World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: Ruling circles shaken by the extent of January 29 protests

பிரான்ஸ்: ஆளும் வட்டங்கள் ஜனவரி 29 ஆர்ப்பாட்டங்களின் பாரிய அளவால் அதிர்ந்து போயின

By Antoine Lerougetel
31 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

வியாழன்று நேரடி நடவடிக்கை நாளுக்கு மகத்தான எதிர்கொள்ளல் இருந்தது பற்றி பிரான்ஸின் ஆளும் வட்டங்கள் பெரும் நரம்புத் தளர்ச்சியைக் காட்டியவிதத்தில் உள்ளன. குறைந்தது 2.5 மில்லியன் தொழிலாளர்களும் இளைஞர்களும் பெரிதும் அதிகமாகிவிட்ட வேலையின்மை எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்கள் நிலைமை, பொதுப் பணிகள் ஆகியவற்றை பாதிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்.

கிட்டத்தட்ட 2 மில்லியன் பொதுப் பணித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இதைத்தவிர, ரயில்வேக்கள், மின்சாரத் துறை மற்றும் அஞ்சல் தொழிலாளர்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். தனியார் துறைத் தொழிலாளர்கள் பங்கு பெற்றது மொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரின் எண்ணிக்கையை 3 மில்லியனுக்கும் மேலாக் கொண்டு சென்றது. கன்சர்வேடிவ் ஏடான Le Figaro இந்த எண்ணிக்கை "தலையை கிறுகிறுக்க வைத்தது" என்று எழுதியது.

அமியான் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்; எழுதியிருப்பது "இளைஞர்களே எழுச்சியுறுவீர்", "கல்வித்துறை அழிப்பு--மாணவர்கள் சீற்றம்."

உயர்நிலைப்பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஆக்கிரமிப்புக்களும் முற்றுகைகளும் நடந்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்ற தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தங்கள் பிரிவுகளில் வேலைநிறுத்தத்தை தொடரும் திட்டங்கள் இருப்பதாகவும், ஜனவரி 29 எதிர்ப்புக்களை அமைத்த எட்டு தொழிற்சங்கங்கள் அதற்கு ஒரு நாள் வரம்பு என்று நிர்ணயித்தும்கூட அந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறினர். Nantes ல் உள்ள அஞ்சல் பிரித்து அனுப்பு அலுவலகம் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது.

பகிரங்கமாக தன்னுடைய பிற்போக்குத்தன சமூக, பொருளாதாரக் கொள்கைகள் தொடரப்படும் என்று உறுதியளித்தாலும், தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பெருகிவரும் நிலை பற்றியும் அது எப்படி வேலைநிறுத்த இயக்கம் தொடரவும் பரவவும் ஊக்கம் கொடுத்துள்ளது என்பது பற்றியும் அச்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் பற்றிய அங்கத (satirical) ஏடான Le Canard Enhaine, ஜனாதிபதி தன்னுடைய உதவியாளர்களிடம் "நாம் நடந்து கொண்டிருக்கும் தரை உறுதியாக இல்லை. கட்டாயப்படுத்தி சீர்திருத்தங்களை கொண்டுவரும் காலம் போய்விட்டது. தொழிற்சங்கங்களை பார்த்து சிவப்புக் கொடி காட்டும் நேரம் அல்ல இது." எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 30ம் தேதி Le Monde பதிப்பு ஜனாதிபதி தொழிற்சங்கங்களைத்தான் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்று நம்பியிருப்பதாகத் தெளிவாக்கியுள்ளது. வியாழன் மாலை சார்க்கோசி ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "சமூகப் பங்காளிகளை" பெப்ருவரி மாதம் தான் சந்திக்க இருப்பதாக அதில் கூறியுள்ளார் --அதாவது முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரை; "இதையொட்டி 2009ல் சீர்திருத்தங்கள் நடத்த உடன்பாடு காணப்பட முடியும், எந்த வழிவகைகள் கையாளப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒரு கூறுபாடு, பெயரளவிற்கு சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள், தலைவர் Martine Aubry உட்பட எதிர்ப்புக்களுக்கு "ஆதரவாக" கலந்து கொண்டதாகும். PS செல்வாக்கிழந்தபின் அது இப்படித் தோன்றுவது முதல் தடவையாகும்; 1997-2002ல் லியோனல் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தின் முதலாளித்துவ சார்பு கொள்கையினால் அதன் செல்வாக்கு பறிபோயிற்று. அதில் ஒப்ரி முக்கிய உறுப்பினராக இருந்தார். ஒரு நெருக்கடி அரசாங்கம் ஏற்பட்டால் பங்கு கொள்ளத்தயார் என்ற நிலையில் PS நடந்து கொள்ளுகிறது; அப்பொழுதுதான் தொழிலாள வர்க்கம், இளைஞர்களுடைய மக்கள் இயக்கம் திசை திருப்பப்பட முடியும்; இல்லாவிடின் அவை முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தல் கொடுக்க நேரிடலாம்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல பிரெஞ்சு நகரங்கள் பேரூர்களில் இருந்து கொடுக்கும் தகவல்:

பாரிஸ்

ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியமாக பொதுத் துறையில் இருந்து -- அஞ்சல் துறை தொழிலாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூராட்சி ஊழியர்கள் என-- வந்தனர் என்றும் இது அடிமட்ட திரட்டை பிரதிபலித்தது என்றும் பாரிசில் தலையிட்ட Pierre Mabut கூறினார். சோசலிஸ்ட் கட்சி பெரிதும் காணப்பட்டது என்றும் அதே போல் டிசம்பர் மாதம் PS இல் இருந்து பிரிந்த பின் அமைகக்கப்பட்ட செனட்டர் Jean-Luc Melenchon தலைமையிலான இடது கட்சியும் தீவிரமாகக் காணப்பட்டது என்றும் கூறினார்.

ஒரு பயிற்சி நிலையத்தில் இருந்து ஆசிரியர்கள் "ஆசிரியர் பயிற்சியைக் காப்பாற்றுக -- பொதுக் கல்வி முறையை உடைப்பதை எதிர்ப்போம்" என்ற பதாகையை ஏந்தி இருந்தனர்.

பாரிசின் மருத்துவமனை தொழிலாளர்கள், FO (Force Ouvriere-Workers Power) தொழிற்சங்க உறுப்பினர்கள், "கூட்டு தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தம் --மருத்துவமனைகளை தரம் பிரிக்காதே --மருத்துவமனை சீர்திருத்த சட்டங்களான Bachelot சட்டத்தை திரும்பப் பெறுக" என்றிருந்த பதாகைகளை ஏந்தி வந்தனர்.

சில ஆர்ப்பாட்டக்காரர்களை WSWS பேட்டி கண்டது;

இறுதி ஆண்டில் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவியான ஐரிஸ், Champigny-sur-Marne ல் உள்ள Louise Michèle Lycée இல் இருந்து வந்த 50 பேர் குழுவில் ஒருவர் ஆவார். அவர் கூறியது: "இளைஞர்களை அடக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த நான் இங்கு வந்துள்ளேன். அதே போல் ஆவணமற்ற குடியேற்றத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் அரசாங்கக் கொள்கையை எதிர்க்கவும், கல்விக்கு போதிய இருப்புக்கள் அளிக்காததற்கும், சமூக நலன்கள் அழிக்கப்படுவதை எதிர்க்கவும் வந்துள்ளேன்."

"வங்கிகள் பிணை எடுப்பிற்கு 360 பில்லியன் யூரோக்களை சார்க்கோசி கொடுத்திருப்பது தனியார் துறையின் நலனுக்குப் பொதுத் துறையை தியாகம் செய்யும் அவருடைய கொள்கைக்கு உதாரணம் ஆகும். சார்க்கோசிக்கு உண்மை எதிர்ப்பு காட்டப்படவில்லை. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. அவை சமரசத்தைத்தான் நாடுகின்றன. ஆனால் நாமோ முறையே சீர்திருத்தப்பட வேண்டும் என்கிறோம். அரசாங்கத்தை எதிர்ப்பது ஒன்றுதான் இளைஞர்களுக்கு வழியாகும்; அப்பொழுதுதான் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு நிற்பது நிறுத்தப்பட முடியும்."

Paris IV பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரான ஜாக் கூறினார்: "360 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பிற்கு கொடுத்திருப்பது உண்மையான மடத்தனமாகும்; ஒரு அழுகிய சமரசம் ஆகும். பொருளாதார நெருக்கிடியை தீர்க்க அரசாங்கத்திடம் நீண்ட காலத் திட்டம் ஏதும் இல்லை. ஒரு நாள் நடவடிக்கைகள் போதாது. பொதுப் பணித்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே ஒற்றுமை தேவை. தொழிற்சங்கங்கள் தனி நடவடிக்கை எடுப்பது, மக்களை ஏமாற்றும் வழிவகைதான்: இது அரசாங்க நடவடிக்கை போல்தான். என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மக்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்; எந்த அரசியலில் கட்சிக்கும் எதிராக என்று இல்லாமல் அமைப்பு முறைக்கு எதிராகவே மக்கள் உள்ளனர்.

பாரிஸுக்கு அருகே உள்ள Nanterre யில் உள்ள ஒரு இளம் அஞ்சல்துறை ஊழியர் யான் கூறினார்: "30 ஆண்டுகளாக அரசாங்கம் பொது பணிகளைத் தகர்த்து வருகிறது; அதை எதிர்த்துத்தான் நான் இன்று இங்கு உள்ளேன்."

"நான் பணிபுரியும் இடத்தில் உற்பத்தித்திறன் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மொத்தம் இருந்த 300,000 வேலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40,000 வேலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. சார்க்கோசியின் வங்கிகளை மீட்டல், பொருளாதார ஊக்கப் பொதியான 26 பில்லியன் யூரோக்கள் ஆகியவை பெருநிறுவன இலாபங்களுக்குத்தான் செல்லும். தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவத்தின் ஒரு தாக்குதல்தான் இது. சார்க்கோசியின் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் கொள்கைகளை செயல்படுத்துகின்றனர். தொழிற்சங்கங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைமுறையுடன் இணைந்து செயல்படுகின்றன. அரசாங்கத்தின் நேரடி உதவித் தொகை அவற்றிற்குக் கிடைக்கிறது. நமக்குப் பொது வேலைநிறுத்தம் வேண்டும்; தொழிலாளர்கள் அதில் தொடர்பு கொள்ள வேண்டும்; ஆனால் தொழிற்சங்கங்கள் அதற்கு அழைப்பு விடாது. இது தொண்டர்களிடம் இருந்து வரவேண்டும். இந்த நெருக்கடிக்கு தேசியத் தீர்வு ஏதும் கிடையாது."

பாரிசில் இருந்து வந்த அஞ்சல் தொழிலாளர் Frédéric கூறினார்: "பல நாட்கள் நீடிக்கும் ஒரு பொது வேலைநிறுத்தம் நமக்குத் தேவை. சார்ககோசியுடன் போரிட ஒரு வழி அனைத்து இடது கட்சிகளையும் மறுகட்டமைப்பதுதான். எங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால் வெற்றிடத்திற்குத்தான் எப்பொழுதும் வாக்களிக்கிறேன்."

"நிறைய தொழிலாளர்கள் பாரிஸுக்கு வேலையை நாடி வரவேண்டியுள்ளது; ஏனெனில் சுற்றி இருக்கும் ஊர்களில் வேலைகள் இல்லை. தொலைதூரத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து இங்கு வந்து அஞ்சல் துறையில் உள்ளனர். இப்பொழுது அதை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன."

நான்ஸி

நான்ஸியில் இருந்து தகவல் கொடுக்கும் Olivier Laurent இது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் -- போலீஸ் மதிப்பின்படி 25,000, என்று தெரிவித்தார். கையெழுத்து அட்டை ஒன்றில், "சார்க்கோசிதான் பெரும் நாசம் [chienlit] என்று எழுதப்பட்டிருந்தது; இச்சொற்றொடர் 1968 பொது வேலைநிறுத்தம் பற்றி சார்ல்ஸ் டு கோல் பயன்படுத்தியது ஆகும்; UMP - Union for the Misery of the People -- UMP என்பது மக்களுடைய வறிய நிலைக்கான சங்கம்."

தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் கல்வி, நீதித்துறை போன்ற பல்வேறு பொதுப் பணித் துறைகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமை காக்கப்பட வேண்டும் என்று கோரிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

மார்சேய்

போலீஸ் 20,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்ததாக மதிப்பிட்டதாகவும், தொழிற்சங்கங்கள் 300,000 மக்கள் இருந்ததாகவும் தெரிவிப்பாதக Anthony Torres கூறிப்பிட்டார்.

மார்சேயில் தகுதிகாண் கால பள்ளி ஆசிரியராக இருக்கும் Valentin கூறியது: "பொதுப் பணி வேலைகள் பற்றியும் வாங்கும் திறன் பற்றியும் நான் கவலை கொண்டுள்ளேன். வங்கிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் பணத்தை அள்ளிக் கொடுப்பது வெட்ககரமானது."

மார்சேயில் எதிர்ப்புக்களில் வந்த வாசகங்கள்: "IMF, WTO - சர்வதேச நிதிய அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு -- World Bank Terrorists -- உலக வங்கிப் பயங்கரவாதிகள்."

"தொழிற்சங்கங்கள் இருக்கும் நிலை போதும் என்று கூறி தங்கள் நலன்களை பாதுகாக்கின்றன; ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தங்கள் பயனற்றவை."

அமியான்

10.000 மக்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக Antoine Lerougetel தகவல் கொடுத்துள்ளார்; அவர்களில் பெரும்பாலனவர்கள் பொதுப் பணித் துறையில் இருப்பவர்கள். பல வலுவான குழுக்கள் --ஆரம்ப, நடுநிலை ஆசிரியர்கள், மருத்துவ, சமூக ஊழியர்கள் என CC 66 விதிகளை எதிர்ப்பவர்கள் கூடினர்; அவ்விதிகள் ஊதிய ஏற்ற வரம்புகளையும் பணி நிலைமையையும் கடுமையாகக் குறைக்கின்றன. அமியான் பல்கலைக்கழகத்தில் இருந்து நிறைய மாணவப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்; அவர்களில் பலர் துறைக் கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளனர் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்; அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிலை ஆகியவற்றிற்கு எதிராக வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கூடினர்.

அறிவியல் பிரிவு மாணவர்கள் குழு ஒன்று சீர்திருத்ததை எதிர்த்து எழுச்சி வேண்டும் என்றும் இது இரு முறைகளை, ஒன்று உயரடுக்கு மற்றொன்று வறியது எனப் பல்கலைக் கழகங்களை பிரிக்கப் பார்க்கிறது என்று கூறியது.

தான் ஒரு சுரங்கத் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து வருவதாக Baptiste கூறினார்: பல தலைமுறைகள் பாடுபட்டுப் பெற்ற உரிமைகள் அழிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. "தொழிற்சங்கங்கள் முதலாளிகளின் பைகளில் உள்ளன; அவற்றின் நடவடிக்கைகளை முதலாளிகள் வரம்பிற்கு உட்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.

அடிப்படை மாற்றம் ஒன்று தேவை எனத் தான் நம்புவதாகவும் "மிகப் பெரிய நிறுவனங்கள்" வளர்வதை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

28 வயதான யான், ஒரு சமூக-மருத்துவ அரசுசாரா பணி அமைப்பில் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். CC 66 சீர்திருத்தத்தின்படி ஒருவருக்கு வாழ்நாளில் 140,000 யூரோக்கள் பணம் இழக்கப்பட்டு விடும் என்று அவர் கூறினார். சமூகத்தில் மிக நலிந்த மக்களுக்கு பாடுபடும் அவருடைய பணி உரிமைகள், வேலைகள் இழப்பினால் கூடுதலான கஷ்டத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியின் விளைவு 1929 க்கு ஒப்ப இருக்கக்கூடும் என்றும் அவர் அஞ்சினார். "இப்பொழுது போராடத் தொடங்கிவிட்டோம், நிலைமை மாறுவதற்கு சற்று அவகாசம் பிடிக்கும் " என்று அவர் கூறினார்.