World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama pay czar OKs $4 million raise for AIG executive AIG நிர்வாகிக்கு 4 மில்லியன் டாலருக்கு மேல் உயர்த்துவதற்கு ஊதிய சரியீடு செய்தல் கண்காணிப்பாளர் ஒப்புதல் அளிக்கின்றார், ஒபாமா பணம்கொடுக்கின்றார்By Barry Grey கிட்டத்தட்ட மிகப் பெரிய அளவு என்னும் முறையில் வோல் ஸ்ட்ரீட் 30 பில்லின் டாலரை ஆண்டு இறுதி போனஸாக அறிவிக்க இருக்கையில், வங்கியாளர்களின் ஊதியத்தை மேற்பார்வையிடுவதற்கு என்று பெயரளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒபாமா நிர்வாகத்தின் "ஊதியங்களை சரியீடு செய்யும் சிறப்புக் கண்காணிப்பாளர்" கென்னெத் பெயின்பேர்க் அதற்கும் மேலதிகமான கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். பெரும் காப்பீட்டு நிறுவனமான அமெரிக்க இன்டர்நேஷனல் க்ரூப்பின் (AIG) தலைமை நிர்வாகி Robert Benmosche க்கு திங்களன்று பெயின்பேர்க் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்; அதில் பென்மோஷின் வேண்டுகோளான நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவருடைய ஊதியச் சரியீடு செய்யும் தொகையில் 4 மில்லியன் டாலருக்கும் அதிகமான உயர்வுக் கோரிக்கையைத் தான் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிர்வாகிக்கு அடிப்படை ஊதியமான 450,000 டாலரைத் தவிர பங்குகளுக்காக தற்போதைய மதிப்பில் 3.6 மில்லின் டாலரும் மேலும் ஆண்டு ஊக்கத் தொகை அளிப்பாக 1 மில்லியன் டாலரும் கொடுக்கப்படலாம் என்று பெயின்பேர்க் ஒப்புக் கொண்டுள்ளார். மொத்தத்தில் இந்த நிர்வாகி இந்த ஆண்டு 4.71 மில்லியன் டாலரை பெறுவார். கடந்த இலையுதிர்காலத்தில் பென்மோஷுக்கு 10.5 மில்லியன் டாலர் ஊதிய சரியீடு செய்யும் தொகுப்பிற்கு ஒப்புதல் கொடுத்த பெயின்பேர்க், 1000 சதவிகித உயர்விற்கு தான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் நிர்வாகி நிறுவனத்தை விட்டு நீங்குவதாக இருந்த திட்டத்தை மாற்றிக் கொண்டதுதான் என்று கூறியுள்ளார். "குறிப்பிட்ட ஊழியர் AIG நிறுவனத்தில் தொடர்ந்திருப்பார் என்ற உண்மையின் அடிப்படையில் அவருக்கு நீண்ட கால ஊக்கங்கள் கொடுத்து அவர் AIG யின் நீண்ட கால வெற்றிக்கும் இறுதியில் AIG, வரிப்பணம் செலுத்துபவர்களுக்கு திருப்பிக் கொடுத்தலுக்கு தகுதியாகும் வகையில்.....அவருக்கு இதை கொடுப்பது தக்கதுதான்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊதியச் சரியீடு செய்யும் உயர்வு நிர்வாகியின் ஊதியத்தை ஏற்கனவே AIG யின் மற்ற 25 உயர் நிர்வாகிகளுக்கு கொடுத்திருக்கும் உயர்வுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று பெயின்பேர்க் கூறியுள்ளார். ஊழியரின் பெயரைக் கூற மறுத்த பெயின்பேர்க் அதற்கு "தனிப்பட்டவர் இரகசியக் கட்டுப்பாடுகள்" காரணம் என்றும், நிறுவனமும் அது பற்றி தகவலை வெளியிடாது என்று ஒரு AIG செய்தித் தொடர்பாளர் கூறினார். வோல் ஸ்ட்ரீட் அதன் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு பல மில்லியன் டொலர் ஊதியத் தொகுப்பைக் கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த ஒபாமா நிர்வாகம் முயலும் என்று கூறப்படும் முயற்சிகளின் மோசடித்தன்மையை மிகவும் அப்பட்டமாக சமீபத்தில் வெளிப்படுத்தியிருப்பதுதான் பெயின்பேர்க்கின் இந்தக் கொடைகள் ஆகும். கருவூலத்துறையில் 700 பில்லியன் டாலர் Troubled Asset Relief Programme (TARP) வங்கி பிணை எடுப்பின் கீழ் "விதிவிலக்கான" உதவியைப் பெற்ற ஏழு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியச் சரியீடு செய்தல் பற்றிக் கண்காணிப்பதற்காக பெயின்பேர்க் ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனம் அடிப்படையில் ஒரு பொது மக்கள் தொடர்பு நடவடிக்கை, வோல் ஸ்ட்ரீட் ஊதியம் பற்றி மக்கள் சீற்றத்தை தணிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது; குறிப்பாக வரிப் பணத்தில் பல பில்லியன் டாலர்களை பெற்றிருந்த நிறுவனங்கள் தொடர்பாக. அந்த நேரத்தில் பெயின்பேர்க்கின் பரிசீலனையின்கீழ் வந்த நிறுவனங்களில் இரு வங்கிகளும் இருந்தன --சிட்டிக்ரூப் மற்றும் அமெரிக்க வங்கி என-- இதைத்தவிர AIG, ஜெனரல் மோட்டார்ஸ், கிறிஸ்லர் மற்றும் இரு கார் நிறுவனங்களின் நிதியப் பிரிவுகளும் இருந்தன. பெயின்பேர்க்கின் நியமனத்தைத் தொடர்ந்து வங்கிகள் TARP கடன்களைக் கட்டிவிட்டு, பெயின்பேர்க்கின் கண்காணிப்பில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொண்டுவிட்டன; அவற்றின் மீது பெயரளவிற்கு நிர்வாகிகளின் ஊதியம், வங்கி நடவடிக்கைகள் பற்றிய தடைகள் இருந்தன; அரசாங்கத்தின் பிணை எடுப்பின் ஒரு பகுதியாக அவை சுமத்தப்பட்டிருந்தன. பெயின்பேர்க்கின் பொறுப்பில் எஞ்சியிருந்த ஒரே நிறுவனம் AIG தான். அது அரசாங்க உதவியாக 182 பில்லியன் டாலரை பெற்றிருந்தது; 80 சதவிகிதம் அரசிற்குச் சொந்தமானது. இந்தக் காப்பீட்டு நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நிர்வாகிகள், வணிகர்கள் ஆகியோருக்கு போனஸ், ஊக்கத் தொகைகளாக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது என்று வெளிப்பட்டபோது பொதுமக்கள் சீற்றத்திற்கு உள்ளானது. 2008ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் இந்த நிறுவனத்தையும் அமெரிக்கா மற்றும் உலக நிதிய முறையைச் சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த, credit default swaps மற்றும் derivatives களில் ஊக வணிகம் செய்திருந்த உயர்மட்ட ஊழியர்கள் பகுதியினரும் இதில் அடங்கியிருந்தனர். நிர்வாகமும் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் கடந்த மார்ச் மாதம் தலையிட்டு வோல் ஸ்ட்ரீட் போனஸ்களில் சுமத்தப்பட இருந்த அதிக வரிகளைப் பற்றி காங்கிரசில் கொண்டுவரப்பட இருந்த மசோதாவை நிறுத்தினார்; அதில் நிர்வாகிகள் ஊதியத்திற்கு வரம்புகள் கொண்டுவரப்பட இருந்தன. அதற்கு சில நாட்களுக்கு பின்னர் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் அளித்திருந்த மீட்புத் திட்டங்களை ஒபாமா நிராகரித்தார்; கார்த் தொழிலாளர்கள் ஊதியங்களில் ஆழ்ந்த வெட்டுக்கள் வேண்டும் என்றும் இன்னும் அதிக பணி நீக்கங்கள் வேண்டும் என்றும் ஆலை மூடல்கள் வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அரசாங்கக் கடன்கள் கொடுக்கப்படும் என்றார். AIG போனஸ்கள் பற்றிய மக்கள் சீற்ற நேரத்தில், நிறுவனம் அதன் நிதியப் பிரிவில் இருக்கும் நிர்வாகிகளும் வணிகர்களும் தக்கவைத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட போனஸ் என்று 165 டாலர் மில்லியனில் 45 மில்லியன் டாலரை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டதாக அறிவித்தது. ஆனால் வாஷிங்டன் போஸ்ட் புதனன்று TARP நியமித்திருந்த சிறப்புத் தலைமை ஆய்வாளர் 19 மில்லியன் டாலர்தான் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறியதை மேற்கோளிட்டிருந்தது.கடந்த அக்டோபர் மாதம் தன் பொறுப்பின்கீழ் வந்த ஏழு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஊதியத்தைப் பற்றி பெயின்பேர்க் அறிவித்தார். நிறுவனங்களின் உயர்மட்ட 25 நிர்வாகிகளின் ரொக்க ஊதியத்தை 500,000 டாலர் என்று வரம்பு இடுவதாக அவர் அறிவித்தார் (அதுவே அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி ஊதியத்தைப் போல் 10 மடங்கு ஆகும்). ஆனால் இது மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை ஆகும். நிறுவனங்கள் ரொக்க ஊதியங்கள் சரிவைச் சரிபடுத்த பங்கு நிதிகள், பிறவகை இழப்பீடுகளைக் கொடுக்க நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தார். இந்த 500,000 டாலர் என்னும் தொகைகூட மோசடியானதுதான். NBC News, AIG, Bank of America மற்றும் Citigroup லிருந்த 34 நிர்வாகிகள் ரொக்கப்பணமாக 1 மில்லியன் டாலரை பெற்றனர் என்றும் நிறுவனங்களில் உயர்மட்ட இழப்பீட்டுத் தொகை 9 மில்லியன் டாலரிலிருந்து 10.5 மில்லியன் டாலர் வரை இருந்தது என்றும் தகவல் கொடுத்துள்ளது. பெயின்பேர்க்கின் முடிவின் பேரில் பாதிப்பிற்கு உட்பட்ட 138 நிர்வாகிகளின் சராசரி ஊதியம் 2.5 மில்லியன் டாலர் ஆகும். நிதிய அடுக்கின் இலாபங்கள், வசதிகளை உயர்த்தும் ஒற்றைக் குவிப்பு எப்படி ஒபாமா நிர்வாகத்தில் உள்ளது என்பதற்கு திங்களன்று AIG க்கு கொடுக்கப்பட்ட கொடையின் தன்மை அப்பட்டமான உதாரணம் ஆகும். ஆனால் நிர்வாகத்தின் கொள்கைகளால் முக்கிய நிறுவனங்கள் சேகரிக்கும் பெரிய தொகைகளுடன் ஒப்பிடுகையில் ஒரு பக்கெட் நீரில் ஒரு துளி போல்தான் இது. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இலாபம் கிடைக்கும் வளைவு (yield curve)--அரசாங்கப் பத்திரங்களின் குறுகிய கால, நீண்ட கால வட்டிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு--திங்களன்று மிகப் பெரிய அளவை அடைந்ததாக கூறியுள்ளது. பெடரல் ரிசேர்வின் கொள்கையான குறுகிய கால வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்ட பூஜ்யம் என்று "இன்னும் கூடுதலான காலத்திற்கு வைத்திருப்பது என்பது--கடந்த வாரக் கொள்கை வகுக்கும் கூட்டத்தில் பெடரல் மீண்டும் வலியுறுத்தியது--கருவூலத்தின் நீண்ட கால வட்டி விகிதம் உயர்வதை காட்டியுள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கள் நீண்ட கால அமெரிக்கப் பத்திரங்களை விற்று கிடைக்கும் குறைந்த வட்டிக் கடனை பயன்படுத்தி இன்னும் ஆபத்தான, ஆனால் கூடுதல் இலாபம் கிடைக்கக்கூடிய பெருநிறுவனப் பங்குகள் (stocks), பொன்ட்கள் (bonds), பொருட்கள் (commodities), நாணய ஏற்ற இறக்கங்களில் (currency swings) முதலீடு செய்தனர். இப்படி குறுகிய காலம் மற்றும் நீண்ட கால வட்டி விகிதங்களுக்கு இடையே இருக்கும் பெரும் இடைவெளி வங்கிகளுக்கு ஒரு புதையல் போன்றது ஆகும். ஜேர்னல் எழுதியுள்ளபடி, "இந்த இடைவெளி வங்கிகளுக்கு அதிகம்; ஏனெனில் அவர்கள் தங்கள் குறுகிய காலத் தேவைகளுக்குக் குறைந்த விகிதத்தில் கடன் வாங்கி நீண்ட கால விகிதங்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுக்கும்." செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸின் நிதியக் கட்டுரையாளர் Andrew Ross Sorkin, TARP கடன்கள் திருப்பிச் செலுத்துப்படுவதில் பெரும் வங்கிகள் பெற்றுள்ள பரந்த இலாபங்களை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய வாரங்களில், பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிக்ரூப், வெல்ஸ் பார்கோ (Wells Fargo) ஆகியவை அனைத்தும் மகத்தான பங்கு விற்பனைகளை ஏற்பாடு செய்து TARP கடன்களை என்று தாங்கள் மொத்தம் கொண்டிருந்த 90 பில்லியன் டாலரை திரும்பக்கட்டுவதற்கு ரொக்கத்தை எழுப்ப முற்பட்டன. 50 பில்லியன் டாலர் புதிய மூலதனம் திருப்பிக் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எழுப்பப்பட்டு டிசம்பர் மாதம் அளிப்புக்கள் வரலாற்றில் மிகப் பெரிய மாதமாகப் போயிற்று என்று தொம்சன் ராய்ட்டர்ஸ் கூறியதாக சோர்க்கின் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதினார்: "புதிய பங்குகளுக்கு முதலீட்டாளர்களை கண்டுபிடிக்க உதவிய அனைத்து வங்கிகளுக்கும் பிணை எடுப்பிற்குப் பின் கிடைத்த அளிப்பு என்பது இதுதான்; பாங்க் ஆப் அமெரிக்கா அளித்த 19.3 பில்லியன் டாலர், கட்டணத்தில் 482 மில்லியன் டாலரை தோற்றுவித்தது; சிட்டிக்ரூப்பின் 17 பில்லியன் டாலர் அளிப்பில் 425 மில்லியன் டாலர் கட்டணத்திற்கு சென்றது; வெல்ஸ் பார்கோவின் 12.2 பில்லியன் டாலர் அளிப்பில் கட்டணத்திற்கு 275.6 மில்லியன் டாலர் சென்றது. தொம்சன் முதலீட்டு வங்கிப் பிரிவின் Deals Intelligence Unit உடைய இயக்குனர் Matthew Toole ஐ மேற்கோளிட்டார் சோர்க்கின்; அவர் கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்க நிதிய நிறுவனங்களிடையே பங்கு அளிப்புக்களுக்கான கட்டணம் மொத்தம் 5.4 பில்லியன் டாலராக ஆயிற்று என்று கூறியுள்ளார். அது முந்தைய 20 ஆண்டுகளில் எழுப்பப்பட்ட 4.8 பில்லியன் டாலரை விட மிக அதிகம் ஆகும். இவ்விதத்தில் வங்கிகள் வரிப்பண நிதியைப் பெற்றதில் இருந்தும் அவற்றைத் திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றில் இருந்தும் பெரும் இலாபங்களை ஈட்டியுள்ளன. டிசம்பர் மாதம் கட்டணங்களுக்கு உறுதியளிப்பதின் மூலம் கிடைக்கும் பெரும் தொகைகள் ஒப்பந்தங்களில் தொடர்புடைய முதலீட்டு வங்கியாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஆண்டு இறுதி போனஸ் அளிப்புக்களில் இடம் பெறும் என்றும் சோர்க்கின் குறிப்பிட்டார். ஒபாமாவின் நிதிமந்திரியான டிமோதி கீத்னருக்கு ஒரு வங்கியாளர் அனுப்பியிருந்த செய்தியை அவர் மேற்கோளிட்டார். செய்தி கூறியது "மிக்க நன்றி.' |