WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
In wake of airline incident: Drumbeat for US war in
Yemen
விமானப் பயண நிகழ்விற்குப் பின்: யேமனில் போருக்கு அமெரிக்கா முரசு கொட்டுகிறது
By Bill Van Auken
29 December 2009
Use this version
to print | Send
feedback
கிறிஸ்துமஸ் தினத்தன்று 23 வயது நைஜீரிய உமர் பாறுக் அப்துல்முதல்லாப் அம்ஸ்டர்டாமில்
இருந்து டெட்ரோயிட்டிற்கு செல்லும் Northwest
Airlines விமானத்தை குண்டு மூலம் தகர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததை
அடுத்து, இன்னும் பரந்த அளவில் அமெரிக்கா யேமனில் இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் என்று போர் முரசு
கொட்டி விரிவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு உரியவர் தனியே செயல்பட்டார்
என்றும் எந்த பயங்கரவாத அமைப்புக்களுடனும் முறையாகத் தொடர்பு கொண்டிருப்பதாக தாங்கள் நம்பவில்லை
என்று கூறியபோதும், இரு கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதியினரையும்
உடனே யேமனில் போரை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புவதைத் தடுக்கவில்லை; எங்கு அப்துல்முதல்லாப்
குடும்ப உறவுகளை கொண்டுள்ளாரோ (அவருடைய தாய் யேமன் நாட்டினர்), அந்த இடத்தில் தான் அல் கெய்டா
பிரசன்னமாயுள்ளது.
செய்தித் தகவல்கள் பின்னர் பெயரை வெளிவிடாத அமெரிக்க அதிகாரிகள் அப்துல்முதல்லாப்பை
விசாரித்தவர்களிடம் தான் யேமனில் அல் கெய்டா முகாமில் பங்கு பற்றியதாகக் கூறியதாகவும், அமைப்பிற்கு தெரிவிப்பதாக
சொல்லி ஒரு வலைத்தள உரிமைகோரலை தோல்வியுற்ற குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாகக் கூறியதாகவும்
மேற்கோளிட்டுள்ளன.
இந்த நிகழ்வில் யேமனி தொடர்பு எந்த அளவிற்கு உண்மையாக இருந்தாலும்,
ஒபாமா நிர்வாகத்திற்கு இது எதிர்பாராத நிகழ்வாக உதவியுள்ளது என்பது நிரூபணம் ஆகிவிட்டது--அதுவும்
ஆப்கானிஸ்தானில் விரிவாக்கத்திற்கு சமாந்தரமான விதத்தில்; ஏற்கனவே நிர்வாகம் வறுமை மிகுந்த அரபு நாட்டில்
இரகசிய இராணுவத் தலையீட்டைத் தொடங்கிவிட்டது.
திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது போல், "இரு முற்றுப்பெறா முக்கியப்
போர்களுக்கு நடுவில் அமெரிக்கா அமைதியாக மூன்றாவதும், பெரிதும் இரகசிய நடவடிக்கையை யேமனில் அல்
கெய்டாவிற்கு எதிராகத் துவங்கி விட்டது."
பெயரிடப்படாத அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளை
மேற்கோளிட்டு, அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு உளவுத்துறைப் பிரிவு "அந்நாட்டிற்கு பயங்கரவாத எதிர்ப்பு
அனுபவம் உடைய அதன் உயர்மட்ட களச் செயற்பாட்டாளர்களை" அனுப்பியுள்ளது என்று டைம்ஸ் கூறியுள்ளது. "சில
இரகசிய சிறப்புப் படைக் கொமாண்டோக்கள் ஏற்கனவே யேமன் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு
தந்திரோபாயங்களில் பயிற்சி கொடுக்க தொடங்கிவிட்டனர்."
அமெரிக்கா யேமனுக்கு கொடுக்கும் உதவி நிதி 2008ல் கிட்டத்தட்ட ஏதும் இல்லை
என்ற நிலையில் இருந்து இப்பொழுது $70 மில்லியன் என்று உயர்த்தப்பட்டுள்ளது.
CIA முகவர்கள் மற்றும் சிறப்பு
நடவடிக்கைகளுக்கான இராணுவக் கொமாண்டோக்களின் பெருகிய நடவடிக்கைகள் யேமனில் அதிகரித்துள்ளது பற்றிய
தகவல்கள் இரகசிய அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டதை அடுத்து வந்துள்ளன. டிசம்பர்
17ம் தேதி அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல் ஏவுகணைகள் சானாஸ் மற்றும் அப்யன் மாநிலங்களில் உள்ள
அல் கெய்டா பயிற்சி முகாம்கள் மீது இலக்கு கொள்ளப்பட்டன என்று வாஷிங்டன் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால்
யேமனில் உள்ள அதிகாரிகள் தாக்குதல்கள் 60க்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களைக் கொன்றது என்றும் அதில்
28 பேர் குழந்தைகள் என்றும் கூறியுள்ளனர்.
டிசம்பர் 24ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் அல் கெய்டா செயற்பாட்டாளர்கள்
நடத்திய கூட்டம் ஒன்றில், தொலைவிலுள்ள ஷம்வா பகுதியில் இரண்டாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இங்கும் அப்பகுதி யேமன் மக்கள் அத்தகைய கூட்டம் ஏதும் நடைபெறவில்லை என்று கூறினர்.
டிசம்பர் 24 விமானத் தாக்குதலில் இலக்கு கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் அன்வர்
அல் அவ்லகி என்னும் ஒரு முஸ்லிம் மத குரு, அமெரிக்க குடிமகன், நியூ மெக்சிகோவில் பிறந்தவர் என்று அமெரிக்க
உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பு காட்டியுள்ளனர். அவல்கி அமெரிக்க இராணுவ மேஜர் நிடல் மாலிக் ஹாசனுடன்
தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், பிந்தையவர் கடந்த மாதம்
Fort Hood ல்
ஏராளமானவர்கள் சுடப்பட்டது பற்றி குற்றம் சாட்டப்பட்டவர் என்றாலும், அவர் மீது எந்தக் குற்றமும்
கூறப்படவில்லை. இவ்விதத்தில் நீதி வழிவகைகளுக்குப் புறம்பான கொலை செய்யப்படல் என்பது செய்தி
ஊடகத்திலிருந்த அமெரிக்க அரசியல் அமைப்புமுறையில் இருந்தோ சிறிது குறைகூறலைக்கூட தூண்டவில்லை.
அமெரிக்க போர் விமானங்கள் செளதி இராணுவ நடவடிக்கையுடன் இணைந்து செளதி
அரேபியா எல்லைக்கு அருகே உள்ள வடமேற்கு மாநிலமான சாடாவில் ஒரு உள்நாட்டு எழுச்சியை அடக்குவதற்கும்
பயன்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதல்கள் ஹெளதிக்கள் என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய இயக்கத்திற்கு
எதிரானவை; இதன் பெயர் அவர்களுடைய முன்னாள் தளபதியைக் குறிப்பிடுகிறது; இது ஜாயடி ஷியா மக்களைக்
காக்க அமைக்கப்பட்டது. ஆளும் முடியாட்சியை ஒரு நாசர் ஆட்சி மாற்றம் அகற்றிய 1962 வரை நாட்டில் ஆதிக்கம்
செலுத்தியது இந்தக்குழு; அதன் பின் ஜாயடி மக்கள் அடக்குமுறை, பாகுபாடு ஆகியவற்றை தற்போதைய அரசாங்கத்திடம்
இருந்து எதிர்கொண்டிருக்கிறது.
அமெரிக்கப் போர் விமானங்கள் சாடா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து
சுமார் 30 தாக்குதல்களை நடத்தியதாக ஹெளதி போராளிகள் குற்றம் சட்டியுள்ளனர்; அப்பொழுதுதான் யேமனி
ஆட்சி "Operation Scorched Earth"
என்று அழைக்கப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வட்டாரங்கள் ஹெளதிகளுக்கு எதிரான போரை
அப்பகுதியில் ஈரானியச் செல்வாக்கிற்கு எதிரான ஒரு போராட்டம் என்று காட்ட முற்பட்டுள்ளன. அதே நேரத்தில்
யேமன் ஆட்சி ஏற்கவியலாத கூற்றான இயக்கம் அல் கெய்டாவின் ஆதரவைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது;
அதுவோ சுன்னி அடிப்படைவாதத்தைத் தளமாகக் கொண்டு, ஷியா மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்
தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.
யேமனில் அமெரிக்க இராணுவத் தலையீடு பீல்ட் மார்ஷல் அலி சாலேயின்
சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது; அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தலைவராக
உள்ளார்--முதலில் வடக்கு யேமனின் ஜனாதிபதி ஆக 1990 கள் வரையிலும், பின்னர் பனிப்போருக்கு பிந்தைய
ஒன்றுபட்ட காலத்தில் ஒருங்கிணைந்த நாட்டின் ஜனாதிபதி ஆகவுமிருந்தார்.
23.8 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள யேமன் நாடு அரபு உலகில் மிக வறிய
நாடு ஆகும். மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டின்கீழ் வசிக்கின்றனர். 40 சதவிகிதத்திற்கும்
மேலானவர்களுக்கு வேலை இல்லை, 54 சதவிகிதத்தினர் எழுத்தறிவு அற்றவர்கள்.
ஹெளதி இயக்கம் நாட்டின் வடமேற்கில் இருப்பதைத் தவிர, சாலே ஆட்சி தெற்கிலும்
பிரிவினைவாத இயக்கத்தை எதிர்கொள்ளுகிறது. இந்த எதிர்ப்பு இயக்கங்களை மிக மிருகத்தனமான முறையில் அது
அடக்க முற்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலிகொண்டு, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களை
அகதிகளாக மாற்றிவிட்ட கூட்டுத் தண்டனை முறை என்ற விதத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதைத்
தவிர, ஆட்சி முறையாக அரசியல் எதிர்ப்பையும் நசுக்கி வந்துள்ளது.
கடந்த மாதம் ஐ.நா.வின் சித்திரவதைக்கு எதிரான குழு யேமனில் இருக்கும்
நிலைமை பற்றி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது; "பிணை கைதிகளைப் பிடித்தல், குடும்ப உறுப்பினர்கள்
கடத்திச் செல்லப்பட்டு தேடப்பட்ட நபர்கள் அவர்களாகவே சரணடையும் வரை வைத்திருத்தல், மற்றும்
ஒருதலைப்பட்ச காவலில் வைத்திருத்தல், கட்டாயமாக இல்லாது போகுமாறு செய்தல்" ஆகியவை நடப்பதாகக்
கூறப்பட்டுள்ளது.
"கடத்தல்கள், நீதி வழிவகை இல்லாத கொலைகள்" சர்வசாதாரணம் என்று
அறிக்கை கூறுகிறது; சிறுவர்களும் இவ்விதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
"ஏழு அல்லது எட்டு வயது சிறுவர்கள் கூட சிறையில் அடைக்கப்படுகின்றனர், பெரியவர்களுடன்
அடைக்கப்படுகின்றனர், பல நேரமும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர்" என்று அறிக்கை கூறுகிறது. "சிறுவர்களுக்கும்
மரண தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது."
பாதுகாப்புப் படைகளும் சிறை அதிகாரிகளும் சித்திரவதையை, விளைவைப் பற்றிக்
கவலைப்படாமல் செய்தனர் என்று அறிக்கை கூறுகிறது. ஐ.நா. குழுவிற்கு யேமனி மனித உரிமைகள் அமைப்புக்கள்
குழு ஒன்று அளித்த ஆவணம் பல எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு இறந்து போன பட்டியலைக்
கொடுத்துள்ளது; அதே நேரத்தில் காவலில் இருப்பவர்கள்--சிறுவர்கள் உட்பட--கம்பிகளால் அடிக்கப்படுவது, எரிக்கப்படுவது,
கைகள், கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்படுவது, பாலியல் வன்முறைக்குட்படுத்தல், அல்லது பாலியல் வன்முறை
அச்சுறுத்தல் ஆகியவைகளை எதிர்கொள்ளுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒபாமாவின் வெள்ளை மாளிகை நீடித்த உறவுகளுக்கு ஆர்வம் காட்டும்" என்று
டைம்ஸ் கூறியுள்ள விதத்தில், ஆட்சியின் தன்மை இப்படித்தான் உள்ளது. சிறப்பு நடவடிக்கை
கொமாண்டோக்களையும் CIA
செயற்பாட்டாளர்களையும் யேமனுக்கு அனுப்பிவைத்தல் என்பது இந்த கொடூர அடக்குமுறையைத் தீவிரப்படுத்தத்தான்
செய்யும்.
டைம்ஸ் கட்டுரை இன்னும் தெளிவாக்குவது போல், இந்த அடக்குமுறைக்கு
வாஷிங்டன் அதிகம் உதவும்போது, அது இன்னும் தீவிரமாகவும், ஆபத்து கொடுப்பதாகவும் அமையும். "இதில்
பிரச்சினை அமெரிக்காவின் ஈடுபாடு அல் கெய்டாவிற்கு பரிவுணர்வைத்தான் ஏற்படுத்தும்" என்று ஒரு யேமன்
அரசாங்க அதிகாரி செய்தித்தாளிடம் கூறினார். "ஒத்துழைப்பு தேவைதான்--ஆனால் சாதாரண மக்களிடம் என்ன
விளைவை ஏற்படுத்தும் என்று காண வேண்டும். சாதாரண குடிமகன் அல் கெய்டாவிடம் பரிவுணர்வு காட்டுவான்."
இதேபோல் அசோசியேட்டட் பிரஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் யேமன்
வல்லுனராக இருக்கும் கிரிகரி ஜோன்சன் அமெரிக்காவின் கூடுதல் இராணுவத் தலையீடு அந்த நாட்டில்
"ஆக்கபூர்வத்திற்கு எதிர் விளைவுகளைத்தான் கொடுக்கும்" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. குண்டுவீச்சுக்கள்
மற்றும் அதையொட்டி வரும் வீடியோ காட்சிகள், அமெரிக்க ஏவுகணைகளால் கொல்லப்படும் பெண்கள் மற்றும்
குழந்தைகள் புகைப்படங்கள் ஆகியவை "அல் கெய்டாவிற்கு ஏராளமான உறுப்பினர்களை" கொடுக்கும்.
இத்தகைய கவலைகள் வாஷிங்டனிலோ, அமெரிக்கச் செய்தி ஊடகத்திலோ அதிக
முக்கியத்துவம் பெறவில்லை; ஒபாமா நிர்வாகம் மத்திய கிழக்கில் இருந்து மத்திய ஆசிய வரை படர்ந்து இருக்கும்
எண்ணெய் வளப்பகுதியில் மூன்றாவது அமெரிக்க போருக்கான நடவடிக்கைகளை தொடர்கிறது.
The Northwest ஏயர்லைன்ஸ்
நிகழ்வு இன்னும் நேரடியான இராணுவ நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஜனநாயக, குடியரசுக் கட்சித்
தலைவர்களை சொல்லத் தூண்டியுள்ளது.
"சுதந்திரமான ஜனநாயகவாதி" என்று அழைக்கப்படும் செனட்டர் ஜோசப்
லிபர்மன், செனட் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர், ஞாயிறன்று ஒரு "முன்னரே தாக்கி தனதாக்கி
கொள்ளும்" இராணுவத் தலையீடு யேமனில் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
" எமது அரசாங்கத்தில் இருந்து
ஒருவர் என்னிடம் யேமனின் தலைநகர் சானாஸ்தான் இன்றைய போர்க்களம், ஈராக் நேற்றையப் போராகிவிட்டது
என்றார்" என்று லிபர்மன் Fox News
பேட்டியில் கூறினார். "ஆப்கானிஸ்தான் இன்றையப் போர். தவிர்க்க முடியாத, நிறுத்த முடியாத வகையில், நாம்
நடந்து கொள்ளவில்லை என்றால், யேமன் நாளைய போர் ஆகிவிடும். அந்த ஆபத்தைத்தான் நாம்
எதிர்கொள்ளுகிறோம்.
அதே நிகழ்ச்சியில் தோன்றிய செனட்டர் ஆர்லென் ஸ்பெக்டர், பென்சில்வொனிய
ஜனநாயகக் கட்சிக்காரர், அதை ஒப்புக்கொண்டு யேமன் மீதான இராணுவத் தாக்குதல் "நாம் பரிசீலிக்க
வேண்டியதொன்றாகும்" என்றார்.
" யேமன்தான் புதிய
FATA அல்லது
அப்படி ஆகும்" என்று பிரதிநிதி ஜேன் ஹார்மன், கலிபோர்னிய ஜனநாயகக் கட்சித் தலைவர் கூறியுள்ளார்; இவர்
மன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துணைக்குழு உளவுப்பிரிவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த அம்மையார்
பாக்கிஸ்தானிலுள்ள கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பழங்குடி பகுதிகளைக் கூறிப்பிடுகிறார்; அங்கு
CIA மற்றும்
அமெரிக்க இராணுவம் இரண்டும் பெருகிய முறையில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதுடன் சிறப்புப் படைகளின்
துருப்புக்கள் தரைவழி ஊடுருவலிலும் ஈடுபடுகின்றன.
போருக்கு மற்றய உந்துதலைப் போலவே அமெரிக்கச் செய்தி ஊடகமும் வரிசையில்
சேர்ந்தது. திங்களன்று "அல் கெய்டா குழு யேமனில் முக்கியத்துவம் அடைந்து கொண்டிருக்கிறது" என்ற தலைப்பில்
ஒரு முதல் பக்க கட்டுரையை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது.
அல் கெய்டா தோல்வியுற்ற விமானத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தது இன்னும் நிரூபிக்கப்படவில்லை
என்பதை ஒப்புக் கொண்ட Post
கட்டுரை தொடர்கிறது: "இக்கூற்று உண்மையானால்.....அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்க கொம்பு
ஆகியவற்றிற்கு ஒரு பெரிய முக்கிய அச்சுறுத்தல் வந்துள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது."
கேபிள் செய்தி தளங்கள் இன்னும் அப்பட்டமாகவும் மிரட்டும் வகையில் கூறுவதும்
இயல்பே. "எனவே நாம் இங்கு படகைத் தவற விட்டோமா?"
CNN ன்
தொகுப்பாளர் Kyra Philips
ஒரு பயங்கரவாத எதிர்ப்பு வல்லுனரிடம் திங்களன்று பிற்பகல் கேட்டார்: "நாம் ஆப்கானிஸ்தானில் போரில்
உள்ளோம், ஈராக்கில் போரில் உள்ளோம்; யேமனிலும் நாம் போரிட வேண்டாமா?'
மற்றொரு போருக்கு அமெரிக்கா தயாரிப்பு நடத்துகிறது என்றால், இந்த நேரம்
அது யேமனில்தான்; பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கோ அமெரிக்க மக்களைக் காப்பதற்கோ அல்ல அது.
இத்தகைய வழிவகைகள் அமெரிக்க இராணுவத்தலையீடு எங்கும் நடப்பதை நியாயப்படுத்தும் விதத்தில் கூறப்படும்
இலக்குகள் ஆகின்றன; பாக்கிஸ்தானில் இருந்து சோமாலியா வரை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் முழு
மத்திய கிழக்குப் பகுதியிலும் இதே கூற்றுக்கள்தான் வெளிப்படுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கம் உலகின் மூலோபாய எரிசக்தி
அளிப்புப் பகுதிகள், குழாய்த்திட்டங்கள், கடல்வழிப் பாதைகள் என்று உலகின் முக்கிய சக்திகளுக்கு செல்லும்
தடங்களில் தன்னுடைய மேலாதிக்கக் கட்டுப்பாட்டை நிறுவுதல் ஆகும். ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலை இணைக்கும்
பாப் எல் மன்டேப் ஜலசந்தியை யேமன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது; இது சூயஸ் கால்வாய்க்கு செல்லும் வழி;
நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் பீப்பாய்கள் ராங்கர்கள் மூலம் செல்லும் முக்கியமான இடம் ஆகும்.
"மாற்றம்" என்ற கோஷத்தின் அடிப்படையில், ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஜனாதிபதி
பதவிக்காலத்தில் இரு போர்கள் தொடக்கப்பட்டதற்கு மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்தது பயன்படுத்தப்பட்ட முறையில்
ஒபாமா நிர்வாகம் பதவியில் பரபரப்புடன் பதவிக்கு வந்தது. இப்பொழுது இப்போர்களை முடிப்பதற்கு பதிலாக,
ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்கிறது, ஆப்கானிஸ்தானிற்குள் இன்னும் கூடுதலான
30,000 அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புகிறது, மற்றும் யேமனில் மற்றொரு அமெரிக்க இராணுவ தலையீட்டை
முன்னெடுக்கவுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் பெருகிய முறையில் இந்நாடுகளில் இருக்கும் மக்களுக்கு
இறப்பையும் அழிவையும் கொடுக்கும்; அமெரிக்க இராணுவத்திலும் அதிக எண்ணிக்கையில் இறப்பும், காயமுறுதலும்
இருக்கும்; இன்னும் பரந்த அளவில் உலக மோதல்கள் அதிகரிக்கும் திறனையும் கொண்டிருக்கும்.
யேமனிலும் அமெரிக்கப் போர் என்னும் அச்சுறுத்தல் பெருகியுள்ளது, அமெரிக்க
இராணுவவாதத்தை முதலாளித்துவ இரு கட்சி முறையின் வடிவமைப்பிற்குள் எதிர்ப்பதின் இயலாமையைத்தான்
நிரூபிக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு ஏகாதிபத்தியப் போருக்கு உந்துதல் சக்தியாக இருக்கும் இலாபமுறைக்கு
ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒபாமா நிர்வாகத்திற்கு
எதிராக தொழிலாள வர்க்கம் முழுவதும் சுயாதீன அரசியல் சக்தியாக திரட்டப்படுதல் முக்கியமாகும். |