WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
பூகோள சமத்துவமின்மை
Global slump could throw 53 million more people into
poverty
உலகப் பொருளாதார சரிவு இன்னும் 53 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளக்கூடும்
By Mike Head
16 February 2009
Use this
version to print | Send
this link by email | Email
the author
கடந்த வாரம் உலக வங்கி உலகெங்கிலும் இன்னும் 53 மில்லியன் மக்கள் 2009ல்
உலகப் பொருளாதார வீழ்ச்சியால் வறுமையில் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், கிட்டத்தட்ட 400,000 கூடுதலான
சிறுவர்கள் ஆண்டுதோறும் உயரும் குழந்தைகள் இறப்பு விகிதத்தால் இறக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இப்புள்ளிவிவரங்கள்
ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாக தோன்றக்கூடிய சமூகப் பேரழிவின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
வங்கியின் 2009ம் ஆண்டிற்கான புதிய மதிப்பீடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சி
இன்னும் 53 மில்லியன் மக்களை நாள் ஒன்றுக்கு $2 க்கும் குறைவாக வாழும் நிலைமைக்குள்ளாக்கும் என்றும் முன்பு
எதிர்பார்த்த சரிவை விட இது அதிகம் என்றும் தெரிகிறது. 2008ல் ஏற்கனவே 130 முதல் 155 மில்லியன் மக்கள்
உயர்ந்த உணவு விலை மற்றும் எரிபொருள் விலைகளால் வறுமைக்கு தள்ளப்பட்ட எண்ணிக்கையைத் தவிர இது அதிகமாக
உள்ளது.
வறுமைக்கான குறைந்த அடையாளமாக வங்கி காட்டியிருக்கும் $2 என்பது, தங்களுக்கு
உணவு, உடை, இருக்க இடம் ஆகியவற்றை மட்டுமே பெற்றுக்கொள்ளும் உலகெங்கிலும் இருக்கும் உண்மையான மக்கள்
எண்ணிக்கையை அதன் புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளது.
2009 முதல் 2015 வரைக்கான ஆரம்ப மதிப்பீடுகள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக
200,000 முதல் 400,00 வரை கூடுதலான குழந்தைகள், மொத்தத்தில் 1.4 முதல் 2.8 மில்லியன் வரையிலானவை
அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் நெருக்கடி தொடர்ந்தால் இறந்துவிடக்கூடும் என்று கணித்துள்ளன.
இதைத்தவிர, ஏற்கனவே வறுமையில் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் "வறுமைக்
கோட்டிற்கு இன்னும் கீழே தள்ளப்படுவர்" என்று உலக வங்கி கொள்கைக் குறிப்பான ''உலக பொருளதார
நெருக்கடி:
ஒரு வறுமை கண்களால் பாதிப்புகளை மதிப்பிடல்' '("The
Global Economic Crisis: Assessing Vulnerability with a Poverty Lens.")
குறிப்பிடுகிறது.
இக்குறிப்பு கூறுவதாவது: "கிட்டத்தட்ட அனைத்து வளர்ச்சியுற்ற மற்றும்
வளர்ச்சியடையும் நாடுகளும் உலகப் பொருளாதார நெருக்கடியினால் அவதியுற்றுக் கொண்டிருக்கின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகள் மிகத்தீவிர வீழ்ச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், வளர்ச்சியடையும் நாடுகளில்
உள்ள குடும்பங்கள் இன்னும் பாதிப்பை பெறக்கூடும், குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதிக எதிர்மறை
விளைவுகளை சந்திக்க நேரிடும்."
107 வளர்ச்சியடையும் நாடுகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வறுமைக்கு "பெரிதும்
இரையாகக் கூடும்" என்றும், நெருக்கடியின் பாதிப்பினால் கஷ்டங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் எஞ்சியவை
"சுமாரான பாதிப்பிற்கு" ஆளாகக்கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது. இந்நாடுகளில் நான்கில் மூன்று பங்கு வேலை
தோற்றுவித்தல், அடிப்படை உள்கட்டுமானம், அடிப்படை சேவைகளான சுகாதாரம், கல்வி, முக்கிய பொது
நிர்வாகம் போன்றவற்றை அதிகரிப்பதற்கு உள்நாட்டிலோ, வெளிநாடுகளில் இருந்தோ நிதியைத் திரட்ட இயலாது
என்றும் வங்கி எச்சரித்துள்ளது. அதேபோல் பாதிப்பு ஏற்படும் பிரிவுகளுக்கு நிகர பாதுகாப்பு திட்டங்களையும்
அவற்றால் செயல்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
இப்புள்ளிவிவரங்கள் உலக மந்த நிலையினால் ஏற்படக்கூடிய வறுமை, ஊட்டச்
சத்தின்மை மற்றும் ஏழ்மை ஆகியவற்றைப் பற்றி ஒரு தெளிவற்ற பார்வையைத்தான் கொடுக்கின்றன. இந்த
விளைவுகள் தனியார் இலாப முறையின் அராஜகம் பற்றிய ஒரு தீர்ப்பாகும். முதலில் 2007-08 ஆண்டில் உணவு
மற்றும் எரிபொருள் விலைகள் பற்றி ஊக விலை உயர்வு 155 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியது; இப்பொழுது
நிதியச் சரிவு இன்னும் பல மில்லியன்களை தள்ள இருப்பதாக அச்சுறுத்துகிறது.
2015க்குள் வறுமையைக் கடக்க இலக்காக நிர்ணயித்திருந்த ஐக்கிய நாடுகளின்
ஆயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளை (Millennium
Development Goals) இக்கணிப்புக்கள்
கேலிக்கூத்தாக்குகின்றன.
தன்னுடைய கணிப்பை கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ரோமில் நடைபெற்ற நிதி
மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்களின் G7
உச்சி மாநாட்டை அடுத்து உலக வங்கி வெளியிட்டுள்ளது. ஐ.நா. ஆயிரமாண்டு பிரச்சாரத்தின் வறுமை எதிர்ப்பு
அமைப்புக்கள் (Anti-poverty
organisations) வங்கியுடன் சேர்ந்து "பாதிப்பிற்கு
ஒதுக்கப்பட வேண்டிய நிதியம்" நிறுவப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளன; இதில் வளர்ச்சியடைந்த
ஒவ்வொரு நாடும் தன்னுடைய ஊக்கப் பொதியில் 0.7 சதவிகிதம் "வளர்ச்சியடையும்" நாடுகளின் வறிய நிலைக்கு
உதவும் வகையில் ஒதுக்க வேண்டும் எனக் கோரப்படுகிறது.
இந்த முற்றிலும் குறைந்த திட்டம் கூட
G7 மந்திரிகளிடம்
ஆதரவைப் பெறவில்லை. அவர்களுடைய இறுதி அறிக்கையில் வறிய நாடுகள் பற்றிய ஒற்றைச் சொற்றொடர்
கூறுவது: "எழுச்சி பெற்று வரும், வளர்ச்சியடையும் நாடுகள் கடன் பெறுதல், வணிகத்திற்காத நிதி பெறுதல்,
தனியார் மூலதன வரவை பெறுதல் ஆகியவற்றின் தேவையையும்
G7
வலியுறுத்துகிறது; மேலும் அவசரமாக இந்த ஆதரவை அதிகப்படுத்தவதற்கு பல பிரிவுகளில் இருக்கும் வங்கிகள்
மூலமும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்பது பற்றி அவசரமாகப் பரிசீலிக்கும்."
வேறுவிதமாகக் கூறினால், நூற்றுக்கணக்கான மில்லியன் வறிய மக்கள் ஏற்றம் என்பது
இதே நிதிய முறையின் கைகளில்தான் இருக்கும்; அவை கொடுத்த "தனியார் மூலதன வரத்துக்களில்தான்" இருக்கும்;
அவையோ முறிந்துவிட்டன; 1930களுக்கு பின்னர் மோசமான உலகச் சரிவை ஏற்படுத்தியுள்ளன.
ரோம் உச்சிமாநாடு விரைவில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் உலக நிலைமையை
தடுப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எதையும் கொடுக்க இயலவில்லை. மாநாடு கூடியபின், சர்வதேச தொழிலாளர்
அமைப்பு (ILO)
டிசம்பர் 2007ல் அமெரிக்காவில் தொடங்கிய மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள உலகம் முழுவதிலுமான வேலை
இழப்பு, 2009 இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என கூறியது. "சமூக பதட்டங்கள்
இதையொட்டி தோன்றலாம்" என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
இத்தகைய வளர்ச்சிக் குறைவு ஏற்கனவே 3.6 மில்லியன் அமெரிக்க வேலைகளை பலி
வாங்கிவிட்டது. 2007 இறுதியில் இருந்து வேலை இழப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் ஏற்பட்டுக்
கொண்டிருக்கும்போது, ஐரோப்பா, ஆசியா மற்றும் வறிய நாடுகளில் பணிநீக்கங்கள் இப்பொழுது வந்துவிட்டன;
இது முதலாளித்துவத்தை சூழ்ந்துள்ள நெருக்கடியின் உலகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிரிட்டனில் வேலையின்மை 2010 நடுப்பகுதிக்குள் இப்பொழுது இருக்கும் 6.3
சதவிகிதத்தில் இருந்து 9.5 சதவிகிதம் உயரக்கூடும் என்று லண்டனில் இருக்கும்
Commerzbank
இல் உள்ள பொருளாதார வல்லுனர் Peter Dixon
ஆல் எதிர்பார்க்கப்படுகிறது; ஜேர்மனியில் வேலையின்மை விகிதம் 7.8 சதவிகிதத்தில் இருந்து 10.5 சதவிகிதம்
என்று உயரக்கூடும். 20 மில்லியனுக்கும் மேலான சீனாவின் உள்நாட்டில் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்கள்
ஏற்கனவே வேலை இழந்துவிட்டனர்; மற்றொரு பொருளாதார ஏற்றம் நடக்கும் நாடான இந்தியாவில் அக்டோபர்
முதல் டிசம்பர் 2008 வரை கிட்டத்தட்ட 500,000 பேர் வேலையிழந்துள்ளனர் என்று ஒரு சமீபத்திய
பகுப்பாய்வு கூறுகிறது.
"1929க்கு பின்னர் இது மிக மோசமான நேரம் ஆகும்" என்று பிரான்ஸின்
வேலைவாய்ப்பு மந்திரி Laurent Wauquiez
கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. "இதில் புதிய விஷயம் என்ன என்றால், இது உலகந்தழுவியது;
நாம் அதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இது ஒவ்வொரு நாட்டிலும் இது உள்ளது; அதுதான்
முற்றுமுழுதான வித்தியாசமாகும்.
G7 மந்திரிகள் யூரோப்பகுதியில்
உள்நாட்டு மொத்த உற்பத்தி மிகக் குறைவான வளர்ச்சி விகிதமான டிசம்பரில் 1.5 சதவிகிதம் என்ற செய்தியை
எதிர்கொண்டனர்; மேலும் உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பான் ஆண்டிற்கு 10
சதவிகிதத்திற்கும் அதிகமான சுருக்கத்தைக் கொண்டுள்ளது என்ற பொருளாதார வல்லுனர்களின் எச்சரிக்கையையும்
கேட்டனர். ஆனால் ஏற்கனவே மந்த நிலையைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்ட வங்கி பிணை எடுப்பு பொதிகள்,
ஊக்கப் பொதிகள் ஆகியவை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே உச்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் உலகளாவிய தன்மை
இருந்தபோதிலும்கூட, பெரிய சக்திகளுக்கு இடையே இருக்கும் அழுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு வரி முறையின்
வளர்ச்சி ஆகியவற்றை உச்சிமாநாட்டால் அதிகம் மறைக்க முடியவில்லை. இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை
"பாதுகாப்புவரி நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்" என்று வெறுமே வலியுறுத்தியுள்ளது; ஆனால் அக்டோபர்
மாதம் G7
மந்திரிகள் கடைசியாகக் கூடியபின் பல நாடுகளிலும் இந்த வரிவிதிப்புக்கள்
ஏராளமாக நடந்துவருகின்றன.
உச்சிமாநாட்டிற்கு முன்பு, அமெரிக்க காங்கிரஸ் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின்
$787 பில்லின் பொருளார ஊக்கப் பொதியை "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்ற செய்தி உள்ள
விதியுடன் ஏற்றது; இதன்படி உள்கட்டுமான கட்டிடத் திட்டங்களில் அமெரிக்க எஃகு பயன்படுத்தப்பட வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி 3 பில்லியன்
யூரோக்களுக்கு குறைந்த வட்டியான $3.86 பில்லியனுக்கு
PSA Peugeot Citroen, Renault
ஆகியவற்றிற்கு கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்; ஆனால் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்
செய்யப்படக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது; இதன் பொருள் கிழக்கு ஐரோப்பிய தொழிற்சாலைகள்
திட்டமிடப்பட்டுள்ள வேலைகுறைப்புக்களினால் பெரும் சுமைக்கு ஆளாவர்.
கடந்த மாதம் இத்தாலி, போர்த்துகல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் கட்டுமானத்
தொழிலாளர்களை பணியில் இருத்துவதற்கு எதிராக பிரிட்டனில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை
தொழிற்சங்கங்கள் நடத்தினர்; இது பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் கூறிய "பிரிட்டிஷ் வேலைகள்
பிரிட்டிஷ் தொழிலாளர்கள்" என்பதை செயல்படுத்த வலியுறுத்தியதாகும்.
இவை ஒன்றும் தனிப்பட்ட, ஒதுங்கிய முறையில் நடந்த நிகழ்வுகள் அல்ல.
அக்டோபரில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஊக்க மற்றும் நிதியப் பிணை எடுப்புப் பொதிகள்
தேசியப் பொருளாதாரம், வங்கிகள் மற்றும் தொழில்துறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற
நாடுகளின் இழப்பில் இருந்து பாதுகாக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
உச்சி மாநாடு பாதுகாப்புவரி முறையைத் தடுக்க தோல்வியுற்றது பற்றிப்
பொருளாதார வல்லுனர்கள் குறிப்புக் காட்டியுள்ளனர். "G7
அறிக்கை அனைத்துச் சரியான கருத்துக்களையும் கூறியுள்ளது; ஆனால் நாம் இதற்கு முன் கேட்காத எந்தப் புதிய
கொள்கை மற்றும் உறுதிப்பாடுகள் என்ற தொகுப்பைத் தவிர எதுவும் புதிதாகக் கூறப்படவில்லை." என்று
Uni Credit
என்று இத்தாலியில் லண்டனிலுள்ள மிகப் பெரிய வங்கியின் முக்கிய பொருளாதார வல்லுனர்
Marco Annunziata
கனடாவின் Globe and Mail
க்கும் கூறியுள்ளார்.
பல நூறாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்ட பின்னரும்கூட,
அனைத்து தேசிய அடித்தளமுடைய மீட்புப் பொதிகள் வேலையின்மை வளர்ச்சி பெருகிவருவதைத் தடுக்க முடியவில்லை.
இவை அனைத்துமே உலக நெருக்கடியைத் தீர்க்க முடிவில்லை; இதற்குக் காரணம் அவை அனைத்தும் தத்தம் நாட்டில்
இருக்கும் உயரடுக்கு நிதிய, பெருநிறுவன அமைப்புக்களின் நலன்களைத்தான் பாதுகாத்து, தக்க வைக்கும் முயற்சிகளிள்
ஈடுபட்டுள்ளன.
ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கும் பாதுகாப்புவரி முறைக்கும் உத்தியோகபூர்வமாக உதட்டளவு
பாராட்டு தெரிவிக்கப்பட்டாலும், "அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்குக" என்ற இரண்டாம் உலகப்
போருக்கு இட்டுச்சென்ற 1930களில் மேலாதிக்கம் செலுத்திய கருத்தின் எழுச்சியைத்தான் உலகம் மீண்டும் இப்பொழுதும்
காண்கிறது.
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவைப் போலவே தொழிற்சங்கங்களும் தேசியரீதியான
பிரதிபலிப்பை காட்ட முன்நிற்கின்றன; இது சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை தேசிய வழிகளில் பிரித்து
தொழிலாளர்களின் கவனத்தை வேகமாக வரும் வேலையின்மை சமூக வறிய நிலை என்று தனியார் இலாபமுறைக்கு
எதிராகக் காட்ட வேண்டிய தன்மையை திசைதிருப்பத்தான் பயன்படும்.
பெரும் வேலையின்மை ஏற்றம் விகிதங்கள், குறிப்பாக இளந்தொழிலளர்களிடையே,
லாட்வியா, சிலி, கிரேக்கம், பல்கேரியா மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வெடிப்புத் தன்மை உடைய எதிர்ப்புகளுக்கு
வகை செய்துள்ளன. ஆனால் அரசியல் முன்னோக்கில் ஒரு தெளிவான மாற்றீடு இல்லாத நிலையில், இந்த எழுச்சிகள்
அடக்கப்பட்டு ஒரு தேசிய வடிவமைப்பிற்குகள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற அபாயம்தான் உள்ளது.
உலக வறுமை மற்றும் வேலையின்மை மிக வேகமாக மோசம் அடைதல் மற்றும் புதிய
வணிகப்போர்கள், இராணுவ வெடிப்புக்கள் ஆகியவற்றின் புதிய காலம் ஒரே விதத்தில்தான் நிறுத்தப்பட முடியும்.
அதற்கு தொழிலாள வர்க்கத்தின் முழு உணர்வுடன் கூடிய சர்வதேசப் போராட்டம் ஒரு சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவம் அகற்றப்பட்டு, பெருநிறுவன மற்றும் தனியார் சொத்துக் குவிப்பிற்கு
என்று இல்லாமல் மனித, சமூகத் தேவைகளுக்கு ஏற்ப உலகப் பொருளாதாரம் புதிதாகக் கட்டமைக்கப்பட
வேண்டும். |