ஐரோப்பா : பிரான்ஸ்
France: A conversation with the NPA's Alain Krivine
புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் அலன் கிறிவினுடன் ஒரு உரையாடல்
By Alex Lantier
12 February 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (Nouveau
Parti Anti-Capitaliste NPA) நிறுவப்பட்ட
மாநாட்டில் அலன் கிறிவினை பேட்டி கண்டனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின்
(LCR) வரலாற்று
தலைவர், கிறிவின் கொடுத்த பதில்கள் ---- LCR
முடிவான NPA
க்குள் தன்னைக் கலைத்தல், ட்ரொட்ஸ்கிசத்துடன் தொடர்பை நிராகரித்தல் ஆகியவை
இதன் அரசியல் முக்கியத்துவத்தை தெளிவாக்குகின்றன.
இதுவரை NPA
மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றி முதலில் தன்னுடைய திருப்தியை தெரிவித்த பின்னர், பொருளாதார நெருக்கடி
பற்றிய அவருடைய மதிப்பீடு பற்றி WSWS
நிருபர்களின் வினாக்களுக்கு ஒரு முடிவற்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் கிறிவின் விடையளித்தார். "நல்லது, நான்
ஒரு பொருளாதார வல்லுனர் அல்ல. எவரும் எத்தனை நாள் இது நீடிக்கும் எனக் கூறமுடியாது என நினைக்கிறேன்;
ஆனால் இது ஒரு கணிசமான சேதத்தைக் கொடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.
நெருக்கடியினால் ஏற்படக்கூடிய எத்தகைய அரசியல் விளைவுகளை அவர் எதிர்பார்க்கிறர்
என வினாவப்பட்டதற்கு அவர் விடையிறுத்ததாவது: "மக்களுடைய வாழ்வில் துன்பம் நிறைந்த நிலைமை இருக்கையில்,
அதற்கு இருவித விடையிறுப்புக்கள் உண்டு: மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனர், ஒரு வெடிப்பு ஏற்படுகிறது;
அல்லது தாங்களே பேசாமல் இருக்கின்றனர், போராட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது,
தனிப்பட்ட முறையில் அதில் இருந்து விலகி ஓடப் பார்க்கின்றனர் இரண்டில் ஒன்று நடக்கலாம், எனவே நான் ஏதும்
கூறுவதற்கு இல்லை."
ஜனவரி 29ம் தேதி பிரான்சின் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த நடவடிக்கை
தினத்தில் 2.5 மில்லியன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பங்கு பெற்றது ஊக்கமான அடையாளம் என குறிப்பிட்ட
பின்னர், அவர் கூறியது: "எனவே நான் வெடிப்புத் தன்மை உடைய ஒரு நிலைப்பாடு உள்ளது என்று கூறினேன், அது
வெடிக்குமா ..?" அவர் தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.
ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி கேட்கப்பட்டதற்கு கிறிவின் கூறினார்: "எங்களிடம்
எந்தப் போலிக் கருத்துக்களும் இல்லை; ஒபாமாவை பொறுத்தவரையில், அவருக்கு பெரும் வங்கியாளர்களின் ஆதரவு
உள்ளது, அவர் ஒரு முதலாளித்துவ சார்பு உடையவர்." ஆனால் விரைவாகச் சேர்த்துக் கொண்டார்: "நாம்
ஒன்றும் நடுநிலையிலும் இல்லை. ஒரு கறுப்பரை தேர்ந்தெடுத்தது, அமெரிக்காவில் இதன் பொருள் முழுவதையும்
வைத்துப் பார்க்கும்போது, ஒரு கணிசமான முன்னேற்ற அடிவைப்பு என எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்."
சற்று விரிவான கருத்துக்களாக கிறிவின் ஒபாமா பற்றி போலிக்கருத்துக்கள் இல்லை
எனக்கூறியதையே முரண்பாட்டிற்கு உட்படுத்தினார். "அமெரிக்காவில் முற்போக்கான கூறுபாடு, அங்கு எல்லாவற்றையும்
மாற்றுகின்றன என்பதுதான்" என்றார் அவர். "அமெரிக்க மக்களை அவர் வேறுவிதமாக திரட்டியுள்ளார். அது ஒரு
முற்போக்கான கூறுபாடு; தெருக்களுக்கு வந்த மக்கள் அவருக்கு உதவுகின்றனர்...புஷ் காலத்தில் இருந்ததைவிட
நல்ல சீர்திருத்தங்கள் வரலாம். புஷ்ஷைவிட மோசமாகப் போக முடியாது; எனவே முதலாளிகளிடம் இருந்து பணத்தை
எடுத்துக் கொண்டு வேலையற்ற நிலை பற்றி சில ஆறுதல் சொற்கள் கூறப்படும்."
அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் போர்கள் மற்றும் வெளிக் குறுக்கீடுகள்
மேலாதிக்கம் இருக்கும் சர்வதேச அரசியல் நிலையில் எப்படி இருக்கும் என அவர் கணிக்கிறார் எனக்
கேட்கப்பட்டதற்கு, கிறிவின் விடையிறுத்தது: "அமெரிக்காதான் மேலாதிக்கம் செலுத்துகிறது; இப்பொழுது
ஐரோப்பா மேலாதிக்கம் என்றால் அது ஒரு நகைச்சுவை, எவ்வளவு நுட்ப வேறுபாடுகள் இருந்தாலும்;
ஐரோப்பா ஒரு முதலாளித்துவ கண்டமாக இருக்கம் வரை அது மாறாது." அவர் மேலும் கூறினார்:
"ஒபாமாவுடன் ஐரோப்பா சற்று நல்ல முறையில் இணைந்து செயல்படும்; புஷ் ஒதுக்கி வைப்பது போல் இல்லாமல்
ஒபாமா சற்று வளைந்து கொடுப்பார்."
தொழிலாளர்களுடைய போராட்டங்களுக்கு
NPA எத்தகைய
முன்னோக்கைக் கொடுக்கும் என வினாவப்பட்டதற்கு அவர்
NPA உடைய
இலக்கு "போராட்டத்திற்கு உதவுவது--நாங்கள் தொழிற்சங்கத்தினர் அல்ல; நாங்கள் அரசியலைக் கொண்டுவர
முயற்சிக்கிறோம், ஆனால் போராட்டங்களில் ஒரு ஒருங்கிணைப்பிற்கு முயலுகிறோம்; எனவே அவரவர் தனித்தனி
மூலையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறோம்." இத்தகைய முன்னோக்கு சமீபத்திய ஆண்டுகளில்
ஒவ்வொரு முக்கிய பெரிய வேலைநிறுத்தத்திற்கு எதிராகவும் தொழிற்சங்கம் காட்டுவதைப் பற்றிப்
பொருட்படுத்தாமல், அவர் தொடர்ந்தார், "மொத்தத்தில், முக்கியக் கருத்து பொதுவேலைநிறுத்தத்திற்கு
ஒன்றாக வரவேண்டும் என்பதுதான்: அது தெளிவு."
கவனத்துடன் தொடுக்கப்பட்ட உட்பொருளும் நிறைந்த சொற்களில் கிறிவின் புரட்சிகரப்
போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்காத முன்னோக்கு பற்றிக் கோடிட்டுக் காட்டினார்; ஆனால் அத்தகைய
சூழ்நிலை வருமேயாயின், பிரெஞ்சு முதலாளித்துவ இடது நடைமுறைக் கட்சிகளுடன் ஒரு கூட்டாட்சி அமைக்கும் வாய்ப்பு
வருமே ஆனால் --(PS)
சோசலிசக் கட்சி மற்றும் (PCF)
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பாக--அது பயன்படுத்தப்படும்
என்றார். "நாளை ஒரு பொது வேலை நிறுத்தம் என வந்தால்--அது எங்களை ஒன்றும் நம்பியில்லை--1968ல்
நிகழ்ந்தது போல், அதற்கு நல்ல முடிவு வரும்; அது உண்மையிலேயே அதிகாரம் பற்றிய வினாவை எழுப்பும்"
அதற்காக NPA
முயலும் என்றார்.
1968 ல் இருந்து
NPA எப்படி மாறுபட்ட
விதத்தில் நடக்க முயலும் என்று கேட்கப்பட்டதற்கு, கிறிவின் கூறினார்: "1968ல் மக்கள் வேலைநிறுத்தக்
குழுக்களை தேர்ந்தெடுக்க கற்க நேரிட்டது, பாரிசுக்கு அவர்களை அனுப்ப கற்றது; அதாவது சட்டபூர்வமற்ற ஆனால்
முறையான அதிகார வடிவமைப்பை தோற்றுவிப்பதற்கு, ஒரு முறையான மாற்று சக்தியை ஏற்படுத்தி, அதிகாரத்திற்கு
ஒரு வேட்பாளராக இருக்கும் நிலையை அடைவதற்கு."
ஆனால் தொழிலாளர் சக்திக்கு கிறிவின் விரோதப் போக்கைக் காட்டி பிரான்சின்
நடைமுறையில் இருக்கும் கட்சிகளின் கூட்டணி உடைய பங்கைப் பற்றி வலியுறுத்தினார். "1968 இறுதியில் சில ஆர்ப்பாட்டங்கள்
இருந்தன; அவற்றில் பல நூறாயிரக்கணக்கான மக்கள் தொழிலாளர்கள் சக்திக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அதில்
இருந்து எதுவும் விளையவில்லை. யாருக்கு, எதற்காக அதிகாரத்தைக் கொடுப்பது? அப்பொழுது இருந்த அரசியல்
கட்சிகளும் அதை விரும்பவில்லை --PCF
போன்றவை. PS
ஒன்றும் AWOL
அல்ல. நாங்கள் அப்பொழுது மிக இளவயது மாணவர்கள்; எனவே அதிகாரத்திற்கு
வேட்பாளர் எவரும் இல்லை."
NPA இப்பொழுது அதிகாரத்தை எடுத்துக்
கொள்ள முயலுமா எனக் கேட்கப்பட்டதற்கு கிறிவின் விடையிறுத்தது: "அவ்வாறு கூறுவதற்கு இல்லை, முடியாது. ஆனால்
முதலில் ஒரு தேசிய வேலைநிறுத்தம் செய்வோர் சங்கம் வேண்டும் என்று நான் நினைப்பேன், அதில் எங்களைப்
போல அரசியல் கட்சிகளும் ஒரு பங்கைப் பெற வேண்டும்..."
NPA உடைய முக்கிய சார்பு ஒரு
புதிய "இடது" கூட்டணியை கட்டியமைப்பது ஆகும். மற்ற எந்தக் கட்சிகளுடன்
NPA சேர்ந்து
அத்தகைய கூட்டணியை அமைக்கக்கூடும் என்று WSWS
நிருபர்கள் கேட்டதற்கு, கிறிவின் கூறியது: "எனக்குத் தெரியவில்லை. எந்த நிலையில்
PCF சேரும் என.
தற்பொழுது அது நெருக்கடியில் உள்ளது. மெலன்சோன் செய்ததைவிட
PS ல் கூடுதலான
குறிப்பிடத்தக்க பிளவுகள் வரலாம் [அவர்தான் சமீபத்தில் இடது கட்சியை நிறுவி
NPA உடன்
தேர்தல் ஒப்பந்தம் வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளார்]. மற்ற குழுக்களும் "இடதுக்கு புறத்தே" உள்ளன;
அவை NPA
வில் சேரவில்லை--Lutte Ouvriere,
Alternatifs போன்றவை. மேலும் பல அதிக உறுப்பினர்களைக்
கொண்டிருக்கவில்லை என்றாலும் சிறு குழுக்கள் NPA
க்கு வந்துள்ளன; அவற்றிற்கான காரணங்கள் உள்ளன, அவை ஒதுக்கித்தள்ளக்கூடிய காரணங்களும் அல்ல."
கிறிவினுடைய இலக்கு, பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம்
ஒரு புரட்சிகர எழுச்சி செய்யக்கூடிய பின்னணியில், அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கு பிரெஞ்சு நடைமுறை இடது
கட்சிகளுடன் ஒத்துழைப்பதாக இருக்கும் என்று உள்ளது.
இத்தகைய முன்னோக்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் முற்றிலும் பொருந்ததாது; அதாவது
புரட்சிகர மார்க்சிசத்துடன். PS, PCF
என்னும் பிரெஞ்சு முதலாளித்துவத்தைக் காக்கும் இரு நடைமுறைக் கட்சிகளுடன் உடன்பாடு என்பது, அதுவும் அவை
பணிக்குச் செல்லவேண்டும் என்று உறுதியளித்த இரு புரட்சிகர நிலைப்பாட்டில் இருந்து விற்றுவிட்ட நிலையில் இயலாதது
ஆகும்; 1936 பொது வேலைநிறுத்தத்தின்போது மக்கள் முன்னணி அரசாங்கம் சோசலிஸ்ட் கட்சியையும்
கொண்டிருந்து, முதலாளித்துவ ரடிக்கல் கட்சியையும் கொண்டிருந்தபோது; பின்னர் 1968 பொது வேலைநிறுத்த
காலத்தில் தளபதி சார்ல்ஸ் டு கோல் அரசாங்கத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தம் வெடித்தபோதும் நிகழ்ந்தது.
1936ம் ஆண்டு பொதுவேலைநிறுத்தம் விற்கப்பட்ட பின், ட்ரொட்ஸ்கி புரட்சிகர
போராட்டங்கள் பிரான்சில் இக்கட்சிகளுடன் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியில் முழு முறிவைச் செய்வதன் அடிப்படையில்தான்
வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தினார். "பிரான்சை காப்பாற்றக் கூடிய நிலைமை, உண்மையான புரட்சிகர
முன்னணி, சில ஆயிரம் பேரைக் கொண்டது, நிலைமையைத் தெளிவாக அறிந்து கொண்டது, முதலாளித்துவ மற்றும்
குட்டி முதலாளித்துவப் பொதுக் கருத்துக்களின் (சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், பெருங்குழப்ப கூட்டுவாதிகள் என)
செல்வாக்கில் இருந்து முழுவதும் சுதந்திரமாக இருப்பது நிறுவப்பட்ட பின்னர்தான்; இறுதிவரை அது போராடத்தயாராக
இருக்க வேண்டும் அத்தகைய முன்னணிக்கு மக்களிடம் எப்படி செல்வது என்ற பாதை நன்கு தெரியும்."
மாறாக, கிறிவின் அத்தகைய கட்சிகளுடன் உடன்பாடுகள் வேண்டும் என்று திட்டமிடுகிறார்.
பல சாதகமான குறிப்புக்கள் இருந்தாலும், தற்செயல் என இல்லாமல், கிறிவின் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ட்ரொட்ஸ்கி
நிறுவிய நான்காம் அகிலத்தின் வரலாற்றை விரோதப் போக்கு மற்றும் இழிவுணர்வுடன்தான் குறிப்பிடுகிறார். இன்று
ட்ரொட்ஸ்கிச மரபின் பொருள் யாது என்று கேட்கப்பட்டதற்கு கிறிவின் கொடுத்த பதில்: "ட்ரொட்ஸ்கியின்
முற்போக்கு கூறுபாடு; அவர் பெரும் தொல்லைகளுக்கு உட்பட்டிருந்தார்; ஆனால் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு
போராட்டத்தை அமைத்திருந்தார்."
இத்தகைய நிலைப்பாடு ஒரு மகத்தான முரண்பாட்டை மறைக்கிறது: அதாவது கிறிவினின்
கூற்றான ட்ரொட்ஸ்கிசம் பற்றிய அவருடை அக்கறை ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து வருகிறது
என்பதை; இருந்தபோதிலும் அவர் இப்பொழுது ஸ்ராலினிச
PCF உடன் கூட்டணிக்கான
வாய்ப்பை பரிசீலிக்கிறார்.
ட்ரொட்ஸ்கியின் பிழைகள் என்ன என்று அவர் கருதுகிறார் எனக் கேட்கப்பட்டதற்கு
கிறிவின் கூறிய விடை: "ஸ்ராலினிசம் பற்றி அவர் கூறியது தவறு. ஸ்ராலினிசத்திற்கு பின்னர் ஒரு ஜனநாயக சோசலிசம்
வரும் என்று அவர் எழுதினார். ஆனால் வந்தது பெரும் கொடூரம் ஆகும் -- புட்டின் மற்றும் இன்னும் பலருடன் ஒரு
பயங்கர முதலாளித்துவம் ஆகும். இந்த நிலை ஏற்படும், தொல்லைக்கு உட்படும் என்று உண்மையில் அவர் கருதியிருந்தார்;
ஆனால் எது தொடரும் என்பது பற்றி அவர் தவறாகத் தான் கணித்தார்."
இங்கு அவர் ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடு பற்றி தவறாகக் கூறுகிறார்; வருங்கால
USSR
பற்றி தன்னுடைய தீர்ப்பை காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்னும் நூலில் சிறப்பாக ட்ரொட்ஸ்கி கூறியிருந்தார்;
"இன்னும் கூடுதலான முறையில் முரண்பாட்டுக் குவிப்புக்கள் ஏற்படும், இது சோசலிசத்தை முதலாளித்துவத்திற்கு
பின்னே கொண்டு சென்று இடும்; முதலாளித்துவத்திற்கான பாதையில் எதிர்ப்புரட்சி நடவடிக்கை தொழிலாளர்களின்
எதிர்ப்பை முறிக்கும்; சோசலிசத்திற்கான பாதையில் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை அகற்ற வேண்டும்.
இறுதிப் பகுப்பாய்வில், பிரச்சினை உயிர்த்த சமூக சக்திகளுக்கு இடையே நடக்கும் போராட்டத்தில் தீர்மானிக்கப்படும்
-- தேசிய மற்றும் உலக அரங்குகளில்."
கிறிவினின் தவறாகக் கூறியிருப்பதின் பொருள் சோசலிசப் புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டதற்கான
பொறுப்பை, எங்கு இருக்க வேண்டுமோ --சோவியத் அதிகாரத்துவம், அதன் சர்வதேச உடந்தையாளருடன்
PCF
போன்றவற்றில் இல்லாமல்,சோவியத் ஒன்றியத்திற்குள் வைத்திருப்பது; இவர்களை நோக்கித்தான் கிறிவின் இப்பொழுது
NPA ஐ
நோக்குநிலைப் படுத்துகிறார் ; ஆனால் நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவுகள் பற்றி கிறிவின் அவை தவிர்க்க
முடியாதவை என்று கூறுகிறார்.
WSWS நிருபர்கள் கிறிவினை
நான்காம் அகிலம் 1953ல் பிளவு அடைந்தது பற்றிய கருத்தைக் கேட்டனர்; அப்பொழுது நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழு ஸ்ராலினிசக் கட்சிகள் சார்புக்கு விரோதப் போக்கு காட்டிய கூறுபாடுகளில் இருந்து வெளிப்பட்டது;
இதே நேரத்தில் LCR
ன் அரசியல் முன்னோடிகள் ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் அரசியல் பணியைத் தொடர வேண்டும் என்ற உத்திக்கு ஆதரவு
கொடுத்து தங்கள் அரசியல் போக்கின் செல்வாக்கை வளர்க்க முற்பட்டனர். கிறிவின் விடையிறுத்தார்: இந்த விவாதம்
நிகழ்வுகளை அடுத்து முற்றிலும் தேவையற்றதாகப் போய்விட்டது."
NPA மாநாட்டில் இருந்து
முற்போக்கான விளைவாக ஏதேனும் வரும் என்றால், அது கிறிவினை,
LCR, NPA ஆகியவை
ட்ரொட்ஸ்கிச அரசியல் மரபியம் பற்றித் தம் நிலைமையை தெளிவாக்கியதுதான். ட்ரொட்ஸ்கிசத்தின் மரபியம்,
மற்றும் நான்காம் அகிலம் பற்றி கிறிவின் கருத்துக்கள் ஒரு உறுதியான அரசியல் சார்புடன் பிணைந்தவை: சோசலிசத்தை
வெளிப்படையாக நிராகரித்தல், "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" என்று கூறி குட்டி முதலாளித்துவ இடது
அனைத்தையும் ஈர்க்கும் விதத்தில் ஒரு அஸ்திவாரம் அமைத்து முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெறுதல்
என்பதே அது. |