தை ஆக்கிரமித்தனர்.

ஆலை மற்றும் 1,120 வேலைகளை கொள்கையுடன் கூடிய போராட்டத்தினால் காப்பாற்றுவது என்ற கருத்தை உதறிய Clairoix தொழிற்சங்கங்கள், நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் கூடுதல் தொழிலாளர்கள் பட்டியல் பற்றி ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. Clairoix தொழிலாளர்கள் சட்டபூர்வமாகத் தேவைப்படும், நிறுவனத்தில் உழைத்த ஒவ்வொரு ஆண்டிற்குமான மாத சம்பளத்தில் ஐந்தில் மூன்று பங்கு அதிகமான ஊதிய இழப்பீட்டுத் தொகையை தவிர, 50,000 யூரோக்களை பெறுவர். டிசம்பர் 2011 வரை ஊதியம் பெறும் பட்டியலில் தொழிலாளர்கள் இடம் பெறுவர். டிசம்பர் 2009 ஐ ஒட்டி 52 வயதை அடையும் தொழிலாளர்கள் ஓய்விற்கு பின்னர் 80 சதவிகித ஊதியத்தை பெறுவர்.

இந்த உடன்பாட்டில் ஒரு விதி Clairoix தொழிற்சங்கங்கள் மற்ற கொன்டினென்டல் ஆலைகளின் தொழிலாளர்களோடு ஒற்றுமை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் ஷரத்தைக் கொண்டுள்ளது. உடன்பாடு, "ஏப்ரல் 21ம் தேதி ஆலையில் நுழைந்து பொருள் சேதத்தை ஏற்படுத்தியதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை கைவிடுவதாக Continental உறுதி கூறுவதுடன், அதற்குப் பதிலாக பிரான்சிலோ வெளியிடங்களிலோ எந்த கொன்டினென்டல் ஆலைகளையும் அழிக்க மற்றும் தடுக்க மாட்டோம் என்று கூட்டு தொழிற்சங்கங்கள் உறுதியளிக்கவேண்டும்" என்று Courrier Picard விளக்கியுள்ளது.

அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற இருக்கும் இந்த உடன்பாடு ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களை திகைப்பிற்கு உட்படுத்தி, ஏற்கனவே பொருளாதார அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது.

சேவியர் மாத்தியு செய்தி ஊடகத்திடம் கூறினார்: "இப்பேரங்கள் பற்றி நாங்கள் பெருமிதம் அடைகிறோம்." அவர் மேலும் கூறியது: "அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆலை மூடப்படாது என்பது பற்றி அவர்கள் விருப்புற்றிருப்பர், ஆனால் உண்மையில் இந்த உடன்பாடு பற்றி திருப்தி அடைந்துள்ளனர்."

கொன்டினென்டலின் உடன்பாடு, Lutte Ouvrière இன் ஆதரவு, ஒத்துழைப்புடன் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; அதுதான் அரசாங்கத்தையும் உடன்பாட்டில் தொடர்புபடுத்தியிருக்க வேண்டும். LO தலைவரும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினருமான Roland Szpirco உடன் மாத்யு நெருக்கமாக செயல்படுகிறார். ஐரோப்பிய தேர்தல்களில் வடமேற்கு பிரான்ஸ் தொகுதியில் LO பட்டியலில் Szpirco இருந்தார்.

மே 27ம் தேதி L'Express கொடுத்துள்ள தகவல்; "Xavier Mathieu இந்த தீவிர மரபார்ந்த LO உறுப்பினர் ‘Conti' இன் செயற்குழுவில் செல்வாக்கு செலுத்தியதை மறுக்கவில்லை. "அவர் என்னுடைய ஆலோசகர்" என்று அமைதியாக இவர் கூறுகிறார்.... ஆரம்பத்தில் இருந்தே ரோலண்ட் அரசாங்கத்தையும் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கவேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

LO வின் வாராந்திர ஏடு ஜூன் 5ம் தேதி உடன்பாட்டை புகழ்ந்து, "Continental-Clairoix Struggle wins new, perhaps decisive concessions" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் போராட்டம் "இறுதியில் பலனைக் கொடுத்துள்ளது" என்று இது அறிவித்துள்ளது. அதன் தலைப்பு காட்டும் உறுதி ஒருபுறம் இருக்க கட்டுரை, "ஆலை மூடலால் பிரதிபலிக்கும் சமூகப் பேரழிவிற்கு எதுவும் உரிய இழப்புத் தொகை ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், மக்கள் கூட்டங்கள் 700 ஆதரவு 4 எதிர்ப்பு என்ற பெரிய கணக்கில் சமரசத்திற்கான இந்த அடிப்படையை ஒப்புக்கொண்டு இணைவு கொடுத்துள்ளன." Clairoix ஆலையில் வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்ககள் அண்மையில் வேறு ஒரு வேலை பெறுவர் என்பது கடினமே.

கொன்டினென்டல் தொழிற்சங்கங்களும் LO வும் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனே செயல்படுத்தும் பங்கை எடுத்துக் கொண்டனர். Courrier Picard ஜூன் 7ம் தேதி கூறியது: "500 குட் இயர் தொழிலாளர்கள் Clairoix ஆலைக்குள் வந்தது பற்றி கொன்டினென்டல் தொழிலாளர்கள் கடுமையான மேற்பார்வை இட்டனர். அன்று காலையே கூட்டு தொழிற்சங்கக் குழுவின் கண்காணிப்பு சொல் தெளிவாயிற்று, "சரி, நண்பர்களே நாங்கள் ஆலைக்கு வரவுள்ளோம்; ஆனால் சேதம் ஏதும் இருக்காது. ஆலையை விட்டு எதுவும் அகலாது. அரசாங்கம் உடன்பாட்டை மறுப்பது வருத்தம் தருகிறது; ஏனெனில் நாம் முட்டாள்களாக இருந்து விட்டோம். அனைத்தையும் இன்று இழக்கத் தயாராக இல்லை."

மே 26ம் தேதி குட் இயர் அதன் அமியான் டயர் ஆலையில் 1,400 வேலைகளில் 820 ஐ அகற்றும் முடிவை அறிவித்தது. இந்த அறிவிப்பு அருகில் இருக்கும் Clairoix கொன்டினென்டல் டயர் ஆலை ஊழியர்கள் பணி நீக்கம் பற்றி இறுதித் தயாரிப்பு நடத்துகையிலேயே வெளிவந்தது.

அமியானில் உள்ள குட் இயர் ஆலைச் சங்கங்கள், Clairoix விற்றுவிடப்பட்டதை பின்பற்றப்பட வேண்டிய உதாரணமாக நினைக்கின்றன. ஆலையின் CGT தலைவரான மிஷேல் வாமன் "கொன்டி தொழிலாளர்களால் போராட்டத்தில் அடையப்பட்ட" "மிக கெளரவமான" ஒப்பந்தத்திற்கு" புகழாரம் சூட்டினார். வேலைக் குறைப்புக்களை திரும்பப்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது, "50,000 யூரோக்கள் குறைந்த பட்சம் என்று, பெறத்தவறியது.... குட் இயரிடம் பணம் உள்ளது. குழு பணப்பையை கட்டாயம் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் தொந்திரவு வரும்."

NPA அதன் முழு ஆதரவை வாமனுக்குக் கொடுத்துள்ளது. அதன் வலைத் தளத்தில் ஜூன் 1ம் தேதி வந்த கட்டுரை, "கூடுதல் தொழிலாளர்களை அகற்றுதல் பற்றிய நிபந்தனைகளை கொன்டினென்டல் தொழிற்சங்கங்கள் முதலாளிகளிடம் இருந்து பெற்றதை" முன் உதாரணம் என்று அறிவித்தது.

NPA வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்தது; எனவே அதிக வேலைகள் அகற்றப்படுதலுக்கு எதிரான தீவிரப் போராட்டத்திற்கும் இடமில்லாமல் போய், குட் இயர் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவுதான் கிடைத்தது. அது எழுதியது: "இப்பொழுது முன்னோக்கு பற்றிய வினாக்கள் எழுப்பப்படுகின்ற. தொழிலாளர்களில் சிலர் இப்பொழுதே போராட வேண்டும் என்று முறையாக விரும்புகின்றனர். ஆனால் தொழிற்சங்க அதிகாரிகள் விரைவில் 2010ல் வேலைநீக்கங்கள் வரவிருப்பதால் அது நீடித்த போராட்டமாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினர். உடனடி வேலைநிறுத்தம் அனைவரையும் எந்த வெற்றிக்கான உத்தரவாதமும் இல்லாமல் ஓரிரு வாரங்களில் மண்டியிட வைத்துவிடும். மேலும் சிறந்த முறையில் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்: ஆலை நிலைத்திருப்பதற்கான போராட்டம், அல்லது சிறந்த பலன்களுடன் நீங்குவது."

குட் இயரில் உள்ள CGT தலைமை அதன் நாட்டுவெறி மற்றும் வர்க்க ஒத்துழைப்பு அணுகுமுறையை தெளிவாக்கும் விதத்தில் ஜூன் 16 கடந்த ஆண்டு கூடுதல் வேலைகள் அகற்றப்படுவது பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நாம் தொடர்ந்து வட்டமேசை விவாதங்கள் வேண்டும் என்று கோருகிறோம். அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்; ஏனெனில் ஒரு அமெரிக்க நிறுவனம் நூற்றுக்கணக்கான பிரெஞ்சுத் தொழிலாளர்களின் உரிமைகளை மிதிக்கிறது.... நங்கள் எப்பொழுதும் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக உள்ளோம்.... ஆனால் இந்த பொது நலனில் எங்களோடு ஒருவரும் இணைந்து செயல்படத் தயாராக இல்லை."

தொழிற்சங்கங்கள் சமூகக் குறைப்புக்களை திட்டமிட்டு குறைத்தலில் ஒத்துழைப்பு தருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் புதிய மட்டத்தை அடைந்தது; அவர் தன்னுடைய கொள்கைகளை தொழிற்சங்கங்களுடன் இணைந்து பேசித்தான் 2007 தேர்தலுக்கு பின்னர் திட்டமிட்டார்.

2008 வசந்த காலத்தில், பிரான்சின் இரு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்காள CGT, CFDT இரண்டும் "பொது நிலைப்பாடு" உடன்பாட்டை சார்க்கோசி மற்றும் Medef முதலாளிகள் கூட்டமைப்புடன் கையெழுத்திட்டன. இதற்கு ஈடாக இரு தொழிற்சங்கஙகளின் சட்டபூர்வ, நிதிய நிலை அதிகப்படுத்தப்பட்டது; அராசங்கம் மிகக் கடுமையான, பிற்போக்குத்தன சட்டம் இயற்ற இசைவு பெற்றது; அதன்படி தொழில்நேரப் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன, ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டன மற்றும் 35 மணி நேர வாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது LO, NPA போன்ற "தீவிர இடதின்" பங்கு அடிப்படையில் மோசமான "தேசிய நடவடிக்கைகள் தினத்தை" அமைத்தல், பொதுப்பணித் தொழிலாளர்களின் எதிர்ப்பும் எந்த சங்கங்கள் சமூகக் குறைப்பை இயற்றினவோ அவற்றின் மூலம் ஏற்பாடு செய்தல் என்று இருந்தது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் வெடிப்பு தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடையே பல வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் மற்றும் "முதலாளிகளை மடக்கி வைத்தல்" இவற்றுடன் போர்க்குண நடவடிக்கைகளை பரப்பியுள்ளது-- குறிப்பாக கார் மற்றும் எஃகு தொழில்களில் ஆகும். இது அரசியல் அதிகாரத்திற்குப் போராடவும் வேலைகளை பாதுகாக்கவும், கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் அனைத்து உழைக்கும் மக்களும் பெறுவதை உத்திரவாதம் செய்வதற்கும் பொருளாதாரத்தை சோசலிச வகையில் மறு ஒழுங்கு செய்வதற்கும் போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்று நிறுவப்பட வேண்டிய தேவையை நேரடியாகவே முன்வைக்கிறது.