World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China opens a major gas pipeline from Central Asia

மத்திய ஆசியாவில் ஒரு முக்கிய எரிவாயுக்
குழாய்த்திட்டத்தை சீனா திறக்கிறது

By John Chan
21 December 2009

Use this version to print | Send feedback

துர்க்மேனிஸ்தானில் இருந்து மேற்கு சீனாவிற்கு ஒரு பெரிய இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது மத்திய ஆசியாவின் எரிசக்தி செழிப்பு மிக்க பகுதியில் பெரும் சக்திகள் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் போட்டியின் மற்றொரு அடையாளம் ஆகும்.

சீனா, துருக்மேனிஸ்தான், காசக்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் ஜனாதிபதிகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெற்ற 1,833 கிலோ மீட்டர் நீள குழாய்த் திட்டத் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு கிழக்கு துர்க்மேனிஸ்தானிலுள்ள Saman-Depe வயலில் இருந்து காசக்கஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் வழியே மேற்கு சீன மாநிலமான ஜிங்ஜியாங் வரையிலும், பின்னர் சீனாவின் முக்கிய மேற்கு-கிழக்கு குழாய்வழியே இறுதிப் பயன்பாட்டாளர்களுக்கு சீனாவின் 14 மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கும் உட்செலுத்தப்படும். முழுமையாக 2012-2013ல் இது செயல்படும்போது, குழாய்த்திட்டம் ஆண்டு ஒன்றிற்கு 40 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை --தற்போதைய சீனாவின் மொத்த உற்பத்தியில் பாதிக்கும் மேலானவற்றை (2008 ல் நுகர்வு 77.8 பில்லியன் கன மீட்டர்கள்)--கொடுக்கும்.

நிகழ்ச்சியில் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ குழாய்த்திட்டத்தை சீனாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே "இணைந்து செயல்படுதல், ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு மற்றொரு அரங்கு" என்று விவரித்தார். இந்த பிராந்தியத்தின் பெரும் எரிசக்தி இருப்புக்களை பெறுவதற்கு ஈடாக சீனா அந்நாடுகளில் உள்கட்டுமானங்களை கட்டமைப்பதுடன், மத்திய ஆசிய குடியரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன்களும் கொடுக்கிறது. பெய்ஜிங்கின் பரந்த நோக்கம் இப்பகுதியை தன்னுடைய அரசியல், மூலோபாயச் சுற்றுக் கோளில் கொண்டுவருவது ஆகும்.

1991ல் சோவியத் ஒன்றியம் சரிந்ததற்கு பின் எண்ணெய், எரிவாயு இருப்புக்களுக்காக மத்திய ஆசியா கடுமையான போட்டியைக் கொண்டுள்ள பகுதியாக விளங்குகிறது. தற்போதுள்ள சோவியத் சகாப்த குழாய்த்திட்டத்தின் மீதுள்ள கட்டுப்பாட்டை ஒட்டி ரஷ்யா, மத்திய ஆசிய எரிவாயு பங்கீட்டில் ஏகபோக உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது; ஆனால் இதற்கு அச்சுறுத்தல் அஜர்பைஜனில் இருந்து ஜோர்ஜியா, பின் துருக்கி, இறுதியில் ஆஸ்திரியாவிற்கு என்று Nabucco குழாய்த்திட்டம் கட்டும் ஐரோப்பிய முயற்சிகளால் வந்துள்ளது; அது ஐரோப்பா ரஷ்யா மூலம் எரிவாயு பெறவேண்டும் என நம்பியிருப்பதைக் குறைத்துவிடும்.

மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய எரிசக்தியை தன்னுடைய முதலாளித்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து வரும் எரிசக்திக்கு மாற்றீடு அளிக்கவும் சீனா விழைகிறது.; பிந்தையவை அமெரிக்கக் கடற்படை சக்தியின் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் என்று பெய்ஜிங் அஞ்சுகிறது. வாஷிங்டனுடைய பெருகிய முறையிலான மத்திய ஆசியாவில் வலிந்த தலையீட்டை எதிர்கொள்ளும் வகையில் --குறிப்பாக அமெரிக்கத் தலைமையில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் படையெடுப்பிற்குப் பின்னர்-- சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை ஒன்று சேர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை 2001ல் தங்கள் கொல்லைப்புறம் என்று கருதப்படும் இடத்தில் அமெரிக்க ஊடுருவலை எதிர்க்க நிறுவியுள்ளன.

துர்க்மேனிஸ்தானில் இருந்து முக்கிய சீனக் குழாய்த் திட்டத்தை திறந்திருப்பது மத்திய ஆசிய எரிசக்தி சமன்பாட்டை மாற்றியுள்ளது. கடந்த வாரம், பைனான்ஸியல் டைம்ஸ் இந்த குழாய்த்திட்டம் "ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களான துர்க்மெனில் இருந்து பெறப்படும் அளிப்புக்களை திட்டமிடப்பட்டுள்ள Nabucco திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்பதற்கு பெரிய அடியாகும்" என்று கூறியுள்ளது. வாஷிங்டனை தளமாகக் கொண்டுள்ள யூரேசியா எரிசக்தி மையத்தின் பகுப்பாய்வாளர் Alexandors Peterson செய்தித் தாளிடம் சீனக் குழாய்த்திட்டம் துர்க்மன் எரிவாயுவில் மிச்சம் இருப்பதை எடுத்தக் கொள்ளும் என்றும் "நெபுக்கோ வழிவகையில் துர்க்மேனிஸ்தான் ஒரு பகுதியாக வரக்கூடும் என்பதை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது" என்றும் கூறினார்.

திட்டமிடப்பட்டுள்ள நெபுக்கோ குழாய்த்திட்டம் சீனா-துர்க்மேனிஸ்தான் திட்டத்தைப் போல் இரு மடங்கு நீளமாக இருப்பதோடு, ஆண்டு ஒன்றிற்கு 31 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயுவை அளிக்கும். அஜர்பைஜன் முக்கிய அளிப்பு நாடாக இருந்தாலும், திட்டத்திற்கு மற்ற இருப்புக்களும் தேவைப்படும்; ரஷ்யாவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பும் மத்திய ஆசியக் குடியரசுகள் திட்டத்திற்கு தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவிக்கத் தயங்குகின்றன. தன்னுடைய பங்கிற்கு ரஷ்யா நபுக்கோ திட்டத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திட்டத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு அளிப்பதில் தன் ஏகபோக உரிமையை தக்க வைத்துக் கொள்ளுவதிலும் தீவிரமாக உள்ளது.

2007 ல் மொஸ்கோ ஐரோப்பாவிற்கு கருங்கடல் வழியே பல்கேரியா செல்லும் South Stream குழாய்த்திட்டத்தை அறிவித்தது; இது நபுக்கோ திட்டத்திற்கு நேரடிப் போட்டி ஆகும். ரஷ்யாவும் துர்க்மேனிஸ்தான் எரிவாயுவுடன் பிணைத்துக்கொள்ள முற்படுகிறது; ஆனால் விலை பற்றிய பூசலில் அகப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Gazprom மத்திய ஆசியாவில் முன்னர் திட்டமிடப்பட்டிருந்த இறக்குமதிகளை பாதியாக 2010ல் குறைத்தது; இதற்குக் காரணம் சரியும் தேவை, விலைகள், குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து என உள்ளது. துர்க்மேனிஸ்தான் Gazprom உடைய புதிய நிபந்தனைகளை நிராகரித்து, ரஷ்யாவிற்கான ஏற்றுமதிகளையும் ஏப்ரலில் குறைத்து மற்ற சந்தைகளை, நபுக்கோ குழாய்த்திட்டம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அளித்தல் என்னும் வாய்ப்பை நாட முற்பட்டது.

RusEnergy Consuslting நிறுவனத்தின் Mikhail Krutikhin, Ria Novoti செய்தி அமைப்பிடம் காஷ்ப்ரோம் ஆரம்பத்தில் துர்க்மேனிஸ்தானிக்கு அதிக விலையை நபுக்கோ திட்டத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக கொடுக்க முன்வந்தது. காஸ்ப்ரோம் தன்னுடைய விலைகளைக் குறைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டபின், துர்க்மேனிஸ்தான் இதை ஒரு தாக்குதலாக எடுத்துக் கொண்டது. "சீனா உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது; ஏனெனில் அந்த நாடு நீண்ட காலமாக மிக நிதானமாகவும் உறுதியாகவும் ஒரு கொள்கையை இப்பகுதியில் தொடர்ந்து வந்தது." என்று அவர் கூறினார்.

China National Petroleum நிறுவனம், 2007ல் Saman-Depe எண்ணெய் வயல் திட்ட வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தை பெற்றது--இது துர்க்மேனிஸ்தானின் எரிவாயு இருப்புக்களுக்கு ஒரு வெளிநாட்டு நிறுவனம் பெறும் முதல் மற்றும் ஒரேவாய்ப்பு ஆகும். உலகில் ஐந்தாவது பெரும் எரிவாயு இருப்புக்களை துர்க்மேனிஸ்தான் கொண்டுள்ளது. காஸ்ப்போரமுடன் விலை பற்றிய மோதல் வெடித்தவுடன், சீனா 3 பில்லியன் அமெரிக்க டொலரை துர்க்மேனிஸ்தானுக்கு எரிவாயு வளர்ச்சித் திட்டத்திற்காக கடன்கொடுத்து அந்நாட்டில் தன் நிலையை ஊன்றிக் கொண்டது. 2008 உலக நிதிய நெருக்கடி நேரத்தில், பெய்ஜிங் பெருகிய முறையில் தன்னுடைய மகத்தான வெளிநாட்டு நாணய இருப்புக்களைப் பயன்படுத்தி எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களைப் பெறுவதில் குவிப்பைக் காட்டியுள்ளது.

புதிய சீனக் குழாய்த் திட்டம் ரஷ்யாவின் மீது துர்க்மேனிஸ்தான் நம்பியிருக்கும் நிலையைக் குறைத்தாலும், மொஸ்கோ பெய்ஜிங்கை ஒரு உடனடி அச்சுறுத்தல் என்று கருதவில்லை. சீன எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை கிழக்கிற்கு அனுப்புகின்றனவே அன்றி, ரஷ்யாவின் மேற்கில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு அல்ல. மேலும் மத்திய ஆசியாவில் சீன செல்வாக்கு பற்றிய ரஷ்ய கவலைகள் அப்பகுதியில் அமெரிக்க மற்றும் ரஷ்ய செல்வாக்கு படர்தல் என்ற கூடுதல் அச்சத்தில் மறைந்துவிடுகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO), காசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், டாஜிக்ஸ்தான் ஆகிய நாடுகளுடன் பங்காளிகள் ஆகும். பாக்கிஸ்தான், இந்தியா, ஈரான் மற்றும் மொங்கோலியா ஆகியவை பார்வையாளர் அந்தஸ்த்தைக் கொண்டுள்ளன. ஈரான் முழு உறுப்பினர் தன்மைக்கு விண்ணப்பித்தது, அது ஆனால் ரஷ்யா, சீனாவால் ஏற்கப்படவில்லை; ஏனெனில் அது அமெரிக்காவில் இருந்து வெளிப்படையான சவாலை தோற்றுவிக்கும் என்று அவை அஞ்சுகின்றன. தன்னுடைய ஒதுக்கமான நிலையை துர்க்மேனிஸ்தான் தக்கவைத்துக் கொண்டாலும், அதுவும் பெருகிய முறையில் இந்த முகாமிற்கு வருகிறது; இதற்குக் காரணம் அது ரஷ்யா மற்றும் சீனாவை தன் விசை ஏற்றுமதிகளுக்காக நம்பியிருத்தலும், தன் பெரும் இரு அண்டை நாடுகளில் அரசியல் கனத்தினாலும்தான்.
ரஷ்யாவும் சீனாவும் SCO வைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை ஒட்டி மத்திய ஆசியாவில் நிறுவப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. 2006ல் அமெரிக்கா இதன் ஆட்சி 2005ல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடக்கியதற்கு குறை கூறியபின், உஸ்பெகிஸ்தான் அதன் அமெரிக்க விமானத் தளத்தை மூடிவிட்டது. மொஸ்கோவில் இருந்து ஒப்புதல் வந்தபின், உஸ்பெகிஸ்தான் அமெரிக்காவுடன் ஏப்ரல் மாதம் தன் பகுதி மூலம் ஆப்கானிஸ்தானிற்கு இராணுவத் தளவாடம் அல்லாத மற்ற பொருட்கள் செல்லலாம் என்று உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

மத்திய ஆசிய நாடுகளின் ஆட்சிகள் பல முன்னாள் சோவியத் குடியரசுகளில், ஜோர்ஜியா, உக்ரைன் போன்றவற்றில், தன்னுடைய நலன்களை முன்னேற்றுவிப்பதற்காக வண்ணப் புரட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றை வாஷிங்டன் ஊக்குவிப்பது பற்றி உணர்ந்துள்ளன. 2005ம் ஆண்டில் எதிர்த்தரப்புக் கட்சிகள் பரந்த எதிர்ப்புக்களை பயன்படுத்தி கிர்கிஸ் சர்வாதிகாரி அஸ்கர் அகயேவை அகற்றினர்; ஆனால் இதையொட்டி அங்கு மேற்கத்தைய சார்பு அரசாங்கம் அமைக்கப்படவில்லை. பெப்ருவரி மாதம் ரஷ்யாவிடம் இருந்து வந்த அழுத்தத்தை ஒட்டி கிர்கிஸ்தான் அப்பகுதியில் இருந்து கடைசி அமெரிக்க விமானத் தளத்தையும் மூடிவிட்டது.

மத்திய ஆசியாவிலும் காகஸஸ் பகுதியிலும் அமெரிக்க-ரஷ்ய போட்டியின் பின்னணியில் கடந்த ஆண்டு தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காசியா பற்றி ரஷ்யாவிற்கும் மேற்கத்தைய சார்பு ஜோர்ஜியாவிற்கும் இடைய நடந்த போர் உள்ளது. நபுக்கோ திட்டம், மற்றும் இப்பொழுது முடிவடைந்துள்ள பகு-திபிலிசி-சேஹன் (BTC) குழாய்த்திட்டங்களும் ரஷ்யாவை வடக்கிலும் தெற்கில் ஈரானையும் தவிர்க்கும் வகையில் ஜோர்ஜியா மூலம் செல்லுகின்றன. அமெரிக்கா நேட்டோவிற்குள் ஜோர்ஜியாவை இணைக்க முயல்கிறது; ஆனால் இதற்கு ஜேர்மனியின் எதிர்ப்பு உள்ளது; ஏனெனில் அது ரஷ்யாவுடன் அழுத்தங்களை தவிர்க்க விரும்புகிறது.

ஜூலை மாதம் ரஷ்யாவும் சீனாவும் தங்கள் மூன்றாவது மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தின --"2009 அமைதிப் பணி" என்ற பெயரில். இதில் உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி நாடு "A" அரசியல் குழப்பம், பிரிவினை வாத எழுச்சி ஆகியவற்றில் விழும் நிலை ஏற்படுகிறது. ரஷ்ய மற்றும் சீனத் துருப்புக்கள், டாங்கிகள், கவச வண்டிகள் ஆகியவை விமானப் படை ஆதரவுடன் அமைதியின்மை பரவுவதை தடுக்க விரைகின்றன. இந்த வலிமையைக் காட்டுதல் வெளிப்படையாகவே அமெரிக்காவிற்கு இப்பகுதியில் மற்றும் "வண்ணப் புரட்சிகள்" பொறுத்துக் கொள்ள முடியாதவை எனக் காட்டுவதற்காக நடத்தப்பட்டவை ஆகும்.

புவிசார் அரசியலில் எண்ணெய், எரிபொருள் மையமாக இருப்பது கடந்த வாரம் சீன-துர்க்மேனிஸ்தான் குழாய்த்திட்டத்தின் திறப்பு விழாவில் நன்கு வெளியாயிற்று. துர்க்மன் ஜனாதிபதி Gurbanguly Berdymukhamedov குழாய்த்திட்டம் "ஒரு வணிகப் பொருளாதார மதிப்பு மட்டும் கொண்டது அல்ல. இது அரசியல் தன்மையையும் கொண்டுள்ளது." என்றார். குழாய்த்திட்டம் "ஆசியப் பாதுகாப்பிற்கு பெரும் அளிப்பு கொடுக்கும் காரணியாக இருக்கும்" என்று அவர் தொடர்ந்து கூறினார். தன்னுடைய புகழாரத்தை சேர்க்கும் வகையில் உஸ்பெக் ஜனாதிபதி இஸ்லாம் கரிமோவ் மகிழ்ச்சியுடன் கூறியது: "தன்னுடைய புத்திசாலித்தன, தொலைநோக்குடைய கொள்கையினால், சீனா உலகப் பாதுகாப்பை உத்தரவாதம் அளிப்பவற்றில் முக்கியமானதொன்றாகப் போய்விட்டது."

உண்மையில், தன்னுடைய பொருளாதார வலிமையைக் காட்டிய விதத்தில் சீனா துர்க்மேனிஸ்தானின் எரிவாயுவில் பெரும் பங்கை அடைந்துள்ளது மற்றய முக்கிய சக்திகளிடன் உள்ள அதன் போட்டி தீவிரமாவதைத்தான் உயர்த்திக் காட்டுகிறது--குறிப்பாக மத்திய ஆசியா மற்றய பகுதிகளில் அமெரிக்காவுடன் என்பதை; இதையொட்டி எதிர்கால மோதல்கள் என்னும் ஆபத்தும் வெளிப்படுகிறது.