World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

Sarkozy's "new capitalism"

சார்க்கோசியின் "புதிய முதலாளித்துவம்"

Peter Schwarz
16 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 8ம் தேதி பாரிஸில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி "நிதிய முதலாளித்துவம்" என்று அவர் குறிப்பிட்டதற்கு எதிராக பெரிதும் சாடினார். செப்டம்பர் 11, 2001ல் பூகோளமயம் என்ற கனவு மறைந்துவிட்டது என்று அறிவித்தார். "போட்டியும் அனைவருக்கும் பெரும் செழிப்பும் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர்; மாறாக பற்றாக்குறையும், இலாபமுறைச் சார்பு சிந்தனை, ஊகம், பயனற்ற பொருட்களை பிறர் மீது திணித்தல் ஆகியவறிற்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது" என்றார் அவர்.

ஆனால் "நிதிய முதலாளித்துவ முறையின்" நெருக்கடி, முதலாளித்துவ அமைப்பு முறை தன்னின் நெருக்கடி என்று ஒன்றும் அல்ல என சார்க்கோசி தொடர்ந்து கூறினார். முதலாளித்துவ எதிர்ப்பு என்பது முன்னேற இடம் இல்லாத பாதை என்றும் முன்னேற்றத்துடன் தொடர்புடைய அனைத்திற்கும் எதிரிடையானது என்றும் அவர் அறிவித்தார். அரசுக்கும் சந்தைக்கும் இடையே சமச்சீர்நிலையை மீட்பதுதுதான் இப்பொழுது தேவையான பணி. தற்போதைய நெருக்கடி "மாயத்தோற்றத்தின் பொதுவான முக்கியத்துவத்தின்" முடிவை பிரதிபலிக்கிறது. தற்போதைய நெருக்கடியின் மிக முக்கியமான உண்மை "அரசுக்கு திரும்புதல் ஆகும்." என்றார்.

ஒரு சிறப்பான பார்வையாளர்கள் கூட்டத்தில் சார்க்கோசி உரையாற்றினார். "புதிய உலகம், புதிய முதலாளித்துவம்" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர், ஐரோப்பிய மத்திய வங்கி, உலக வர்த்தக அமைப்பின் தலைவர்கள், மூன்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர்கள் மற்றும் முக்கிய தொழிற்சங்க செயலர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். பொதுவாக அவர்கள் அனைவரும் சார்க்கோசியின் கருத்துக்கு உடன்பட்டனர்; ஆனால் இந்த அளவிற்கு அதை உரைக்கவில்லை.

அதிபர் மேர்க்கெல், "சர்வதேச நிதிய சந்தைகள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு முறை" வேண்டும் என்று கோரி, புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் அரசியல்வாதிகளை சந்தைக்கார நிதியமைப்பினர் மீண்டும் தடுத்தால் தான் உறுதியாக இருக்கப்போவதாகவும் கூறினார்.

சார்க்கோசியின் உறுதிமொழியான அறநெறியில் புதுப்பிக்கப்பட்ட முதலாளித்துவம் என்பதில் முற்போக்கு கருத்து ஏதும் கிடையாது. தடையற்ற கட்டுப்பாடற்ற தன்மை என்ற சிந்தனைப்போக்கில் இருந்து மாற்றம் என்பது கூடுதலான ஜனநாயகம் அல்லது சமத்துவம் என்ற பொருளைத்தராது. சார்க்கோசி அதிகரிக்க விரும்பும் அரச செல்வாக்கு முதலாளித்துவ அரசின் வலிமையை அதிகரிக்க முற்படுகிறது. பெருவணிகத்தின் நலன்களை அது பாதுகாக்கின்றதே அன்றி உழைக்கும் மக்களை அல்ல.

"அரசுக்கு திரும்புதல்" என்பதன் அர்த்தம் சார்க்கோசி ஒன்றும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப தனியார் இலாப நோக்கு நலன்கள் தாழ்த்தப்பட வேண்டும் என்று கூறவில்லை. பிரெஞ்சு பெருநிறுவனங்களை அரச பாதுகாப்பின்கீழ் கொண்டுவந்து அவற்றை வலுப்படுத்த விரும்புகிறார்; அதையொட்டி அவை பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் மற்றும் பெருநிறுவனங்களின் சர்வதேச போட்டியாளர்கள் ஆகியவற்றிற்கு எதிராக வலுப்பெறும்.

இத்தகைய அரச குறுக்கீடு பிரான்சில் நீண்டகால மரபியத்தை கொண்டுள்ளது; 17ம் நூற்றாண்டில் 14ம் லூயியின் நிதி மந்திரியாக இருந்த Jean-Baptiste Colbert காலத்திலேயே இருந்தது. 1960 களில் ஜனாதிபதி டு கோலின் கீழ் தொழில்துறையின் முக்கிய பிரிவுகள் கார்த்தொழில், விமானத் தொழில் பிரிவுகள் என்பவை அரச இயக்கத்தின்கீழ் வளர்ச்சி பெற்றன; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கம் அடக்குமுறைக்கு உட்பட்டது. 1980களில் ஜனாதிபதி மித்திரோன் தற்காலிகமாக எஃகுத் தொழிலை தேசியமயமாக்கினார்; இதற்கு காரணம் பகுத்தறிவார்ந்த முறையில் சில சீர்திருத்தங்கள் செய்தலும், பரந்த வேலை இழப்பை தவிர்த்தலும் ஆகும்.

சார்க்கோசி வாதிடும் அரச முதலாளித்துவம் மிக நெருக்கமாக பாதுகாப்பு வாதம் மற்றும் பெருநிறுவன முறையுடன் பிணைந்துள்ளதாகும். அரசு கொடுக்கும் தன்னுடைய பாதுகாப்பை தேசிய நலன்கள் மீது செலுத்தி, அவற்றின் இலாபங்கள் பொது நிதியம் மூலம் பெற வைக்கிறது; இதையொட்டி அவை வேலைகளை தகர்க்கவும், ஊதியங்களை குறைக்கவும் முடிகிறது; மேலும் அவை வெளிநாட்டு நிறுவனங்களால் எடுத்துக் கொள்ளப்படுவதும் பாதுகாக்கப்படுகிறது; அவை சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிரான அவர்களுடைய நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது.

அரச மற்றும் பெருநிறுவன நலன்களோடு நெருக்கமாக பிணைந்து உறவாடும் நிலையில், ஒவ்வொரு பொருளாதார முரண்பாடும் ஒரு அரசியல் முரண்பாடாக விரிவாகும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் தற்போதைய எரிவாயு பிரச்சனையில் இது காணப்பட முடியும். இதன் பின் அரசியலில் இருந்து இராணுவப் பிரச்சனை அல்லது மோதலுக்கு ஒரு முதல்படிதான். அது தற்செயல் நிகழ்வாக இருந்தாலும், "புதிய முதலாளித்துவ" மாநாடு என்பது பிரெஞ்சு இராணுவ உயர்கல்விக்கூடமான Ecole militaire இல் நடந்தது மிகவும் அடையாளமான முறையாக இருந்தது.

பல பில்லியன் யூரோ நிதியப் பொதிகள், பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய அரசாங்கங்களால் தங்கள் நாடுகளில் இருந்து வங்கிகள் நிறுவனங்களை பிணை எடுக்க உபயோகப்படுத்தப்பட்டவை, மிக நெருக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிணைந்தவை ஆகும். ஒரு 20 பில்லியன் யூரோக்கள் அரச நிதியை பிரான்ஸ் நிறுவி, முக்கிய பிரெஞ்சு நிறுவனங்கள் வெளிநாட்டு உரிமையாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட முடியாமல் செய்தது. இதே காரணத்தை ஒட்டி ஜேர்மனிய அரசாங்கமும் Commerz bank மீது பகுதி உரிமை எடுத்துக் கொண்டதுடன் Hypo Real Estate ஐயும் எடுத்துக் கொள்ள முற்படுகிறது.

"புதிய முதலாளித்துவம்" மாநாட்டை தொடர்ந்து, மேர்க்கெலும் சார்க்கோசியும் எலிசே மாளிகையில் தங்கள் உள்நாட்டு கார்த்தயாரிப்பு தொழில்களை காக்கும் நடவடிக்கைள் பற்றி விவாதித்தனர். அமெரிக்க அராசங்கம் அமெரிக்க கார் தயாரிப்பு தொழிலுக்கு கொடுத்துள்ள உதவியை கருத்திற்கொண்டு ஐரோப்பிய கார்த்தயாரிப்பாளர்களுக்கும் அதேபோன்ற உதவி அளிப்பதை தேவை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

பாரிஸ் மாநாட்டின் முக்கிய கூறுபாடு அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்கள் ஆகும். புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு முறையீடு என்ற விதத்தில் அவை அலங்கரித்துக் கூறப்பட்டன; அவரிடம் இருந்து ஐரோப்பிய அரசாங்கங்கள் வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாறுதலை எதிர்பார்க்கின்றன. ஆயினும்கூட சார்க்கோசி அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை இனி தான் ஏற்பதாக இல்லை என்பதை தெளிவு படுத்தினார்.

"என்னுடைய அரசியல் வாழ்வில் நான் எப்பொழுதுமே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைத்தான் விரும்பியுள்ளேன். ஆனால் ஒன்று தெளிவாக்கப்பட வேண்டும். 21ம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிட்ட தேசம் நாம் என்ன செய்யவேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என்று இனி கூற இயலாது." என்று அவர் கூறினார்.

அவர் இன்னும் வெளிப்படையாக, அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை தாக்கிப் பேசினார். "இருக்கும் நிலையை நாங்கள் ஏற்கவில்லை; வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாத நிலையை நாங்கள் ஏற்கவில்லை; சிந்தனை ஒரு போக்காக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. 1944ல் பிரெட்டன் வூட்ஸில் ஒரு நாணயம்தான் (டாலர்) இருந்தது; உலகின் பொருளாதார நிலைமை அந்த நாணயத்தைத்தான் நம்பி இருந்தது. 2009ல் ஒரே ஒரு நாணயம் என்ற நிலை இல்லை; பல நாணயங்கள் உள்ளன. ஒவ்வொரு நாடும் அதன் நாணய முறையை, வட்டி விகிதத்தை நிர்வகிக்கிறது என்பதை நாம் விவாதிக்க வேண்டும். ஒரு நாடு மற்றொன்றிடம் "எங்கள் கடன்களை கொடுங்கள்" என்று கூறும் விதத்தில் இனி இருக்கக் கூடாது. ஒரே ஒரு முன்மாதிரிதான் இனி இருக்கும் என்பதற்கு இடம் இல்லை."

சார்க்கோசியும் மேர்க்கெலும் தொழிற்சங்கங்களுடைய ஆதரவை அவர்களுடைய தற்போதைய போக்கிற்கு உத்தரவாதமாக பெற்றுள்ளனர். மாநாட்டில் பங்கு பெற்றவர்களுள் ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஜோன் மொங்க்ஸும் இருந்தார். பிரெஞ்சு தொழிற்சங்க தலைவர்கள், எலிசே அரண்மனைக்கும் Rue de Grenelle ல் இருக்கும் தொழில்துறை அமைச்சரகத்திற்கும் ஜனாதிபதியாக சார்க்கோசி வந்ததில் இருந்து வாடிக்கையான விருந்தாளிகள் ஆவர்.

தேசிய நிறுவனங்களை பாதுகாக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏற்கனவே ஊதியங்கள் மீதான தாக்குதல் வேலைகள் தகர்ப்பு என தங்கள் உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டியதற்கு ஆதரவைத்தான் கொடுத்துள்ளன. வர்த்தக யுத்த சூழ்நிலையில் இவை நிபந்தனையற்று தங்கள் முதலாளித்துவத்தின் பின் அணிவகுத்து நிற்கின்றன. அரசும் பெருவணிகமும் நெருக்கமாக வரும்போது, தொழிற்சங்கங்கள் அரசுடன் மோதலைத் தவிர்க்கின்றன.

இந்த வழிவகையை 70 ஆண்டுகளுக்கு முன்பே லியோன் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகும் முன் சுட்டிக்காட்டினார். அவர் எழுதியது: "மிகப் பெரிய அறக்கட்டளைகள், குழுமங்கள் (syndicates), வங்கிகளின் பெரு இணைப்புக்கள் போன்றவை பொருதாளாதார வாழ்வை அரச அதிகாரத்தின் உயர் நிலையில் இருந்துதான் காண்கின்றன; ஒவ்வொரு அடிவைப்பிற்கும் அவை அரசின் ஒத்துழைப்பை நாட வேண்டிய நிலை உள்ளது. இதையொட்டி தொழிற்சங்கங்கள் ஒரு மத்திய முதலாளித்துவ எதிரியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது; அது மிக நெருக்கமான முறையில் அரசாங்க அதிகாரத்துடன் பிணைந்துள்ளது. எனவே தொழிற்சங்கங்களின் தேவை --அவை ஒரு சீர்திருத்த நிலைப்பாட்டை கொண்டிருக்கும் வரையில், அதாவது தனியார் சொத்துரிமையை ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் வரையில், முதலாளித்துவ அரசிற்கு ஏற்ப நடந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்புகளை நல்க வேண்டும்" (Trade Unions in the Epoch of Imperialist Decay (1940))

தொழிலாள வர்க்கம் இத்தகைய தேசியப் போக்கை உறுதியாக நிராகரிக்க வேண்டும்; அது ஒன்றுதான் சமூக, அரசியல் பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும். தன்னுடைய நலனை அது சர்வதேச ரீதியாக ஐக்கியப்பட்டு நெருக்கடிக்கான ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக போராடும் விதத்தில்தான் பாதுகாக்க முடியும்.