:
பிரான்ஸ்
France: Jean-Luc Mélenchon launches the Left Party
பிரான்ஸ்: ஜோன்- லூக் மெலென்சோன் இடது கட்சியை தொடங்குகிறார்
By Antoine Lerougetel and Peter Schwarz
27 December 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
செனட் உறுப்பினர்
Jean-Luc Mélenchon ம் கிட்டத்தட்ட அவருடைய ஆதரவாளர்கள்
1,000 பேரும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் இருந்து பிளவுற்று
Parti de Guche (PG,
இடது கட்சி) என்னும் புது அமைப்பை German Die
Linke ஐ முன்மாதிரியாகக் கொண்டு ஆரம்பித்துள்ளனர்.
Die Link
ன் தலைவரான Oskar Lafontaine
நவம்பர் 29ம் தேதி Saint-Ouen
ல் நடந்த Parti de Gauche
ன் நிறுவன மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிறுவன மாநாட்டிற்கு ஆற்றிய உரையில்
Mélenchon
சோசலிஸ்ட்டுக்கள், கம்யூனிஸ்ட்டுகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியரசுக் கட்சியினர் தங்கள் பழைய
அரசியல் அமைப்புக்களை "கலந்து", "ஒரு புதிதான முறையில் அமைப்பை ஏற்படுத்தும் வகையில்", ஒரு "கொதிகலத்திற்கான"
அஸ்திவாரங்களை தோற்றுவிப்பதற்கு அழைப்பு விடுத்தார். "ஒரு இடது முன்னணியின் மூலம் கட்டமைக்கப்படும் ஒரு புதிய
அரசியல் பெரும்பான்மையை கொண்டு தேர்தல்கள் மூலம் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்" என்னும் திட்டத்தை அவர்
முன்வைத்துள்ளார். இந்த "இடது முன்னணியின்" நோக்கம் பாராளுமன்ற இடது நிலைப்பாட்டில் இருந்து சோசலிஸ்ட்
கட்சியை அதன் ஆதிக்க நிலையை அகற்றி 2009ல் நடக்க இருக்கும் தேர்தல்களில் அதைக் கடந்து சென்று "சமூக
தாராளவாதத்தை அதன் மாசுகளுடன் ஒதுக்கி வைப்பதாகும்".
இதன் ஜேர்மனிய முன்மாதிரி போலவே இடது கட்சியின் உண்மையான நோக்கம் மக்கள்
அரசியலில் இடதிற்கு நகர்வதைத் தடுத்து, சோசலிஸ்ட் கட்சியினால் மோசமான முறையில் தோல்வியுற்றிருக்கும் முதலாளித்துவ
சீர்திருத்த திட்டங்களுக்கு புதிய போலித் தோற்றங்களை வழங்குவது ஆகும்.
இடது கட்சி வெளிப்படையாக தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.
தன்னுடைய உரையில் Mélenchon,
"முன்னணியில் போராடிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களை வலுப்படுத்த வேண்டும்" என்று அழைத்துள்ளார்.
புதுக்கட்சி முன்வைத்துள்ள திட்டம்
Mélenchon
உரையின் இறுதியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (அனைவருக்கும் ஒரு குறைந்த வருமானம்) என்னும் ஒரு சமூகக்
கேடயம் தேவை என்று அழைப்பு விடுத்துள்ள அவர், முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்களுக்கு 10
சதவிகிதமேனும் சொத்துக்கள் மறு பங்கீடு செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். சமூக உடைமையின்
கீழ் இருக்கும் வங்கிகள் கொண்ட உலகம் என்று இல்லாமல், வேறுவிதத்தில் வங்கிகளின் பேராசை
கட்டுப்படுத்தப்பட்டு, "படைப்பாளிகளும் அறிவாளிகளும் தலைமை ஏற்று நிதியாளர்கள் பின்னே நிற்கும்" நிலை
இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அல்லது, ஓஸ்கார் லாபொன்டைன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டபடி,
"முதலாளித்துவத்தை நாம் நாகரிகமயப்படுத்த வேண்டும்."
Lafontaine, Mélenchon
இருவருமே 1981 முதல் 1995 வரை பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்திரோனை ஒரு முன்மாதிரி
எனப்புகழ்ந்தனர். Mélenchon
அறிவித்தார்: "[சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய] பொதுத் திட்டத்தின் வெற்றியினால்தான் நாம்
இப்பொழுது 60 வயதில் ஓய்வு என்ற நிலையை அடைந்துள்ளதை நாம் மறக்கக்கூடாது." 1971ம் ஆண்டு
நடைபெற்ற Epinay
மாநாட்டை லாபொன்டைன் பெருமைப்படுத்தினார்; அதில்தான் சோசலிஸ்ட் கட்சியின் தலைமையை மித்திரோன்
ஏற்றுக் கொண்டார்.
"அவர்களுடைய நிறுவனத்தின் மூலதனத்திலும் ஊழியர்கள் பங்கு பெற வேண்டும்" என்று
லாபொன்டைன் அழைப்பு விடுத்து, "தேசியமயமாக்கப்பட்ட அமைப்புக்களில் இப்பொழுது பெரும்பான்மையில்
இருக்கும் தனியார் முயற்சிகளும் தொடர்ந்து இருக்கக் கூடிய ஒரு கலப்புப் பொருளாதாரம் தேவை" என்று அவர்
வாதிட்டுள்ளார்.
வலிமையான தேசிய அடிப்படை தன்மையில்
Mélenchon
ஐரோப்பிய எல்லைகள் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். "அனைத்துவித தடையற்ற சந்தை முறைக்கு
அனுமதித்து, எல்லாவற்றையும் ஏற்கும் அபத்தமான நிலைமையை கொண்டிருக்கும் பொருளாதார தாராளமுறை
ஐரோப்பாவிற்கு மாறான வகையில், ஒரு சுங்க தடுப்பு முறை ஒன்றியத்தில் எல்லைகள் அனைத்திலும் இந்த
அசாதாரண காலத்தில் இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் சமூக, சுற்றுச்சூழல் மாசுக்கள் படிவது தடுக்கப்பட
முடியும்."
இடதில் ஒரு பாதுகாப்பு பொறிமுறை
31 ஆண்டுகளாக அவர் உறுப்பினராக இருக்கும் சோசலிஸ்ட் கட்சியை (SP)
விட்டு விலகும்
Mélenchon இன்
முடிவு பிரான்சின் பாராளுமன்ற "உத்தியோகபூர்வ" இடதான சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி (CP)
களின் பொதுச் சீரழிவு மற்றும் அவற்றின் முந்தைய சமூகத்தளம் இழக்கப்பட்டுவிட்டதற்கு ஒரு பதிலாக இருக்கிறது.
1970 களில் இருந்து சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள கூட்டு,
அவ்வப்பொழுது அரசாங்கத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் இணைந்து இருப்பதும், நகர்ந்து கொள்ளுவதும், அது
பிரெஞ்சு முதலாளித்துவ ஆட்சிக்கு முக்கிய முண்டுகோலாக இருக்க உதவியுள்ளது. ஆனால் அவை தொடர்ந்து வலதிற்கு
நகர்ந்து விட்டது, இக்கட்சிகளிடம் இருந்து பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பான்மை அரசியல்
விரோதப் போக்கைக் கொண்டதைத்தான் வளர்த்துள்ளது.
PS வேட்பாளரான லியோனல்
ஜோஸ்பன் பாசிச Jean-Marie La Pen
பெற்ற வாக்குகளால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்ட மற்றும் வாக்காளர்களில் 10 சதவிகிதத்தினர் தங்களை
பெயரளவிற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறியவர்களுக்கு வாக்களித்த பொழுது, இது 2002 ஜனாதிபதித்
தேர்தல்களின் போது முன்னணியில் வந்தது. இது உத்தியோகபூர்வ "இடதின்" முடிவைக் குறிப்பிட்டது; அதன்மூலம்தான்
பிரெஞ்சு முதலாளித்துவம் 1968 கிளர்ச்சி எழுச்சிக்குப் பின்னர் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள
முடிந்தது.
2005 ல் ஐரோப்பிய
அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பின்போது, உத்தியோகபூர்வ சோசலிஸ்ட்டிற்கு இடதில் ஒரு பரந்த
கூட்டமைப்பை சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பப்லோவாத
LCR மற்றும் பிற
அரசியல் அமைப்புக்களை கொண்டு உருவாக்கும் முயற்சி இருந்தது.
Mélenchon
உடன் சோசலிஸ்ட் கட்சியின் பல பிரிவுகள் உத்தியோகபூர்வ கட்சி வழியை மீறி "வேண்டாம்" என்ற வாக்கிற்கு
பிரச்சாரம் செய்தன; அவை CP
தலைவர் Marie George Buffet,
LCR
செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ ஆகியோருடன் மேடைகளை பகிர்ந்து கொண்டன.
ஆனால் பிரச்சாரம் வெற்றிகரமாக இருந்து ஐரோப்பிய அரசியலமைப்பு
தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட, "வேண்டாம்" முகாமை ஒரு புதிய கட்சியாக அமைக்கும் முயற்சி,
LCR வலுவாக
ஆதரவு கொடுத்தும், தோல்வியை அடைந்தது.
Mélenchon மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உட்பட
"வேண்டாம்" வாக்கிற்கு ஆதரவு கொடுத்த சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகள் விரைவில் கட்சித் தலைமையுடன்
சமரசம் செய்து கொண்டன. சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை
கம்யூனிஸ்ட் கட்சியும் தெளிவாக்கியது; அதன் பாராளுமன்ற இடங்கள் மற்றும் மந்திரிசபை இடங்கள் ஆகியவை
அதைத்தான் நம்பியிருந்தன.
இதன் விளைவாக --2007 ஜனாதிபதித் தேர்தலில் ஒப்புமையில் சற்று ஆதரவை
ஒலிவியே பெசன்ஸநோ பெற்றிருந்த நிலையில் --LCR
ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி (NAP)
என்பதை நிறுவ முடிவெடுத்தது. இத்திட்டம், ஜனவரி 2009ல் முறையாக தொடக்கப்பட உள்ளது; அதே நேரத்தில்
பெசன்ஸநோ கருத்துக்கணிப்புக்களில் நல்ல வாக்குளைப் பெற்றுள்ளார்.
Mélenchon இன்
இடது கட்சியை தொடக்கும் திட்டம் இதற்கு ஒரு எதிர்விளைவு ஆகும்.
பெசன்ஸநோவும் LCR
ம் புரட்சிகர அரசியலுடன் எந்தத் தொடர்பு இல்லை என்று மறுக்க பல முயற்சிகள் செய்தும், வெளிப்படையாக
ட்ரொட்ஸ்கிச மரபை நிராகரித்தபோதும், LCR
க்கு சலுகை அளிப்பதில் ஆளும் வட்டங்களில் கணிசமான தயக்கம் உள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியினால்
பிரான்ஸ் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. மற்றும் போர்க்குணத்திற்கு ஏற்கனவே பெயர் பெற்ற பிரெஞ்சுத்
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே, மேலும் தீவிரமடைதல், கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி ஊடகத்தால் பெசன்ஸநோ பெரும் புகழ் பெற்றவராக மாற்றப்பட்டு, ஆளும்
வட்டங்களால் பெரும் மதிப்புடன் நடத்தப்படுகையில், அவர் ஆரம்பிக்கும் கட்சி இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின்
போர்க்குண இயக்கத்தை தகர்த்து, அவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமா என்பது பற்றி கணிசமான சந்தேகங்கள்
உள்ளன. PS, PC
போலன்றி, இதற்கு நூற்றுக்கணக்கான நல்ல ஊதியம் வாங்கும் கடினப் போக்கைக் கடைப்பிடிக்கும் வலுவான அதிகாரத்துவ
கருவியினர் கிடையாது. எனவே ஒரு சமூக இயக்கத்தை கவிழ்க்கக் கூடிய மற்றொரு இடதுசாரிக் கருவியின் தேவை
ஏற்பட்டுள்ளது.
இடது கட்சி இந்த ஆண்டின் மூன்றாம் புதிய "இடது" கட்சி தொடக்கப்பட்டுள்தை
குறிக்கிறது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி பற்றிய திட்டங்களை
LCR அறிவித்த
பின்னர், பியர் லம்பேர்ட்டின் தொழிலாளர் கட்சி PT,
Parti Ouvrier Indépendant (POL) என்னும்
கட்சியை இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவியது. அப்புதிய கட்சியின் நோக்கம் உள்ளூராட்சி, மாநில
அதிகாரத்துவங்களை நல்ல முறையில் ஒருங்கிணைப்பது ஆகும்; 2007 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்
PT தன்
வேட்பாளரான Gerard Schivardi
ஐ பிரான்சின் 36,000 மேயர்களுடைய வேட்பாளர் என்று அறிவித்தபோது அவர்களுக்குத்தான் வேண்டுகோள்
விடுத்தது.
ஒரு அரசியல் இயக்கி
Jean-Luc Mélenchon ஒரு
அனுபவம் வாய்ந்த அரசியல் திறன் உடையவர் ஆவார். பிரெஞ்சு "இடதில்" இருக்கும் பல முக்கிய
தலைவர்கள்போல் இவரும் தன்னுடைய ஆரம்ப அரசியல் பயிற்சியை, தங்களை ட்ரொட்ஸ்கிசவாதிகள் என தவறாகக்
கூறிக் கொண்ட பல தீவிர குழுக்கள் ஒன்றில் பெற்றவர் ஆவார்.
1951ம் ஆண்டு மொரோக்கோவில் உள்ள
Tangiers
என்னும் இடத்தில் பிறந்த Mélenchon
மே 1968 இளைஞர் எழுச்சியின் போது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் தலைவராக இருந்தார். பியர்
லம்பேர்ட் தலைமையில் இருந்த OCI -
International Communist Organisation -- ல்
இவர் சேர்ந்து மாணவர்கள் சங்கங்களில் தீவிரமாகப் பணியாற்றினார்.
1971ம் ஆண்டு OCI
சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தன்னுடைய இணைப்பை
முடிவிற்குக் கொண்டுவந்தது. பின் இதன் தலைமை பிரான்சுவா மித்திரோனால் அதே ஆண்டு எடுத்துக்
கொள்ளப்பட்டது. OCI
உறுப்பினர்களில் பலர் இரகசியமாக சோசலிஸ்ட் கட்சிக்கு அனுப்பப்பட்டனர்; அவர்களுள் பின்னர் பிரதம
மந்திரியான லியோனல் ஜோஸ்பனும் ஒருவராவர்.
அவர்களைத் தொடர்ந்து 1977ல்
Mélenchonம்
சேர்ந்தார்; OCI
இல் இருந்து இவர் வெளியேற்றப்பட்டிருந்தார். அப்பொழுதில் இருந்து இவர் மித்திரோனின் வலுவான ஆதரவாளர்
ஆவார். 1986ம் ஆண்டு செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; பதவியில் இருந்து நான்கு ஆண்டுகள் இல்லாத
காலத்தை தவிர அவர் இன்றுவரை செனட்டராகத்தான் உள்ளார். 2000 முதல் 2002 வரை ஜோஸ்பன்
அரசாங்கத்தில் அவர் ஒரு இளைய மந்திரியாக இருந்தார்.
PS இன் இடது
குழுக்கள் பலவற்றை அவர் தீவிரமாகக வழிநடத்தியுள்ளார் அல்லது அவற்றில் பங்கேற்றுள்ளார்.
Mélenchon னும் அவருடைய
ஒத்துழைப்பாளருமான பிரான்சில் வடக்கை சேர்ந்தவரும் பிரான்சின் துர வடக்கு மாவட்டத்தின் பிரதிநிதியுமான
Marc Dolez
சோசலிஸ்ட் கட்சியில் இருந்து விலகி இடது கட்சியை தொடக்கும் முடிவை, கட்சியின் இடது கன்னையை
பிரதிபலிப்பதாக கூறிக்கொள்ளும் Benoit Hamon
ஒப்புதல் கொடுத்த சட்டவரைவு ரென்னில் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த உறுப்பினர்கள்
வாக்கெடுப்பில் 19 சதவிகிதம் மட்டுமே பெற்றதை அடுத்து அறிவித்தனர். 2007 ஜனாதிபதி தேர்தலில்
வேட்பாளராக இருந்த செகோலீன் ரோயால் தலைமையில் 29 சதவிகிதத்தினர் ஆதரவு கொடுத்திருந்தனர்; 25
சதவிகிதத்தினர் லில்லின் மேயரும் தற்பொழுது கட்சியின் தலைவருமான மார்ட்டின் ஒப்ரியின் தீர்மானத்திற்கு ஆதரவு
கொடுத்தனர். ரோயால் மற்றும் ஒப்ரி இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலுவான ஆதரவாளர்கள் ஆவர்.
Mélenchon மூன்று
தசாப்தங்களாக கட்சியின் ஒவ்வொரு திருப்பம், திரித்தல் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இப்பொழுதைய
முறிவிற்கு கொடுக்கப்படும் உத்தியோகபூர்வ காரணம் போலித்தனமாகும். உண்மையான காரணம் சோசலிஸ்ட் கட்சி
விரைவாகச் சிதைந்து கொண்டிருப்பது ஆகும்; இது ரோயால் மற்றும் ஒப்ரியின் ஆதரவாளர்களால் நடுவே
பிளக்கப்பட்டு கடுமையான உட்பூசல் போராட்டங்களில் ஆழ்ந்துவிட்டது.
நவம்பர் மாதம் முதல் செயலாளர் பதவிக்கு தேசிய உறுப்பினர்களிடையே நடந்த
வாக்கெடுப்பில் ஒப்ரி மிகச் சிறிய வாக்குகளில்தான் செகோலீன் ரோயாலுக்கு எதிராக வெற்றி பெற்றார்.
கட்சியின் சக்திவாய்ந்த தலைவர்களின் ஆதரவு ஒப்ரிக்கு உள்ளது;
IMF தலைவரான
டொமினிகள் ஸ்ட்ராஸ் கான் முதல் முன்னாள் பிரம மந்திரிகள் லியோனல் ஜோஸ்பன் மற்றும் லெளரன்ட் பேபியஸ்
உட்பட; அதே நேரத்தில் ரோயால் புதிய உறுப்பினர்களை நம்பிக்கைத் தளமாக கொண்டிருக்கிறார். அவர்கள்,
அவருடைய வலதுசாரிப் போக்கினால் ஈர்க்கப்பட்டு இணையதளம் மூலம் கட்சியில் சேர்ந்தவர்களாவர். ரோயால்,
பிரான்சுவா பேய்ரூவின் மைய-வலது MoDem (Democratic
Movement) உடன் கூட்டணியை விரும்புகிறார்
சோசலிஸ்ட் கட்சி ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் சூழலில்,
Mélenchon
ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றி வாக்கெடுப்பில் தோல்வியுற்ற இடதின் ஒரு பரந்த கூட்டுத் திட்டத்தை புதுப்பித்துள்ளார்.
இதற்கு சோசலிஸ்ட் கட்சின் பங்கும் --அல்லது அதன் சில பிரிவுகளின் ஆதரவாவது-- பெசன்ஸநோவின்
NAP யும் தேவைப்படுகிறது.
இடது கட்சியை நிறுவியவுடன்
Mélenchon, Dolez
இருவரும், "ஐரோப்பிய தேர்தல்களில் இடது சக்திகள் முன்னணி ஒன்று அமைக்கப்பட வேண்டும்" என்று அழைப்பு
கொடுத்துள்ளனர். ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான 2009 தேர்தல்களை "லிஸ்பன் ஒப்பந்தம்" பற்றிய ஒரு
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாக ஆக்க வேண்டும் என்பது தன்னுடைய நோக்கம் என்று
Mélenchon
அறிவித்துள்ளார். தேசிய சட்டமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சிக் குழுவை விட்டு
Dolez விலகி
கம்யூனிஸ்ட் கட்சி-பசுமைக் கட்சி பிரதிநிதிகள் முகாமில் சேர்ந்துள்ளார்.
இடது கட்சியின் அழைப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சி நேரிய முறையில் விடையிறுத்து
தன்னுடைய "(Progressive European Front)
முற்போக்கு ஐரோப்பிய முன்னணி" என்பதையும் கூறியுள்ளது. ஏற்கனவே சோசலிஸ்ட் கட்சி, மற்றும்
பசுமைவாதிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதால் இது இடது கட்சியை எங்கு
புறப்பட்டதோ அங்கேயே தள்ளியுள்ளது --ஆனால் ஒரு முக்கிய வேறுபாட்டுடன் ஆகும். "இடது சக்திகளின் முன்னணி"
என்ற இதன் அழைப்பு வெளிப்படையாக பெசன்ஸநோவின்
NAP ஐயும், லிஸ்பன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுக்கும்
Lamberite
ஐயும் இணைத்துக் கொள்ளுகிறது. கடுமையான EU
எதிர்ப்பைக் கொண்டுள்ள POI
இடது கட்சியுடன் தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபட்டுள்ளது. |