World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hillary Clinton touts "smart power" in pursuit of US imperialist aims

ஹில்லாரி கிளின்டன் அமெரிக்க ஏகாதிபத்திய இலக்குகளைத் தொடர "விழிப்புச் சக்தியாக" இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்

By Bill van Auken
15 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

பதவி உறுதி பற்றிய குழு விசாரணையில் செனட்டர் ஹில்லாரி கிளின்டன் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவு மந்திரி என்பதில் தான் கடைபிடிக்க உள்ள கொள்கைகள் பற்றி அதிகம் கூறவில்லை; ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உந்ததுதல் கொடுத்துள்ள அதே இலக்குகளை தான் தொடர இருப்பதாக மட்டும் கூறினார்; ஆனால் இதை வண்ணப் பூச்சுக்களுடன் உரைத்தார்.

ராஐதந்திர முறையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவது இராணுவ வன்முறை குறைக்கப்படும் என்ற உட்குறிப்பை தராது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். "ராஐதந்திர முறையை முன் வைப்போம்; ஏனெனில் அதுதான் சாமர்த்தியமான அணுகுமுறை." என்று கூறிய அவர், "ஆனால் சில நேரம் இராணுவ வலிமைதான் தேவை என்பதையும் நாம் அறிவோம்." என்றும் தெரிவித்தார்.

செனட் வெளியுறவுக் குழுவிற்கும் முன் தோன்றிய கிளின்டனுக்கு சக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியினரும் பெரும் பாராட்டைக் குவித்தனர். சிறிது காலத்திற்கு முன்புதான் குடியரசுக் கட்சி முன்னாள் அமெரிக்க முதல் பெண்ணை பெரிதும் குறைகூறியிருந்தது. இவரே குடியரசுக் கட்சியில் உள்ள தன்னுடைய கணவரின் எதிர்ப்பாளர்களை "பரந்த வலதுசாரி சதிக்காரர்கள்" என்று கூறியிருந்தார். ஆனால் அத்தகைய விரோதப் போக்கு இப்பொழுது ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் வெளியுறவு மந்திரியாக நியமனம் பெற்றுள்ள முறையில், அவர் புஷ் நிர்வாகம் தொடர்ந்திருந்த நலன்களையே காப்பார் என்பது தெளிவாகியுள்ளது.

இந்த பதவி உறுதிப் பேட்டியின் முக்கிய கூறுபாடு இப்பொழுது சர்வதேசப் முரண்பாட்டில் பெரும் வெடிப்புத்தன்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காசாப் போர் பற்றி வேண்டுமென்றே காட்டப்பட்ட அலட்சியப் போக்காகும்.

ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி செனட்டர்கள் எவரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு பற்றி அவருடை கருத்துக்களை அறிய ஆர்வம் ஏதும் காட்டவில்லை. கருத்துக்களை கூறியவர்கள் --கிளின்டன் உட்பட--ஒருமனதாக இஸ்ரேலிய தாக்குதல் வறுமையில் வாடும் பகுதியில் இருக்கும் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படுவதற்கு ஆதரவைத்தான் கொடுத்தனர்.

"ஜனாதிபதியாக வரவிருப்பவரும் நானும் தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் விருப்பம், ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து விடுவித்துக் கொள்ளும் விருப்பம் பற்றி ஆழ்ந்த பரிவுணர்வைத்தான் கொண்டுள்ளோம்" என்று தன்னுடைய ஆரம்ப உரையில் கிளின்டன் அறிவித்தார்.

"மத்திய கிழக்கில் மனிதச் சேதம் மிகப் பெரிய சோக அளவில் ஏற்பட்டுள்ளது" பற்றிக் குறிப்பிட்ட அவர், "பாலஸ்தீனிய, இஸ்ரேலிய சாதாரண மக்களின் கஷ்டங்கள் பற்றிப் பெரும் வேதனை அடைந்துள்ளதாகவும்" கூறினார். கிட்டத்தட்ட 1,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட நிலையில், இத்தகைய உணர்வுகளின் பொருள் தெளிவாக இல்லை."

அதேபோல், வெளியுறவுக் குழுவின் தலைவரான மாசச்சூசட்ஸின் ஜோன் கெர்ரி உறுதியாகக் கூறியது: "அனைத்து உரிமைகளையும் இஸ்ரேல் பெற்றுள்ளது; போர்நிறுத்தத்தை ஹமாஸ் மீறியது, 10,500 ராக்கெட்டுக்களை ஏவியது ஆகியவற்றிற்கும் அவர்கள் காட்டும் பொறுமை பற்றி நாங்கள் முற்றிலும் ஆதரவைக் கொடுக்கிறோம்.'

ஜனநாயகக் கட்சி செனட்டரான கலிபோர்னியாவின் பார்பாரா பாக்ஸர், "காசாவில் வெடித்துள்ள வன்முறை தன்னுடைய நிலைப்பாட்டிற்கு இஸ்ரேல் தொடர்ந்து எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தல்களைத்தான் நினைவிற்கு கொண்டு வருகிறது; இவை முடிவில்லா ராக்கெட் தாக்குதல்களாக உள்ளன." என்றார்.

தெற்கு கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜிம் டெமின்ட் கூறினார்: "இஸ்ரேலைப் பற்றி பேசிவிட்டோம்; இங்கு நாம் அவர்களுக்கு பரந்த ஆதரவு கொடுத்துள்ளோம் என நினைக்கிறேன்; ஆனால் ராஐதந்திர முறையை தொடர்வது தர்க்கமற்றதாகவும் பொருளற்றதாகவும் இருக்கக்கூடும்; அதேபோல் இஸ்ரேல் இருப்பதை பகிரங்கமாக எதிர்க்கும் அரசாங்கங்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் பயனற்றவை."

இப்பிரச்சினையில் கெர்ரி கேட்ட நேரடி வினா ஒன்றிற்கு விடையிறுக்கையில், ஒபாமாவின் நிலைப்பாட்டை போன்றே கிளின்டனும் கொண்டார்; புஷ் நிர்வாகத்தின் தற்போதைய கொள்கையை எக்கருத்து தெரிவித்தாலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று வலியுறுத்தி, புஷ் நிர்வாகம் காசா பற்றிய இஸ்ரேல் போருக்கு முழு ஆதரவு கொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

"தற்போதைய நிர்வாகம் திரைக்கு பின்னாலும் முன்னாலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் அவர்கள் செய்வதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் எதையும் கூற, செய்ய விரும்பவில்லை." என்றார் கிளின்டன்.

ஆயினும்கூட தானும் ஒபாமாவும் "தன்னைக் காத்துக்கொள்ளும் இஸ்ரேலிய உரிமைகளை ஆதரிப்பதாகவும் ராக்கெட் தாக்குதல்களுக்கு உட்படுதல் என்றால் என்ன என்பதை புரிந்து உணர்வதாகவும்" அவர் மீண்டும் கூறினார்.

இதைவிட இஸ்ரேல் அரசாங்கத்திற்கு படுகொலை தொடரப்படலாம் என்பதற்கு தெளிவான பச்சை விளக்கு தேவையில்லை எனலாம்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா தீவிரமாக தலையிட்டுக் கொண்டிருக்கும் உலகின் பிற பகுதிகள் பற்றிய வினாக்களுக்கும் கிளின்டன் துல்லியமான விடைகளை கொடுக்கவில்லை; பல முறையும் வரவிருக்கும் நிர்வாகம் "கொள்கை பரிசீலனையை" மேற்கொள்ளும் என்று மட்டும் கூறினார். வரவிருக்கும் நிர்வாகத்திற்கும் முந்தைய நிர்வாகத்திற்கும் இடையே கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு பற்றிக் கூறுகையில், "கொள்கைகள், நடைமுறை சாத்தியக்கூறுகளை ஒட்டித்தான் வெளியுறவுக் கொள்கை இருக்க முடியுமோ ஒழிய கடினக் கோட்பாட்டு அடிப்படையில் அல்ல." என்றார்.

ஆயினும்கூட, அவர் குறிப்பிட்ட சில துல்லிய கருத்துக்கள் கூட புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளுடனான அடிப்படைத் தொடர்ச்சியைத்தான் குறிப்பிட்டன. பல முறையும் வரவிருக்கும் நிர்வாகத்தின் கொள்கை, பாதுகாப்பு மந்திரி ரோபர் கேட்ஸ், மத்தியக் கட்டுப்பாட்டு தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயிஸ் மற்றும் டுக்லாஸ் லூட், ஈராக், ஆப்கானிஸ்தான் பற்றிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடைய கருத்துக்கள்படி செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் அனைவரும் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டாலும் பதவியில் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஈராக் பற்றிக் குறிப்பிடுகையில், ஒபமா நிர்வாகத்தின் படைகள் திரும்பப் பெறுதல் கொள்கை புஷ் நிர்வாகத்தினால் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கொண்டுவரப்பட்ட "சக்திகள் நிலைப்பாட்டு பின்னணி உடன்பாட்டை" ஒட்டி இருக்கும் என்றார்; இது பென்டகன் காலவரையறையற்ற முறையில் அமெரிக்க இராணுவ ஆக்கிரப்பு நீடிக்கும், குறைந்த சக்திகளுடன் என்ற குறிப்பைக் காட்டுகிறது.

செனட்டர் ரசல் பெய்ன்கோல்ட் (விஸ்கான்ஸின், ஜனநாயகக் கட்சி) 16 மாதங்களுக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க போர்ப்படைகள் திரும்பப் பெறப்படும் என்ற ஒபாமாவின் பிரச்சார உறுதிமொழி பற்றி கேட்டபோது, கிளின்டன் நேரடி வினாவை தவிர்த்தார்; ஒபாமா நிர்வாகம் "பாதுகாப்புடனும், பொறுப்புடனும் போர் துருப்புக்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அப்படி அகற்றும் நோக்கத்தைக் கொண்டது" என்று கூறினார்.

ஒபாமாவைப் போலவே கிளின்டன் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தானில் செயல்படும் என்று குறிப்புத் தெரிவித்த கிளின்டன் வாஷிங்டன் மற்ற நேட்டோ உறுப்பினர்களும் ஆக்கிரமிப்பு படைகளில் தங்கள் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தும் என்று கூறினார்.

ஈரானைப் பொறுத்தவரையில் வரவிருக்கும் நிர்வாகம் தெஹ்ரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துமா என்பது பற்றிக் குறிப்பாக தெரிவிக்க மறுத்துவிட்டார். மாறாக, ஈரானிய அரசாங்கம் "பயங்கரவாதத்தை வளர்க்கிறது", "அணுவாயுதங்களை கட்டமைக்க முயல்கிறது" போன்ற புஷ் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்களை எதிரொலித்து, இரு முறை வாடிக்கையான எச்சரிக்கையான "மேசையில் இருந்து எந்த விருப்பமும் அகற்றப்படவில்லை" என்பதைக் கூறினார்.

புதிய நிர்வாகம் சுடான் டார்பர் பகுதியில் " தடைசெய்யப்பட்ட விமான பறக்கும் பகுதி" ஏற்படுத்த முற்படும் என்றும் இது "மனித உரிமைகள்" என்ற போர்வையின் கீழ் எண்ணெய் வளம் உடைய ஆபிரிக்க நாட்டின்மீது கூடுதலான குறுக்கிட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறிப்பிட்டார்.

வினாவிற்கு உட்படுத்தப்பட்டபோது, கிளின்டன் ஜனநாயக பிரச்சாரத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழியான வெளியுறவுத் துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பிளாக்வாட்டர் போன்ற ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார். அந்த விளைவிற்காக சட்டத்தை ஒன்றாகக் கொண்டுவருகையில், அத்தகைய நிறுவனங்கள் அந்த நேரத்தில் "தனியார் கூலிப்படை நிறுவனங்களாக" இருந்தன என்றும் பாக்தாத்தின் நிசூர் சதுக்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 17 பேர் படுகொலை பேன்ற நிகழ்வுகள் ஈராக்கில் "நம் பணியை குறைமதிப்பிற்கு உட்படுத்தின" என்றும் கூறினார்.

ஆனால் செவ்வாயன்று வாஷிங்டனுக்கும் இன்னமும் தனியார் படைகள் உதவி வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டார். "எமது சிவிலிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு தேவை. நம்முடைய படைகளை திரும்பப் பெறுகையில், ஈராக்கிய துருப்புக்கள் அவர்களுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தலை கொள்ள வேண்டும் அல்லது நாம் ஒப்பந்தக்காரர்களை பயன்படுத்த வேண்டும்.'

கிளின்டன் பலமுறையும் தன்னுடைய நோக்கம் "விழிப்பான அதிகாரத்தை" அமெரிக்க நலன்களுக்கு பயன்படுத்துவதாக இருக்கும் என்று அறிவித்தார். இந்த சொற்றொடர் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கை சற்று குறைந்த தன்மையுடைய ஒருதலைப்பட்ச கொள்கையாக இருக்கும் விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது; அப்பொழுதுதான் புஷ் நிர்வாகத்தீன்கீழ் சரிந்துள்ள அமெரிக்க கெளரவமும் செல்வாக்கும் மீட்கப்படும் என்று பொருள்பட இந்த சொற்றொடர் உபயோகிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் கொள்கை வகுப்பு குழுவான Center for Strategic and International Studies (CSIS) புஷ் நிர்வாக காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் இரண்டாம் பெரிய பதவி வகித்த ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தலைமையில் "விழிப்பான அதிகாரத்தை" கருத்தைப் பரப்ப ஒரு குழுவை நியமித்தது; அதில் ஒரு ஹார்வர்ட் பேராசிரியரும் கிளின்டன் நிர்வாகத்தில் பாதுகாப்பு விஷயங்களுக்கு உதவிச் செயலராகவும் இருந்த ஜோசப் நையும் இருந்தார்.

தன்னுடைய அறிக்கையில் இந்தக் குழு "விழிப்பான அதிகாரத்தை என்பது கடினமும் அல்ல, மிருதுவானதும் அல்ல --அது இரண்டின் இணைப்பையும் திறமையாகக் கொண்டது. விழிப்பான அதிகாரத்தின் பொருள் ஒருங்கிணைந்த மூலோபாயத்தை வளர்ப்பது ஆகும் என்பதோடு, இருப்புக்கள் ஆதாரம் மற்றும் தேவையான கருவிகளை அமெரிக்க இலக்குகளை அடையத் தேவையானதை கொள்ளுவது, கடினமாயினும், மிருதுவானதும் என்ற பாகுபாடு அற்றதுமாகும். இந்த அணுகுமுறை ஒரு வலுவான இராணுவத்தின் தேவையை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது ஆனால் உடன்பாடுகள், பங்காளித்தனம் மற்றும் அனைத்து மட்டங்களிலும் இருக்கும் நிறுவனங்களையும் அமெரிக்கச் செல்வாக்கை விரிவாக்கவும் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றிய நெறியை நிறுவவும் பெரிதும் நம்புகிறது." என்று வரையறை செய்துள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், ஒபமா நிர்வாகம் உறுதிமொழி அளித்திருந்த "மாற்றம்" என்பது அமெரிக்க இராணுவவாதம், ஆக்கிரமிப்புப் போர்களில் இருந்து மாற்றம் என்று இல்லாமல், இந்த நடைமுறைகளை நெறிப்படுத்தும் கொள்கைகளை செயல்படுத்துவது என்றுதான் உள்ளது.

செவ்வாயன்று குழு விசாரணையில் எழுந்த ஒரே எதிர்ப்புக் கருத்துப் பறிமாற்றம் நியமிக்கப்பட்டுள்ளவரின் கணவர் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் அயல்நாட்டில் நடத்தும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பற்றி இருந்தது. அவருடைய அறக்கட்டளை பல வளைகுடா ஷேக் ஆட்சிகள், வெளிநாட்டு வணிகர்கள், மற்றும் செல்வாக்குக் குழுக்களிடம் இருந்து பெரும் நன்கொடைகளை வசூலித்துள்ளது. சமீபத்திய செய்தித் தகவல்கள் சிலவற்றை பொறுத்தவரையில் ஹில்லாரி கிளின்டன் அமெரிக்க செனட்டர் என்னும் முறையில் கணவருக்கு நன்கொடை அளித்தவர்களுக்காக வாதிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

செனட்டர் ரிச்சர் லூகர், உயர்மட்ட குடியரசுக் கட்சி வெளியுறவுக் குழு உறுப்பினர், வெளிநாட்டு நன்கொடைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது அறக்கட்டளைக்கு வரவிருக்கும் நன்கொடைகள் பற்றி உரிய நேரத்தில் முழுமையாகத் தகவல் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஒபாமா பதவிபொறுப்பேற்பு குழுவில் இருக்கும் நினைவுக் குறிப்பில் உள்ளதை விடத் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் குடியரசுக் கட்சியினர் இப்பிரச்சினையை நயத்துடன்தான் அணுகினர்.

லூயிசியானாவின் குடியரசுக் கட்சி செனட்டரான டேவிட் விட்டர் ஒருவர்தான் விதிவிலக்காக, "ஒரு மடிந்து விட்ட குதிரையை அடிக்க விரும்பவில்லை" என்று கூறியவிதத்தில் தன் விசாரணையை முடித்தார்.

குழு உறுப்பினர்களில் எவரும் நியமனத்திற்கு எதிராக வாக்களிக்க இருப்பதாக குறிப்பிடவில்லை; வாக்கெடுப்பு முழு செனட் கூட்டத்தில் வியாழனன்று நடைபெற உள்ளது; ஜனவரி 20 அன்று ஒபாமா பதவி ஏற்பதற்குள் ஒப்புதலைப் பெற்றுவிடும்.