World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: LCR dissolves itself to found New Anti-Capitalist Party

பிரான்ஸ்: LCR தன்னை கலைத்துக்கொண்டு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை நிறுவுகிறது

By Alex Lantier
7 February 2009

Back to screen version

பெப்ருவரி 5ம் தேதி பாரிஸ் புறநகரமான La Plaine Saint Denis TM Ligue Communiste Revollutionnaire LCR இன் 18 வது மாநாட்டிற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் சென்றிருந்தனர். இந்த மாநாட்டில் LCR தன்னை முறையாக கலைத்துக் கொண்டது. பெப்ருவரி 6-8ல் நடக்கவிருக்கும் அடுத்த கூட்டத் தொடரில் LCR பிரதிநிதிகளும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியில் (Nouveau Parti Anticapitaliste NPA), சேர்ந்துள்ளவர்களும் NPA ஐ நிறுவுவர்.

தன்னை வலதிற்கு நகர்த்திக் கொள்ளும் வகையில் LCR அரசாங்கத்தின் "இடது" கட்சிகளில் உள்ள அரசியல் சக்திகளை --சோசலிஸ்ட் கட்சி (PS), குறிப்பாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) களில் இருந்தும்-- சிறிய இடது கட்சிகளான Lutte Ouvrière, PCF உடன் தொடர்புடைய பூகோளமயமாக்கத்திற்கு எதிரான குழுக்கள், மற்றும் பல சிறிய எதிர்ப்புக் குழுக்களிடம் இருந்து உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்களில் இருந்து உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு உதவும் வகையில் "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்பதை கருத்தியல் ரீதியாக தளர்வுற்ற முழக்கமாக LCR பயன்படுத்துகிறது.

ஆனால், முதலாளித்துவ இடது கட்சிகளுடன் எப்படி LCR -ஐ நோக்குநிலைப்படுத்துவது என்பது பற்றியதில் கடும் வேறுபாடுகள் வெளிப்பட்டன. மாநாட்டின் காலைக் கூட்டம் LCR அரசியல் குழுவின் பெரும்பான்மை, சிறுபான்மை பிரிவினருக்கு இடையேயான போராட்டத்தினால் ஆதிக்கம் செய்யப்பட்டது; இவர்கள் கட்சி மாநாட்டிற்கு முன் இரு போட்டியான அரங்குகள் தேவை என்று வாதிட்டனர். இரு அறிக்கைகள் கொடுக்கப்பட்டன; ஒன்று LCR இன் தலைவர் அலன் கிறிவின் இனால் பெரும்பான்மைக்காகவும், மற்றொன்று சிறுபான்மையினருக்காக கிறிஸ்தியான் பிக்கே இனாலும் வழங்கப்பட்டன.

LCR பெரும்பான்மை அரங்கு, NPA க்குள் இருக்கும் இடது அமைப்பின் போக்குகள் மறு மீளமைக்கப்பட அழைப்பு விடுக்கிறது. "NPA க்குள் அனைவரையும் கொண்டுவருதல் என்பதுதான் நாம் தொடங்கியுள்ள வழிவகையின் தர்க்கரீதியான விளைவு ஆகும். இதற்கு LCR கலைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அரசியலுக்கு புதிய உறுப்பினர்கள் அல்லது மற்ற அரசியல் உணர்வுகள் போக்குகள் உடைய உறுப்பினர்கள் -அதாவது சோசலிஸ்ட்டுக்கள், கம்யூனிஸ்ட்டுக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தாராளவாதிகள், புரட்சிகரவாதிகள், சமூக இயக்கத்தினர் போன்றவர்கள்" [NPA] க்கு தேவை.

தன்னுடைய தொடக்க உரையில் கிறிவின் NPA க்கான தேவை "சீர்திருத்தவாத இடது இழிவுற்றதின் விளைவாக" வந்துள்ளது; என்றார் --இதன் பொருள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இது தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதாகும். அவர் மேலும் கூறியது: "இடது நடைமுறையை புதைப்பது என்பது பிரச்சினை அல்ல; சோசலிஸ்ட் கட்சி (PS) கணிசமான "வாக்காளர் வலிமையை" கொண்டுள்ளது, PCF "நேர்மையான, தைரியமான போராளிகளை" கொண்டிருக்கிறது, ஆனால் அவர்கள் PCF இன் PS உடனான தேர்தல் தொடர்பினால் "அடையாள நெருக்கடியில்" உள்ளனர். "கட்டயாமான ஒற்றுமை" என்பது, "சீர்திருத்தவாதிகள், தொழிற்சங்கத்தினர், எதிர்ப்பு செயல்பாடுகளில் முழு இடது அனைத்தும் ஒன்றாகக் கொண்டுவரப்படவேண்டும்" என்றும் கிறிவின் விவரித்தார்.

வரலாறு மற்றும் அரசியல் முன்னோக்கு ஆகியவை விவாதிக்கப்படமாட்டது என்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். "1968ல் மாவோவாதம், ட்ரொட்ஸ்கிச போக்குகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை அறிந்த மக்களிடம் நாம் பேசமுடிந்தது. இப்பொழுது புதிய காற்று சுவாசிக்கப்படுகிறது; போராட விரும்பும் மக்கள்தான், சார்க்கோசியை [பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ] எதிர்த்துப் போராட வேண்டும் என்னும் மக்கள்தான் உள்ளனர்.

LCR போராளிகள் எந்த அரசியல் நோக்கு நிலையையும் பாதுகாக்க வேண்டியதில்லை என்றும் புரட்சிகர மார்க்சிச விவாதம் பற்றியும் அதிகம் மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார். "என்னிடம் இதற்கு விடைகள் உள்ளன என்று கூறும் உறுதியான தைரியம் எவருக்கும் கிடையாது. அனைத்து அடிப்படை மூலோபாய வினாக்களும் விடையிறுக்கப்பட வேண்டும்." என்று மேலும் அவர் எச்சரித்தார். "சிவப்பு பேராசரியர்கள் போல் ஒன்றும் நாம் நடந்து கொள்ளக்கூடாது" பெண்ணுரிமை ஆர்வலர், சுற்றுச் சூழல் ஆர்வலர் மற்றும் ஏனைய அரசியல் சார்பு கொண்டிருந்தவர்கள் NPA க்கு வந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர் முன்னாள் LCR போராளிகள் "பிறருடைய கருத்துக்களையும் நன்கு கவனிக்க வேண்டும்" என்றார்.

LCR ன் சில பிரிவுகள் நேரடியாக PS, PCF உடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கருதியவற்றின் சார்பில் கிறிஸ்தியான் பிக்கே இன் உரை இருந்தது. LCR பெரும்பான்மை முன்னோக்கு கூறுபாடுகளைப் பொறுத்தவரையில் --PS, PCF தலைமைகளை குறைகூறியதின் மூலம் முதலாளித்துவ இடது கட்சிகளுக்குள் இருந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டது-- இக் கட்சிகளின் தலைமையிடத்திற்குள் பிக்கேயின் ஆதரவாளர்கள் வளர்த்துள்ள நல்ல உறவுகளை மீறியது ஆகும்.

சிறுபான்மை அரங்கு கூறியது: "NPA ஒரு நெம்புகோல் போல் இருக்க வேண்டும்; ஒரு சோசலிசத்திற்கான பெரிய கட்சியாக வரவேண்டும், ஒரு பன்முக, ஜனநாயகக் கட்சியாக முழு இடது மற்றும் தொழிலாளர் இயக்கம் மறுகட்டமைக்கும் விதத்தில் அனுமதிக்க வேண்டும்". மேலும், உடனடி இலக்கு "PS க்கு இடதில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றாக இணைய வேண்டும்" என்பதாகும்.

கடந்த ஆண்டு LCR இன் அரசியல் குழுவில் இருந்து பிக்கே வெளியேற்றப்பட்டார்; NPA ஐ முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் மாநாட்டிற்கு முன் அவர் தாக்கி எழுதினார். Libération க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் NPA வேலைத்திட்டம் "அரசியல் மிகைப்படுத்தலில் ஒரு பைத்தியக்காரத்தனம் ஆகும்" என்றார்; மேலும், "10,000 உறுப்பினர்கள் இருந்தாலும், சமூகத்தை புரட்சிகரமாக மாற்ற விரும்புவது வெறும் பெருமயக்கம்தான் என்றும் கூறினார்.

"அரசியல் குழப்பம் இடதில் சிறந்த சக்திகள் ஒன்றுகூட வழிசெய்ய வகை செய்துள்ளது" என்று தன்னுடைய அறிக்கையில் பிக்கே குறிப்பிட்டார். PS இன் இடது பிரிவில் ஜோன்-லூக் மெலோன்சோன் (Jean-Luc Mélenchon) தலைமையில் நடைபெற்ற பிளவை அவர் மேற்கோளிட்டார்; அவர் இடது கட்சி (PG, Parti de Gauche) என்பதை நிறுவி PCF உடன் அரசியல் கூட்டை நாடுகிறார். LCR இன் ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோவின் செய்தி ஊடக அழைப்பின் கீழ் NPA கட்டமைக்கப்படுகிறது என்று கூறிப்பிட்ட பிக்கே, NPA-PG தேர்தல் அரங்கு உடன்பாடு 2009 ஐரோப்பிய தேர்தல்கள் கூட்டு பற்றி பெசன்ஸநோ உறுதியாகக் கூறாதது நல்ல முடிவல்ல என்றார்.

"LCR ன் சிறந்த கூறுபாடுகள்" மறுபடியும் புதுப்பிக்க வேண்டாம் என்று பிக்கே அழைப்பு விடுத்தார்; அவர் இவ்வாறு கூறியிருப்பதின் பொருள் அடிப்படைப் புரட்சிகர மார்கசிச கருத்துக்களுக்கு எதிர்ப்பு ஆகும். இந்த கூறுபாடுகளில் அடங்கியவை; "புரட்சிகர இயக்கத்தின் உட்கரு என்று ஒருவர் தம்மை நினைத்துக் கொள்ளக்கூடாது; ஒரு அரசியல் முன்னணிப்படை பற்றிய எந்த கருத்துருவிற்கும் எதிர்ப்பாக மற்றும் வெளிப்படையாக வெளியே ஒரு அமைப்பாக இருந்து கொண்டு, [....] முதலாளித்துவ ஆட்சியின் கீழ் வெற்றிகள் விரிவாக்கம் அடையும்போது சோசலிசம் உதயமாகும் என்ற கருத்துரு" ஆகியனவாகும்.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைப் பிரிவுகளின் ஆதரவாளர்கள் பதட்டத்துடனும், ஆரம்ப அறிக்கைகளுக்கு பின்னர் நேர்த்தியற்ற விவாத முறைகளிலும்தான் பேசினர். LCR பெரும்பான்மை அரங்கிற்காக பேசியவர்கள் அதன் திருத்தல்வாத அரசியல் பற்றிய பிக்கேயின் பண்பிடலுடன் உடன்பட்டனர்; ஆனால் அதன் வழிவகைகள்தான் பிரெஞ்சு முதலாளித்துவ இடதின் ஆதரவைப் பரந்த முறையில் பெறுவதற்கு உகந்தது என்றனர். François Duval, LCR பெரும்பான்மைக்கு, "சமூகப் போராட்டங்களில் இருக்கும் PCF தோழர்களை, மற்றும் அமைப்பின் கோட்பாடு இன்னும் முடிவாக்கப்பட்டதாக இராத அமைப்பின் இளைஞர்களை [அதாவது அராஜகவாதிகள்] ஒன்றாகக் கொண்டுவருவதற்கு" பாராட்டினார். "சிறுபான்மை LCR க்கும் அப்பால் செல்ல கனவு கண்டது; நாம் அதைச் செய்து விட்டோம்." என்றும் அவர் கூறினார்.

LCR இன் தத்துவவியலாளரான Daniel Bensaïd மிகச் சுருக்கமாக LCR ன் பெரும்பான்மை முன்னோக்கு பற்றி கூறினார். பொருளாதார நெருக்கடி பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறினார்: "இன்னும் 5-10 ஆண்டுகளில் அனைத்து அரசியல் வழிவகைகளும் மாற்றம் கண்டிருக்கும். பலர் LCR ஒரு தடை என நினைக்கின்றனர். அவர்கள் நினைப்பு தவறு அல்ல. NPA அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான மாறுதல்களைக் கொண்டுவரும், பழைய இடது சிதைவதில் ஒரு காரணியாக இருக்க" அமைப்பை அனுமதிக்கும்.

பிற்பகல் கூட்டத்தொடர் திருத்தல்வாத, சந்தர்ப்பவாதக் கட்சிகளின் சர்வதேச அமைப்பான நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்துடனான (USFI) NPA ன் வருங்கால உறவுகள் பற்றிய விவாதத்திற்கு அர்ப்பணித்தது. LCR, USFI க்கு கணிசமான நிதிய இருப்புக்களை அளிக்கிறது, பல வெளியீடுகளுக்கு ஆதரவு கொடுக்கிறது, USFI ன் இளைஞர் பயிற்சி நடவடிக்கைகள் பலவற்றை நடத்துகிறது. ஆனால் NPA, USFI உனான உறவுகள் காட்டும் சர்வதேசக் கட்டுப்பாடு அல்லது சோசலிச சார்பு எவற்றையும் இணைத்த நிலையில் இருக்காது என்று LCR தெளிவாக்கிவிட்டது.

பெரும்பான்மை அரங்கின் முதல் பேச்சாளர் NPA "அனைத்து பிணைப்புக்களையும், நிதிய, பயிற்சி கூட்டங்கள் போன்றவற்றை" தொடரும் என்றார். ஆனால் USFI ன் நோக்குநிலைகள், அதன் முடிவுகள் ஆகியவற்றால் NPA கட்டுப்படாது என்றார். USFI உடன் NPA இணைதல், சர்வதேச கருத்துக்களை ஏற்றல் என்பது இதன் "பன்முக நோக்கை" மீறிவிடும் என்று இவ்வம்மையார் கூறினார்.

சிறுபான்மை அரங்கின் சார்பில் பேசியவர், பெரும்பான்மையின் நிலைப்பாட்டை செயற்பாட்டிற்கு உதவாது, மட்டமானது என்று வர்ணித்தார்: USFI இன் முக்கிய நடவடிக்கைகள் பல ட்ரொட்ஸ்கிசத்தை முறையாக கைவிட்டுவிட்ட ஒரு கட்சியால் நடத்தப்படும்; அது USFI அதிகாரத்தை ஏற்க மறுக்கும். NPA, ஒரு USFI பிரிவாக செயல்படாது என்னும் LCR கருத்துக்கு பரந்த ஆதரவை அவர் தெரிவித்தார்; ஆனால் NPA தொடர்ந்து USFI க்குள் முக்கிய பங்கைக் கொள்ள வேண்டும் என்றார். இதற்கு USFI ஆதரவுப் பிரிவு ஒன்று NPA க்குள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

மற்றொரு LCR உறுப்பினர் சர்வதேச ஒத்துழைப்பு பல NPA புதிதாக வந்தவர்களின் வலதுசாரிக் கருத்துக்களைக் கடப்பதற்கு உதவும் என்ற அறிக்கையை கொடுத்தார். இவருடைய கூற்று "முதலாளித்துவ எதிர்ப்பில்" வலதுசாரித் தன்மை என்பது பிரான்சில் உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதற்கு அடிப்படையாக உள்ளது எனக் காட்டுகிறது. பல புதிதாக NPA விற்கு வந்துள்ளவர்கள் காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்களின் நிலைமை பற்றி விரோதப் போக்கு கொண்டுள்ளனர் என்றும் பொருளாதார பாதுகாப்புவாத கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றார் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஒரு குழப்பமான விவாதம் நடந்தது. சிறுபான்மை அரசியல் முன்னோக்கு கீழ்க்கண்ட கருத்தாய்வை விரும்பியதுபோல் தோன்றியது: USFI மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றி ஓரளவு குறிப்பைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும்; இது அரசியல், சிந்தனைப் போக்கு சுதந்திரத்தை PS, PCF பங்காளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும்போது தக்க வைக்கும். மேலும் USFI ஆதரவு இருக்கும் பிரிவு NPA ல் இருப்பது NPA க்குள் இருக்கும் பிக்கே ஆதரவாளர்களுக்கும் ஒரு குவிப்பு முனையாக இருக்கும்.

எத்தகைய சர்வதேச இணைப்பும், சோசலிச நோக்குநிலையும் அல்லது ட்ரொட்ஸ்கிசத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் அது கட்டமைக்க விரும்பபும் சர்வதேச உடன்பாடுகளுக்கும், பிரான்சில் முதலாளித்துவ இடதில் இருந்து ஆள் சேர்க்கும் அதன் இலக்கிற்கும் பொறுத்துக் கொள்ள முடியாத தடையாக இருக்கும் என்று LCR பெரும்பான்மை அரங்கு கருதுகிறது. அதேபோல், பிக்கே குழு வலுப்பெறவும் இது விரும்பவில்லை; அதன் அரசியல் வழி LCR உறுதியாக PS, PCF ஆகியவற்றை எதிர்த்தல் என்பதைத்தான் காட்டுகிறது --மக்களிடையே தேர்தல் ஆதரவு பெறுவதற்கு முக்கிய அரசியல் குறிப்புக்களில் இது ஒன்றாக இருக்கும்; இக்கருத்து கொள்கை அடிப்படையிலானதாக இல்லாமல் தந்திரோபாய கருதிப்பார்த்தல்களின் அடிப்படையிலானதாக இருக்கிறது. எனவே இரு பிரிவுகளின் முன்னோக்குகளுக்கும் இடையே ஒற்றுமை இருந்தாலும், சமரசத்திற்கு சாத்தியமில்லை.

LCR பெரும்பான்மை அரங்கின் சார்பில் இறுதி உரை பிரான்சுவா சபடோ (François Sabado) வால் கொடுக்கப்பட்டதது. USFI க்கு பெரும்பான்மையின் எதிர்ப்பு முதலாளித்துவ அரசியலுக்கு நனவாக நோக்குநிலை கொண்டுள்ளதுடனும் LCR உள்விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நிர்பந்திப்பதற்கான முடிவுடனும் பிணைந்தது என்பதை அவருடைய உரை தெளிவாக்கியது.

"ஒரு ஜன்னல் திறக்கிறது" என்று சபடோ கூறினார்; இதை எவரும் கவனியாமல் இருக்க முடியாது என்றும் கூறினார். இலத்தீன் அமெரிக்காவில் உள்ள இடது முதலாளித்துவ ஆட்சிகளான வெனிசூலாவின் Hugo Chavez ஆட்சி, பொலிவியாவில் உள்ள Evo Morales ஆட்சி ஆகியவை உலக முதலாளித்துவத்திற்கு எதிரான "புரட்சிகர வளர்ச்சி" என்று அவர் சுட்டிக் காட்டினார்; "நமக்கு ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு முனை தேவை, ஒரு புதிய அகிலம் அல்ல --இந்த சொல் மரபார்ந்த வகையில் சோசலிச விசுவாசிகளைக் குறிக்கும். NPA போன்ற மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் அத்தகைய பிணைப்புக்களைக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: "NPA க்குள் சிறுபான்மை, பெரும்பான்மை அரங்குகள் பற்றிய விவாதத்தை நாம் தொடர விரும்பவில்லை." "புரட்சிக்கும் சீர்திருத்தத்திற்கும்" இடையே இருக்கும் வேறுபாடு USFI க்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா, என்பது போன்ற விவாதம் இனியும் பொருத்தமற்றது என்று சபாடோ அறிவித்தார்.

இவ்விதத்தில் LCR இன் கலைப்பு மாநாடு முடிவுற்றது. நிதிய, அமைப்பு விஷயங்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் விவாதிக்கப்பட்ட பின்னர், LCR இன் உறுப்பினர்கள் வாக்களித்தனர். பெரும்பான்மை அரங்கம் உறுதியான வெற்றியை பிரதிதிகளிடம் இருந்து அடைந்தது. 150 வாக்களிக்கும் உரிமை பெற்ற பிரதிநிதிகளில் பெரும்பான்மை அரங்கு 87.1 சதவிகித ஆதரவையும் சிறுபான்மை 11.5 சதவிகித ஆதரவையும் பெற்றன. 1.4 சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved