World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைஷிஷீநீவீணீறீவீst றிமீக்ஷீsஜீமீநீtவீஸ்மீ tஷீ மீஸீபீ tலீமீ ஷ்ணீக்ஷீ வீஸீ ஷிக்ஷீவீ லிணீஸீளீணீ ஜிக்ஷீஷீஷீஜீs ஷீut ஷீயீ ஸீஷீக்ஷீtலீ ணீஸீபீ மீணீstமீக்ஷீஸீ ஷிக்ஷீவீ லிணீஸீளீணீ! இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சோசலிச முன்னோக்கு வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! Statement of World Socialist Web Site editorial board இலங்கையின் 61வது சுதந்திரதின விழாவை இலங்கை ஆளும் வர்க்கம் கொண்டாடுகையில், அதன் ஆயுதப்படைகள் வட மாகாணத்தின் முல்லைத்தீவில் அப்பாவித் தமிழ் மக்களை கொடூரமாகக் கொல்வதில் ஈடுபட்டுள்ளன. இந்த தசாப்தகால இனவாத யுத்தம் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்கு அரசின் தமிழ் எதிர்ப்பு பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாகும். இலங்கை உருவானதிலிருந்தே, முதலாளித்துவ வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என பிளவுபடுத்த தமிழ் விரோத எதிர்ப்பு அரசியலைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் ஆட்சியை உறுதிப்படுத்தி வந்தது. ஜனாதிபதி இராஜபக்க்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்க்குற்றங்கள் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் அவர்களின் தேசிய முதலாளித்துவ பிரதிநிதிகளாலும் புவிசார் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் காசாவில் நடந்துவருவதைப் போன்று அதிகரித்த அளவில் கொடூரமான வழிமுறைகளுக்கு திரும்பும் போக்கின் வெளிப்பாடாகும். 1930 களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிகமோசமான உலகப் பொருளாதார நெருக்கடிகளினால் தீவிரமாக்கப்பட்ட நிலையில், பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் இராணுவ வாதத்தின் வளர்ச்சியானது, உரிமைகளையும் வாழ்க்கைத்தரங்களையும் ஈவிரக்கமற்ற முறையில் அழிப்பதுடன் இணைந்திருக்கிறது. இது பிரான்சில் மூன்று மில்லியன் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஜனவரி 29 அன்று வேலைநிறுத்தத்திற்கு கொண்டுவந்ததுடன், ஐரோப்பா முழுவதும் வேலையின்மை மற்றும் கடுமையான கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக 2.5 இலட்சம் பேரை வீதிகளுக்கும் கொண்டு வந்தது. ஏற்கனவே உலகெங்கும் பரந்து வாழும் நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் டொரன்டோ, பாரிஸ், லண்டன் மற்றும் ஜேர்மனியின் நகரங்களில் சிறீலங்காவின் மனிதாபிமான பேரழிவிற்கு எதிராக அணிதிரண்டனர். இவ்வெதிர்ப்புக்கள் இனவாத யுத்தத்திற்கு எதிரான உண்மையான கோபத்தை வெளிப்படுத்துகின்றவேளையில் மேற்கத்திய அரசுகளையும் இந்தியாவையும் போரை நிறுத்துவதற்கு தலையிடுமாறு கோருவதுடன் மட்டுப்படுத்தப்படுகிறது. அத்தகைய முன்னோக்கானது போருக்கு பொறுப்பாக இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ, இராஜதந்திர ஆதரவை வழங்கும் அதே சக்திகளில் பிரமைகளையும் உருவாக்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வலைத் தளமான "புதினம்", "இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!" என்று தலைப்பிட்டு பெப்ருவரி 1ம் திகதி ஒரு கட்டுரையை வெளியிட்டது. அது இலங்கையிலும் தெற்காசியாவிலும் இந்திய அரசியல், இராணுவ பாத்திரத்தின் மேலாதிக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதுடன் மேற்கத்திய தலைநகரங்களில் இந்திய தூதரகங்களுக்கு முன்னால் மட்டுமே எதிர்ப்புக்கள் இடம்பெறவேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றது. "வெள்ளை மாளிகை முன்றலிலும், டெளனிங் ஸ்ட்றீட்டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு சங்கடங்களையே ஏற்படுத்தும்." என்று பரிதாபகரமாக வாதிடுவதுடன் "மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னர் எமக்கு தேவை. இப்போது எதுவும் செய்யமுடியாத சூழலில் அவர்கள் இருக்கும்போது- அவர்களை சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையை செய்யாது, அது அழகும் அல்ல...." என்று வலியுறுத்துகிறது. இது போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் கண்ணில் மண்ணை தூவுவதாலும் இந்தியாவின் மட்டுமல்ல ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்சின் பின்னாதரவுடன் மட்டுமே கொழும்பு அரசாங்கமானது இந்த குற்றவியலான போரை மீண்டும் தொடக்கி தொடர்ந்து நடத்த முடிகின்றது. 2005 நவம்பர் தேர்தலுக்கு பின்னர், இராஜபக்க்ஷ அரசாங்கம் 2002 போர்நிறுத்த உடன்பாட்டை படிப்படியாக திட்டவட்டமான முறையில் தடம்புரளச் செய்தது. அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கை அரசாங்கம் போரை தொடுப்பதற்கு இராணுவ உதவியை அளித்தன. கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முறையே 2006 மே மற்றும் ஜூனில் விடுதலைப் புலிகளை தடைசெய்தன. ஐரோப்பிய ஒன்றியமானது இந்த தடையை, தமிழீழ விடுதலைப் புலிகளை, ஒரு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியே என நியாயப்படுத்தியது. "அமைதியை கொண்டு வருவதற்கு அப்பால், தடையானது தற்போதைய 2002 போர்நிறுத்த உடன்பாட்டை முற்றிலும் உடைவுக்கு இட்டுச்செல்லும் ஆபத்தை உக்கிரப்படுத்த மட்டுமே செய்யும்" என நாம் கருத்துத்தெரிவித்தோம். ஒரு மாதத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் தனது முதலாவது தாக்குதலை ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் போருக்கும் மற்றும் காசாவில் போர்க்குற்றங்களின் கொடுமைகளுக்கும் தங்கள் அரசாங்கங்கள் அளிக்கும் ஆதரவிற்கெதிராக உழைக்கும் மக்கள் சர்வதேச ரீதியாக தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள நிலைமைகளைப் பற்றி விழிப்படைய வைக்கப்படுவார்களேயானால் அவர்கள் அதே வகையில் தான் உணருவார்கள். தமிழ் தொழிலாளர்கள், தங்களது போராட்டங்களை ஏகாதிபத்திய பொது எதிரிக்கு எதிரான உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் கட்டாயம் ஒன்றிணைக்க வேண்டும். கனடாவிலும் ஐரோப்பாவிலும் தடைசெய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமானது திடீர் சோதனையிடப்பட்டு முன்னனி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள், கலாச்சார மையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியன போலீசாரின் நிரந்தர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை "பயங்கரவாதத்தை தடுத்தல்" என்று நியாயப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புகலிடம் கோரும் தமிழர்களை தொடர்ச்சியான வகையில் நாடுகடத்தி வந்திருக்கின்றன. ஜனவரி 15 அன்று பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம், "அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்தார்கள்" என்று விபரித்து, இலங்கை மக்களின் முதலாவது அணியை வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தனி விமானத்தில் கொழும்புக்கு அனுப்பி வைத்தது. உண்மையில் செய்தி ஊடக அறிக்கை வெளிப்படுத்துகின்றவாறு, திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் உள்நாட்டு யுத்தத்திலிருந்து புகலிடம் கோரிய சிறுபான்மை தமிழ் பகுதியினர் ஆவார். இந்த ஜனநாயக விரோத விசத்தனமான திடீர் தாக்குதல்களின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதே சக்திகளிடம் தொடர்ந்தும் ஆதரவிற்காக முறையீடு செய்கின்றன. தமிழ் செல்வந்தத் தட்டுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு முதலாளித்துவ சிறு அரசை உருவாக்கும் அதனது கோரிக்கையானது எப்பொழுதும் வல்லரசுகளில் ஏதாவதொன்றின் மத்தியஸ்துவத்தை பிரதானமாக சார்ந்திருக்கின்றது. ஏகாதிபத்திய அரசுகளை மன்றாடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சிகளானது போருக்காக சிங்கள உழைக்கும் மக்களை அது குற்றம் சொல்லும் தன்மையுடன் கைகோர்த்துச் செல்லுகிறது. உண்மையில் அவர்கள் அதன் பாதிப்பாளர்கள் ஆவர். போரானது, வாழ்க்கைத் தரங்களை கீழ்நோக்கித்தள்ளுவதோடு தொழிலாளர்களையும் ஜனநாயக உரிமைகளையும் தாக்கும் முடிவில்லா நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக சிங்கள செல்வந்தத்தட்டால் வலிந்து கொண்டுவரப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களினதும் ஏகாதிபத்திய நாடுகளில் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் நேசசக்தி தொழிலாள வர்க்கமேயாகும். அதுதான், இலங்கை முதலாளித்துவ அரசை தூக்கி வீசி, ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பாகமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்திரவாதப்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தன்னுடைய வர்க்க நலன்களை கொண்டிருக்கும் மற்றும் அதற்கான ஆற்றலையும் கொண்டிருக்கும் ஒரேயொரு சமூக சக்தியாகும். பிரான்சில் வேலையின்மை மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான ஜனவரி 29ன் பரந்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்களும் ஐரோப்பா முழுவதிலுமான போராட்டக்களுக்கான ஒரு முன்னோடி ஆகும். பிரான்சிலும் ஐரோப்பாவிலும் உள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் இப்போராட்டங்களின் ஒன்றிணைந்த பகுதியாவர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பும், பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்கமைக்கும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டி எழுப்புவதில் பங்கேற்குமாறு அழைக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை அவர்களின் இனவழி மூலத்திலிருந்து சுயாதீனமாக ஒன்றிணைப்பதற்காக போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதப்படைகளை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேறுமாறு கோருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக சிறீலங்கா ஈழ சோசலிச குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வழி மட்டுமே ஐம்பது வருடங்களுக்கு மேலாக முழுப்பிராந்தியத்லும் கொள்ளை நோயாக பரவியிருக்கும் இனவாத, இனவழி மூலவாத சாதி அரசியலுக்கு ஒரு முடிவுகட்டும். |