World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The crisis of the Islamic Republic and the tasks of the Iranian working class

இஸ்லாமியக் குடியரசின் நெருக்கடியும் ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்

Keith Jones
29 December 2009

Use this version to print | Send feedback

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஈரானிய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் பல முறை பாதுகாப்பு படைகள் மற்றும் Basij குடிப்படைகள் ஆகியோருடன் தெஹ்ரான், டாப்ரிஸ் இன்னும் பல ஈரானிய நகரங்களில் மோதலில் ஈடுபட்டார்கள்.

வெளிநாட்டு மற்றும் எதிர்க்கட்சி செய்தி ஊடகத்தின் மீது உள்ள அரசாங்கத்தின் தடைகளால் தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன; ஆனால் மோதல்களை ஒட்டி இறப்புக்கள் குறைந்தது 8 அல்லது ஆகக்கூடியது 15 என்றளவில் இருந்திருக்கிறது என்றும் ஏராளமானவர்கள் காயமுற்றும் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் டஜன் கணக்கான போலீஸ் அதிகாரிகள், தெஹ்ரான் போலீஸ் தலைவர் உட்பட காயமுற்றுள்ளனர் என்றும் "சிலர் கொல்லப்பட்டனர்" என்றும் கூறுகின்றனர்.

இறந்தபோன ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு முன்னாள் இஸ்லாமியக் குடியரசின் பிரதம மந்திரியும் கடந்த ஜூன் ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டிற்கு முக்கிய போட்டி வேட்பாளருமான மீர் ஹொசைன் மெளசவியின் அண்ணன் மகனும் அடங்குவார். அலி ஹபிபி மெளசவியை ஒரு அரசாங்கத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் வைத்து முதுகில் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் இந்த இறப்பை இலக்கு வைக்கப்பட்ட படுகொலை என்று கூறுகின்றனர்.

ஞாயிறன்று 300 எதிர்ப்பாளர்களை கைது செய்ததாக போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர். நேற்று பாதுகாப்புப் படைகள் மெளசவி மற்றும் ஈரானின் ஜனாதிபதியாக 1997ல் இருந்து 2005 வரை இருந்த மகம்மத் கடாமி ஆகியோரின் உயர்மட்ட ஆலோசகர்களை கைது செய்தனர். தற்பொழுது மெஹ்தி பசர்கானின் ஈரானிய சுதந்திர இயக்கத்தின் தலைவர் எப்ராஹிம் யாஸ்டியையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

ஜூன் 12ம் நடந்த பூசலுக்குட்பட்டுவிட்ட ஜனாதிபதி தேர்தல் நடந்துமுடிந்து ஆறு மாதங்களுக்கு பின்னரும், இஸ்லாமிய பாதுகாப்பாளர் அயதொல்லா கொமேனீ மற்றும் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட்டின் தலைமையில் உள்ள அரசாங்கம் அதன் சட்டரீதியான இருப்பிற்கு பகிரங்கமாக வந்துள்ள சவாலை அடக்குவதில் தோல்வியுற்றுள்ளனர் என்பது வெளிப்படை.

போலீஸ் தலைவர் இஸ்மெயில் அஹ்மதி-மொக்கடம் உட்பட அரசாங்க அதிகாரிகள் மெளசவியின் "பசுமைப் புரட்சி" ஆதரவாளர்கள் ஞாயிறு நடத்த இருக்கும் அஸ்ஹுரா நினைவு நிகழ்ச்சிகளையும் ஷிய்ட் புனித நாளாக நீண்ட காலம் அரசியல் எதிர்ப்புக்களுடன் தொடர்பு கொண்டதையும் அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளாக நடத்துவதற்கான முயற்சிகள் தகர்க்கப்படும் என்று கூறினார்கள்.

ஆயினும்கூட அரசாங்கக் கோட்டைகள் என்று கருதப்பட்ட ஈரானின் மத்திய பகுதியிலுள்ள Esfahan, Najafabad நகரங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏன் நூறாயிரக்கணக்கானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். பல எதிர்ப்பாளர்கள் பச்சை நிற உடை அணிந்து, இஸ்லாமியக் குடியரசிற்கு சீர்திருத்தம் வேண்டும் என்னும் மெளசவியின் அழைப்புடன் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டாலும், பலர் நேரடியாக அரசாங்கத்திற்கு "சர்வாதிகாரிக்கு மரணம்!" என்று அறைகூவியதுடன் பல கோஷங்களை எழுப்பினார்கள். நியூயோர்க் டைம்ஸில் வந்த அறிக்கை ஒன்று எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கள் தெற்கு தெஹ்ரானில் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் இருந்தும் பங்கு பெறுபவர்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளது.

பசுமைப் புரட்சிக்கு ஆதரவு திரட்டுபவர்கள்--மெளசவி, கடாமி, பில்லியனர் முதலாளி, முன்னாள் ஜனதிபதி மற்றும் தற்போதைய சட்டமன்ற வல்லுனர் மற்றும் Expediency Discernment Coucil தலைவர் ஹஷேமி ரப்சஞ்சனி--அனைவரும் இஸ்லாமிய குடியரசின் தூண்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது பகுதியான எழுச்சித் தன்மையை கொண்டுள்ள ஒரு இயக்கத்தின் பெயரளவுத் தலைமையில் தங்களை காண்கின்றனர்.

ஈரானின் முதலாளித்துவ-மத அமைப்புமுறையானது உலகப் பொருளாதார நெருக்கடி, இஸ்லாமிய குடியரசில் பெருகிய சமூக முரண்பாடுகள் மற்றும் இடைவிடா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் ஆகியவற்றின் பாதிப்பினால் சிதைவுற்றுள்ளது.

Economist கருத்தின்படி ஈரானிய பொருளாதாரம் கடந்த ஆண்டு 0.5 சதவிகிதம்தான் வளர்ந்தது; எண்ணெயில் இருந்து வந்த வருமானம் 2008ல் 82 பில்லியன் டாலரில் இருந்து 60 பில்லியன் டாலருக்கும் குறைவாக சரிந்தது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் பணவீக்கத்தை 15 சதவிகிதம் என்றும் வேலையின்மை விகிதத்தை 11 என்றும் காட்டுகின்றன.

2005ல் அஹ்மதிநெஜாட் ஜனாதிபதி பதவியை புதிய தாராளவாதக் கொள்கைகள் என்று அவருக்கு முன்பு பதவியில் இருந்த கடாமி, ரப்சஞ்சனி ஆகியோர் தொடர்ந்திருந்ததை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு வெற்றி பெற்றார். உண்மையில் அவரும் தனியார் மயமாக்கலை தீவிரமாக்கி, அரசாங்க சொத்துக்கள் 63 பில்லியன் டாலரை விற்றார்; ரப்சஞ்சனி மற்றும் பிற சந்தை முதலாளித்துவத்தினருக்கு அதிர்ச்சிதரும் விதத்தில் திரட்டிய நிதியின் பெரும் பங்கு அவர்களுக்கு செல்லாமல் இஸ்லாமிய புரட்சிப் பாதுக்காப்பு பிரிவினருக்கு நெருக்கமாக உள்ள வியாபாரிகளுக்கு சென்றடைந்தது.

கீழிருந்து வரும் அழுத்தத்தை மாற்றும் விதத்தில், அஹ்மதிநெஜாட் 2005-08ல் எண்ணெய் விலை ஏற்றத்தால் அதிகரித்த அரசாங்க வருமானங்களை சமூக நலச் செலவுகளை அதிகம் செய்ய பயன்படுத்தினார். இந்தக் கொள்கை மிகக் கடுமையான முறையில் ஈரானிய முதலாளித்துவத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளால் எதிர்க்கப்பட்டது; பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை ஒட்டி அஹ்மதிநெஜாட் தீவிரப் பொருளாதார மறுகட்டமைப்பிற்கான திட்டத்தை அறிவிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார்; அதன்படி உணவு, எரிபொருள், நீர், போக்குவரத்து இன்னும் பல உதவித் தொகைகள் படிப்படியாக அகற்றப்படும். இது ஈரானிய உயரடுக்கில் அவருக்கு உள்ள குறைகூறுபவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை; அவர்கள் அவரை சமுக நலத்தை நம்புவர்களை அதிகரிப்பதாகக் கண்டித்துள்ளனர்.

பேர்சிய வளைகுடாப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடா விரோதப் போக்கு இருக்கும் சூழ்நிலையில் ஈரானிய முதலாளித்துவத்தின் ஈரான் பெரும் சக்தியாகும் குறிக்கோளைத் தொடர்வதிலும் தீவிர கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன.

கடந்த இரு தசாப்தங்களாக வாஷிங்டன் பல முறையும் இரு நாடுகளுக்கும் இடையே உறவு சீராக்கப்பட வேண்டும் என்னும் ஈரானிய விருப்பங்களை, "ஒரு பெரும் பேரம்" ஆகியவற்றை உதறித்தள்ளியுள்ளது. மாறாக கிளின்டன், ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் இப்பொழுது ஒபாமாவின் கீழ், அது பொருளாதாரத் தடைகள், "ஆட்சி மாற்றத்திற்கு" ஊக்கம் மற்றும் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் ஆகியவற்றின் மூலம் தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இன்னும் அமெரிக்கா ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் போரை நடத்திக் கொண்டு இருப்பதுடன் ஜனவரி முதல் தேதி வந்தால், மற்ற சக்திகளையும் சேர்த்துக் கொண்டு தெஹ்ரானுக்கு எதிராக புதிய "முடக்கும்" பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவருவதாகவும் அச்சுறுத்தியுள்ளது.

கடந்த வசந்த காலத்தில் சற்று பரபரப்புடன் ஜனாதிபதி ஒபாமா தெஹ்ரானுடன் "பேச்சு வார்த்தைகள்" நடத்த விருப்பம் என்று அறிவித்தார். ஆனால் அவரும் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டனும் விளக்கியபடி இது அமெரிக்க கோரிக்கையான தெஹ்ரான் அதன் அணு எரிபொருள் திட்டத்தை கைவிட வேண்டும், பொதுவாக மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என்று போயிற்று. மாறாக ஈரானிய உயரடுக்கினுள் இருக்கும் பிளவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் அது; பொருளாதாரத் தடைகளை அதிகப்படுத்துவதற்கு தூதரக முறையில் இணக்கத்தைப் பெறும் வகைதான்.

எட்டு மாதங்களுக்கு பின்னர் ஒபாமா நிர்வாகம் புஷ், ஷெனி கூறியதற்கு அப்பாலும் சென்று, ஈரானுக்கு உலகம் முழுவதும் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதற்குத் தடை வேண்டும் என்று வலியுறுத்துகிறது; தெஹ்ரான் இறக்குமதி செய்யும் எரிபொருட்களை நம்பியிருக்கும் நிலையில் அதன் பொருளாதாரம் இதையொட்டி பெரும் தாக்குதலுக்கு உட்படும்.

அதே நேரத்தில் இது "பசுமைப் புரட்சிக்கும்" ஊக்கம் கொடுக்கிறது; அதன் தலைவர்கள்--குறிப்பாக ரப்சஞ்சனி மற்றும் கடாமி--நீண்ட காலமாக வாஷிங்டனுடன் சமாதானம் வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தங்களை அடையாளம் காண்பித்துள்ளனர்.

ஈரானிய தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியை பயன்படுத்தி இஸ்லாமிய குடியரசிற்கு தன்னுடைய சொந்த சவாலுக்கு அறைகூவ வேண்டும். அத்தகைய சவாலுக்கு முன்னிபந்தனை, அனைத்து முதலாளித்துவ பிரிவுகளுக்கும் எதிரான, ஒரு சுயாதீன நிலைப்பாட்டை கொள்வது ஆகும்.

மேலைத்தேய செய்தி ஊடகமானது ஒபாமாவுடன் சமாதானம், ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் என்பதற்கு ஆதரவு கொடுக்கும் ஒருமித்த மத்தியதர வர்க்க அமைப்புக்களின் ஆதரவுடன் ஈரானின் முதலாளித்துவ எதிர்ப்பு ஒரு "ஜனநாயகப்படுத்தும்" இயக்கம் என்று அறிவித்துள்ளது.

ஆனால் ஈரானிய மக்களின் அடிப்படைத் தேவைகள்--ஏகாதிபத்திய அடக்குமுறையில் இருந்து விடுதலை, ஜனநாயக உரிமைகள், வேலைகள், பொதுப் பணிகள், சமூக சமத்துவம் ஆகியவைகள்--தேசிய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவுடனும் சேர்வதின் மூலம் அடையப்பட முடியாது; அதுவும் உறுதியாக "பசுமை புரட்சியின்" தலைவர்களுடன் சேர்வதின் மூலம்; அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பந்தம் காண்பதில் ஆர்வம் காட்டுவதுடன் இன்னும் அதிகமான தீவிர தொழிலாள வர்க்க சமூக பொருளாதார கொள்கைகள் தேவை என்பதற்குத்தான் அழுத்தம் கொடுக்கின்றனர்.

தற்கால ஈரானின் பெரும் சோகம் 1978-79 ல் நிகழ்ந்த மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி முதலாளித்துவத்தால் கடத்தப்பட்டு, ஷியா மக்களைத் திருப்தி செய்யும் முறை மற்றும் ஈரானிய தேசியவாதம் என்பவற்றுடன் மத குருமார்கள் இணைந்த விதத்தில் திசை மாறியதுதான்.

ஈரானின் ஸ்ராலினிச கட்சியான துடே (Tudeh) செயல்படுத்திவந்த குற்றம் சார்ந்த கொள்கைகள்தான் இவ்வாறு போவதற்குக் காரணம் ஆயிற்று. அது ஈரான் ஒரு ஒடுக்கப்பட்ட நாடு, முதலாளித்துவ வளர்ச்சி காலம் கடந்து வந்துள்ளது, ஈரானிய புரட்சி "முதலாளித்துவ-ஜனநாயக கட்டத்தை" கடந்து செல்ல முடியாது என்று கூறி தொழிலாள வர்க்கத்தை அயோதுல்லா கொமேனியை சுற்றியிருந்த சக்திகளுக்கு தாழ்த்தி வைத்தது.

முப்பது ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த முக்கிய அனுபவத்தின் படிப்பினைகள் ஈரானிய தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்; அவைதான் ஒரு சர்வதேச, சோசலிச திட்டத்தின் அடிப்படையில் இஸ்லாமியக் குடியரசிற்கு ஒரு புரட்சிகர சவாலுக்கு வழிகாட்ட உதவும்.