World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Citigroup downsizes as US and global bank crisis deepens

அமெரிக்கா மற்றும் சர்வதேச வங்கி நெருக்கடி தீவிரமடைவதை அடுத்து சிட்டி குழுமம் ஆட்களைக் குறைக்கிறது

By Andre Damon and Barry Grey
15 January 2009

Back to screen version

சிட்டி குழுமம், அதன் சிறுவியாபார அடமான தொழில்பிரிவான ஸ்மித் பார்னே நிறுவனத்தை மோர்கன் ஸ்ரான்லியுடனான கூட்டு நிறுவனத்தில் இருந்து பிரிக்க இருப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. இந்த நடவடிக்கையானது, அதன் தொழில் பிரிவுகளைப் படிப்படியாக மூடுவதற்கும், தற்போது சுமார் $2 டிரில்லியன் மதிப்பிலான அவ்வங்கியின் நிதியறிக்கையை மூன்றில் ஒரு பங்காக சுருக்குவதற்குமான அதன் திட்டத்தின் முதல்படியாக கருதப்படுகிறது.

2008ல் வருவாயில் உலகின் முன்னணியில் இருந்த இந்த வங்கி, 2008ம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு அறிக்கைகளை அடுத்த வாரம் அறிவிக்கும் போது, இரண்டு வாடிக்கையாளர் நிதி சேவைகளில் இருந்து வெளியேறுவது மற்றும் அதன் பிரத்யேக அடையாளமான கடன்அட்டை தொழிலிருந்து வெளியேறுவது மற்றும் அதன் வர்த்தக நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது குறித்து அறிவிக்கும் என்று புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது. 100 நாடுகளில் 300,000த்திற்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் இந்த மிகப் பெரிய வங்கி, தொடர்ச்சியான காலாண்டுகளில் அதன் ஐந்தாவது இழப்பாக, குறைந்தபட்சம் 10 பில்லியன் டாலரை செயல்பாட்டு இழப்பாக அறிவிக்க கூடும்.

அக்டோபரிலிருந்து, அமெரிக்க கருவூலத்திலிருந்து 45 பில்லியன் டாலரை ரொக்க உள்ளீடாக இந்த வங்கி பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தை அதன் மிகப் பெரிய பங்குதாரராக ஆக்கி கொண்டுள்ளது. நவம்பரில், வங்கியை காப்பாற்றுவதற்காக கருவூலமும், மத்திய வங்கியும் 300 பில்லியன் டாலருக்கும் மேலாக தொகையை ரொக்கமாகவும், கடனாகவும் மற்றும் உத்திரவாதமாகவும் அளித்ததன் மூலம் ஒரு மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

இதில் எந்த நடவடிக்கையும் சிட்டி குழும பங்குகளின் திடீர் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி விடவில்லை. கடந்த வாரம் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்த சிட்டி குழுமத்தின் பங்குகள், புதனன்று மேலும் 23 சதவீதம் சரிவடைந்தன. இந்த வங்கி பங்குகளின் பொறிவானது, கடன்களை தீர்க்க முடியாததால் ஏற்படும் நெருக்கடியின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது. இது அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல முக்கிய வங்கிகளையும் பாதித்து வருகிறது. அடைமானக்கடன் சந்தையின் முக்கிய முரட்டுத்தன ஊகவணிகக்காரர்களில் சிட்டி குழுமமும் ஒன்றாக இருந்தது. அதிக அபாயமும், ஆனால் அதிக இலாபமும் நிறைந்த சந்தையான அடைமானக்கடன் சந்தையில் சிட்டி குழுமம் ரொபேர்ட் ரூபினால் ஊக்குவிக்கப்பட்டிருந்தது. கிளிண்டன் நிர்வாகத்தின் கருவூல செயலாளராக பணியாற்றிய பின்னர், சிட்டி குழுமத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், மூத்த ஆலோசகராகவும் இருந்து வந்த இவர், கடுமையான கண்டனங்களுக்குப் பின்னர் கடந்த வெள்ளியன்று தமது பதவியை இராஜினாமா செய்தார்.

அதன் பல தொழில்களை மூடுவதற்கான நடவடிக்கைகளுடன், இழப்புகளைச் சமாளிக்க மற்றும் திவாலாவதில் இருந்து தப்பிப்பதற்கான அதன் முயற்சிகளில், 1998ல் சிட்டிகுழுமம் மற்றும் டிராவலர்ஸ் குரூப் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட நிறைய நிறுவனங்களை வெளியேற்றி வருகிறது. அதாவது, வர்த்தக வங்கியியல், முதலீட்டு வங்கியியல், பங்கு வர்த்தகம் மற்றும் பிற நிதி தொழில்களை ஒருங்கிணைத்த மிகப் பெரிய பிரமாண்ட ஒருங்கிணைந்த நிதியியல் நிறுவனமாக அது உருவாக்கப்பட்டது. அரசாங்க சீர்திருத்தங்களின் போதும், மலிவு கடன்சந்தையிலும் இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் பெரியளவில் இலாபத்தை ஈட்டியது. அது கடன் வளர்ச்சிக்கும், வோல் ஸ்ட்ரீட் செயலாளர்களுக்கு பெரியளவில் சம்பளங்கள் வழங்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் வீட்டுத்துறை மற்றும் கடன் குமிழிகளின் தவிர்க்க முடியாத சரிவு அந்த வங்கியையும் (மற்றும் பிறவற்றையும்) வேறோடு பிடுங்கி, அவற்றை தற்போதைய படுகுழியில் தூக்கி எறிந்திருக்கின்றன.

1930களுக்கு பின்னர் ஆழ்ந்த சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படுத்தி இருப்பதும், நிதியியல் துறையிலிருந்து பொருளாதாரத்தின் பிற பிரிவுகளுக்கும் பரந்து வரும் இந்த நெருக்கடியானது, வீட்டுவசதி துறைலிருந்து கடன்அட்டை துறையில் இருக்கும் கடன்கள், வாகனத்துறை கடன்கள், வர்த்தக நில விற்பனைத்துறை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பின்மையின் உயர்வு, வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாங்கள் அளிக்க வேண்டிய தொகையை அளிக்க முடியாமல் இருப்பது ஆகியவற்றிற்கும் அப்பாற்பட்டு வங்கிகளின் கையிருப்பையும், முதலீட்டையும் குழிதோண்டி வருகிறது. உண்மையில், இது ஏற்கனவே கடன்களில் இருக்கும் ஆழ்ந்த முரண்பாடுகளை ஒன்று கூட்டுகிறது என்பதுடன் முன்னணி நிதியியல் நிறுவனங்களால் கடன்களைத் திருப்பி அளிக்க முடியாது என்ற நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகிறது.

கடந்த அக்டோபரில் காங்கிரசால் கொண்டு வரப்பட்ட Troubled Asset Relief Program (TARP) திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 700 பில்லியன் டாலரின் இரண்டாவது தவணையான 350 பில்லியன் டாலரை அளிப்பதற்கான காங்கிரஸின் ஒப்புதலை காப்பாற்ற, வெளியேறும் புஷ் நிர்வாகத்தாலும், வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்தாலும் அவசரப்படுத்தப்படுவதால் உறுதியான நிம்மதி கிடைப்பதாக சிட்டிகுழுமத்தின் அறிவிப்பு குறிப்பிடுகிறது. திங்களன்று, வங்கிகளுக்கான பிணையெடுப்பு நிதியின் இரண்டாவது தவணையில் அளிக்க வேண்டிய 350 பில்லியன் டாலரை ஒபாமாவும், புஷ்ஷூம் முறையாக கோரிய அதே நாளில், மத்திய வங்கி தலைவர் பென் பெர்னான்கி லண்டனில் உரையாற்றும் போது, வங்கிகளைக் காப்பாற்ற இந்த தொகையுடன், உண்மையில் வரிசெலுத்துவோரின் பணம் மேலும் அதிகமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

கருவூலத்துறை, Bank of Americaவிற்கு கூடுதல் உதவியாக பில்லியன்கணக்கான டாலர்களை அளிக்க தயாராகி வருவதாக புதனன்று நியூயோர்க் டைம்ஸ் வலைத்தள பதிப்பு குறிப்பிட்டது. கடந்த ஆண்டு TARP நிதியிலிருந்து, இந்த வங்கி 25 பில்லியன் டாலரை பெற்றது. ஆனால், டைம்ஸ் தகவலின்படி, Merrill Lynchல் அது இழப்புகளைச் சந்தித்து வருகிறது. அந்நிறுவனம் கடந்த செப்டம்பரில், முதலீட்டு வங்கியின் பொறிவைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் மானிய திட்டத்தில் கையகப்படுத்தப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் அமெரிக்க வங்கிகள் அவற்றின் வருவாய் அறிக்கைகளை வெளியிடும் போது அவை முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த காலாண்டு இழப்பை வெளியிடக்கூடும் என்று நிதியியல் பத்திரிகைகள் பரவலாக குறிப்பிட்டன. தற்போது வரை மிக வலுவான முன்னணி வங்கிகளில் ஒன்றாக கருதப்படும் JPMorgan Chase கூட இழப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியின் மிகப் பெரிய வங்கியான டோச் வங்கி, அதன் நான்காம் காலாண்டு அறிக்கையில் சுமார் 4.8 பில்லியன் யூரோ (6.3 பில்லியன் டாலர்) இழப்பை அறிவித்ததன் மூலமும், பிரிட்டனின் பார்க்லே வங்கி உலகெங்கிலும் உள்ள அதன் கிளைகளில் இருந்து 2,100 தொழிலாளர்களுக்கு பணிவிடுப்பு அளிப்பதற்கான திட்டங்களை அறிவித்ததன் மூலமும் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் வங்கித்துறை நெருக்கடி அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.

நிதி நெருக்கடியின் சமீபத்திய அறிகுறிகள், பின்னடைவு விரைவான விகிதத்தில் மோசமாகி வருவதற்கான புதிய குறிப்புகளுடன் ஒத்து போகின்றன. வங்கித்துறை மீதான பயங்கர செய்திகளுக்கு அப்பாற்பட்டு, டிசம்பரில் சில்லரை விற்பனைகளும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்தற்கு பிரதிபலிப்பாக, புதனன்று அமெரிக்க பங்குச்சந்தைகள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்தன. எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக 2.7 சதவீதம் சில்லரை விற்பனை குறைந்து விட்டிருப்பதாக வர்த்தகத்துறை அறிவித்தது. 1992ல் சாதனைச்சரிவுப்பதிவு தொடங்கியதில் இருந்து, தொடர்ச்சியாக ஆறாவது முறையாக டிசம்பரில் சரிவுகளைச் சந்தித்தது.

The Dow Jones Industrial அண்ணளவாக 248 புள்ளிகள் அல்லது 3 சதவீதம் குறைந்தன; நாஸ்டாக்கின் ஒட்டுமொத்த குறியீடு 57 புள்ளிகள் அல்லது 3.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது; மற்றும் Standard & Poor's 500 பங்குச்சந்தையின் குறியீடு 29 புள்ளிகள் அல்லது 3.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

நாள்தோறும் புதிய புதிய பணிவிடுப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. புதனன்று, மோட்டரோலா அதன் செல்பேசி தொழிலில் ஏற்பட்ட திடீர் சரிவின் காரணமாக மற்றுமொரு 4,000 பணியிடங்களைக் குறைக்கவிருப்பதாக அறிவித்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் பதிப்பாளர் Gannett, சம்பளமில்லாமல் வாரக்கணக்கில் விடுப்பெடுக்க தனது தொழிலாளர்களுக்கு அழுத்தம் அளிக்க இருப்பதாக அறிவித்தது. அமெரிக்காவின் ஆறு மேற்கத்திய மாகாணங்களில் 58 கடைகளைக் கொண்டிருந்த ஒரு விற்பனை அங்காடியான Gottschalks செய்தது போன்று, கனடாவின் தொலைதொடர்பு நிறுவனம் நோர்டெலும், பிரிவு 11ன் கீழ் திவால் பாதுகாப்பைப் பதிவு செய்து கொண்டுள்ளது.

புத்தக விற்பனையாளர் Barnes & Noble, முன்னணி மருந்து நிறுவனமான Pfizer, எஞ்சின் உற்பத்தியாளர் Cummins, பிரிண்டர் உற்பத்தியாளர் Lexmark மற்றும் அமெரிக்காவில் 750 பணியிடங்களை வெட்டும் நெதர்லாந்தின் நிதியியல் சேவைகள் குழுமமான ING உட்பட கடந்த சில நாட்களில் பிற நிறுவனங்களும் பணிவிடுப்புகளை அறிவித்து வருகின்றன.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் நவம்பரில் 3.8 வேலை வேண்டுவோர் இருந்ததாகவும், இதுவே 2007 நவம்பரில் ஒரு பணியிடத்திற்கு 1.8 வேலை வேண்டுவோர் இருந்ததாகவும், ஆகவே இது 2007ல் இருந்ததை விட இரண்டு மடங்காகும் என்றும் அமெரிக்காவின் தொழிலாளர் துறையின் தொழிலாளர் புள்ளிவிபரத் துறை செவ்வாயன்று அறிவித்தது. 1981-82 பின்னடைவுக்கு பின்னர், இதுவே மிக உயர்ந்த அளவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved