World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thirty years since the Soviet invasion of Afghanistan

ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பிற்கு பின் 30 ஆண்டுகள்

Alex Lantier
30 December 2009

Back to screen version

ஜனாதிபதி பாரக் ஒபாமா சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் கூடுதலான அமெரிக்க துருப்புக்களை அனுப்பப் போவதாக ஊடகங்கள் கொடுத்த தகவல்களில், ஒரு வரலாற்று மைல்கல் விந்தையான முறையில் குறிப்பிடப்பட முடியாமல் போயிற்று--அதுதான் டிசம்பர் 27, 1979ல் தொடங்கிய ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஒன்றிய படையெடுப்பின் 30ம் ஆண்டு நிறைவு நாள்.

இந்த நிகழ்ச்சியை சூழ்ந்திருந்தவற்றை ஆராய்தல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதால் உந்துதல் பெறுகிறது என்னும் ஒபாமாவின் கூற்றுக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன், அமெரிக்க கொள்கையின் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய நோக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.

அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் சோவியத் தலையீட்டை பயன்படுத்தி-- சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDPA) ஆட்சிக்கு எதிராக எழுச்சி செய்த முஜாஹைதீன்களை அடக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது--ஒரு தசாப்த காலம் இரைந்த அமைதி நிலையை மாற்ற முற்பட்டது சோவியத் ஒன்றியத்துடன் பதட்டங்களை அதிகரித்தது. இந்த முக்கியமான முடிவு இறுதியில் ஆப்கானிய சமூகத்தை பேரழிவிற்குத் தள்ளும் மோதலைக் கட்டவிழ்த்தது.

பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் சோவியத் படையெடுப்பே ஆப்கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிராக ஒரு புதிய இராணுவ முன்னணியை அமெரிக்கா வேண்டுமென்றே நிறுவ முற்பட்டதற்கு விடையிறுப்பு என்று தெரிய வந்தது. சோவியத் படையெடுப்பிற்கு முன்பே, வாஷிங்டன் முஜாஹைதீனுக்கு இரகசியமாக உதவி வந்தது; அதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தூண்டி சோவியத்தை ஒரு குருதி படிந்த புதைகுழியில் தள்ளுவதாகும். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையில் இறுதி நோக்கம் அத்தகைய கொள்கையைத் தொடர்தல் சோவியத் ஒன்றியத்தை அழித்தல், எண்ணெய் வளம் நிறைந்த மூலோபாயப் பகுதியில் அமெரிக்க அதிகாரத்தை விரிவாக்க முற்படல் என்று இருந்தது.

1996ல் தான் எழுதிய From the Shadows என்ற தன் நினைவுக் குறிப்பில், தற்பொழுது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரியாக இருக்கும் ரோபர்ட் கேட்ஸ் 1970ல் குளிர் காலத்திலும் வசந்த காலத்திலும் அமெரிக்க விவாதங்களைப் பற்றி நினைவு கூர்கிறார். மார்ச் 30, 1979 கூட்டத்தைப் பற்றி அவர் விவரிப்பதாவது: "அரசியல் விவகாரங்களுக்கு அரசுத்துறை துணை செயலர் டேவிட் நியூசம், பாக்கிஸ்தானியர்கள், செளதிகள் மற்றும் பிறருக்கு மூன்றாம் உலகில் சோவியத் செல்வாக்கு பரவுதலைத் தடுத்து நிறுத்துதல் நம் முடிவு என்ற அமெரிக்க கொள்கையை நிரூபிக்க விரும்பினார்...பாதுகாப்புத் துறையின் சார்பில் பேசிய Walt Slocombe ஆப்கானிய எழுச்சி தொடர்வதை அனுமதிப்பதில் பயன் ஏதும் உண்டா, 'அது சோவியத்துக்களை ஒரு வியட்நாம் புதைகுழிக்கு இட்டுச் செல்வது போல் செய்யுமா' என்று கேட்டார்."

ஜூலை 3, 1979ல் ஜனாதிபதி கார்ட்டர் ஆப்கானிய எழுச்சியாளர்களுக்கு பிரச்சாரத்தை தொடங்குவதற்கான நிதியை CIA அளிக்க ஒப்புதல் கொடுத்தார். அந்தக் கோடை காலத்தில் முஜாஹைதீனுக்கு CIA முதல் தளவாடங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

முற்றிலும் இராணுவ, தேசிய கணக்கீடுகளால் வழிநடத்தப்பட்ட கிரெம்ளின் ஸ்டாலினிஸ்ட்டுக்கள் வாஷிங்டன் ஏற்பாடு செய்திருந்த பொறியில் அகப்பட்டனர். PDPA கலாக் பிரிவைச் சேர்ந்த, ஆப்கானிய ஜனாதிபதி ஹபிஜூலா அமின், முஜாஹுதீனுக்கு அமெரிக்க உதவியை நிறுத்த வாஷிங்டனுடன் தனி உடன்பாட்டிற்கு பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் சோவியத் தலைமை கருதியது. காபூலில் அமெரிக்கச் சார்பு ஆட்சி வந்தால், அது ஆப்கானிஸ்தானில் பெர்ஷிங் ஏவுகணைகளை நிறுத்த உதவும், அவை சோவியத் ஒன்றியத்தின் மீது திருப்பப்பட காபூல் அனுமதிக்கக்கூடும் என்றும் மாஸ்கோ அஞ்சியது.

ஆப்கானிய உஸ்பெக்குகள் மற்றும் தாஜிக்குகளை தேசிய பிரிவினைவாத செயல்களுக்கு அமெரிக்கா பயன்படுத்தி சோவியத்தின் மத்திய ஆசியாவை இலக்கு கொள்ளக்கூடும் என்றும் அது அஞ்சியது. கார்ட்டர் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி (இப்பொழுது பாரக் ஒபாமாவின் முக்கிய ஆசான்களில் ஒருவர்) பகிரங்கமாக சோவியத் ஒன்றியம் இனவழியில் பிரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

சோவியத் படைகள் படையெடுத்தபோது, KGB கமாண்டோக்கள் அமினைப் படுகொலை செய்தனர். கன்சர்வேடிவ் PDPA Parcham பிரிவின் தலைவரான பாப்ரக் கார்மலை ஜனாதிபதியாக மாஸ்கோ இருத்தியது. இது ஆளும் வட்டங்களுக்கு PDPA அதன் ஓரளவு நிலப் பங்கீடு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிடும் என்று அடையாளம் காட்டியது. கிரெம்ளினின் மூலோபாயம் ஆப்கானிஸ்தானில் பழங்குடி உயரடுக்குகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மக்கள்மீது அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தி PDPA ஆட்சிக்கு எதிர்ப்பை நசுக்குவது என்று இருந்தது.

சோவியத்-ஆப்கானிய போரில் வாஷிங்டனின் கொள்கை வரையற்ற இழிந்த தன்மையைக் கொண்டிருந்தது. அதையொட்டி பெரும் புனிதப் பேச்சு எதிர்ப்புக்கள் படையெடுப்பிற்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பிரச்சாரங்கள் நடநதன. முஜாஹைதீனுக்கு பில்லியன் கணக்கான மதிப்புடைய ஆயுதங்களை அனுப்பிய நேரத்தில், அமெரிக்கா எதிர்ப்பாளர்களுக்கு உதவி கொடுக்கவில்லை என்று மறுத்தும் கூறியது.

அது ஆப்கானிஸ்தனில் நிறுத்திய மாற்றுப் படையினரை "சுதந்திர வீரர்கள்" என்று வாஷிங்டன் அறிவித்தபோதிலும், முஜாஹைதீனும் அதன் சர்வதேச ஆதரவாளர்களும் சமூகப் பிற்போக்குவாதிகள் ஆவர். செளதி அரேபியா, பாக்கிஸ்தான் போன்ற வலதுசாரி முஸ்லிம் ஆட்சிகளுடைய உதவியுடன் அமெரிக்கா எழுச்சிக்குள்ளே இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத போர்ப் பிரபுக்களுக்கு ஆதரவைக் கொடுத்தது. அவர்கள் போட்டியிட்ட முஜாஹைதீன் பிரிவுகளை அழித்ததை பார்த்து பேசாமல் இருந்தது; போர்ப்பிரபுக்களோ மிக அதிகமாக அபின் விற்பனை மூலம் செலவினங்களுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

முஜாஹைதீன்கள் காபூல் மற்றும் மூலோபாயச் சாலைகள் மீது தாக்குதல்களை நடத்த இயலாது போன நிலையில், CIA சர்வதேச முஸ்லிம் வீரர்களை தேர்ந்தெடுத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்த முற்பட்டது. இளம் செளதி பில்லியனர் ஒசாமா பில் லேடன் இந்த உலகளாவிய தேர்ந்தெடுக்கும் வழிவகையை மேற்பார்வையிட்டார்; பின்னர் இதுதான் அல் குவைதாவின் மையப்பகுதியாயிற்று.

இந்த இணையங்கள் ஒன்றாக முஸ்லிம் சகோதரப் பாசறையில் இருந்து வீரர்களைச் சேர்த்தன; அவர்கள் தீவிர செளதி இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டனர்; முஸ்லிம் உலகின் சக்திகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் உட்பட, மத்திய கிழக்கு தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு எதிராகத் திரட்டப்பட்டது.

உயரும் இழப்புக்களும் சோவியத்தில் மக்கள் அதிருப்தியும் மாஸ்கோவை அதன் படைகளை 1989ல் பின்வாங்கச் செய்தன. இதைத் தொடர்ந்து 1991ல் சோவியத் சரிந்தது; 1992 ல் PDPA ஆட்சி சரிந்தது; ஏனெனில் PDPA அதிகாரிகள் போட்டியிட்ட முஜாஹைதீன் போர்ப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்தனர். ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் மூழ்கியது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கைகளை வகுத்தவர்கள் தங்கள் கொள்கையின் விளைவுகளைப் பற்றி இரக்கமற்ற பொருட்படுத்தா தன்மையைத்தான் பதிவு செய்துள்ளனர். 1998ல் ஆப்கான் சோகத்தைப் பற்றி வருந்துகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு Brzezinski அப்பட்டமாக விடையிறுத்தார்: "உலக வரலாற்றிற்கு இதைவிட முக்கியம் எது? தாலிபனா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில எழுச்சியுற்ற முஸ்லீம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையும் பனிப்போரின் முடிவுமா?'

மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய செல்வாக்கின் வெடிப்புடையை விளைவுகளை உலகம் இன்னமும் எதிர்கொள்கிறது. பெரும் சக்திகளின் போட்டி--ஆப்கானிய உள்நாட்டுப் போரினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது-- ஆப்கானிஸ்தான் மீது மேலாதிக்க செல்வாக்கை நிலைநிறுத்தவதற்கு வந்தது, மூலோபாய முறையில் யூரேசிய நிலப்பகுதியின் மையத்தில் உள்ளது; ஆரம்பத்தில் இது அமெரிக்கா, பாக்கிஸ்தான் மற்றும் செளதி அரேபியா ஆப்கானிஸ்தானத்தை அடிப்படைவாதிகளின்கீழ் ஒன்றுபடுத்தும் முயற்சியை, அதாவது 1990 களின் நடுப்பகுதியில் தாலிபன் போராளிகளின் செல்வாக்கு என்பதை கண்டது. இது 2001 அமெரிக்கப் படையெடுப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது; ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டது; இது "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மோசடி பதாகையின் கீழ் நடத்தப்பட்டது. இதே சக்திகளைத்தான் வாஷிங்டன் 1980, 1990 களில் ஆதரித்திருந்தது.

உறுதியற்ற ஆசியக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறையில், வாஷிங்டன் அதன் 1979 கொள்கையின் நச்சு படர்ந்த அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளுகிறது. ஆப்கானிய நச்சுப் பிரிவு செல்வாக்குடைய போர்ப்பிரபுக்கள், சர்வதேச பயங்கரவாத இணையங்கள், சோவியத் ஒன்றியத்தின் சரிவால் சமூகப் பேரழிவிற்கு உட்பட்டுள்ள முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பொது வறுமை ஆகியவற்றை வாஷிங்டன் எதிர் கொள்கிறது.

தற்போதைய பேரழிவுகள் கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து விளைந்தவை ஆகும். மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் முக்கிய உந்ததுல் நன்கு அறியப்பட வேண்டும்; அப்பொழுதுதான் அப்பகுதி மற்றும் உலகிற்கான தற்போதைய அமெரிக்க விரிவாக்கத்தின் விளைவுகள் பற்றி சரியான மதிப்பீட்டைக் காண முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved