World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Aid report details social devastation in Gaza

காசாவில் சமூகப் பேரழிவு பற்றி உதவி நிறுவனங்களின் அறிக்கை விவரிக்கின்றன

By Jean Shaoul
29 December 2009

Use this version to print | Send feedback

காசாவை சட்ட விரோதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டிருப்பது இரண்டாம் உலக போர்க் காலத்தில் லெனின்கிராட், ஸ்ராலின்கிராட் மற்றும் வார்சோ ஒதுக்குப்புற பகுதிகள் முற்றுகைக்கு உட்பட்டதை விட நீடித்து இருப்பதுடன் இந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்கு முடிவு ஏதும் வருவதாகவும் தெரியவில்லை.

16 உதவி நிறுவனங்கள், "தோல்வியடையும் காசா: மறு கட்டமைப்பு இல்லை, மீட்பு இல்லை, காரணங்கள் இல்லை," என்ற தலைப்பில் கொடுத்துள்ள அறிக்கை காசாவில் தீவிரமாகியுள்ள மனிதாபிமானமற்ற நெருக்கடியைப்பற்றி உருக வைக்கும் சித்திரத்தை அளிக்கிறது. இரண்டரை ஆண்டு காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் முற்றுகை, மற்றும் 2008-09ல் அது நடத்திய 22 நாட்கள் இராணுவத் தாக்குதல் ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கட்டாயப்படுத்தி Mandate Palestine ல் இருந்து 1948ல் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்த 60 ஆண்டுகள் அடக்குமுறைக்கும் மேலாக, செப்டம்பர் 2000ல் இரண்டாம் இன்டிபடாவிற்குப் பின்னர் மூடல்கள், தடைகள் எனச் சுமத்தப்பட்டதை தொடர்ந்து, காசாவில் 1.5 மில்லியன் மக்களுக்கு நிலைமை பேரழிவை விட குறைந்ததாக இல்லை. அடிப்படை உணவுப் பொருட்களும் மருந்துகளும்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன; இவற்றின் தொகுப்பு கூட முன்பு இருந்ததில் மூன்றில் ஒரு பங்குதான் உள்ளது. இஸ்ரேல் வாடிக்கையாக 35 வகைப் பொருட்களைத்தான் அனுமதிக்கிறது; முற்றுகைக்கு முன் 4,000 விதமான பொருட்கள் இறக்குமதியாயின. அனுமதிக்கப்பட்ட பொருட்கள் எவை என்று பட்டியல் வெளியிடப்படாத நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ளது எப்பொழுதும் மாறுகிறது. அதிக பொருட்களோ, மக்களோ காசாவை விட்டு நீங்கவும் அனுமதி இல்லை. இஸ்ரேலின் நடவடிக்கைகள் காசாவின் ஏற்றுமதிகள், அதன் பொருளாதாரம் ஆகியவற்றைச் சிதைத்துவிட்டன.

இந்த குண்டுவீச்சு 139 மில்லியன் டாலர் மதிப்புடைய தனியார் வணிகங்கள் 700க்கும் மேலானவற்றை தீவிரமாக சேதப்படுத்தின. முற்றுகையைத் தொடர்ந்து 98 சதவிகித தொழில்துறை நடவடிக்கைகள் சரிவை அடுத்து வந்த இது உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதத்தை 40 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்தி, இன்னும் நிறைய குடும்பங்களை வறுமையில் ஆழ்த்தியது. மே 2008ல் கூட 70 சதவிகித குடும்பங்கள் நாள் ஒன்றிற்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர்.

இஸ்ரேலின் டாங்குகளும் கவச வாகனங்களும் காசாவின் விவசாயம்செய்யப்பட்ட நிலத்தின் 17 சதவிகிதத்தை அழித்தன. பழத்தோட்டங்கள், வயல்கள், பசுமைப் பகுதிகள், பாசன வசதிகள் ஆகியவை அழிக்கப்பட்டன. காசாவிற்கு நாள் ஒன்றிற்கு 400,000 டன்கள் உற்பத்தி செய்யும் திறன் இருந்தது; அதில் மூன்றில் ஒரு பங்கு தோட்ட விவசாயத்தின் மூலம் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, தன் உணவுத் தேவைகளில் கால் பகுதிக்கும் கொடுக்க முடிந்தது. இப்பொழுது இந்த இரு வகை வருமானங்களும் அழிந்துவிட்டன; காசா இஸ்ரேலிடம் உணவு அளிப்புகளுக்கு கூடுதலாக நம்பியிருக்கும் நிலை வந்துள்ளது. 2007ல் முற்றுகை தொடங்கு முன் இஸ்ரேலில் இருந்து இறக்குமதிகள் 17 சதவிகிதம் என்று இருந்தன; இப்பொழுது அது 74 சதவிகிதம் என்று ஆகியுள்ளது.

கடந்த மே மாதம், பரந்த அளவில் கூறப்படாத ஒரு செயலில், இஸ்ரேல் 46 சதவிகித விளை நிலத்தை உற்பத்தி செய்யமுடியாமல் செய்தது. இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு "இடைப் பகுதியை" காசா எல்லைக்குள் ஏற்படுத்தப்போவதாக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தன; அதாவது 300 மீட்டர்கள் எவரும் செல்ல முடியாத பகுதி என்று ஆக்கப்பட்டன. உண்மையில் இந்த இடைப்பகுதி காசாவிற்குள் ஒன்றில் இருந்து இரு கிலோமீட்டர்கள் வரை உள்ளது. இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் கிராமங்கள் மீது காசாவில் இருந்து செலுத்தப்பட்ட ராக்கெட்டுக்கள் ஏவுதல் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டன என்றும் இதுதான் நடந்துசெயல் என்று உள்ளது. இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை காசாவின் கால் பகுதி முதல் மூன்றில் ஒரு பகுதி விவசாய நிலத்தை செயற்றுச் செய்துவிட்டதுடன், பல விவசாயிகள் தங்கள் பிழைக்கும் வழிவகையையும் இழந்துவிட்டனர்.

புல்டோசர்கள், கட்டிடம் கட்டும் பொருட்கள், தேவையான கருவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது; இதையொட்டி அமெரிக்க டாலர் 660 மில்லியனுக்கும் 892 மில்லியனுக்கும் அல்லது கூடுதல் சேதமுற்ற பகுதிகளை சீர்படுத்தவோ, தரைமட்டமான பொருட்களை அகற்றவோ இயலாமல் உள்ளது. இதைச் சுத்தப்படுத்துவதற்கே 200,000 பணி நாட்கள் தேவைப்படும். சிமென்ட், கருங்கல், மரம், குழாய்கள், கண்ணாடி, எஃகு, அலுமினியம், தார் மற்றும் கட்டிடத் தொழிலுக்கு தேவையான உபரி பாகங்கள், பொருட்களை சுமக்கும் பெரிய வாகனங்கள் என்று பலவும் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு காசாவிற்குள் 41 டிரக் பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

வரும் பொருட்களும், எகிப்து மற்றும் காசாவின் தெற்கு எல்லையில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மூலம்தான் கடத்தப்பட்டு வருகின்றன. அதுவும் பண, மனித நடவடிக்கைகளில் நினைத்துப் பார்க்க முடியாத செலவிற்கு. இதையொட்டி நிலத்தடிப் பாதைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் பகுதி குற்றம் சார்ந்த கும்பல், விலைகளை வானளாவ உயர்த்தியுள்ளன.

தங்கள் வாழ்வை மறு கட்டமைக்க இஸ்ரேலினால் தடுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஓராண்டிற்கு முன் இருந்ததை விட நிலைமை மோசமாகியுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 15,000 வீடுகளை அழித்தது, 100,000 பாலஸ்தீனியர்களை இடம் பெயர வைத்தது. ஜூலை 2009 வரை, 20,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்; உறவினர்களுடன் வாழ்கின்றனர்; சிலர் கூடாரங்களில் வாழ்கின்றனர். பாலஸ்தீனிய அகதிகளுக்காக ஐ.நா. உதவி அமைப்பு தொழிலாளர்களுக்கு களிமண், செங்கல் ஆகியவற்றில் இருந்து குடிசை கட்ட கற்பிக்கிறது. இது 700,000 பாலஸ்தீனியர்களுக்கும் மேலாக இடம் பெயர வைத்த 1948 போருக்குப் பின் பல தசாப்தங்கள் இருந்த நிலைமைக்கு மக்களை மீண்டும் தள்ளியுள்ளது.

காசாவில் மின்சார விநியோகம் இஸ்ரேல் பரந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது; இது ஏற்கனவே சரியும் நிலையில் இருந்தது. டிரான்ஸ்போர்மர்கள், பைலோன்கள், வயர்கேபிள்கள் மற்றும் கிடங்குகள் குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட்டன. முக்கிய மின்சார நிலையம் 10 நாட்கள் மூடப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டது; காரணம் இஸ்ரேலில் இருந்து வரும் டீசல் நிறுத்தப்பட்டதுதான்; இதைத்தவிர இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றில் இருந்து மின்சாரம் வரும் வயர்கேபிள்களும் பெரும்பாலும் தகர்க்கப்பட்டன--இது விநியோகத்தை 75 சதவிகிதம் என்று மகத்தான குறைப்பை ஏற்படுத்தியது. காசாவின் மக்களில் பாதிக்கு மேலானவர்களுக்கு, ஒரு மில்லியன் மக்களுக்கு தாக்குதல் காலத்தில் மின்சாரம் கிடையாது; அரை மில்லியன் மக்களுக்கு வீடுகளில் நீர் கிடையாது; கழிவு நீர் தெருக்களில் ஓடியது.

ஒராண்டிற்கு பின்னர் மக்களில் 10 சதவிகிதத்தினருக்கு மின்வசதி கிடையாது; 90 சதவிகிதத்தினருக்கு நாள் ஒன்றிற்கு நான்கு முதல் எட்டு மணி நேரம் மின்சாரம் கிடையாது. இன்றும்கூட, கழிவு நீர் அப்புறப்படுத்துவதற்கு போதிய மின்சாரம் இல்லை. இஸ்ரேலின் முற்றுகை அதிகம் தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது; டீசல் அளிப்பு வாரத்திற்கு 2.2 மில்லியன் லிட்டர்கள்தான் என்று உள்ளது; தேவையோ 3.5 லிட்டர்கள் ஆகும். மேலும் இடைவிடாமல் மின்சார ஆலைகளை மூடுவதும் திறப்பதும், தொடர்ந்து ஆலை ஒட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது உண்மையில் ஆலையை பழுதிற்கு உட்படுத்திவிடுகிறது.

காசாவின் மீன்பிடிப்பவர்கள் கரையில் இருந்து மூன்று கடல் மைல்களுக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை; இது அவர்கள் மீன் பிடிக்கும் அளவைக் குறைக்கிறது; இதையொட்டி வறுமையும் ஊட்டமின்மையும் வந்துள்ளன இதைத்தவிர 80 மில்லியன் லீட்டர் கழிவு நீர், ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கடலில் ஒவ்வொரு நாளும் கலக்கப்படுவது நீரை மாசுபடுத்தி மீன்களை நச்சுப்படுத்துகிறது.

இஸ்ரேலின் குண்டுகள் நீர் விநியோக வலையமைப்பையும் அழித்தன. முக்கிய கொங்க்ரீட் நீர் தொட்டிகள் மற்றும் 30 கிலோமீட்டர் நீள நீர்க் குழாய் இணையங்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டன, அல்லது அழிக்கப்பட்டுவிட்டன; இப்பொழுது 21 கி.மீ. நீளக் குழாய்த் திட்டம் பழுது பார்க்கப்பட்டுள்ளது, 11 நீர்க்கிணறுகள் மற்றும் 6000 நீர்த்தோட்டிகள் மற்றும் 840 வீட்டு இணைப்புக்கள் சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கட்டிடங்கள் மறு கட்டமைக்கப்படாததால், மின்சார விநியோகமும் தொடர்ந்து இல்லாததால், 8,000 மக்கள் இன்னமும் குழாய்த்தண்ணீர் பெறும் வாய்ப்பு இல்லாமல் உள்ளனர்; WHO தரங்களை 90-95 சதவிகிதம் கிடைக்கும் தண்ணீர் எட்டுவதில்லை; அதிக நைட்ரேட் தரம் ஆயிரக்கணக்கான புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை விஷக் காய்ச்சலுக்கு உட்படுத்தும். நீரின் மட்டமான தன்மை பெருகிய சுகாதரப் பிரச்சினைகளுக்கு வகை செய்துள்ளது. எளிதில் தடுக்கப்படக்கூடிய நோயான வயிற்றுப் போக்கு காசாவில் இளம் இறப்புக்களில் 12 சதவிகிதத்திற்கு காரணமாக உள்ளது.

குழாய்களில் நீர் அழுத்தம் இல்லை என்றால் சுற்றி இருக்கும் நிலத்தில் இருந்து மாசுநீர் குழாய்களில் நுழைந்து நீர் அளிப்பு வரும்போது நுகர்வோரை அடையும் என்று பொருள் ஆகும் உதவி நிறுவனங்கள் நீர்நிலைகளில் இருந்து நீர்க் குறைப்பு அதிக வேகத்தில், இயல்பான விகிதத்தைவிட செல்லுகிறது என்பதால் கடல் நீர் உட்புகும், உப்புநீர் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர். நூறாயிரக்கணக்கான மக்கள் டிரக்குகளில் வரும் போத்தல் நீரை நம்பும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர்; ஆனால் அதன் விலை அதிகம்; பல்லாயிரக்கணக்கான மக்கள் உதவி நிறுவனங்கள் கொடுக்கும் நல்ல நீரை நம்பியுள்ளனர்.

காசாவின் சுகாதார நிலையங்களில் பாதிக்கும் மேலானவை அழிக்கப்பட்டு, சேதமுற்றுள்ள நிலையில் சுகாதாரம் இன்னும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அதன் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அம்புலன்ஸ்கள் ஆகியவை அதில் அடங்கும். சீர்படுத்தப்பட்டுள்ளவற்றில்கூட, மின்சாரம் அவ்வொப்பொழுதுதான் இருக்கும் என்ற நிலை பொறுத்துக் கொள்ள முடியாத தடைகளை சுமத்துகிறது; இதையொட்டி காசாவிற்கு வெளியே மருத்து வசதி தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கையில் சிறுநீர் கழித்தல், தீய கனவுகள் ஆகியவை குழந்தைகளிடையே சர்வ சாதாரணமாக உள்ளன.

தீவிர நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகள் கூட மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலம், இஸ்ரேல், ஜோர்டான் ஆகியவற்றிற்கு செல்லும் உரிமையை இஸ்ரேல் தொடர்ந்து மறுக்கிறது. இராணுவத் தாக்குதல் நடந்த முதல் ஆறு மாதங்களில், காசாவிற்கு வெளியே மருத்துவ உதவிக்காக விண்ணப்பித்தவர்களில் 51 சதவிகிதத்தினருக்குத்தான் Erez Crossings வழியே வெளியேறும் அனுமதி கிடைத்தது. வேண்டுகோள்களில் மூன்றில் ஒரு பகுதி கால தாமதத்திற்கு உட்பட்டது; இவற்றுள் 73 சதவிகிதம் 7 நாட்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டது. பலரும் காத்திருந்தே இறந்து விட்டனர்.

முற்றுகையும் இராணுவத் தாக்குதலும் 18 பள்ளிகளை அழித்து குறைந்தது 288 ஐ சேதப்படுத்தின. இதன் விளைவாக பொதுப் பள்ளிகளில் 82 சதவிகிதமும் ஐ.நா. பள்ளிகளில் 88 சதவிகிதமும் ஒரு நாளைக்கு இரு ஷிப்டுக்களை கொண்டுள்ளன. சில பள்ளிகளில் மூன்று ஷிப்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 440,000 மாணவர்களுக்கு 546 பள்ளிகள்தான் உள்ளன; 105 புதிய பள்ளிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

காசா மக்களின் பாதிப்பேர் 18 வயதிற்கும் குறைவு என்ற நிலையில், குழந்தைகளின் கல்வியின்மீதான பாதிப்பு பேரழிவுத் தன்மை உடையதாகும். 2008-09 பள்ளி ஆண்டில், 14,000 குழந்தைகள் (6.76 சதவிகிதம்) அனைத்து UNRWA பள்ளிகளிலும் பொதுவான தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தனர். ஆயினும் பாலஸ்தீனியர்கள், ஒருகாலத்தில் மத்திய கிழக்கிலேயே அதிகக் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்திருந்தனர். ஒரு விரிவான சுகாதாரம் பற்றி மதிப்பீட்டில் தோல்வியுற்றவர்களில் பலர் ஊட்டச்சத்து இன்மை, இரத்தச்சோகை ஆகியவற்றால் கஷ்டப்பட்டு வருவதாக காட்டுகிறது.