World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bloody Monday: 74,000 layoffs announced in one day

இருண்ட திங்கள்: ஒரே நாளில் 74,000 பணிநீக்கங்கள் அறிவிப்பு

By Tom Eley
27 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் திங்கன்று தொழில்வழங்குனர்கள் பல ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களை அறிவித்தனர். இது பொருளாதார நெருக்கடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்ற குறிப்பை காட்டியதுடன், அமெரிக்க உலகப் பொருளாதாரம் முழுவதும் இது படர்ந்துள்ளது என்பதையு காட்டியது; அரசாங்க பதில் நடவடிக்கைகளை விட மிகவும் மீறிப்போகும்தன்மையை இது கொண்டுள்ளது. முக்கிய பணிநீக்கங்களில் சில பின்வருமாறு:

* கட்டுமானப் பிரிவு கருவிகளில் உலகில் முதன்மையாக இருக்கும் Caterrpillar Inc. 2009 முதல் காலாண்டுப்பகுதியில் 20,000 பணிநீக்கங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

* Pfizer Inc. என்னும் மருந்து தயாரிக்கும் பெருநிறுவனம் 8,000 தொழிலாளர்களை வேலையில் இருந்து அகற்றும்; இது போட்டி மருந்து நிறுவனமான Wyeth ஐ $68 பில்லியன் பணம் கொடுத்து எடுத்துக் கொள்ளுவதால் ஏற்பட்டுள்ள முதல் விளைவு ஆகும்.

* Sprint Nextel, செல்போன் தயாரிப்பு நிறுவனம் 8,000 வேலைகளை, அதாவது தன்னுடைய ஊழியர் தொகுப்பில் 14 சதவிகிதத்தை குறைக்கும்; இது மார்ச் மாத இறுதிக்குள் நடைபெறும். ஓராண்டிற்கு முன் இது 4,000 வேலைகளை இல்லாதொழித்தது.

* Home Deport Inc., அமெரிக்காவில் வீடுகள் புதுப்பிக்கும் பெரும் சில்லறை நிறுவனமாகும். தான் 7,000 பணிகளை அகற்ற இருப்பதாகவும், தன்னுடைய Expo வீடுகள் மாதிரிக் கடைகள் 34 ஐ மூட இருப்பதாகவும் அறிதவித்துள்ளது.

* General Motors, பெரும் பிரச்சனைக்குள்ளான கார் பெருநிறுவனம் 2,000 பணிகளை அகற்ற இருப்பதாகவும் இவை ஒகையோ, மிச்சிகன் ஆலைகளில் நடத்தப்பெறும் என்றும் கூறியுள்ளது; அங்கு ஏற்கனவே வேலையின்மை 10 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது.

* இலாபங்களில் பெரும் சரிவை அறிவித்தபின், Texas Instruments Inc. 3,400 பணிகளை தகர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

* டச்சு மின்னணு பெருநிறுவனமான Philips Electronics உலகெங்கிலும் இருக்கும் தன்னுடைய பணியாளர் தொகுப்பில் இருந்து 6,000 பேரைக் குறைக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

* எஃகுத் தயாரிப்பு நிறுவனமான Corus Group தான் 3,500 வேலைகளை அகற்ற இருப்பதாகக் கூறியுள்ளது; இதில் பிரிட்டனில் மட்டும் 2,500 உள்ளடங்கும்.

* டச்சு வங்கியான ING முதல்முறையாக ஒரு காலாண்டு இழப்பை கண்டவுடன், 7,000 பணிகளை நீக்க இருபபதாக அறிவித்துள்ளது.

பணிநீக்கங்களின் அளவும், விரைவான தன்மையும் பற்றிய அறிவிப்புக்கள் பொருளாதார நெருக்கடியின் வரலாற்று பரிமாணங்களை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது. Challenger, Gray & Christmas Inc., என்னும் வேலைகளை ஆராயும் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியான John Challenger இன்றைய குருதி சிந்துதலை பற்றி கூறியுள்ளதாவது: "இன்று மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பணிநீக்கங்கள் வந்துள்ளதாகும். பொதுவாக சில குறிப்பிட்ட பிரிவுகள் கடுமையான பாதிப்பிற்கு உட்படும். இந்த மந்த நிலை வீடுகள் மற்றும் நிதிய பணிகள் பற்றிய கூடுதலான தாக்கத்தை காட்டியிருந்தது; ஆனால் கார்த்தொழிலும் சேர்ந்துள்ளது. இப்பொழுது பிற பிரிவுகளான சில்லறை வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பமும் இந்த மந்த அலை தாக்கியிருக்கும் நிலையில் சேர்ந்துள்ளன."

2009 ல் இதுவரை Challenger, 19 பெருநிறுவனங்கள் அறிவித்துள்ள 128,600 பணிநீக்கங்களை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்காவில் மாத ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை 600,000 குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது மூன்று தொடர்ந்த மாதங்களில் பொருளாதாரம் ஒன்றரை மில்லியன் வேலைகளை இழந்த நிலையையும், ஐந்தாம் தொடர்ச்சியான மாதத்தில் 400,00 வேலை இழப்புக்களையும் காட்டுகிறது. "1939க்கு பின்னர் இத்தகைய குறைப்பு நடந்துள்ளது இது முதல் தடவையாகும்." என்று Marketwatch இடம் Miller Tabak & Co. யின் பங்கு மூலோபாயக் குழுவில் உள்ள Dan Greenhaus தெரிவித்துள்ளார்.

இத்தகைய மிகப் பெரிய பணிநீக்கங்கள் 2009ல் வேலை இழப்புக்கள் 2008 ஐ விட அதிகமாகக் கூடும் என்பதைக் காட்டுகின்றன; கடந்த ஆண்டு 2.6 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டன; 1945ல் இருந்து அது மிக அதிகமாகும்; உத்தியோகபூர்வ வேலையின்மை டிசம்பர் மாதம் இருந்த 7.2 சதவிகிதத்தில் இருந்தும் அதிகமாகப் போகும்; அதுவே 16 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டமாகும்.

Pfizer 8,000 ஊழியர்களை வெளியேற்றியது, அத்துடன் Wyeth ஐ இணைந்துக் கொண்டது என்பது இம்மாதத்தில் நிறுவனம் அறிவித்துள்ள மூன்றாம் மிகப் பெரிய பணிநீக்கம் ஆகும். ஜனவரி 16ம் தேதி அது 1,300 விற்பனையாளர்களை பணிநீக்கம் செய்தது; ஜனவரியில் அதற்கும் முன்னதாக 800 விஞ்ஞானிகளை வேலையை விட்டு நீக்கியது. ஆனால் இது ஒரு ஆரம்பம்தான். திங்களன்று Pfizer இரு நிறுவனங்களின் மொத்த ஊழியர் தொகுப்பில் இருந்து 15 சதவிகிதத்தினரை அகற்றபோவதாக அறிவித்துள்ளது; இது கிட்டத்தட்ட 12,000 வேலை இழப்புக்கள் என்று ஆகும்.

Pfizer பணிநீக்கங்கள் பொருளாதார நெருக்கடியில் அரசாங்கக் குறுக்கீட்டின் வர்க்கத் தன்மையை காட்டியுள்ளது; இது முதலில் மிகப் பெரிய வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்துதலை முதல் வேலையாக எடுத்துக் கொண்டது. Wyeth ä Pfizer எடுத்துக் கொண்டது பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிக்ரூப், கோல்ட்மன் சாக்ஸ், ஜே.பி மோர்கன் சேஸ் மற்றும் பார்க்ளேஸ் ஆகியவை தலா $4.5 பில்லியன் கடன்நிதி கொடுத்ததால்தான் முடிந்தது.

அக்டோபர் மாதம் பாரக் ஒபாமா உட்பட இரு கட்சியின் அரசியல் வாதிகளும், பெரிய நிதிய நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை பிரச்சனைக்குரிய சொத்துக்கள் பாதுகாப்பு திட்டத்தின் (Troubled Asset Relief Programme-TARP) கீழ் கொடுப்பது அவசரத் தேவை என்று வலியுறுத்தினர். இது கடன் கொடுக்கும் அலையை ஏற்படுத்தும், அது பின்னர் வேலைகளை தோற்றுவிக்கும் என்று அவர்கள் உறுதிமொழி கொடுத்தனர். ஆனால் விளைவோ நேரடியாக எதிர்மறையாக உள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆய்வு ஒன்று நேற்று உறுதிபடுத்தியுள்ளதுபோல், TRAP திட்டத்தின்படி முக்கிய நிதி பெற்றவை கடன் கொடுத்தலை குறைத்துவிட்டன. ஆனால் Pfizer ஐ பொறுத்தவரையில் அவ்வாறு இல்லை. இங்கு பெரிய வங்கிகள் மருத்துத் தொழிலில் கூடுதலான ஏகபோக உரிமையை வளர்க்கத் தேவையான மூலதனத்தை கொடுத்துள்ளன; இது கூடுதலாக ஆயிரக்கணக்கான வேலைகளைத் தகர்த்துள்ளது.

பொதுவாக சந்தைகள் பெரும் பணிநீக்கங்களை வரவேற்றுள்ளன. Sprint Nextel பங்கு பணிநீக்க அறிவிப்பிற்கு பின் 1.2 சதவிகிதம் மதிப்பில் உயர்ந்தது: Home Depot உடைய பங்கு 4.7 சதவிகிதம் அதிகரித்தது. பிலிப்ஸின் பங்கு 10.1 சதவிகிதமும், ING யின் பங்கு 20.1 சதவிகிதமும் உயர்ந்தன. காடெர்பில்லரின் பங்கு சரிந்த காரணம் அதன் குறைவான வருமானம் ஈட்டிய நிலையினால்; இது சந்தை எதிர்பார்ப்புக்களையும்விட மோசமாக இருந்தது.

காடெர்பில்லரின் பணிநீக்கங்கள் நிர்வாகப் பிரிவிலும் உதவிப் பிரிவிலும் 5,000 வேலைகளை பாதிக்கும். ஏற்கனவே 2,500 ஊழியர்கள் பணிநீக்க உடன்பாடுகளை ஏற்றுள்ளனர்; 8000 ஒப்பந்த தொழிலாளர்களும் 4,000 முழுநேர ஆலைத் தொழிலாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகம் இதைத்தவிர ஊதியக் குறைப்பு, ஊதிய முடக்கம் ஆகியவற்றையும் அறிவித்துள்ளது.

காட்டெர்பில்லரின் விற்பனைச் சரிவு பொருளாதார நெருக்கடி விரைவாக ஆழமடைகின்றது என்பதற்கு மற்றொரு அடையாளம் ஆகும். காட்டெர்பில்லரின் முக்கிய வாடிக்கையாளர்களே பொருளாதாரத்தின் வீடுகள் கட்டுதல், சுரங்கத் தொழில், வணிக சொத்துக்கள் அபிவிருத்தி போன்றவற்றில் தொழில்வழங்குனர்களாக இருந்தவர்கள்.

"டிசம்பரில் நாங்கள் கிட்டத்தட்ட சரியாக ஒரு சுவர் மீதுதான் மோதியிருந்தோம்" என்று காட்டெர்பில்லரின் தலைமை நிர்வாக அதிகாரியான Jim Ownes கூறினார். Morningstar உடைய பகுப்பாய்வளரான John Kearney கூறியது, "முதல் காலாண்டில் இது உறுதியாகப் பரவக்கூடும் என்றுதான் தோன்றுகிறது; ஒருவேளை இன்னும் மோசமாகக்கூடும். 2009 முதல் அரையாண்டைப் பொறுத்தவரையிலேனும் குறைந்த பட்சம், இது மிக மோசமான நிலையைத்தான் காட்டுகிறது."

2,000 அறிவிக்கப்பட்ட பணிநீக்கங்களை தவிர அடுத்த ஆறு மாதங்களில் தான் வட அமெரிக்காவில் இருக்கும் பல ஆலைகளில் பல வாரங்களுக்கு உற்பத்தியை நிறுத்த இருப்பதாக GM அறிவித்துள்ளது. மிச்சிகனில் இருக்கும் லான்சிங் ஆலையில் இரண்டாம் பணிசுற்றில் உள்ள 1,200 தொழிலாளர்கள் மார்ச் மாதம் 30 அன்று பணிநீக்கம் பெறுவர்; ஒகையோவில் இருக்கும் லார்ட்டெளன் ஆலையின் இரண்டாம் பணிசுற்றில் ஏப்ரல் 6 முதல் 800 பேர் பணிநீக்கம் பெறுவர்.

இப்படிப் புதிய பணிநீங்கங்கள், உற்பத்தித் தற்காலிக நிறுத்தம் ஆகியவை "சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை வழிப்படுத்துவதற்கு" என்று GM கூறியுள்ளது. இன்னும் கூடுதலான சுருக்கம் சந்தையில் இருக்கக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்; 2008ல் இருந்து மிகக் குறைவான 13.2 மில்லியன் கார்கள் தேவையாக இருந்தது இன்னும் மோசமாக 10.5 மில்லியன் வாகனங்கள் என்று ஆகிவிடும்.

National Assoication of Realtors (NAR) ஒரு புதிய அறிக்கையானது எல்லா இடங்களிலும் அமெரிக்க வீடுகளின் மதிப்பில் பெரும் சரிவை எடுத்துக்காட்டுகின்றது. வீடுகள் விற்பனை விகிதம் டிசம்பர் மாதம், நவம்பர் மாதம் இருந்த மோசமான நிலையை விட சற்ற உயர்ந்தாலும், நடுத்தர இல்லங்களின் விலைகள் 15.3 சதவிகிதம் குறைந்து $175,400 என்று ஆயின; இது மிகத் தீவிரச் சரிவு ஆகும்.

ஏலத்திற்கு விடப்படும் சொத்துக்களில் தேர்ச்சி பெற்ற ஒரு ஆன்லைன் சொத்துக்கள் நிறுவனமான Realty Trac நடத்திய தனிக் கணிப்பு ஒன்று முன்கூட்டி ஏலத்திற்குவிடப்பட்டுவிட்ட மில்லியன் கணக்கான வீடுகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றும், மாற்றிக் கொடுக்க வேண்டிய வங்கிகள் சந்தை நிலை மாறக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஏலங்கள் தவிர்க்க முடியாமல் சந்தைக்கு வரும்போது, பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களின் செல்வத்திற்கான அடித்தளமான வீடுகளின் மதிப்பை இன்னும் இல்லாதொழித்துவிடும்.

வெள்ளியன்று அரசாங்கம் நான்காம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பற்றி மதிப்பீட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வல்லுனர்களிடையே இருக்கும் ஒருமித்த கருத்து பொருளாதாரம் வருடாந்த விகிதத்தில் 5.4 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதாகும். அது 1982க்கு பின்னர் மிக விரைவான, அதிகமான சுருக்கமாக இருக்கும்.