World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama expands US military intervention in Pakistan

பாக்கிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீட்டை ஒபாமா விரிவாக்குகிறார்

By Barry Grey
23 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள சமீபத்திய கட்டுரை ஒன்றின்படி, புஷ் நிர்வாகம் பாக்கிஸ்தானில் கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் பங்கிற்கு அப்பால் ஒபாமா நிர்வாகம் கணிசமான முறையில் அதை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது; அண்டை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் மீதான தாக்குதலில் பெயரளவிற்கு ஈடுபட்டுள்ள பாக்கிஸ்தானிய அரசாங்க எதிர்ப்புக் கொரில்லாக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துகிறது.

"ஒபாமா பாக்கிஸ்தானுக்குள் ஏவுகணை தாக்குதல்களை விரிவாக்குகிறார்" என்ற தலைப்பில் உள்ள இக்கட்டுரை, Mark Mazzetti மற்றும் வெள்ளை மாளிகை நிருபர் டேவிட் இ.சாங்கர் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது; இதில் பெப்ரவரி 14, 16 நாட்களில் நடாத்தப்பட்ட இரு தனித்தனி ஏவுகணை தாக்குதல்கள் மேற்கோளிடப்பட்டுள்ளன; அவை "ஒபாமா நிர்வாகம் சிஐஏ-ஆல் பாக்கிஸ்தானிற்குள் நடத்தப்பட்டு வரும் போரை கணிசமான முறையில் விரிவாக்கம் செய்துள்ளது பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் ஒரு போராளி வலைப்பின்னலை தாக்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

டிரான் விமானத்தால் நடத்தப்படும் இத்தாக்குதல்கள், பைடுல்லா மெஹ்சுத் நடத்துவதாகக் கூறப்படும் பயிற்சி முகாம்களை முதலில் இலக்கு கொண்டுள்ளன. அவர் ஒரு இஸ்லாமிய கிளர்ச்சித் தலைவர் ஆவார்; பாக்கிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஆசிப் அலி சர்தாரியின் மனைவியும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாசீர் பூட்டோவின் படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியவர் என்று அமெரிக்க, பாக்கிஸ்தானிய அதிகாரிகளால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்.

"ஜனாதிபதி புஷ்ஷின் கீழ் அமெரிக்கா அடிக்கடி அல்கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தான எல்லையில் இருந்து தாக்குதல்கள் நடாத்தியதில் தொடர்புடைய தாலிபன் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது, ஆனால் அமெரிக்கத் துருப்புக்கள் மீதான நேரடித் தாக்குதலில் அதிக பங்கு கொள்ளாத திரு மெஹ்சுத் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை நடத்தவில்லை" என்று கட்டுரை கூறியுள்ளது.

கட்டுரை குறிப்பிட்டுள்ளது போல், மெஹ்சுத்தின் துருப்புக்கள்மீது ஏவுகணைத் தாக்குதல்கள் என்பது இப்பகுதியில் அமெரிக்கப் போரின் தன்மையில் ஒரு விரிவாக்கம் வந்துள்ளதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அமெரிக்க இராணுவம் இப்பொழுது நேரடியாக பாக்கிஸ்தானின் உட்பூசல்களில் தலையிட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள வாஷிங்டனின் வாடிக்கை ஆட்சிக்கு ஊக்கம் கொடுக்கிறது.

மெஹ்சுத்தின் மீதான தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை விரிவாக்கத்தை அறிவித்த அதே வாரத்தில் வந்தது; அதில் அந்நாட்டில் கூடுதலாக 17,000 அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்படும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. பாக்கிஸ்தானில் உயர்மட்ட அரசியல், இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் ஒபாமாவின் ஆப்கானிய, பாக்கிஸ்தானிய சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக்கிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்த சில தினத்திற்குள் இவை வந்துள்ளன. ஹோல்புரூக் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள அதிகாரிகளையும் சந்தித்தார்.

கடந்த வெள்ளியன்று ஒரு தொலைபேசிப் பேட்டியில் ஹோல்புரூக், மெஹ்சுத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்ததாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது: மேலும் வெள்ளை மாளிகையும் சிஐஏ வும் அதே போல் கருத்துக் கூற மறுத்துவிட்டன.

மெஹ்சுத்தின் பெயரை "சிஐஏ மற்றும் அமெரிக்க கமண்டோக்கள் பிடிக்கவோ கொல்லவோ அனுமதிக்கும் இரகசிய பட்டியலில்" புஷ் சேர்த்ததாக செய்தித்தாள் கூறியுள்ளது. பெப்ருவரி 14ம் தேதி தாக்குதல் குறிப்பாக மெஹ்சுத்தை இலக்கு கொண்டிருந்ததாகவும் ஆனால் அவரை கொல்ல முடியவில்லை என்றும் இது கூறியுள்ளது. பெப்ருவரி 16ம் தேதித் தாக்குதல் மெஹ்சுத்தின் உயர் உதவியாளர் நடத்தும் முகாமை இலக்கு கொண்டதாக அது கூறியுள்ளது. முந்தைய தகவல்கள் இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றும் 30 பேருக்கும் மேலானவர்களைக் கொன்றன எனக் கூறின.

இக்கட்டுரை தொடர்கிறது; "பல மாதங்களாக பாக்கிஸ்தானிய இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் பைதுல்லா மெஹ்சுத்தைத் தாக்க வாஷிங்டன் மறுப்பது பற்றி புகார் கூறியுள்ளனர்; அதே நேரத்தில் சிஐஏ டிரோன்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரத்திற்கு பொறுப்பு என நம்பப்படும் ஜலாலுதீன் ஹக்கானி நடத்தும் வலைப்பின்னலின் தலைவர்கள், கொய்தா தலைவர்கள் ஆகியோரைத் தாக்கியுள்ளன."

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இருக்கும் பாக்கிஸ்தானிய பழங்குடிப் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய எழுச்சிக் குழுக்கள், மற்றும் அல்கொய்தா, தாலிபன் ஆகியவற்றிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பாக்கிஸ்தான் ஆட்சியைத் தூண்டும் வகையில் அமெரிக்கா மெஹ்சுத் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தாக்குதலை தொடக்கியுள்ளது என்று கட்டுரை கருத்துத் தெரிவித்துள்ளது. "மெஹ்சுத் வலைப்பின்னலை தாக்குவதின் மூலம் அமெரிக்க பாக்கிஸ்தானிய தலைவருக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எழுச்சியாளர்களை தாக்க புதிய நிர்வாகம் தயார் என்பதை திரு சர்தாரிக்கு நிரூபிக்க இதைச் செய்யக்கூடும்" என்று கட்டுரை எழுதியுள்ளது.

இதைத்தொடர்ந்து பாக்கிஸ்தானிய ஆட்சியில் இராணுவப் பாதுகாப்பு நிலைமை சரிவைப் பற்றி அது குறிப்பிடுகிறது; ஆட்சியோ ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடிப் பகுதிகள் மற்றும் வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் செல்வாக்கு பெருகிய முறையில் படர்வதையும் எதிர்கொண்டுள்ளது: கட்டுரை மேலும் கூறுவது: "அமெரிக்க அதிகாரிகள் போராளிகள் தாக்குதல் பெருகிய முறையில் பாக்கிஸ்தானிய சிவில் அரசாங்கத்தின் மீது தாக்குதல்கள் நடத்துவது பற்றி பெரும் அக்கறை கொண்டுள்ளனர் இந்த நாடோ அணுவாயுதத்தை வைத்திருப்பதால், ஆபத்து அதிகம் ஆகும்."

டைம்ஸ் கட்டுரை பாக்கிஸ்தானில் நிலப்பகுதிக்குள் அமெரிக்கசிறப்புப் படைப் பிரிவுகள் நடவடிக்கையைத் தொடர்வதாகவும், இதைத்தவிர ஏவுகணைத் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருப்பதாகவும் எழுதியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகள் FATA எனப்படும் ஆப்கானிய எல்லைக்கு அருகே உள்ள பாக்கிஸ்தானிய வடமேற்குப் பகுதியில் இருக்கும் தெற்கு வசீரிஸ்தானில் உள்ள கிராமத்தைத் தாக்கின அதில் 15ல் இருந்து 20 பேர் மாண்டு போயினர்; அதில் மகளிரும் குழந்தைகளும் அடங்குவர்.

பாக்கிஸ்தான் நிலப்பரப்பிற்குள் அமெரிக்கத் துருப்புக்கள் தாக்கியது என்ற வகையில் முதல் நிகழ்வாக இருந்த அத்தாக்குதல் இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் கண்டனத்திற்கு உட்பட்டது. ஆனால் பெப்ருவரி 21ம் தேதி டைம்ஸ் கட்டுரையின்படி, "செப்டம்பர் துவக்கத்தில் இருந்து பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைப் பிரிவுகள் தாக்குதல் நடத்தியுள்ளன; அவற்றில் பல போராளிகள் கொல்லப்பட்டனர்; இதை பாக்கிஸ்தானிய அரசாங்கம் பகிரங்கமாக கண்டித்தது. மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் கருத்தின்படி, செப்டம்பர் முதல் கமாண்டோ நடவடிக்கைகளின் செயல்கள் அடிப்படையில் உளவு சேகரித்தல் என்றுதான் உள்ளது."

பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க போர் பெரிதாக விரிவாகியுள்ளது என்பதற்கான மற்றொரு சான்று பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏவுகணைகளை செலுத்த அமெரிக்க டிரோன்கள் சில பயன்படுத்தப்பட்டன என்பதாகும்; பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் தளத்தில் இருந்தே இயக்கப்படும் இவை ஏராளமான குடிமக்களைக் கொன்றுள்ளதால் உள்ளூர் மக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தியுள்ளன. ஜனநாயகக் கட்சித் தலைவரான செனட்டர் டியேன் பென்ஸ்டீன், செனட் உளவுத்துறைக்குழுத் தலைவர், இத்தளம் பற்றி ஒரு செனட் குழுக் கூட்டத்தில் கூறியிருந்தார். பாக்கிஸ்தானிய அரசாங்கம் அத்தகைய தளம் இல்லை என்று மறுத்திருந்தாலும், லண்டன் டைம்ஸ் மற்றும் பாக்கிஸ்தானிய நியூஸ் இரண்டும் கூகிள் எர்த் தோற்றங்களை பிரசுரித்துள்ளன அவற்றில் மூன்று டிரோன்கள் பாக்கிஸ்தானில் தென் மேற்குப் பகுதியில் Shamsi விமான நிலையத்தில் நிற்பதைக் காட்டுகிறது.

ஆப்கானிய எழுச்சிப் படைகளின் வளர்ச்சி மற்றும் மோசமாகிவரும் பாதுகாப்பு நிலமையை அமெரிக்கா மற்றும் அதன் கைப்பாவை ஆட்சி ஆப்கானிஸ்தானத்தில் எதிர்கொண்டுள்ள நிலைமை மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு, அரசாங்க எதிர்ப்பு எழுச்சி ஆகியவற்றிற்கு விடையிறுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க இராணுவ வன்முறை அதிகரிக்கும் என்று ஒபாமா தெளிவாக்கியுள்ளார். வெள்ளை மாளிகை மற்றும் இராணுவம் இரண்டும் இரு நாடுகளையும் ஒரு இராணுவ அரங்காகத்தான் கருதுகின்றன.

இப்பகுதியில் தன்னுடைய மூலோபாயம் பற்றி நிர்வாகம் பரிசீலனை நடத்திவருகிறது; இது ஏப்ரல் துவக்கத்திற்குள் முடிந்துவிடும். இந்தவாரம் அமெரிக்கா வாஷிங்டனில் ஆப்கன்-பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதி பற்றி உயர்மட்ட மாநாடு ஒன்றை நடத்துகிறது; இதில் கேட்ஸ், ஹோல்புரூக், செக்ரடரி ஆப் ஸ்டேட் கிளின்டன் மற்றும் கூட்டுப் படைகள் தலைவரான அட்மைரல் மைக் முல்லன் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். பாக்கிஸ்தான் அதன் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியையும் இராணுவத் தலைவர் அஷ்பக் பர்வேஸ் கயானி மற்றும் இராணுவ உளவுத்துறைத் தலைவர் தளபதி அஹ்மெத் ஷூஜா பாஷா ஆகியோரையும் அனுப்பிவைக்கிறது; ஆப்கானிஸ்தான் அதன் வெளியுறவு மந்திரி ரங்கீன் டட்பார் ஸ்பான்டாவை அனுப்புகிறது.
ஆனால், ஒபாமா, கேட்ஸ் மற்றும் இராணுவத் தலைவர்கள் ஆகியோர் ஏற்கனவே ஜனநாயகச் சீர்திருத்தம், "தேசியக் கட்டமைப்பு" என்ற போலிக் காரணங்களில் இருந்து மாறிய வகையில் கொள்கை மாற்றத்தை கோடிட்டுக் காட்டியுள்ளனர்; அதாவது இன்னும் குவிந்த முறையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படும்; அவை ஆப்கானிஸ்தானம் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க புதிய குடியேற்ற இலக்குகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை தகர்க்கும் செயல்களைக் கொண்டிருக்கும்.

இந்த வாரம் வாஷிங்டன் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கும் ஒரு பிரச்சினை கடந்த வாரம் பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் எழுச்சியாளர்களுடன் நடத்திய போரில் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிட்டது பற்றியாகும்.

ஒபாமா நிர்வாகம் துவங்கியதில் இருந்து ஐந்து வாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காட்டப்பட்டுள்ளபடி, அமெரிக்க இன்னும் கூடுதலான முறையில் ஆப்கானிய, பாக்கிஸ்தானிய மற்றும் அமெரிக்க இறப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இராணுவத் தாக்குதலை நடத்தக் கூடும். இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து இதுவரை 26 அமெரிக்க வீரர்கள் மற்றும் "கூட்டணி" நாடுகளில் இருந்து 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இது 2008 முதல் இரு மாதங்களில் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும் என்று வலைத்தளம் iCasualties.org தெரிவிக்கிறது.

கடந்த புதனன்று, ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான 17,000 துருப்புக்கள் அனுப்ப போவதாக ஒபாமா அறிவித்த மறுநாள், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உயர்மட்டத் தளபதி டேவிட் மக்கீர்னன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதையும் தவிர இன்னும் ஒரு 10,000 துருப்புக்கள் தேவை என்று கேட்டுள்ளார். கூடுதல் துருப்புக்கள் "தற்காலிக எண்ணிக்கை கூடுதலை" பிரதிபலிக்கவில்லை என்றும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் நீடிக்கக்கூடிய விரிவாக்கப்பட்ட போரின் ஒரு பகுதியாகும் என்று மக்கீர்னன் கூறினார். சில வெளியுறவுக் கொள்கை பகுப்பாய்வாளர்கள் இப்பகுதியில் இருக்கும் அமெரிக்கத் துருப்புக்களின் அளவு இறுதியில் 100,000 என உயரக்கூடும் என்று கணித்துள்ளனர்.

2001 ல் வாஷிங்டன் 9/11 தக்குதல்களை போலிக் காரணமாகப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானை வெற்றி கொள்ள வேண்டும் என்று நீண்டகாலமாகத் தயாரிக்கப்பட்டிருந்த திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது; ஆப்கானிஸ்தானை மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவ ஒரு தளமாகக் கொள்ள வேண்டும் என்பது அதன் திட்டம்; இப்பகுதியில்தான் உலகின் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் மிக அதிக அளவில் உள்ளன. இதன் தவிர்க்க முடியாத விளைவு ஒரு இராணுவ பேரழிவு மற்றும் பகுதி முழுவதும் உறுதித் தன்மை சீர்குலைவு ஆகும்.

இப்பொழுது இதே ஏகாதிபத்திய இலக்குகளைத் தொடர்வதற்காக ஒபாமா நிர்வாகம் ஒரு பெரிய விரிவாக்கத்தைத் துவங்கியுள்ளது; இது இப்பகுதியை மேலும் உறுதியற்றதாக்கும்; சீனா, ரஷியா போன்ற போட்டி சக்திகளுடன் அழுத்தத்தை அதிகரிக்கும்; கணக்கிலடங்கா இறப்பு அழிவு ஆகியவற்றை ஏற்படுத்தும். மத்திய ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் இராணுவப் பூசல்கள் பெருகும் ஆபத்து அதிகமாகிவிட்டது.