World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: the bourgeoisie sizes up the New Anti-Capitalist Party பிரான்ஸ்: புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியை முதலாளித்துவம் எடை போடுகிறது By Alex Lantier புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (Nouveau Parti Anticapitaliste- NPA), நிறுவன மாநாடு நடந்த ஒரு வாரத்தில் பிரெஞ்சு முதலாளித்துவ செய்தி ஊடகம் அதன் தொடக்க மதிப்பீட்டை செய்துள்ளது. பெப்ருவரி 6-8 தேதிகளில் LCR எனப்படும் Ligue Communiste Révolutionnaire ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி நிறுவப்பட்டது; LCR தன்னை கரைத்துக் கொண்டு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் LCR தலைமையின் இலக்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்தவித அடையாள அல்லது வார்த்தையளவினாலும் தொடர்பு கொண்டிருந்தாலும் அதை முறையாகக் களைந்துவிட்டு தன்னை முதலாளித்துவ அரசியலில் ஒரு பங்கு வகிக்க தயாரித்துக் கொள்ளுவது ஆகும். செய்தி ஊடகம் இது பற்றிக் கூறிய தகவல்கள் LCR இன் செய்தியை பிரெஞ்சு முதலாளித்துவம் அறிந்து கொண்டுள்ளது என்பதாகும்: புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை ஒரு புரட்சிகர அச்சுறுத்தல் என்று பார்க்காமல் தேர்தல் அரசியலில் ஒரு புது, முக்கியத்துவம் வாய்ந்த காரணி எனக் காண்கிறது. Le Figaro பழைமைவாத நாளேட்டின் பெப்ருவரி 13 பதிப்பின் பெரும்பகுதி கருத்துகணிப்பெடுப்புகள், முதலாளித்துவ அரசியல்வாதிகளை பேட்டிகள், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி பற்றி விவாதித்த தலையங்கள் என்று இருந்தன. "சோசலிச கட்சி: தபால்காரரின் பொறி" (PS: the mailman's trap) என்ற தலைப்பில் Le Figaro கட்டுரையாளர் Paul-Henri du Limbert பிரெஞ்சு வலதுசாரிகள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை எப்படி பார்க்கின்றதென்றும் ஊடகப் புகழ் பெற்ற LCR ஜனாதிபதி வேட்பாளரும் பகுதிநேர தபால் ஊழியரான ஒலிவியர் பெசன்ஸிநோட்டின் புகழை எப்படி எடை போட்டுள்ளது என்பது பற்றியும் விளக்கியுள்ளார்: பிரான்ஸின் இடது கட்சி அரசாங்கமான சோசலிச கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் கருவி என்ற முறையில் இதைப் பற்றி "சோசலிச கட்சியுடன் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி இடைவிடாமல் பெரிய கோஷங்கள் என்னும் விளையாட்டை மேற்கொண்டு "அதை இன்னும் சற்று புரட்சிகரமாக இருக்க சிறு முயற்சி செய்யுமாறு." கேட்கும் என Limbert எழுதுகிறார்.இது இடதுகளின் வாக்கை சோசலிச கட்சிக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கும் இடையே பிரிக்கும் வாய்ப்பை வலதுகளுக்கு கொடுக்கிறது என்று Limbert வாதிட்டுள்ளார்; இந்த மூலோபாயம் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் (சோசலிச கட்சி) செய்ததை நினைவிற்குக் கொண்டுவருகிறது. 1980 களில் மித்திரோன் தன்னுடைய அதிகாரத்தை மக்கள் அதிருப்தியையும் மீறி தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கு ஓரளவு காரணம் புதிய பாசிச தேசிய முன்னணியின்(National Front-FN) வளர்ச்சியினால்தான்; அது வலதுசாரி வாக்கைப் பிரித்தது. 2007 பழைமைவாத வேட்பாளர் (இப்பொழுது ஜனாதிபதி) நிக்கோலோ சார்க்கோசி இந்த இடர்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் குடியேற்ற எதிர்ப்புச் சட்டம், சட்டம் ஒழுங்கு பற்றி அழைப்பு ஆகியவற்றை மேற்கோண்டார்; அது அவருக்கு மிக அதிகமான தேசிய முன்னணியின் வாக்குகளைத் தேடிக் கொடுத்தது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் சார்க்கோசி இப்பொழுது அதே நலனை சோசலிச கட்சிக்குக் கொடுக்க முயல்கிறார். எனவே Limbert எழுதுகிறார்: "புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, சோசலிச கட்சிக்கு எதிரான மோதும் வழிமுறையைக் கொண்டது. மித்திரோன் சகாப்தத்தின் இரு முக்கிய வலதுசாரிக் கட்சிகளாக இருபது ஆண்டுகள் RPR க்கு [Gathering for the Republic] மற்றும் UDF [Union for French Democracy] க்கும் எதிராக தேசிய முன்னணி இருந்தது போல் அவற்றின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்பொழுதைய ஆளும் UMP ல் 2002ல் இணைந்துவிட்டனர். சார்க்கோசியே இந்த மூலோபாயத்தை நயமற்ற சொற்களில் சோசலிச கட்சியின் தலைமைக்கு ஜூன் 2008ல் லெபனானில் இருந்து திரும்பி வந்த விமானப் பயணத்தின்போது வெளியிட்டார். "பல ஆண்டுகள் தேசிய முன்னணி உடன் நீங்கள் எங்களை இழிவாக இழுத்தீர்கள்; இப்பொழுது நாங்கள் உங்களை புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் இணைத்துவிட போகின்றோம்." சார்க்கோசி LCR மீது கொண்டுள்ள நம்பிக்கைக் கூறுபாட்டில் இது முதலாவது ஆகும்;- மற்றொன்று சார்க்கோசியும் LCR உம் 2007, 2008 ஆண்டுகளில் சார்க்கோசியின் சமூகக் வெட்டுகளுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு வந்தபோது அதை அடக்கி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கமான CGT இன் முக்கிய ஆதரவு பற்றி பொதுவான கொள்கையைக் கொண்டவை ஆகும். ஆனால், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடைய நிலைநோக்கான ஆளும் இடதிற்கு அழுத்தம் கொடுத்தல் என்று உள்ள நிலயில், சோசலிச கட்சி புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் ஒரு இடது கூட்டணிக்கு அழைப்பு கொடுக்கும் வாய்ப்பு எப்பொழுதும் உள்ளது. சோசலிச கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அதிகாரிகளுடன் கடந்த ஆண்டு நடத்திய பேட்டிகளில் முக்கிய புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடைய தலைவர்கள் பலமுறையும் ஒரு இடது கூட்டணி அரசாங்கத்தில் கலந்துகொள்ளும் தங்கள் விருப்பத்தை சைகை காட்டினர். அத்தகைய கூட்டணி தற்பொழுதைய நிலைமையில் UMP அரசாங்கத்திற்கு ஒரு மாற்றீட்டை அமைக்கக் கூடிய அச்சுறுத்தல் கொண்ட தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய வாய்ப்பு பற்றியும் Limbert குறிப்பிட்டுள்ளார்: "காலத்தின் உணர்வு இடது பக்கமாக உள்ளது...எனவே சோசலிச கட்சி எப்படியும் முயன்று சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானவர்களுடன் ஒற்றுமையை நாடும் வாய்ப்பை விரும்புகிறது; அவர்களோ Che Guevera, Hugo Chavez போன்றோரை பாராட்டுபவர்கள். இது ஒருவிதத்தில் எளிது; ஏனெனில் தேசிய முன்னணித்தலைவர் லு பென்னை ஐப் போல் இல்லாமல், பெசன்ஸிநோட்டிற்கு "பிசாசைப் போல் நடத்தப்படும்" நிலை கிடையாது; அதாவது பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலால் முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலை கிடையாது. இன்னும் நெருக்கமாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் இருக்கும் முயற்சியைத் தவிர்க்குமாறு சோசலிச கட்சிக்கு பரிவுடன் ஆனால் அதிக அக்கறையில்லாதது போல் Limbert தெரிவித்துள்ளார். "இந்த முயற்சியில் [புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் வார்த்தைஜாலங்களுக்கு ஈடாக உரைப்பதில்] சோசலிச கட்சி ஓட்டத்தால் பெரும் களைப்பு நேரிடக்கூடிய ஆபத்து அல்லது தன்னையே காட்டிக் கொடுத்துக் கொள்ளும் ஆபத்து என்பதில் உள்ளது." புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடைய கோஷங்கள் "ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல், அதை சோசலிச கட்சி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் முடிவுரையாகக் கூறினார். Le Figaro வின் கருத்துக் கணிப்புக்கள் சோசலிச கட்சி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி இரண்டும் இருக்கக்கூடிய கூட்டணிக்கான அழைப்புக்கள் வலு பெற்று வருவதைக் காட்டுகின்றன. பெசன்ஸிநோட் பற்றி மிக அதிக செய்த ஊடகத் தகவல்கள் இருப்பது, மக்களின் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்துவர் என அளித்துள்ளது, அதிகாரத்தை விட உண்மை பேசுவதில் கூடுதல் விருப்பம் உடையவர் எனக் கூறியிருப்பது ஆகியவற்றினால் வாக்காளர்களில் பெரும் பிரிவுகள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை ஒரு வருங்கால அரசாங்கத்தில் முக்கிய பங்காளி எனப் பார்க்கும் நிலையில் வைத்துள்ளன Le Figaro நடத்திய Opinion Way கருத்துக் கணிப்பு ஒன்று மக்களில் 22 சதவிகிதத்தினர், சோசலிச கட்சி ஆதரவாளர்களில் 42 சதவிகிதத்தினர் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி உள்ளடக்கிய ஒரு பரந்த இடது கூட்டணியே சோசலிச கட்சியின் சிறந்த உடன்பாட்டு மூலோபாயம் எனக் காண்பதைக் காட்டியுள்ளது.பெசன்ஸநோ "சார்க்கோசிக்கு சிறந்த எதிரி" என்று கருத்துத் தெரிவித்தவர்களில் 23 சதவிகிதத்தினர் சோசலிச கட்சி செயலர் Martine Aubry (13 சதவிகிதம்) ஐவிட அதிக இடத்தைக் கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்புக்களில் பிரெஞ்சு மக்கள் பெசன்ஸிநோட்டிற்குக் கொடுத்த ஒப்புதல் சதவிகிதம் 60 ஆகும். சோசலிச கட்சியின் பிரிவுகள் சில வெளிப்படையாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிசோசலிச கட்சி கூட்டிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதில் 2007ம் ஆண்டு வலதுசாரிப் பிரிவின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலீன் ரோயலும் குறிப்பாக உள்ளார்; "அரசாங்கத்தை அமைக்கக்கூடிய இடது கட்சிகள், அன்றாடப் போராட்டங்களில் சமூக இயக்கங்களை கொண்டவை மற்றும் பிரான்ஸில் "தீவிர இடது" எனப்படுபவை, அதாவது LCR, NPA போன்ற அரசியல் கட்சிகள்" என்ற இந்த மூன்று கூறுபாடுகளுக்கு இடையே கடக்கப்பட முடியாத தடைகள் ஏதும் இல்லை என அவர் கூறியதாக Le Figaro மேற்கோளிட்டுள்ளது. சோசலிச கட்சியின் பிரிவுகள், பொருளாதாரத்தின்மீது கூடுதலான அரசங்கக் கட்டுப்பாடுகள் வேண்டும் என்று கூறுபவை புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை ஓர் அச்சுறுத்தல் என்றே காண்கின்றன. இது அவர்களின் கோரிக்கைகளுடன் போட்டியிடுகிறது; தடையற்ற சந்தை ஆதரவாளர்களை விட அவர்களுக்கு குறைந்த பயனுடையதாக உள்ளது; அவர்களுக்கு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அரசியலில் ஒரு "இடது" பூச்சை கொடுப்பதின்மூலம் விலைமதிப்பற்ற பணியைக் கொடுக்கும். Aubry ஐ சுற்றியுள்ள தற்பொழுதைய சோசலிச கட்சி மேலாதிக்க பிரிவுகள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி பால் கூடுதலான விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. சோசலிச கட்சியில் Aubry யின் உதவியாளராக இருக்கும் Claude Bartolone, Le Figaroவிடம் கூறினார்: "முதலில் [பெசன்ஸநோ] அரசாங்கத்தில் உள்ள இடது கட்சிகளை நிராகரிக்கிறார். மேலும் பெசன்ஸநோவின் சிரிப்பும் நல்ல தோற்றமும், சோசலிச கட்சி திட்டத்தை நீங்கள் படிக்கும்போது, அது பனிக்காலத்திற்கு திரும்புவது ஆகும்." சோசலிச கட்சி புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் கொண்டுள்ள பற்றிய பிளவுகளை சோசலிச கட்சி நிராகரிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றி எச்சரித்தார். "நாம் கூடிப் பேசிய பிறகு, ஒரு முடிவு பற்றி மூன்று, நான்கு அல்லது ஐந்து வேறுவிதக் குறிப்புக்கள் இருந்தால், நம்மிடம் நம்பகத்தன்மை போய்விடும்." முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்துள்ள மக்கள் விரோதப் போக்கு சோசலிச கட்சிக்குக் கொடுக்கும் இன்னல்களின அடையாளமாக, Bartolone முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு என்பது பழைய தொப்பி போன்றது என்று உட்குறிப்பாக இருந்த கருத்தில் இருந்து விரைவாகப் பின் வாங்கினார். சார்க்கோசியின் ஊக்கப் பொதிக்கு மாற்றீடு பற்றிய சோசலிச கட்சியின் ஜனவரித் திட்டம் சோசலிச கட்சியை ஒரு மாற்றீடாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மாநாட்டிற்கு முன் அளிக்கும் ஒரு முயற்சி என்ற அவருடைய விளக்கத்தை Le Figaro மேற்கோளிட்டுள்ளது. "முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரெஞ்சு மக்களுக்கு ஒழுங்குமுறையை உறுதியாக நிர்ணயிப்பது நாங்கள் அல்ல எனக்காட்ட விரும்பினோம்; ஆனால் எங்களிடம் மற்றொரு சமூகத் திட்டம் உள்ளது" சோசலிச கட்சி அரசியல்வாதிகளுடைய கூடுதலான கருத்துக்களும் அவர்கள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடைய அடிப்படைப் பணியை அறிந்துள்ளதைக் காட்டுகின்றன: அவையாவன சோசலிச கட்சியிலிருந்து முறித்துக்கொள்ளும் மக்களின் அரசியல் முன்னோக்குகள் மற்றும் போராட்டங்களை இணைத்தல்; இதிலிருந்து முதலாளித்துவ அரசாங்கத்தில் சீர்திருத்தங்கள் பற்றிய நம்பிக்கையைக் கொள்ளுதல்; இதையொட்டி சோசலிச கட்சி பங்கின் திறன்கள் பற்றிய நம்பாசைகளை வளர்த்தல். இவ்விதத்தில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் இடதுபுற அரசியல் வளர்ச்சிக்கு ஒரு தடை ஆகும். சோசலிச கட்சியின் முன்னாள் முதல் செயலரான பிரான்சுவா ஹோலந்து, LCR ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சோசலிச கட்சிக்கு எதிரானவர்கள், அத்துடன் ஏமாற்றம் அடைந்தவர்கள் என்று மில்லியன் கணக்கான மக்களின் வாக்குகளைப் பெற்றது என்று கூறியுள்ளார். புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் இணையக்கூடும் என்ற கொள்கையைத் தாக்கும் வகையில், ஹோலந்து Le Figaroவிடம் சோசலிச கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் கொண்டிருக்கும் விரோதப் போக்கின் தன்மை அதிகமாக இருப்பதால் அவர்களை ஈர்க்க முயலும் சோசலிச கட்சியின் முயற்சிகள் தோற்றிவிடும் என்றார். "புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை ஈர்க்க முற்படும் சோசலிச கட்சியின் முயற்சிகள் தீவிர அறியாமையில் இருந்து வருகின்றன; "தீவிர இடதின்" கருத்துக்கள் கோஷங்கள் ஆகியவற்றை பதிலுக்கு ஒன்றும் பெறாமல் முறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்; அதாவது தீவிர இடதிற்கு பெரும் ஊக்கம் கொடுக்கும் வகையில் முதல் சுற்றில் [ஜனாதிபதித் தேர்தலில்] பெற ஏற்பாடு செய்தல், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் நலன்களைப் பெறாமல் போய்விடுதல்." 1980 களில் சோசலிச கட்சியில் சேருவதற்காக LCR ல் இருந்து விலகி, இப்பொழுது சோசலிச கட்சியில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஹென்ரி வெபர், சோசலிச கட்சியுடன் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கு இருப்பதாகக் கூறப்படும் விரோதப் போக்கிற்கும் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட முன்னோக்கு இல்லை என்பதற்கும் இடையே உள்ள முரண்பாடு பற்றிச் சுட்டிக் கட்டினார். Le Monde ல் வந்துள்ள ஒரு தலையங்கத்தில் அவர் எழுதியது: "நிக்கோலோ சார்க்கோசியின் சிறந்த எதிரியாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி இருக்க விரும்புகிறது; ஆனால் பழைய பன்முக இடதுக் கட்சிகளுடன் அது அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை (அதாவது, PS, PCF, பசுமைக் கட்சி ஆகியவற்றுடன்); அல்லது அவர்கள் அரசாங்கப் பொறுப்புக்களை மீண்டும் வெற்றிபெறுவதற்கு ''தனது பங்கில்லாமல்'' ஆதரவளிக்கவும் தயாராக இல்லை. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி தனியாக ஆட்சி நடத்த முடியாது என்பதால், அல்லது Lutte Ouvriere உடன் மட்டும் நடத்த இயலாது என்பதால், இத்தகைய இரட்டை நிராகரிப்பு ஆட்சி நடத்த மறுப்பதற்கு ஒப்பாகும். இவ்விதத்தில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள மறுப்பது, ஏனெனில் அதிகாரம் ஊழல்படுத்திவிடும், தொழிற்சங்கங்கள் மற்றும் துணைப் போராட்டங்கள் மட்டும்தான் தூய்மையானவை என கூறும் ஒரு பழைய தீவிரவாத-தொழிற்சங்கவாத(anarcho-syndicalist) மரபை எடுத்துக் கொள்ளுகிறது.""அனைத்து இடதுகளின் ஒற்றுமை" என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மாநாட்டின் அழைப்புக்களை ஒட்டி, வெபர் சோசலிச கட்சிக்கு எதிரான முறையில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி புரட்சிகர அரசியலுக்காக போராடாது என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கிறார்; ஆனால் வாக்காளர்களுக்கு கொடுக்கும் முன்னோக்கில் இருக்கும் இடது ஆளும்பிரிவினருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் வாக்கு என்பதைத் தவிர எதையும் கொடுக்கவில்லை என்கிறார். இந்தச் சூழ்நிலையில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்னும் வாக்காளர்களின் கோரிக்கைகள் அதைத் தவிர்க்க முடியாமல் சோசலிச கட்சி இடம் நகர்த்தும். வெபர் விளக்குகிறார்: "நமக்குத் தெரிந்துள்ளபடி, அரசியல் வெற்றிடத்தைப் பொறுத்துக் கொள்ளாது: இடதுடன் ஆட்சி நடத்த மறுத்தல் என்றால் வலது ஆட்சி செய்யட்டும் என்று பொருள் ஆகும். இத்தகைய செயலற்ற குறுகிய குழுவாதமுறையை புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரிப்பார்களா என்பதில் எனக்குச் சந்தேகம்தான். 21'ம் நூற்றாண்டில் ஒரு தீவிரவாத-தொழிற்சங்கவாத மறு எழுச்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை. தீவிர இடது வாக்காளர்கள் தங்கள் எதிர்ப்பை வலதின் கொள்கைகளுக்கு காட்டத்தான் விரும்புவர். அவர்கள் இந்த விழைவை எதிர்க்கும் வாக்களிக்கும் உத்தரவுகளைப் பின்பற்ற மாட்டார்கள்." புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடைய அரசியல் தன்மை பற்றி முதலாளித்துவம் நன்கு அறிந்துள்ளது. சில நேரம் அது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை மார்க்ஸிஸ அரசியல் மரபுகளின் பிரதிநிதி என்று தவறாகத் தாக்குதல் நடத்தினாலும், பிரெஞ்சு அரசியலில் அது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி பங்கு பற்றி தீட்டியுள்ள சித்திரம் மிகத் தெளிவாக உள்ளது: மக்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இது இருக்கும் என்பதே அது. முதலாளித்துவத்தின் பல அரசியல் பிரிவுகள் இந்தப் பணியைத்தான் தங்களுடைய நலன்களுக்குப் பயன்படுத்த முயற்சிக்கும். |