World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US intelligence chief: World capitalist crisis poses greatest threat

அமெரிக்க உளவுத் துறை தலைவர்: உலக முதலாளித்துவ நெருக்கடி மிகப் பெரிய அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது

By Bill Van Auken
14 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

வியாழனன்று செனட் உளவுத்துறைக் குழு முன் சாட்சியம் அளித்த வாஷிங்டனின் தேசிய உளவுத்துறையின் புதிய இயக்குனரான டென்னிஸ் பிளேயர் ஆழ்ந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடி அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது என்றும் அது தொடர்ந்தால் 1920, 1930 களின் "வன்முறைத் தீவிரவாதத்தை" தூண்டிவிடக்கூடும் என்றும் எச்சரித்தார்.

இன்னமும் இரகசிய ஆவணமாக்கப்படாத "ஆண்டு அச்சறுத்தல் மதிப்பீடு" என்னும் ஆவணத்தில் உள்ள இந்த வெளிப்படையான மதிப்பீடு 16 தனித்தனி உளவுத்துறை அமைப்புக்களின் சார்பில் பிளேயரால் அளிககப்பட்டது; முந்தைய ஆண்டுகளில் இருந்து வித்தியாசமான மாறுதலைப் பிரதிபலித்தது; முன்பு எங்கும் படர்ந்து இருந்ததாகக் கருதப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆரம்பித்த இரு போர்களும்தான் கவலைகள் பட்டியலில் மேல் மட்டத்தில் நிற்கும்.

இவருடைய கருத்துக்களின் அடித்தளத்தில் இருப்பவை மகத்தான அமெரிக்க உளவுத்துறை கருவிக்குள்ளும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அதிக நனவு கூடிய தட்டுக்களிலும் பொருளாதார நெருக்கடி நீடித்து, வேலையின்மை பெருகி, சமூகச் செலவினங்கள் குறைதல் என்பது பெரும் வர்க்கப் போராட்டத்தின் பூகோள வெடிப்பையும் சமூகப் புரட்சி பற்றிய அச்சறுத்தலையும் தட்டிவிடும்.

இந்த அளிப்பு இரு வாரங்களுக்கு முன்புதான் தேசிய உளவுத் துறையின் இயக்குனர் பதவியை ஏற்றுக் கொண்ட பிளேயருடைய முதல் அளிப்பு மட்டும் அல்ல; ஜனாதிபதி பாரக் ஒபாமா பதவி ஏற்றபின் அமெரிக்க உளவுத்துறைக் கருவிகள் தம் முன்னோக்கு பற்றி அளித்துள்ள முதல் விரிவான ஆவணமும் ஆகும்.

"அமெரிக்காவில் முக்கிய நெருக்கமன பாதுகாப்புக் கவலை உலகப் பொருளாதார நெருக்கடியும் அதன் புவி அரசியல் உட்குறிப்புக்களும் ஆகும்" என்று பிளேயர் தன்னுடைய தொடக்கக் கருத்துக்களில் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளது: "இந்த நெருக்கடி ஓராண்டிற்கும் மேலாக தொடர்கிறது; பொருளாதார வல்லுனர்கள் எப்பொழுது, அடிமட்டத்தை நாம் தொடுவோம் அல்லது தொட முடியுமா என்பது பற்றி கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் மந்தம் இன்னும் ஆழ்ந்து போய் பெரு மந்த நிலைத் தரத்தை அடையக்கூடும் என்று அச்சப்படுகின்றனர். 1920 1930 களில் ஐரோப்பாவில் வியத்தகு அரசியல் விளைவுகள் பொருளாதரக் கொந்தளிப்பால் ஏற்பட்டது பற்றி நாம் அனைவரும் நினைவிற் கொண்டுள்ளோம், அதே போல் வன்முறைத் தீவிரம் அதிகபட்சத்தை அடைந்தது என்பதையும் அறிவோம்."

நடந்து கொண்டிருக்கும் நிதியப் பொருளாதார கரைதல், "பல தசாப்தங்களில், ஏன் நூற்றாண்டுகளில்கூட, மிகத் தீவிரத் தன்மை வாய்ந்தது" என்று பிளேயர் விவரித்துள்ளார்.

"காலம்தான் ஒருவேளை நம்முடைய மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மீட்பிற்கு மிக அதிக அவகாசம் பிடித்தால், அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படக்கூடியது அதிகமாக இருக்கும்."

"கிட்டத்தட்ட உலகில் கால் பகுதி நாடுகள் ஏற்கனவே மிகக் குறைந்த தன்மையுடைய உறுதியற்ற நிலையை, அரசாங்க மாற்றங்கள் போன்றவற்றை அனுபவித்துள்ளன; அதற்குக் காரணம் இந்த மெதுவான நிதி இயக்கம்." என்று உளவுத்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார். "அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மிக அதிகமானவை" சர்வதேச அளவில் ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நெருக்கடி தோற்றுவிக்கக்கூடிய அச்சறுத்தல் உலகந்தழுவிய முறையில் புரட்சிர எழுச்சிகளை ஏற்படுத்தக்கூடும் என்று பிளேயர் வலியுறுத்தியுள்ளார். நிதியக் கரைப்பு "அடுத்த ஆண்டு எழுச்சிபெற்று வரும் சந்தை நாடுகளில் அலையென பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும்." அவர் மேலும் கூறியது:" இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதி, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் சகாரா துணை ஆபிரிக்கா ஆகியவற்றில் போதுமான ரொக்க இருப்புக்கள் இல்லை; அதே போல் சர்வதேச உதவி, கடன் அல்லது சமாளிக்கும் கருவி போன்றவையும் இல்லை."

உலகின் இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சமீபத்திய மாதங்களில் வியத்தகு முறையில் வீழ்ச்சி அடைந்துள்ளன எனக் குறிப்பிட்டு பிளேயர் தெரிவிப்பதாவது: "இந்த வளர்ச்சி விகிதங்கள் குறையும்போது, என்னுடைய ஆழ்மன உணர்வு இவை பெரிய பிரச்சினைகளாக உருவெடுக்கும், அவற்றை நாம் எதிர்கொள்ள நேரிடும்." "புள்ளிவிவர மாதிரிகள் பொருளாதார நெருக்கடிகள் ஆட்சியை அச்சுறுத்தும் உறுதியற்ற தன்மையை அதிகப்படுத்தும், அதுவும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் அவை நீடித்தால்" என்று அவர் மேற்கோளிட்டுக் கூறியுள்ளார்.

1930 களுக்கு இணை எனக் கூறக்கூடிய மற்றொரு விதத்தில், அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் உலக வணிகத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதார நாடுகளுக்கும் இடையே இந்த நெருக்கடியின் தாக்கங்கள் பற்றிச் சுட்டிக்காட்டினார். "உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கரைப்புத் தன்மையின் பொருள் நாடுகள் மந்த நிலையைக் கடப்பதற்கு பொருட்களை ஏற்றுமதி செய்து தப்பிக்க முடியாது என்பதாகும்." "உண்மையில் உள்நாட்டு உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் தொழில்களுக்கு ஊக்கம் கொடுத்தல் --உங்கள் அண்டை நாட்டினரை பிச்சைக்காரர் ஆக்குக என்னும் கொள்கை, போட்டி நாணய முறை மதிப்புக் குறைவுகள், இறக்குமதி காப்புவரி விதித்தல் மற்றும் ஏற்றுமதிக்கு மானிய உதவிகள் போன்றவை-- அழிவுகரமான பாதுகாப்புவாதக் கொள்கை அலையைத்தான் கட்டவிழ்க்கும்."

அத்தகைய கொள்கைகள் 1930களில் தொடரப்பட்டதுதான் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பிற்கு அரங்கு அமைத்தது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நம்பகத்தன்மைக்கு நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றியும் பிளேயர் கருத்துத் தெரிவித்து, "அமெரிக்க நிதியச் சந்தைகளில் அதிக செயல்கள் நடைபெற்றது போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது ஆகியவைதான் நிதிய நெருக்கடிக்குப் பொறுப்பு என்று பரந்த அளவில் கூறப்படும் குறைகூல் சந்தைக் கொள்கைகளைப் பற்றி உள்ளது; இதையொட்டி நீண்ட கால அமெரிக்க இலக்குகளை அடைவது கடினமாகலாம்" என்று அவர் அறிவித்தார். வோல் ஸ்ட்ரீட்டின் சரிவு "உலகப் பொருளாதரம் மற்றும் சர்வதேச நிதிய அமைப்பிற்கு அமெரிக்க கண்காணி பணிகள் பற்றி பெருகிய முறையில் ஐயத்தை எழுப்பியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

அச்சுறுத்தல் பற்றிய மதிப்பீட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் திறன் பற்றிய மதிப்பீடுகளும் உள்ளன; "உறுதியற்ற தன்மையின் வளைவு" மத்திய கிழக்கில் இருந்து தெற்கு ஆசியா வரை, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நிலைமைகள் மற்றும் யூரோசியாவில் மையம் கொண்டிருக்கும் சீனா, ரஷ்யா ஆகியவற்றிடம் இருந்து மூபோலாய சவால்கள் அனைத்தும் உள்ளன. அதேபோல் ஆப்கானிஸ்தானத்தில் நடைபெறும் போர் பற்றியும் குறிப்பிட்டுள்ளது; ஒபாமா நிர்வாகம் இதை விரிவாக்கும் திட்டத்தைத் தயாரித்துவருகிறது; காபூலில் உள்ள கர்சாய் ஆட்சி பற்றி கடுமையான மதீப்பீட்டைக் கொடுத்துள்ளது; அதேபோல் பாக்கிஸ்தானில் கூடுதலான குறுக்கீட்டுக்கும் நன்கு அறியப்பட்டுள்ள கோரிக்கையை முன்வைக்கிறது. ஆயினும்கூட அறிக்கையின் மறுக்க முடியாத குவிப்பு உலகளவில் புரட்சிகர சவால்களை பொருளாதார கொந்தளிப்பு எரியூட்டக்கூடிய ஆபத்து உள்ளது என்பதுதான்.

உலகந்தழுவிய முதலாளித்துவ நெருக்கடி பற்றி பிளேயரின் வலியுறுத்தல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேசியப் பாதுகாப்பு முறையின் பெரும் அக்கறையாக இருப்பது சில செனட் உளவுத்துறை உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளும் "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்" என்னும் பிரச்சார சொல்லின்கீழ் வந்து அமெரிக்காவில் வெளிநாட்டு ஆக்கிரோஷத்தை நியாயப்படுத்துதலுக்கும் வாஷிங்டனின் உலக நிலைமயில் அடித்தளத்தில் இருக்கும் மகத்தான முரண்பாடுகளை மறைக்கவும் பயன்பட்டதைத்தான் கண்டுள்ளனர்.
குழுவில் இருக்கும் குடியரசுக்கட்சி துணைத் தலைவரான மிசெளரியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ்டோபர் பாண்ட், "நாட்டில் இருக்கும் நிலைமைகள்" மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியை "உளவுத்துறையின் முக்கிய குவிப்பாக" பிளேயர் ஆக்கியுள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

"உங்களுடைய இன்றைய உளவுத் துறை அதிகாரி என்ற முறையில் நடந்து கொள்ள முற்பட்டு, செனட் எது பற்றிக் கவலைப் படவேண்டும் என நான் நினைப்பதைக் கூறுகிறேன்." என்று பிளேயர் விடையிறுத்தார். இது செனட்டர்களுக்கு ஒரு திட்டுப் போலவும் எச்சரிக்கை போலவும் அமைந்தது; கடந்த சில ஆண்டுகளாகச் சுமக்கப்பட்டிருந்த சிந்தனை முறை சுமையை தூக்கி எறியும் நேரம் வந்து, நெருக்கடியினால் முதலாளித்துவ ஆட்சிக்கு பெருகிய முறையில் உள்ள உண்மையான அச்சுறுத்தல் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று செனட்டிற்கு கூறப்பட்டது; ஏனெனில் நெருக்கடியானது பல நாடுகளிலும் மக்களை தீவிரமாக்குவதை விளைவித்துள்ளது.

செனட் விசாரணைக் குழு அரங்கில் உட்கார்ந்திருக்கும் சிலருக்கு இது புரியாமல் போயிருக்கலம்; ஆனால் பிளேயர் 1920, 1930 களின் "வன்முறைத் தீவிரவாத" நிலைமைகள் மீண்டும் வரலாம் என்று குறிப்பிட்டபோது, அவர் அமெரிக்க, உலக முதலாளித்துவம் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சவால் என்பதை எதிர்கொள்ளக் கூடும் என்று எச்சரித்தார்.

ஒபாமா முகப்பிற்குப் பின்னணியில், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கருவி எதிர்ப்புரட்சி தயாரிப்புக்களை நடத்திவருகிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

பிளேயர் உட்பட, ஒபாமா சமீபத்தில் ஓய்வு பெற்ற மூன்று நான்கு நட்சத்திர இராணுவ அதிகாரிகளை தன் மந்திரி சபையில் நியமித்துள்ளார். மற்ற இருவரும் முன்னாள் மரைன் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் தரைப்படை தளபதி எரிக் ஷின்சேகி மூத்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இப்படி முன்னோடியற்ற வகையில் மூத்த அதிகாரிக் குழுவினரை புதிய ஜனநாயக நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பது அமெரிக்க இராணுவத்தின் அரசியல் சக்தி அதிகரித்துள்ளதை குறிக்கிறது; இது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலைக் கொடுக்கிறது.

US Army War College கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட ஏடு ஒன்றில் வந்த அறிக்கை, தேர்தலுக்கு சில வாரங்களுப் பின் வந்தது, பென்டகன் அமெரிக்க உளவுத் துறை நடைமுறையும் நிலவும் ஒழுங்கிற்கு வரலாற்றளவு நெருக்கடி என அவை கருதுவதைச் சமாளிக்கும் வகையில் உள்நாட்டு சமூகப் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவப் படைகளைப் பயன்படுத்தலாம் என நினைப்பதைக் கூறியுள்ளது.

"தெரிந்த அறியப்படாத பகுதிகள்: பாதுகாப்பு மூலோபாய வளர்ச்சியில், மரபு சாரா "மூலோபாய அதிர்ச்சிகள்" என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை அமெரிக்க இராணுவம் தயாரிக்க வேண்டிய முக்கிய எதிர்கொள்ளல்களில் ஒன்று "அமெரிக்காவிற்குள் மூலோபாய நிலையில் வன்முறைச் சிதைவு ஏற்படக்கூடியதை" எதிர்த்தல் ஆகும்; அது "எதிர்பாரா பொருளாதாரச் சரிவு" அல்லது "அரசியல், சட்ட ஒழுங்கு செயல்படாமல் போவதால்" தூண்டுதல் பெறக் கூடும்.

அறிக்கை கூறுவது: "மிகப் பரந்த உள்நாட்டு வன்முறை அமெரிக்காவிற்குள் என்பது பாதுகாப்பு நடைமுறையை அடிப்படை உள்நாட்டு ஒழுங்கை காப்பாற்றுதல் என்ற விதத்தில் முன்னுரிமைகளை மாற்றக்கூடும்... நீண்ட கால பாதுகாப்பான உள்நாட்டு ஒழுங்கின் விளைவாக அமெரிக்க அரசாங்கம், பாதுகாப்பு நடைமுறை ஆகியவை மெத்தனமாக இருந்துவிடுவது என்பது, பின்னர் வெளிப் பாதுகாப்பு உறுதிகளில் ஈடுபட்டுள்ள பிரிவுகளை விரைவில் இங்கு கொண்டுவந்து உள்நாட்டில் விரிவாகும் பாதுகாப்பற்ற தன்மையைப் போக்குவதற்கு பயன்படுத்தப்படும்."

வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடு தீவிர, ஆழ்ந்த தன்மை அடைந்து அத்துடன் வர்க்கப் போராட்டம் மற்றும் சமூகப் புரட்சி அமெரிக்காவிலேயே வெடித்தல் என்பது பென்டகனை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் இராணுவத்தை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த திருப்பி அழைக்க நேரிடலாம் என்பதாகும்.

ஆவணம் தொடர்கிறது: "மிகத் தீவிர சூழ்நிலையில், இது இராணுவ சக்தியை அமெரிக்காவிற்குள் இருக்கும் விரோதக் குழுக்களுக்கு எதிராக பயன்படுத்துதலையும் அடக்கியுள்ளது. மேலும் பாதுகாப்புத் துறை தேவையானால் அரசியல் அதிகாரம் பல மாநிலங்கள் அல்லது நாடு தழுவிய உள்நாட்டுப் பூசல் அல்லது தொந்திரவுகளைச் சமாளித்துத் தொடரக்கூடி வகையில் கருவி அமைக்க வேண்டும். இந்த "அதிகாரத் தொடர்பை கொள்ளக்கூடிய இன்றியமையாத கருவி" என்பது இராணுவ சர்வாதிகாரம் என்பதின் வனப்புரைச் சொல்லாகும்.

தற்போதைய நெருக்கடி விரைந்து ஆழ்ந்து போவதில் இருந்து தொழிலாள வர்க்கம் அதன் அவசர முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச மற்றும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவ இலாப முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு போராடும் ஒரு மகத்தான சுயாதீனமான அரசியல் கட்சியை கட்டியமைக்கப்பட வேண்டும். இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதனைக் கட்டமைக்க வேண்டும் என்பதாகும்.