World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-Russia tensions escalate over closure of Afghan supply base

ஆப்கானிஸ்தான் விநியோகதளம் மூடுவது அமெரிக்க ரஷ்ய அழுத்தங்களை பெருகுகின்றன

By Bill Van Auken
6 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

முன்னாள் சோவியத் குடியரசான கிர்கிஸ்தானில் முக்கிய பென்டகனின் விநியோகத்தளம் மூடப்படலாம் என்ற அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கத் தலைமையிலான போரைத் திட்டமிட்டு விரிவாக்கக் கருதும் ஒபாமா நிர்வாகத்தின் கருத்துக்களுக்கு தீவிர பின்விளைவுகளை கொண்டுள்ளதுடன், வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே அழுத்தங்களையும் அதிகரித்துள்ளது.

கிர்கிஸின் தலைநகரான பிஷ்கேக்கிற்கு அருகில் இருக்கும் மானஸ் விமானத் தளம் அமெரிக்க இராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் இடையே முக்கியமான பெரிய விமான இணைப்பு ஆகும். கடந்த ஆண்டு, குறைந்தது 170,000 அமெரிக்க இராணுவத்துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்திற்கு செல்ல அல்லது அங்கிருந்த திரும்ப இத்தளத்தை பயன்படுத்தியுள்ளன; இதைத்தவிர இராணுவத் தளவாடஙகள் 5,000 டன்களும் இதன் மூலம் சென்றுள்ளன. கிட்டத்தட்ட 1,000 அமெரிக்கத் துருப்புக்கள் இத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்; இதைத்தவிர சிறிய பிரிவினர் பிரான்ஸ், ஸ்பெயினில் இருந்தும் இங்கு உள்ளனர்.

செவ்வயன்று தனது அரசாங்கம் மானஸ் தளத்தை மூட உள்ளது என்று கிர்கிஸ் ஜனாதிபதி குர்மன்பெக் பாகியேவ் கொடுத்த அறிவிப்பை ஒரு ஒப்பந்தப் பேரத்திற்கான தந்திரம் என்று தொடக்கத்தில் உதறித்தள்ளியபின் (இதேபோன்ற அச்சுறுத்தலை கிர்கிஸ்தான் 2006ல் கொடுத்தது, பின் அமெரிக்கா இந்த வசதிக்கான வாடகையை அதிகரித்தபின் வசதி கொடுப்பதைத் தொடர்ந்நதது), வியாழன் முதல் உத்தியோகபூர்வ வாஷிங்டன் இவ்விஷயத்தை மிகத் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

"உண்மையில் நாங்கள் இது ஒரு பேச்சுவாரத்தை தந்திரோபாயம் என்றுதான் நினைத்தோம், அவர்கள் ஏமாற்று உரையை வென்று விடுவோம் என நினைத்தோம்" என்று பெயரிட இரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் வியாழனன்று தெரிவித்தார்." ஆனால் இது அவர்கள் விளையாடவில்லை, நாம் வெளியேற வேண்டும் என விரும்புவதைத் தெளிவாக்கியுள்ளது."

ஒபாமா நிர்வாகத்தின் அறிவிக்கப்பட்ட திட்டமான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை அடக்கும் முயற்சியில் கூடுதலான 30,000 அமெரிக்கத் துருப்புக்களை ஆப்கானிஸ்தானத்திற்குள் அடுத்த 18 மாதங்களுக்குள் அனுப்பிவைப்பது என்பதை அடுத்து இந்தத்தளத்தின் மூலோபாய முக்கியத்துவம் இன்னும் அதிகமாகியுள்ளது. இந்த விரிவாக்கம் அந்நாட்டில் இப்பொழுது இருக்கும் 36,000 அமெரிக்க இராணுவப் படைகளைக் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆக்கும். மற்ற நேட்டே நாடுகளில் இருந்து மற்றும் ஒரு 32,000 படையினர் இந்த ஆக்கிரமிப்பில் பங்கு பெற உள்ளனர்.

இத்தளம் கொண்டுள்ள முக்கிய பங்கு பாக்கிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு தரைமூலம் முக்கியமாள விநியோகத்தை வழங்கும் பாதையில் வாஷிங்டன் எதிர்கொள்ளும் பிரச்சினையினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பாக்கிஸ்தானில் இருந்து கைபர் கணவாய் மூலம் அமெரிக்கத் துருப்புக்களுக்கான விநியோகங்களில் மூன்றில் இரு பங்கு செல்கின்றன. திங்களன்று எதிர்ப்புப் போராளிகள் கைபர் கணவாயில் 90 அடி இரும்புப் பாலத்தைத் தகர்த்தனர்; இது பாதையை சீர்குலைத்துள்ளது; குறைந்த அளவு தற்காலிகமேயாயினும் அனைத்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்களுக்கு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இத்தாக்குதல் அதிகரித்துவரும் பல தாக்குதல்களை தொடர்ந்து வந்துள்ளதுடன், விநியோகிக்கும் வாகனங்களும் இராணுவ வாகனங்களும் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் கெரில்லா படைகளின் ஊடுருவித்தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

வெள்ளை மாளிகை செய்திப் பிரிவு செயலர் ரோபர்ட் கிப்ஸ் வியாழனன்று கிர்கிஸ்தான் தளம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போருக்கு "மிக முக்கியமானது" என்று விவரித்ததுடன் வெள்ளைமாளிகை நிலைமைய "சீராக்க" வழிகளை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

"கிர்கிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து விவாதிக்கும் விஷயமாக இது உள்ளது" என்று பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரியன் விட்மன் வியாழனன்று செய்தியாளர்களிடம் "இது எம்மால் மேற்கொள்வதற்கு வேறு வழிவகைகள், ஏனைய சாத்தியப்பாடுகள் இல்லை என்று அர்த்தப்படாது"கூறினார்.

மானஸ் தளம் மூடப்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றி கேட்கப்பட்டதற்கு வெளிவாவகார செயலாளர் கில்லாரி கிளின்டன் வியாழனன்று, "கிர்கிஸ்தான் அரசாங்கம் இது பற்றி பரிசீலிப்பது வருந்தத்தக்கது" என்றார்; ஆனால் இந்த நடவடிக்கை ஒன்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் காலனித்துவ வகையிலான போரை விரிவாக்க வாஷிங்டனுக்கு தடைகள் தராது என்றும் வலியுறுத்தினார்.

"இன்னும் அதிக விவாதங்களை அவர்களுடன் கொள்ள விரும்புகிறோம். ஆனால் கிர்கிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் விளைவுகள் எப்படி இருந்தாலும், திறமையுடன் நாம் தொடர்வோம்" என்று அவர் வெளிவிவகார அமைச்சகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கிர்கிஸ் தளம் இழக்கப்பட்டுவிட்டால், பென்டகன் "எப்படி நாம் அடுத்த நடவடிக்கைளில் ஈடுபடலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறது" என்றும் கிளின்டன் கூறினார்.

அசோசியேட்டட் பிரஸ் வியாழனன்று பெயர்குறிப்பிடாத பென்டகன் அதிகாரிகளை மேற்கோளிட்டு வெளியிட்ட மாற்றீட்டு வசதிகளுக்கான கருத்தில், வாஷிங்டன் உஸ்பெக்கிஸ்தானுடன் சீர்குலைந்துவிட்ட உறவுகளை செப்பனிடுவது பற்றியும் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; அங்கு முன்பு அமெரிக்கா முன்னாள் சோவியத் விமானத் தளம் ஒன்றை ஆப்கானிஸ்தான செயல்களுக்கு பயன்படுத்தி வந்தது. 2005ம் ஆண்டு அந்நாட்டின் கிழக்கு நகரமான ஆண்டிஜானில் இரத்தம்தோய்ந்த கலகம் ஏற்பட்டதை அடுத்து வாஷிங்டன் இராணுவ உதவியை உஸ்பெக்கிஸ்தானுக்கு நிறுத்திய பிறகு அங்கிருந்து அமெரிகக்கப்படைகள் வெளியேற்றப்பட்டன; ஆண்டிஜானில் அரசாங்கத் துருப்புக்கள் பல குடிமக்களைக் கொன்று குவித்திருந்தன. இத்தளத்தின் பயன்பாட்டை மீண்டும் பெற்றுக் கொள்ளுதல் என்பதற்கு உஸ்பெக்கிஸ்தானின் சர்வாதிகாரி இஸ்லாம் கரிமோவுடன் சமாதான இணக்கம் தேவைப்படும்.

அமெரிக்கத் தளத்தை மூட இருப்பதாகக் கூறிய கிர்கிஸ் ஜனாதிபதி பாகியேவின் அறிவிப்பு, செவ்வாயன்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வந்தது; அதில் மாஸ்கோ $2 பில்லியனுக்கும் மேலதிக உதவியை கிர்கிஸ்தானுக்கு வழங்க உறுதி அளித்துள்ளது.

இவ்வுதவியில் நேரடி மானியத் தொகையாக $150 மில்லியனில் மானஸ் தளத்திற்கான பணம் உட்பட நாட்டிற்கு அமெரிக்கா வழங்கிய மொத்த நிதிஉதவிக்கு சமமான பணம் அடங்குவதுடன், மற்றொரு $300 மில்லியன் பெயரளவு வட்டிக்கு கொடுக்கப்படுவதுடன் $1.7 பில்லியன் ஒரு நீர்மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கும் கடனாகக் கொடுக்கப்படும். இதைத்தவிர ரஷ்யாவிற்கு கிர்கிஸ் கொடுக்க வேண்டிய $180மில்லியன் கடனை ரத்து செய்வதாகவும் கிரெம்ளின் உறுதி அளித்துள்ளது.

இத்தகைய திட்டமிட்டுள்ள ரஷ்ய உதவிப்பொதி கிட்டத்தட்ட வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் இரு மடங்கு என்பதுடன் கிர்கிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியும் ஆகும்; இதன் வறிய மக்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிதியக் கரைப்பை ஒட்டி பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

"பொருளாதார நெருக்கடிக் காலத்தில் இது ரஷ்யாவிடம் இருந்து வரும் தீவிர, முக்கியமான ஆதரவு, கிர்கிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை உறுதியாக்க அமையும்" என்று பாகியேவ் குறிப்பிட்டுள்ளார்.

கிர்கிஸின் பிரதம மந்திரி ஈகோர் சூடினோவ் வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி தளத்தை மூடுவது பற்றிக் கொடுத்துள்ள அறிவிப்பின் நேரம், ரஷ்ய உதவி அளிப்பை ஒட்டி வந்துள்ளது "ஒரு தற்செயல் நிகழ்வுதான்" எனக் கூறியுள்ளார்.

"ரஷ்ய முடிவான பெரும் கடனளித்தல் என்பதற்கும் அமெரிக்க விமானத் தளம் கிர்கிஸ்ஸில் இருந்து அகற்றப்படும் என்பதற்கும் தொடர்பு கிடையாது" என்று சூடினோவ் அறிவித்துள்ளார்.

தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி பாகியேவ் அமெரிக்க நிலைப்பாட்டிற்கு கிர்கிஸ்தான் மக்கள் எதிர்ப்புத்தான் காரணம் என்று பிணைத்துக் கூறினார்; ஒரு அமெரிக்க விமானப்படையினர் 2006ம் ஆண்டு ஒரு கிர்கிஸ் வாகன ஓட்டியைச் சுட்டுக் கொன்றதை அடுத்து இது தீவிரமாயிற்று என்றும் அவர் கூறினார். இத்தளம் முதலில் 2001ல் செயல்படத் துவங்கியபோது, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பைத் துவங்கியது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"அமெரிக்கா விரும்பியவற்றை கிர்கிஸ்தான் செய்து கொடுத்து தன்னுடைய நிலப்பகுதியையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவ அனுமதித்தது; எனவே போராட்டத்தில் எங்களுடைய பங்களிப்பும் தீவிரம்தான்" என்று அவர் கூறினார். "ஓரிரு ஆண்டுகள் இருக்கும் என்று நினைத்தோம்; ஆனால் இப்பொழுது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கிர்கிஸ்தானுக்கு பொருளாதார இழப்பீட்டுத் தொகை பற்றிய பிரச்சினையை பலமுறை அமெரிக்கப் பங்காளிகளிடம் விவாதித்தோம்; ஆனால் அது பற்றி ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை."

அமெரிக்காவிற்கு 180 நாட்கள் தளத்தை மூடவும் அனைத்து படையினரையும் அகற்றவும் அவகாசம் அளிக்கப்படும் என்றும், இது அரசாங்கத்தின் முடிவு பற்றி தெரிவிக்கப்படும் இராஜதந்திர குறிப்புக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டவுடன் ஆரம்பமாகும் என்றும் கிர்கிஸ் அதிகாரிகள் கூறினர். வெள்ளியன்று பாராளுமன்றம் இந்த நடவடிக்கை பற்றி வாக்களித்திருக்க வேண்டும் என்று வியாழனன்று அரசாங்க அதிகாரிகள் கூறினர்; இப்பொழுது இன்னும் குறைந்தது ஒரு வாரம் கழித்துத்தான் அது நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

கிர்கிஸ் அரசாங்கத்தின் மறுப்புக்கள் இருந்தபோதிலும், மானஸ் தளம் மூடப்படும் என்ற முடிவு இப்பகுதியில் அமெரிக்கப் படைகள் இருப்பதற்கு மாஸ்கோவின் எதிர்ப்பினால் உந்தப்படுகிறது என்பது தெளிவு; பல நூற்றாண்டுகளாக இப்பகுதியைத் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தின்கீழ் ரஷ்யா வைத்துள்ளது.

இந்த அழுத்தங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிப்படையாக வந்தன; அப்பொழுது அமெரிக்க ஆதரவு பெற்ற முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியா அதிலிருந்து பிரிந்துசென்ற பகுதியான தெற்கு ஒசேஷியா மீது படைகளை அனுப்பியது. அது ஒரு ரஷ்ய இராணுவ பிரதிபலிப்பை கொண்டுவந்து, ஜோர்ஜியப் படைகள் தெற்கு ஒசேஷியா மற்றும் கருங்கடல் பகுதியில் இருக்கும் பிரிவினைப் பகுதி அப்காசியாவில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டதில் முடிவுற்றது. பின் மாஸ்கோ இரு பகுதிகளின் சுதந்திரத்தையும் அங்கீகரித்தது.

ஜோர்ஜியா மற்றும் உக்ரைனை நேட்டோ உடன்பாட்டில் இணைக்கும் வகையில் அமெரிக்காவின் கொள்கையும், ரஷ்ய எல்லையை அண்மித்த பகுதிகளில் ஏவுகணைப் பாதுகாப்பு நிறுவும் உந்துதலும் மற்றும் ரஷ்ய நிலப்பகுதியை சுற்றி மத்திய ஆசியா, பால்டிக் நாடுகளில் வளைத்துப் போடும்வகையில் அங்கு இராணுவத் தளங்கள் அமைக்கும் உந்துதலும் மோதலுக்கு எரியுட்டியது.

இப்பகுதியின் மூலோபாய எரிபொருள் இருப்புக்கள் மீதான கட்டுப்பாடு பற்றி மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே இருக்கும் பெருகிய போட்டிதான் பிரச்சினைக்குக் காரணம் ஆகும்; இந்த முக்கிய இலக்குத்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போரின் இலட்சியம் ஆகும்; ஈராக் குறுக்கீட்டிலும் அதுதான் காரணம் ஆகும்.

தன்னுடைய பங்கிற்கு ரஷ்ய ஆளும் உயரடுக்கு, வீழ்ச்சியடைந்துள்ள எரிபொருள் விலையில் இருந்து விளைந்துள்ள சமீபத்திய நிதிய இழப்புக்கள் இருந்தாலும், மாஸ்கோ தன்முன்னாள் சோவியத் குடியரசுகளின்மீது செல்வாக்கை மீண்டும் நிறுவுதல் தன்னுடைய நலனுக்கு முக்கியமானது என்றும் அதற்காக கணிசமான முதலீடு செய்யலாம் என்றும் கருதுகிறது.

மத்திய ஆசியாவில் இருக்கும் ஆட்சிகள் இந்தப் போட்டியைத் தங்கள் நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுகின்றன; ஒருபுறம் ரஷ்யாவிற்கும் மறுமுறை அமெரிக்காவிற்கும் தங்கள் ஆதரவைக் கொடுத்து உடன்பாடுகளில் கூடுதலான நலன்களை எதிர்பார்ககின்றன.

மாஸ்கோவிற்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையே இருக்கும் உடன்பாடு அமெரிக்காவின் நலன்களுக்கு கிரெம்ளின் பெருகிய முறையில் காட்டும் ஆக்கிரோஷமான எதிர்ப்பின் ஒரு பகுதிதான்.

உதவிப் பொதிகள் மற்றும் தளம் மூடல் பற்றிய அறிவிப்புக்கள் வந்த மறுதினம் ரஷ்ய ஜனாதிபதி மேட்வெடேவ் ரஷ்யத் தலைமையிலான கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பின் (Collective Security Treaty Organization-CSTO) உச்சி மாநாட்டில் 10,000 துருப்புக்களை கொண்ட விரைவு அதிரடிப்படை ஒன்றை நிறுவ இருப்பதாகவும் இதில் முக்கியமான ரஷ்ய துணைப்படையினர் இருப்பர் என்றும் இப்பகுதியில் "இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றவும்" "பயங்கரவாதத்தை" எதிர்க்கவும் இது பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

"இவை பெரும் சக்தி வாய்ந்த பிரிவுகளாக இருக்கும். அவற்றின் போர்த்திறனைப் பொறுத்தவரையில் வட அட்லான்டிக் உடன்பாடு சக்திகளினதை (NATO) விடச் சிறிதும் வலிமையில் குறைந்து இருக்காது." என்று மேட்வெடேவ் கூறினார். இதில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்தும் ஓரளவிற்குப் படைப் பிரிவுகள் இருக்கும் என்றார்; அவற்றில் பேலரஸ், ஆர்மீனியா, காஸகஸ்தான், கிர்கிஸ்தான், டாஜிகிஸ்தான் ஆகியவையும் அடங்கியிருக்கும். அமெரிகர்கள் காலி செய்த பிறகு, மானஸ் தளம் இப்பிரிவுகளுக்கு தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது என மாஸ்கோ நினைக்கிறது.

தான் விமான மற்றும் கடற்படைத் தளங்களை அப்காசியாவில் நிறுவ இருக்கும் விருப்பதையும் ரஷ்ய அரசாங்கம் தெரித்துள்ளது; இத்திட்டம் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு, நேட்டோ ஆகியவற்றிடம் இருந்து எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

கிர்கிஸ்தானுக்குக் கொடுக்கும் உதவியத் தவிர, மாஸ்கோ இந்த வாரம் அண்டை நாடான பேலாரசுக்கும் $2.77 பில்லியனைக் கடனாக கொடுக்க இருப்பது பற்றி சாதகமாக இருப்பதாக அடையாளம் காட்டியுள்ளது; பேலரசுடன் ஒப்பந்தத்தில் மேட்வெடேவ் கையெழுத்திட்டபோது ஜனாதிபதி அலெக்சாந்தர் லுகசெங்கோ ஒரு கூட்டு விமானப்பாதுகாப்பு முறை நிறுவ கையெழுத்திட்டார்; இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க ஏவுகணைக் கேடயத்திட்டத்திற்கு தக்க பிரதிபலிப்பாகும்.

இறுதியாக, கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ $354 மில்லியன் உதவிப் பொதியை மாஸ்கோவிற்கு எட்டு நாட்கள் பயணித்திருந்தபோது பெற்றார்; இது ரஷ்யாவிற்கும் கியூபாவிற்கும் இடையே 1991 சோவியத்தின் உடைவின் பிறகு முதல் உயர்மட்டத் தொடர்பு ஆகும். அது பல தசாப்தங்கள் ஹவானாவிற்கு சோவியத் அளித்து வந்த உதவித்தொகைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தது. அமெரிக்கக் கடலோரத்தில் இருந்து 90 மைல் தூரத்திலேயே இருக்கும் கியூபாவுடன் புதுப்பிக்கப்படும் உறவுகளை மாஸ்கோ முன்னாள் சோவியத் குடியரசுகள்மீது கொள்ளும் அமெரிக்க தலையீடுகளுக்குத் தக்க விடையிறுப்பு என்று காண்கிறது.

இதற்கிடையில் புதனன்று ரஷ்ய வெளியுறவுத் துணை மந்திரி கிரிகோரி காரசின் சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோ ஆப்கானிஸ்தானியப் பகுதிக்கு ரஷ்யப் பகுதி மூலம் இராணுவசார்பற்ற விநியோகங்களை செய்யும் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு "சாதகமான பதிலளிப்பு" கொடுத்ததாகக் கூறினார்.

"இப்பிரச்சினை குறித்து நாமும் அமெரிக்காவும் சிறப்பு மற்றும் தேர்ச்சியான பேச்சுக்கள் வருங்காலத்தில் நடத்துவோம் என நம்புகிறோம். எவ்வளவு திறைமையுடன் ஒத்துழைக்க முடியும் என்பதைப் பார்ப்போம்" என்று காராசின் கூறினார்.

ஆனால் இத்தகைய "ஒத்துழைப்பு" என்பதைத்தான் வாஷிங்டன் துல்லியமாக தவிர்த்து வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் வித பற்றி ரஷ்ய செல்வாக்கை ஒதுக்கத்தான் அது முற்பட்டுள்ளது; அதே போல் இப்பகுதி முழுவதும் மாஸ்கோவின் அதிகாரம் வலுவிழக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ரஷ்ய வழி அல்லாத மாற்றுப் பாதைகளுக்கான தேடல், காஸ்பிய குடாவின் எண்ணெய், எரிவாயு வளங்களை ரஷ்யத் தொடர்பு அற்ற பாதைகள் மூலம் அனுப்பும் மூலோபாய இலக்குகளுடன் தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ளது; அப்பாதைகளை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் வைக்க விரும்புகின்றது.

இப்பெருகிய கசப்பான மோதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீட்டை அதிகரிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் உந்ததுல் ஆகியவற்றில் இருக்கும் ஆபத்து உலகின் மிகப் பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையே பேரழிவு தரக்கூடிய இராணுவ மோதலை ஏற்படுத்தும் பரந்த சாத்தியப்பாட்டையும் மற்றும் ஒரு பரந்த யுத்தத்திற்கான அச்சறுத்தலையும் கொண்டுள்ளது.