World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's team: A right-wing cabinet for a government of big business

ஒபாமாவின் குழு; பெரு வணிக அரசாங்கத்தின் ஒரு வலதுசாரி அமைச்சர் குழு

By Patrick Martin
19 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

தான் பதவியேற்பதற்கு முன்னதாகவே, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா அமெரிக்க சமூகத்தின் உயர் மட்டங்களிலும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி பிரிவில் இருந்தும் தனக்கு தேவையானவர்களை மந்திரிகளாக திரட்டியுள்ளார். "மாறுதல்" என்று பலமுறை கூறிவந்தபோதும்கூட, போரெதிர்ப்பு உணர்விற்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கிட்டத்தட்ட இரண்டாண்டுகால பிரச்சாரத்தில் அழைப்புவிட்டபோதும், மக்கள் பரந்த பிரிவு, தொழிலாளர் வர்க்கம் அல்லது இளைஞர்கள் கைவிடப்பட்டது ஒருபுறம் இருக்க, ஜனநாயகக் கட்சியின் சற்று தாராளமான பிரிவுகளில் இருந்து ஒபாமா நிர்வாகத்திற்கு முக்கிய உறுப்பினர் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் வலதுசாரித் தன்மை செய்தி ஊடகத்தினால் ஒப்புதல் முத்திரையில் "மத்தியவாதி", "மிதவாதபோக்கு உடையவர்", -எல்லாவற்றிகும் மேலாக "நடைமுறைவாதிகள்" என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இச்சொற்றொடர்கறள் வரவிருக்கும் ஒபாமா நிர்வாகம் பெருநிறுவன நிதிய உயரடுக்கினால் ஏற்கத்தக்க நபர்களைத்தான் முற்றிலும் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. அரசியல் தீவிரமயப்படுத்தல் ஒரு புறம் இருக்க, இவர்களிடையே உண்மையான எதிர்ப்பு உணர்வு பெற்றவர் கூட ஒருவரும் இல்லை

ஹில்லாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை ஒபாமாவிற்கு பதிலாக பெற்றிருந்தால்கூட இந்த மந்திரிசபை தேர்வுகளில் கிட்டத்தட்ட எந்தவித மாற்றமும் இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்க உண்மை ஆகும். ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட் இந்த மாறுகை நிகழ்போக்கு பற்றிய தன்னுடைய பார்வையில் ஒபாமா குழுவினர் ஒரு நகைச்சுவையை கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளது; "ஜனாதிபதியாக ஒபாமா வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருந்தால், அவருடைய பிரச்சாரத்திற்கு உழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் கீழ் பணியாற்ற விரும்பியிருந்தால், ஹில்லாரிக்கு உழைத்திருக்க வேண்டும்."

செனட் மன்றத்தில் மிகக் கூடுதலான போர் ஆதரவாளரான கனக்டிக்கட்டின் பிரதிநிதியான ஜோசப் லீபர்மான் வெள்ளை மாளிகையில் நுழைந்திருந்தால், பாரக் ஒபாமா தேர்ந்தெடுத்திருக்கும் மந்திரிசபையில் மிகவும் இயல்பாக தலைமை தாங்கியிருந்திருப்பார் --அவரோ ஒபாமாவிற்கு எதிராக அவ்வளவு தீவிர எதிர்ப்பை காட்டியவர், குடியரசுக் கட்சி ஜோன் மக்கெயினுக்காக இறுதியில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளில், வரவிருக்கும் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளைவிட மிகச் சிறிய அளவில்தான் மாற்றத்தை கொண்டிருக்கும். ஒரு அரசியல் இயற்பியல் சட்டத்தை பற்றி ஒருவர் இவ்வாறு கூட கூறமுடியும்: கொள்கை பகுதியைச் சுற்றி அதிக இடம் இருந்தால், ஒபாமா கூடுதலான "மாறுதலை" கொண்டுவருவார். எதிரிடையாக, போர், பொருளாதாரம், ஜனநாயக உரிமைகள் போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் கொள்கை மற்றும் நபர்ககளில் மாற்றம் என்பது வெறும் வண்ணப்பூச்சாகத்தான் இருக்கும்.

புஷ்ஷிடம் இருந்து ஒபாமா வரை தொடர்ச்சி என்பது பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் மற்றும் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள டிமோதி கீத்னர் என்ற இரு முக்கிய நியமனங்களில் அடையாளம் காட்டப்படுகிறது. இருவருமே புஷ் நிர்வாகத்தில் முக்கிய பங்கைக் கொண்டவர்கள்; இருவரும் ஒபாமா நிர்வாகத்தில் இன்னும் அதிக முக்கிய பங்கைத்தான் கொள்ளப் போகிறவர்கள். ஜனநாயகக் கட்சியின் முக்கிய நியமன வேட்பாளர்களில் ஒபாமா மிகவும் போர் எதிர்ப்பு உடையவர் என்றுதான் காட்டிக்கொண்டார்; அதையொட்டித்தான் ஹில்லாரி கிளின்டன் மீது அவர் கொண்ட அதிக வித்தியாசம் இல்லாத வெற்றி வந்தது. ஈராக் போருக்கு எதிராக இளைஞர்களும் மாணவர்களும் அவருக்குத் திரட்டிய ஆதரவுதான் அதற்குப் பெரிதும் உதவியது. ஆனால் அவர் இப்பொழுது புஷ்ஷின் போர்க் கொள்கைகளின் முக்கிய நிர்வாகியை தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்து விட்டார். டிசம்பர் 2006ல் கேட்ஸ் பென்டகனில் பதவியில் இருத்தப்பட்டு புஷ்ஷின் ஈராக்கில் 30,000 துருப்புக்கள் "விரிவாக்கத்தை" கண்காணித்தார்; மற்றும் ஆப்கானிஸ்தானிய போரின் தொடர்ச்சியையும் மேற்பார்வையிட்டார்.

புஷ் நிர்வாகத்தின் நிதிய பிணை எடுப்புக் குழுவில் கொண்டிருந்த மூன்றாம் இடத்தில் இருந்து கீத்னர் உயரிடத்திற்கு மாறுகிறார்; அங்கு அவர் நியூ யோர்க்கின் மத்திய வங்கி தலைவராக இருந்து முன்பு நிதி மந்திரியாக இருந்த ஹென்றி போல்சனுடனும் மத்திய வங்கி கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கேயுடனும் இணைந்து ஒத்துழைத்தார். வோல்ஸ்ட்ரீட் சரிவிற்கு, நிதியச் சந்தைகள் பற்றி அன்றாடம் மேற்பார்வையிடும் அரசாங்கத் தலைமை அதிகாரியாக இருந்தவர், இவருக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு உயர்ந்த கொள்கை உருவாக்கும் பதவியாகும்.

தற்போதைய நிதிய, இராணுவ-அரசியல் நெருக்கடிச் சூழ்நிலையில் பதவி நியமனங்களை உறுதி செய்யும் குழுக்கூட்டங்கள் இதுவரை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரின் அடிப்படை ஒற்றுமையை நிரூபித்துள்ளன. கடந்த சில மாறுகைகளில் ஒரு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவரை கிட்டத்தட்ட தடம்புரளசெய்யக்கூடிய விடயங்களான வரிகள் செலுத்தாமை, ஆவணமற்ற குடியேறியவர்கள் வேலைக்கு வைத்தது, கொள்கை சங்கடங்களில் தொடர்பு, ஊழல் செயற்பாடுகளில் அகப்பட்டுக் கொண்டது போன்றவை புதிய ஜனாதிபதியின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரைவில் கூட்டப்பட்டுள்ள குழுவின் நலன்களைக் கருத்திற்கொண்டு பலவும் பின்போடப்பட்டுவிட்டன.

உதாரணமாக கீத்னர் உள்நாட்டு வருவாய்த்துறை அடங்கியிருக்கும் துறைக்கு தலைமை தாங்குவார்; ஆனால் இவரோ நான்காண்டு காலத்திற்கு வருமானத்திற்கு வரிகள் செலுத்தாதவர்; நிதி மந்திரியான பின்னர்தான் வட்டியுடனும் அபராதத்துடனும் அவற்றை செலுத்தினார். தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் சட்டத்தில் இருந்து தப்பியோட முற்பட்ட பில்லியனரான ஊகவணிகக்காரர் மார்க் ரிச்சிற்கு 2000ம் ஆண்டு கிளின்டன் நிர்வாகக் கடைசி நாட்களில் மன்னிப்பு வழங்க பொறுப்பைக் கொண்டிருந்தவர்.

ஆனால் இவர்கள் இந்த வாரம் அவர்களுடைய பதவிகளில் உறுதி செய்யப்பட்டபின், குடியரசு செனட்டர்கள் இரு நியமனங்களையும் வரவேற்க வரிசையில் நின்றனர். உத்தாவின் ஒரின் ஹாட்ச், கீத்னரைப் பற்றி Fox News ல் தெரிவித்தது: "இவர் ஒரு மிகத் திறமையான மிகத் திறமையான நபர்." இதையும்விட பெரும் பாராட்டை நியூ ஹாம்ப்ஷைரின் ஜன் கிரெக் தெரிவிக்கும் விதத்தில், கீத்னரின் வரிப் பிரச்சினைகள் "ஒன்றுமில்லாதது பெரிதுபடுத்தப்பட்டதுதான்" என்று கூறினார். அவர் மேலும் கூறியது: "இது மிகவும் துரதிருஷ்டமானது; ஏனெனில் ஒரு அசாதாரண திறைமை பெற்ற நபர் அவர்; வாஷிங்டனில் தலைமை வட்டத்தில் அவர் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

ஹோல்டரைப் பொறுத்தவரையில் விசாரணைகுழு கூட்டத்தில் கூட அவர் நீரில் மூச்சுத்திணற மூழ்கடிக்கப்படுவது போல் செய்வது (water boarding) சித்திரவதை என்றுதான் கூறியபோதும் (இது புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளை சட்டபூர்வமாக ஹாக்கில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு ஏற்க வைக்கும்) குடியரசுக் செனட்டர்கள் திரண்டு நின்று அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

அமெரிக்கா பயங்கரவாதிகளுடன் "போரில் ஈடுபட்டுள்ளது" என்று ஹோல்டர் உடன்பட்டபோது, தெற்கு கரோலினாவின் செனட்டர் லிண்சே கிரகாம் "நான் இப்பொழுதே உங்களுக்கு வாக்களிக்க தயாராக உள்ளேன்."என கூறினார். புளோரிடாவின் செனட்டர் மெல் மார்ட்டினெஸ் எழுத்துமூல அறிக்கை ஒன்றை வெளியிட்டார்; அதில், "எரிக் ஹோல்டர் அரசாங்க வக்கீலின் பிரத்தியேக பங்கை உணர்ந்துள்ளார், மேலும் அப்பங்கை திறம்படச் செய்யும் தகுதி படைத்தவர் என்று நான் நினைக்கிறேன். எனவே திரு ஹோல்டர் பதவி உறுதிக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன், என்னுடைய சக உறுப்பினர்களையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்." என குறிப்பிட்டிருந்தார்.

ஹில்லாரி கிளின்டனை பொறுத்தவரையில் முன்பு குடியரசு வலதுசாரிகளால் மிக அதிக அரக்கத்தனமாக சித்தரிக்கப்பட்டவருடைய பதவி உறுதிசெய்யப்பட்டமை, அனைத்து செய்தி ஊடகத்தில் காதல் விருந்து போல் காட்டப்பட்டது. அவர் தயாரித்திருந்த அறிக்கையை படிப்பதற்கு முன் செனட் உறுப்பினர்கள் 45 நிமிடங்கள் அவரைப் புகழ்ந்து பேசினர். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கணவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு வாக்களித்தவர்கள் இவரை அரச செயலாளர் பதவிக்கு உறுதி செய்தனர்; செனட் மன்றத்திற்கு அதை இனுப்பி வைத்தனர்; அங்கு அவர் ஒபாமாவின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாணம் முடிந்து சில நிமிடங்களில் பதவி உறுதி பெறுவார்.

அவருடைய நியமனத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே குடியரசுக் கட்சிக்காரர் லூசியானாவின் செனட்டரான டேவிட் விட்டர் ஆவார்; இவர் முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதி திரட்டுவதில் ஊழல் தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற காரணத்தைக் கூறியுள்ளார்; நன்கொடை அளித்தவர்கள் அரச செயலாளர் கிளின்டனிடம் அரசியல் ஆதாயங்கள் பெறக்கூடும் என்றார் அவர்.

இரு கட்சியின் ஒருமித்த கருத்தும் ஒபாமா மந்திரிசபைக்கு ஒப்புதல் கொடுத்ததில் காட்டிய உந்துதல் வாஷிங்டன் போஸ்ட்டின் Dana Milbank எழுதும் கேலிச்சித்திர கட்டுரை ஒன்றில் மிகப் பொருத்தமாக சுருக்கிக் கூறப்பட்டது; செனட் நிதியக்குழுவிற்கு முன் கீத்தனர் தோன்றியது பற்றி அவர் கொடுத்த தலைப்பு, "சிறிதும் தோற்க வாய்ப்பு இல்லாத மிகப் பெரிய நியமனம்."

பெருநிறுவன உயரடுக்கை அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உட்படுத்தியுள்ள பெருகிவரும் நிதிய நெருக்கடிச் சூழ்நிலையில், வோல் ஸ்ட்ரீட்டிற்கு அரசாங்க பிணெயெடுப்பு பொதியை எப்பொழுதும் விரிவுபடுத்தக்கூடிய நபர்களுக்கும் கொள்கைகளுக்கும் எவ்விதத் தடையும் ஏற்படுத்தலாகாது.