World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US steps up drone attacks, assassinations in AfPak "surge"

அமெரிக்கா டிரோன் தாக்குதல்களை முடுக்கிவிடுகிறது, ஆப்-பாக்கில் "பேரலை" படுகொலைகள்

By Bill Van Auken
28 December 2009

Back to screen version

கடந்த வார இறுதியில் பாக்கிஸ்தானில் அமெரிக்க பிரிடேட்டர் டிரோன்கள் ஒரு கிராமத்தை தாக்கி குறைந்தது 13 பேர் இறந்தனர். ஆப்கானிய எல்லைப் பகுதியில் அமெரிக்க சிறப்புப் படைகளின் கொலைப் பிரிவினால் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் இது நடந்துள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கு ஒப்பான இந்த போர் வடிவங்கள் இம்மாதத் தொடக்கத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்ட "விரிவாக்கத்தின்" முதல் கட்டங்களில் மிக வெளிப்படையான கூறுபாடுகளாகும்; அவர் ஆப்கானிஸ்தானிற்குள் குறைந்தது இன்னும் 30,000 அமெரிக்கப் படைகளை அனுப்புகிறார்.

ஒரு கறைபடிந்த காலனித்துவ போர், ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பை அடக்கும் வகையைக் கொண்ட விதத்தில் இந்த வழிவகைகள் மத்திய ஆசியாவின் எரிசக்தி ஆதாரங்கள் நிறைந்த, மூலோபாய ரீதியாக முக்கியம் வாய்ந்த பகுதியில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்தை கொண்டுள்ளன.

லாகூரை தளமாகக் கொண்ட The Nation, பாக்கிஸ்தானிய அதிகாரிகளை மேற்கோளிட்டு, ஞாயிறன்று வடக்கு வஜீரிஸ்தானில் ஒரு கிராமத்தில் நடந்த டிரோன் தாக்குதலில் உயிரழப்பு 13க்கு உயர்ந்தது எனத் தெரிவிக்கிறது. வடக்கு வஜீரிஸ்தானின் முக்கிய நகரமான மிரன்ஷாவில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மைல்கள் உள்ள சைட்கி கிராமத்தில் ஒரு வளாகத்தை இரு ஏவுகணைகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

டிரோன்கள் அப்பகுதியில் வானில் தொடர்ந்து சுற்றுகின்றன; அதே நேரத்தில் ஒரு அமெரிக்க B-52 குண்டுவீசும் விமானமும் வானில் பறந்து உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியது என பாக்கிஸ்தானிய செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 17ல் இருந்து வடக்கு வஜீரிஸ்தானில் மூன்றாவது அத்தகைய தாக்குதல் என்பதை இந்த ஏவுகணைத் தாக்குதல் குறிக்கிறது. இப்பகுதி பாக்கிஸ்தானின் வடமேற்கு பழங்குடிப் பகுதி ஆகும்; இது ஆப்கானிய எழுச்சியாளர்களால், பாக்கிஸ்தானில் உள்ள சக பஷ்டூன் பழங்குடி மக்களின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு சக்திகள் மீது தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அழிவைக் கொடுக்கும் நடவடிக்கை அமெரிக்க CIA யினால் இயக்கப்படுகிறது; இதற்கு பாக்கிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாநிலத்தில் உள்ள இரகசிய விமானத்தளம் பயன்படுத்தப்படுகிறது; CIA முகவர்களோ வெர்ஜினியா லாங்கிலியில் வீடியோ திரைக் காட்சிகளுக்கு முன்பு அமர்ந்து ஏவுகணைகளை இலக்குகளை நோக்கி இயக்குகின்றனர். பென்டகனும் தன்னுடைய டிரோன் தாக்குதல்களை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

ஒபாமா நிர்வாகம் டிரோன் தாக்குதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது; புஷ் நிர்வாகம் அதன் பதவிக்கால கடைசி ஆண்டில் நடத்திய தாக்குதல்களைப் போல் இருமடங்காக ஒபாமா நிர்வாகம் கடந்த ஆண்டு செய்துள்ளது. CIA செயலின் இரகசியத் தன்மை பாக்கிஸ்தானிய கிராமங்களில் ஹெல்பைர் ஏவுகணைகள் தாக்குதல் மூலம் குடிமக்கள் உயிர்கள் கொடூரமாக இழக்கப்படுவதை மறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய தாக்குதல்கள் அனைத்திலுமே அமெரிக்கச் செய்தி ஊடகம் பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோளிட்டு சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் அனைவரும் "போராளிகள்" என்றும், யார் கொல்லப்பட்டது என்பதற்கு சாட்சியம் இன்றி கிளிப்பிள்ளை போல் எழுதி வருகின்றது.

லாகூர் நாளேடான The News, பாக்கிஸ்தான் அதிகாரிகள் கொடுத்துள்ள எண்ணிக்கையை மேற்கோளிட்டு ஏப்ரல் மாதம் 687 குடிமக்கள் கிட்டத்தட்ட 60 டிரோன் தாக்குதல்களில் ஜனவரி 2008ல் இருந்து நடத்தப்பட்டவற்றில் கொலையுண்டதாக கூறியுள்ளது. அந்த இறப்பு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், அப்பொழுது முதல் கிட்டத்தட்ட 30 டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இவ்விதத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானிய குடிமக்களின் எண்ணிக்கை எளிதில் 1,000 த்தைக் கடந்திருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாக்கிஸ்தானிய அரசாங்கம்--இராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப் மற்றும் அவருக்குப் பின் பதவிக்கு வந்துள்ள பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி உடையவை--வாஷிங்டனும் நடைமுறை செயலைக் கையாண்டு அதையொட்டி பாக்கிஸ்தான் டிரோன் தாக்குதல்களை வெளிப்படையாக எதிர்த்து அவை நிறுத்தப்பட வேண்டும் என்று கோரும், ஆனால் திரைக்குப் பின்னால் அவற்றிற்கு பச்சை விளக்கு கொடுக்கும்.

அமெரிக்க அதிகாரிகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அல் கெய்டா தலைவர்களை கொல்லும் முயற்சி என்று சித்தரிக்கின்றனர். ஆனால் சமீபத்திய தொடர் தாக்குதல்கள் ஆப்கானிய எழுச்சிக் கூறுபாடுகளுக்கு எதிராக குறிப்பாக நடத்தப்படுபவை; இவை அமெரிக்க இராணுவ, உளவுத் துறைகளால் ஹக்கானி இணையம் என்று அதன் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளன; இவர்கள் இதே வடக்கு வஜீரிஸ்தான் பாதுகாப்பு இடத்தில் இருந்து 1980 களிலும் செயல்பட்டனர். அப்பொழுது ஜலாலுதீன் அமெரிக்க ஆயுதங்கள், உதவி ஆகியவற்றைப் பெற்றவர்களில் முக்கியமானவர்; காபூலில் சோவியத் நட்பு கொண்டிருந்த ஆட்சிக்கு எதிராக CIA யின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது.

ஆப்கானிய எழுச்சி அறிவிக்கப்பட்டதில் இருந்து வாஷிங்டன் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை அதன் படைகளை ஹக்கானி குழு, பிற ஆப்கானிய தாலிபன் என்று வடக்கு வஜீரிஸ்தானில் இருந்து செயல்படும் பிரிவுகளுக்கு எதிராக அனுப்புமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது ஆப்கானிய எல்லைக்கு அப்பால் சிறிது தூரத்தில்தான் உள்ளது. ஆனால் தெற்கு வஜீரிஸ்தானில் நடக்கும் இராணுவ நடவடிக்கையை சுட்டிக்காட்டி அதற்கு இஸ்லாமாபாத் மறுத்துள்ளது. பிந்தையது Fata எனப்படும் கூட்டாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பழங்குடிப் பகுதிகள் ஆகும்.

தெற்கு வஜீரிஸ்தானில் நடக்கும் செயல்கள் பாக்கிஸ்தானிய இஸ்லாமிய எழுச்சியாளர்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றன; அவர்கள் மீதுதான் நாட்டின் வடமேற்கில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு குற்றம் சாட்டப்படுகிறது.

வாஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளபடி, பாக்கிஸ்தான் அரசாங்கம் வடக்கு வஜீரிஸ்தானில் உள்ள உள்ளூர் போர்ப்பிரபு ஹபிஸ் குல் பகதூருடன் சமாதான உடன்படிக்கை கொண்டுள்ளது; அதற்கு ஈடாக அவருடைய படைகள் தெற்கில் போரிடா.

"அவருடைய பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தினால் அந்த உடன்பாட்டிற்கு ஆபத்து வந்துவிடும்" என்று போஸ்ட் கூறுகிறது. "ஆனால் அமெரிக்கா ஒரு முக்கிய இலக்கைத் தேடிப்பிடித்துவிட்டால் டிரோன் தாக்குதலை நடத்த தயங்காது என்று குறிப்பு காட்டியுள்ளது."

சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிகாரிகளும் இராணுவத் தலைவர்களும் பாக்கிஸ்தானின் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளனர்; வடக்கு வஜீரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் அமெரிக்க இராணுவமும் CIA யும் ஒருதலைப்பட்சமாக தலையிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் அமெரிக்க இராணுவம் அதன் இரகசிய சிறப்பு நடவடிக்கைகள் பிரிவை ஒபாமாவின் ஆப்கானிய "விரிவாக்கத்தில்" முக்கிய கூறுபாடாக பயன்படுத்திவருகிறது என்று கூறியுள்ளது. இந்தச் சக்திகள்--இராணுவ டெல்டா படை, கடற்படை சிறப்புப் பிரிவுகள்--அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு அந்நாட்டில் எதிர்க்கும் தலைவர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களை தேடி கண்டுபிடித்து கொலைசெய்ய பயன்படுத்தப்படுகின்றன.

சிறப்பு நடவடிக்கை படைகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த பெப்ருவரி மாதம் JSOC எனப்படும் கூட்டு சிறப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டின் தலைவர் துணை அட்மிரல் வில்லியம் மக்ரவனின் உத்தரவில் நிறுத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் ஏராளமான சாதாரண மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தின; கிளர்ச்சி தலைவர்கள் என்று கருதப்படுபவர்களை கொல்லும் இராணுவ முக்கியத்துவத்தைவிட கூடுதலான மக்கள் ஆதரவை கிளர்ச்சியாளர்களுக்கு இது ஏற்படுத்தியது.

இப்பொழுது, தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல், ஆப்கானிஸ்தானில் உள்ள உயர்மட்ட அமெரிக்க தளபதி சிறப்புப் படையினர் நடத்தும் இத்தாக்குதல்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலைமைக் கட்டுப்பாட்டை ஏற்குமுன், மக்கிரிஸ்டல் மக்ரவனுக்கு முன்பு JSOC யின் தலைவராக இருந்தார்; அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரிவுகள் ஈராக்கில் காவலில் இருந்த சாதாரண மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதில் தொடர்பு கொண்டிருந்தன.

இந்த இரகசியப் பிரிவுகளை ஆப்கானிய எழுச்சியின் தலைவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்மீது இயக்குவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாதாரணக் குடிமக்கள் ஆண், பெண், குழந்தைகள் இறப்பில் தீவிரமான பெருக்கத்தை ஏற்படுத்தும்.

இதே போன்ற கொலைப் படைபிரிவுகள் பாக்கிஸ்தான் எல்லைப்புறமும் நடத்தப்படும், அவை CIA யின்கீழ் செயல்படும் என்றும் டைம்ஸ் கூறியுள்ளது.

பாக்கிஸ்தானிய இராணுவ உளவுத்துறை அமைப்பான ISI ல் பெயரிடப்படாத அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு "கடந்த ஆண்டு கூட்டாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பழங்குடிப் பகுதிகள் மற்றும் பலுச்சிஸ்தானில் ISI, CIA தொடர்புடைய கூட்டு நடவடிக்கைகள் 60க்கும் மேல் நடந்துள்ளன என்று டைம்ஸ் கூறியுள்ளது.

இந்த ஏட்டின்படி, "பணித்திட்டத்தில் 'பிடித்து, இழுத்துவருவது'--முக்கிய போராளிகளைக் கடத்துவது-- மற்றும் தலைவர்களை கொல்லும் முயற்சிகள் ஆகியவை உள்ளன."

பாக்கிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் இரு புறங்களிலும் தீவிர வன்முறைப் பெருக்கம் ஒபாமா உத்திரவிட்டுள்ள விரிவாக்கத்தால் ஏற்படும்; இதைத்தவிர, நாடு முழுவதும் அமெரிக்கப் போரின் விளைவாக இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள சமூக, அரசியல் நெருக்கடிகளும் தீவிரமாகும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் இரண்டுமே எல்லைகள் இல்லாத மருத்துவர் என்னும் பிரெஞ்சுத் தளமுடைய மருத்துவ உதவிக் குழு தயாரித்து வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், 10 மோசமான மனிதாபிமானமற்ற செயல்களை எதிர்கொண்டுள்ள நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டுகளில் "ஆப்கானிய குடிமக்கள் நாடு முழுவதும் பெருகிய முறையில் வன்முறையை பொறுத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று இந்தக்குழு கூறியுள்ளது. நாட்டின் சுகாதார பாதுகாப்பு முறையை சரிவின் விளிம்புக்கு போர் கொண்டுவந்துள்ளது; மருத்துவ உதவி தேவைப்படும் ஆப்கானியர்கள் இப்பொழுது "நூற்றுக்கணக்கான மைல்கள் போர்ப் பகுதியில் பயணித்து மருத்துவ உதவியை நாடவேண்டும், அல்லது நிலைமை மோசமாக அனுமதிக்க வேண்டும், அதாவது மிகக் குறைந்த வசதியுடைய மருத்துவ அமைப்பிற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பங்கள்தான் அவை."

அறிக்கை, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் "மருத்துவ உதவிக்கு இணங்கும் விதம், இதயங்கள், மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவுதல் என்பதை எதிர்கொள்ளும் விதத்தில் படுக்கையிலேயே நோயாளிகளை கைது செய்துள்ளனர்" என்று கூறுகிறது.

"2009 முழுவதும் தீவிர வன்முறையால் பாக்கிஸ்தான் அதிர்வுற்றுள்ளது" என்று அறிக்கை கூறுகிறது; ஏற்கனவே உள்ள மோசமான நிலையை இது இன்னும் மோசமாக்கியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் பொதுச் சுகாதார பாதுகாப்பின்றி அவதியுறுகின்றனர். இப்பகுதி முழுவதிலும் மிக அதிக சிறுகுழந்தைகளின் மகப்பேறு இறப்பு விகிதத்தை பாக்கிஸ்தான் கொண்டுள்ளது."

பாக்கிஸ்தான், வாஷிங்டன் தூண்டுதலில் நடத்தும் தாக்குதல்களினால் ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து 2 மில்லியன் அகதிகளும் வடக்கு வஜீரிஸ்தானில் இருந்து மற்றும் ஒரு 300,000 பேர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு கூறுகிறது. இராணுவத் தாக்குதலினால் இக்குழு ஸ்வாட் பள்ளத்தாக்கில் மருத்துவ உதவி கொடுக்க முடியவில்லை; அங்கு அது உள்ளூர் மருத்துவமனைகளுக்கு உதவியும், அம்புலன்ஸ் வண்டிகளை கொடுத்தும் வந்தது.

மருத்துவமனைகள், சுகாதாரக் காப்பகங்கள் என்று இடம் பெயர்ந்த முகாம்களில் அண்டைய மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளவை "மிக அதிக மக்களை கொண்டுள்ளன" என்று குழு அறிக்கை கூறுகிறது. "தீவிர போர் தொடர்புடைய காயங்களால் அவதியுறும் நோயாளிகள் உள்ளனர் அவர்களுள் துப்பாக்கித் தோட்டா, வெடிகுண்டு பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளும் உள்ளன."

அமெரிக்கத் துருப்புக்களின் இறப்பு மற்றும் காயமடைதல் என்பதின் எண்ணிக்கையும் மிக அதிகமாக கடந்த ஆண்டு காணப்பட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தானில் இருப்பதை ஒட்டி ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 2009 தொடங்கி 310 ஐ அடைந்துள்ளன; இது கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு ஆகும். இதே காலத்தில் கிட்டத்தட்ட 2500 அமெரிக்கத் துருப்புக்கள் காயமுற்றுள்ளனர்; பலரும் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; பெரும் தீக்காயங்களை கொண்டுள்ளனர்; சாலையோர குண்டுத் தாக்குதல்களால் தலைக்காயமும் அடைந்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத் தலைவர்களே எளிதில் ஒப்புக் கொண்டுள்ளபடி, இன்னும் 30,000 அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் பல ஆயிரம் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களை ஆப்கானிஸ்தானில் குவிப்பது என்பது கடந்த எட்டு ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தும் போரில் கொலைகளையும், இறப்புக்களின் எண்ணிக்கையையும் மிகப் பெரிதாக உயர்த்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved