World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe massacre at Kunduz and the policy of targeted killings குண்டுஸ் படுகொலையும் இலக்கு வைத்துக் கொல்லும் கொள்கையும் Peter Schwarz செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸில் நடைபெற்ற படுகொலை, 142 பேர் உயிர்களை எடுத்துள்ளதானது, ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் கொண்டுள்ளது. என்ன நடந்தது, அதைத் தொடர்ந்து அது எப்படி மூடி மறைக்கப்பட்டது என்பது பற்றி கணிசமான கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், 1945க்கு பின்னர் ஒரு ஜேர்மனிய தளபதி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட பெரும் குருதி கொட்டிய தாக்குதலின் அரசியல், வரலாற்று மற்றும் சர்வதேச விளைவுகளைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை. இரண்டாம் உலகப் போரில் நடத்திய குற்றங்களின் விளைவாக ஜேர்மனிய இராணுவத்தின் மீது சுமத்தப் பெற்ற தடைகளை தாண்டிச் செல்லும் விதத்தில் படுகொலையை பயன்படுத்துவது என்ற தெளிவான நோக்கத்தை முக்கிய இராணுவத் தளபதிகளும் அரசியல்வாதிகளும் கொண்டிருந்தனர் என்ற போதிலும் ஊடகத்தில் நிலைப்பாடு இவ்வாறுதான் உள்ளது. ஒரு ஜேர்மனிய கேணல், ஜோர்ஜ் கிளைன், செப்டம்பர் 14 அதிகாலையில் இரு கடத்தப்பட்ட டாங்கிகள் மீது விமானத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார், வாகனங்களுக்கு அருகே நின்றிருந்த மக்களை கொல்லும் நோக்கத்துடன் என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது. ஜேர்மனிய சிப்பாய்களுக்கோ, ஏழு கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஜேர்மனிய கள முகாமிற்கோ எந்த உடனடி ஆபத்தும் இல்லை. கேணல் சர்வதேச ஆக்கிரமிப்பு படைகள எதிர்க்கும் ஊள்ளூர் போராளித் தலைவர்களை தாக்க வேண்டும் என்று நினைத்திருக்கக்கூடும். தாக்குதலுக்கு மறுநாள் தன் உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், கிளைன் "விமானத் தாக்குதலைப் பயன்படுத்தி எழுச்சியாளர்களை சிதைக்கும் நோக்கத்தை தான் கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டார். தன்னுடைய கடந்த வாரப் பதிப்பில் Der Spiegel சில இலக்குகளைக் குறிப்பிட்டுள்ளது: "பஷ்டூனில் உள்ள அனுபவம் நிறைந்த தளபதி முல்லா ஷம்சுதின்" மற்றும் "முல்லா அப்துல் ரஹ்மான், மெளலவி நைம், முல்லா சியா மற்றும் முல்லா நஸ்ருதின்" ஆகியோர். "பிந்தையவர்கள் உள்ளூர் தலைவர்கள், 15 போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டவர்களும் குண்டுஸை சுற்றியுள்ள சிறு பகுதிகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும்" என்று ஏடு தெரிவித்துள்ளது. இவர்கள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு முன்னைய நாட்களில் உயர் இரகசிய KSK பிரிவினரால் பின்தொடரப்பட்டிருந்தனர். தாக்குதலுக்கு உத்திரவிடும் முன் கிளைன் குறைந்தது ஒரு KSK சிப்பாயிடம் கலந்து ஆலோசித்தார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர்த் தலைவர்களை "சிதைத்துவிட வேண்டும்" என்று அவர் தெளிவாக நம்பியதை இது குறிக்கிறது. இவ்வாறு செய்கையில்--தன்னுடைய மேலதிகாரிகளுடன் அவர் நேரடியாகப் பேசியிராவிட்டாலும்--கிளைன் "தன்னுடைய மேலதிகாரிகளும் ஜேர்மனிய அரசாங்கமும் தன்னுடைய வலுவான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பர் என்று நம்பக் காரணம் இருந்தது" என்று Der Spiegel தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் கூறியுள்ளது. இரு அரசாங்க செயலர்கள், August Hanning (உள்துறை அமைச்சரகம்), Petr Wichert (பாதுகாப்பு அமைச்சரகம்) காபூலிற்கு அக்டோபர் 21,2008ல் பயணித்து ஜேர்மனிய சிப்பாய்கள் மீது தாக்குதல்கள் அதிகமாகியிருப்பதன் காரணத்தால் ஹமித் கர்சாயி அரசாங்கத்தை நேருக்கு நேர் சந்திப்பை ஏற்படுத்தினார்கள். பேர்லினுக்கு திரும்பியபின் அவர்கள் அதிபர் அலுவலகம், உள்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சரகங்ககளின் பிரதிநிதிகளுடன் எப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று இரகசிய விவாதங்களை நடத்தினர். விவாதங்களைப் பற்றி Der Spiegel கூறுகிறது: "ஹான்னிங் கடுமையான போக்கு வேண்டும் என்றார், தாலிபனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் வேட்டையாடித் தீர்க்கப்பட வேண்டும் என்கிறார். வேட்டையாடு அல்லது வேட்டையாடப்பட்டுவிடுவாய் என்பதுதான் ஹான்னிங்கைப் பொறுத்த வரை மாற்றீடு." இந்த ஆரம்பக் கூட்டத்திற்கு பின்னர் இக்குழு பல விவாதங்களை நடத்தி, ஜேர்மனிய இராணுவத்தின் பங்கு மாற வேண்டும் என்பது பற்றி திரைக்குபின் விவாதங்கங்களாக இருந்தது. மே 2009ல் KSK பிரிவுகள் முதல் தடவையாக தாலிபன் என சந்தேகிக்கப்படுபவர்களை தேடத் தலைப்பட்டன. ஏப்ரல் மாதம் பாதுகாப்பு அமைச்சரகம் நேட்டோ நடவடிக்கைகள் திட்டத்திலிருந்த விதிவிக்கு ஒன்றை அகற்றியது; அதுவோ ஜேர்மனிய துருப்புக்கள் "ஆபத்தான வலிமையை பயன்படுத்துவதை" தடை செய்திருந்தது; தற்காப்பிற்கு மட்டுமே அவ்வாறு செய்யலாம். கோடை காலத்தில் படைத்தரையிறக்க விதிகள் அதையொட்டி மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஜேர்மனிய சிப்பாயும் கொண்டு சென்றிருந்த "அடையாள அட்டைகள்" சொற்களில் மாற்றம் பெற்ற அவர்கள் "தாக்குதலுக்கு திட்டம், தயாரிப்பு ஆதரவு தருபவர்களுக்கு எதிராகவும், பிற விரோதப் போக்கை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராகவும்" வலுவான சக்தியை காட்ட அனுமதிக்கப்பட்டது. "பிற விரோதப் போக்குடைய நடவடிக்கை" என்ற சொற்றொடர் பரந்த அளவில் இருந்து ஜேர்மனிய சிப்பாய்களை ஜேர்மனிய இராணுவத்தை எதிர்ப்பவர்கள் எவர்மீதும் பதிலடி கொடுக்க அனுமதித்தது. எனவே கேணல் கிளைன் செப்டம்பர் 4ம் தேதி கட்டளையிட்ட தாக்குதல், "அழிப்பிற்கு" அவர் உத்திரவிட்டபோது அதற்கு உயரதிகாரிகளின் ஆதரவு இருக்கும் என்று சரியாகத்தான் உணர்ந்திருந்தார். வேண்டுமென்றே அழிக்கும் கொள்கையை ஏற்றதில், ஜேர்மனிய இராணுவம் நவ காலனித்துவ போரின் இயல்பான கூறுபாட்டை ஏற்று சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை அப்பட்டமாக மீறுகிறது. "இலக்கு வைத்து கொல்லுதல்" என்பது இராணுவத்தில் நடைமுறையாகிவிட்ட சொற்றொடர் ஆகும். பல புத்தகங்களும் பல சட்ட ஆய்வுகளும் இந்த தலைப்பு பற்றி கூறுகின்றன. கூகிளில் "இலக்கு வைத்த கொலை" என்பதைத் தேடுவது ஒரு மில்லியனுக்கும் மேலான திரட்டுக்களை கொடுக்கிறது. Council on Foreign relations என்னும் அமெரிக்காவின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவின் வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்று இச்சொற்றொடரை விளக்குகிறது: "தாங்கள் அச்சுறுத்தல் என்று கருதும் நனிநபர்களை அகற்றுவதற்கு இலக்கு வைக்கும் கொலைகளை அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன. பொதுவாகக் கூறினால், ஒரு நாட்டின் உளவுத்துறை, பாதுகாப்புத் துறை அல்லது இராணுவ சக்திகள் குறிப்பிட்ட தனிநபரை அடையாளம் கண்டு அவரைக் கொல்ல திட்டமிடும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. கேள்விக்கு உட்பட்டது என்றாலும், இந்தப் பழக்கம் உலகெங்கிலும் அரசாங்கங்களால் பாதுகாப்பு உளவுத்துறை செயற்பாடுகள் மூலம் வழக்கத்தில் உள்ளது இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அழைக்கப்படுவதில் தொடக்கத்தில் இருந்து பெருகிய முறையில் சட்டபூர்வமாகவுள்ளது."வேறுவிதமாகக் கூறினால், "இலக்கு வைக்கப்பட்டுள்ள கொலைகள்" அரசியல் விரோதிகளை குற்றச்சாட்டோ, தீர்ப்போ இல்லாமல் கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டவை. இரகசியப் பிரிவு ஒரு நபரை கண்டித்தால் மரணத்தை அளிக்க அதுவே போதுமானது என்று ஆகின்றது. பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்--குண்டுஸில் துல்லியமான குண்டுவீச்சுக்கள், தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகள், தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் வெடிப் பொருட்கள்--ஆகியவை பாதிப்பாளர்களுக்கு (அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும்) தங்களைக்காத்துக் கொள்ள வாய்ப்பை கொடுப்பதில்லை. இத்தகைய வழிவகைகள் புதியவை அல்ல. ஆனால் நீண்ட காலமாக அவை சர்வாதிகார ஆட்சிகளின் இரகசிய இருப்புக்கள் என்றுதான் கருதப்பட்டன. உதாரணமாக சோவியத்தின் இரகசியப் பிரிவு GPU முறையாக தேடி அலைந்து ஸ்ராலினின் விரோதிகளை வெளிநாடுகளில் கொன்றது. பனிப் போர்க்காலத்தில் CIA தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது; பின்னர்--உத்தியோகபூர்வமாகவேனும்--அத்தகைய பழக்கங்களை கைவிடுமாறு கோரப்பட்டது. 1981ல் ஜனாதிபதியின் நிர்வாக ஆணை அறிவித்தது "அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக வேலையில் இருக்கும், செயல்படும் எந்த நபரும் படுகொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது, அதற்கான சதியில் ஈடுபடக்கூடாது." ஆனால் 1980கள், 1990களில், இந்த வழிகாட்டி நெறிகள் பெருகிய முறையில் கைவிடப்பட்டன. 1986ல் அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் றேகன் லிபிய நாட்டுத் தலைவர் முயம்மர் அல் கடாபியின் திரிப்போலி இல்லத்தின்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்; 1988ல் ஜனாதிபதி பில் கிளின்டன்ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம் எனக் கூறப்பட்டதின் மீதும் சுடானில் ஒரு ஆலை மீதும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார். கடாபி மீது தாக்குதலுக்கான நியாயப்படுத்துதல் பேர்லினில் அமெரிக்க சிப்பாய்கள் செல்லும் டிஸ்கோ அரங்கை அவர் தாக்கியது ஆகும்; கிளின்டனுடைய தாக்குதல்கள் கென்யா, தன்சானியா ஆகியவற்றில் உள்ள அமெரிக்கத் தூதரகத் தாக்குதல்களுக்கு பதிலடி என்று கூறப்பட்டன. "இலக்கு வைக்கப்பட்ட கொலைகள்" கொள்கையின் முன்னோடி இஸ்ரேலிய அரசாங்கம் ஆகும். ஏற்கனவே 1970 களில் இஸ்ரேலிய இரகசியப் பிரிவு மோசட், பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை வேட்டையாடிக் கொன்றது. குறிப்பாக தன்னுடைய நடவடிக்கைகளை பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் அரசியல் தலைமைக்கு எதிராக இயக்கியது. யாசர் அராபத்தின் படைத் தலைவர்கள் பலர் இஸ்ரேலிய கொமாண்டோக்களால் கொல்லப்பட்டனர். 1993ல் ஓஸ்லோ ஒப்பந்தத்தை பத்தா (Fatah) இஸ்ரேலுடன் ஏற்படுத்திய பின்னர், ஹமாஸின் தலைவர்கள் மற்றும் லெபனிய ஹெஸ்புல்லா, அமல் ஆகியவற்றின் தலைவர்கள் மோசட்டால் இலக்கு வைக்கப்படுகின்றனர். Middle East Quarterly ல் வந்த அறிக்கையொன்றின்படி, செப்டம்பர் 2000த்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஆரம்பித்த இன்டிபடா எழுச்சியின் முதல் 12 மாதங்களில், இஸ்ரேல் "குறைந்தது 50 படுகொலைகளையாவது பாலஸ்தீனிய செயற்பாட்டாளர்கள் நடுத்தர, உயர்தர அதிகாரிகள்மீது செய்தது." இஸ்ரேலிய இராணுவப் படைகள் பெரும் மிருகத்தனமான முறையில் நடந்து கொண்டன, மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளிலும் பொதுச்சாலைகளிலும் கார்கள் மீது குண்டு போடுதல், வீடுகளை அழித்தல், இலக்கு வைக்கப்பட்டு பாதிப்பானவர்களின் முழுக் குடும்பங்களையும் கொலை செய்தல் என. இத்தகைய அப்பட்டமான சட்டவிரோதச் செயலினால், இஸ்ரேலிய கொலைகள் சர்வதேச குறைகூறுக்கு ஆதராமாயின; ஆனால் திரைக்குப் பின் இஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வ ஆதரவைப் பெற்றது, குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் புஷ் நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்படும் கொலைகளுக்கு குறுக்கே நிற்கும் எந்த உத்தியோகபூர்வ தயக்கங்களையும் கைவிட உதவின. அப்பொழுது முதல் "பயங்கரவாதிகள்" அல்லது "தாலிபன்கள்" என்று கருதப்படும் அரசியல் எதிரிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள ஆக்கிரமிப்பு படைகளின் வாடிக்கையாகிவிட்டது. இந்தக் கொள்கை பாக்கிஸ்தானிலும் விரிவாக்கப்பட்டுள்ளது; அங்கு அமெரிக்க அல்லது பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் எதிரிகள் தொலைக்கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க டிரோன்களின் இலக்காகி விடுகின்றனர். புஷ்ஷிற்கு பின் வந்துள்ள பாரக் ஒபாமா இக்கொள்கையை தொடர்வது மட்டும் இல்லாமல், தீவிரப்படுத்தியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை அரசியல் அரங்கிலும் ஒரு பகுதியில் கொண்டு வந்த முதல் ஜனாதிபதி என்று கூறுவது சற்று மிகையானது ஆகும்--ஆனால் அதிகம் மிகையல்ல" என்று Brookings Insitutution க்கு எழுதிய கட்டுரை ஒன்றில் சட்டப் பேராசிரியர் கென்னத் ஆண்டர்சன் கூறுகிறார். மேலும் புகழுரையாக அவர் கூறுவது: "ஒரு வேட்பாளராக ஒபாமா இருந்தது சரிதான்; ஒரு ஜனாதிபதியக இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் நெறிப்படுத்திக் கூறுவதும் சரிதான்--அதாவது குறிப்பிட்ட நபர் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்பதில், பெருகிய முறையில் உயர் தொழில்நுட்பம் அல்லது தொலையில் இருந்து கட்டுப்படுத்தப்படும் பிரிடேட்டர் டிரோன் விமானம் ஆயுதங்களை வைத்துக் கொண்டு தள்ளி நின்ற நிலையில் தாக்குவது என்பது. இலக்கு கொண்டுள்ள நபரை தேவையான, கிடைக்கும், தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சக்தியின் உதவியால் கொல்லுவது என்பது மூலோபாய தர்க்கம் கொடுக்கும் உந்ததுதல், அதிக சக்தி வாய்ந்தது." இந்த பழக்கத்தை நியாயப்படுத்த பண்டிதர்களுக்கும் குறைவு இல்லை என்றாலும், இது அப்பட்டமான சட்டவிரோதச் செயல் ஆகும். பல நாகரிகமான நாடுகளில் மரணதண்டனை அகற்றப்பட்டுள்ளதை இது மீறுவது மட்டும் இல்லாமல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நெறியான எவரும் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்படக் கூடாது என்பதையும் மீறுகிறது. இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் முறையானவை என்று ஏற்கப்பட்டால் வரம்பு இல்லாமல் போய்விடும். ஒரு பயங்கரவாதிக்கும் சுதந்திரப் போராளிக்கும் இடையே பிரித்துக் காட்டும் அடையாளம் எது? முறையான, முறையற்ற எதிர்ப்பிற்கு இடையே வேறுபாட்டை எப்படிக் காண்பது? எந்த நாடுகளில் இலக்கு வைக்கப்பட்டுள்ள கொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன--ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஈராக், சூடான், சமீபத்தில் யேமன் என்று ஏகாதிபத்திய அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நம்பவைக்கப்பட்டுள்ளன--எந்த நாடுகளில் அவை ஏற்கப்படவில்லை? இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளும், ஆக்கிரமிப்பு நடத்தும் அரசாங்கங்களின் புவிசார் மூலோபாய நலன்களும்தான் இந்த கோடு வரையப்படும் விதத்தை நிர்ணயிக்கின்றன. இத்தகைய சூழலில், ஜேர்மனிய இராணுவம் இலக்கு வைக்கப்பட்ட கொலைக் கொள்கைக்கு மாறுவது என்பது எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு முன்னணி போர்களத்தில் மிக இழிந்த குற்றங்களுக்கு ஜேர்மனிய இராணவம் பொறுப்பு ஆகும். ஏராளமான சிவிலிய பிணைக் கைதிகளை, இறந்துபோன தமது ஜேர்மனிய சிப்பாய்களுக்கு ஈடாக இது கொன்றது; சிறைக் கைதிகளை, அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிட்டது; யூதர்களின் படுகொலையில் பங்கு கொண்டது. இக்குற்றங்களில் பெரும்பாலானவை தண்டனைக்கு உட்படாமல் போயின, ஏனெனில் அந்த நேரத்தில் சர்வதேச சட்டத்தில் அவை இடம் பெறவில்லை. ஆனால் போருக்கு பின்னர் பல விதிகள் சர்வதேச சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தகைய கொடுமைகள் மீண்டும் நேரா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள்தான் இப்பொழுது முறையாயாக மீறப்படுகின்றன, குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. |