World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Great powers sacrifice climate on the altar of profit

இலாபங்களின் சந்நிதிக்கு பெரும் சக்திகள் காலநிலையை பலிகொடுக்கின்றன

Dietmar Henning
21 December 2009

Use this version to print | Send feedback

உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகள் மனிதானால் உருவாக்கப்படும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளனர். வரவிருக்கும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கைத் தரங்கள் கடல் நீர்மட்டம் உயர்தல், புயல்கள், வறட்சி மற்றும் அறுவடை இழப்புக்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

உலகம் வெப்பமயமாதலுக்கு அவசரத் தீர்வு வேண்டும் என்றாலும், கடந்த வாரம் கோபன்ஹேகனில் 193 நாடுகள் பங்கு பெற்ற உலக காலநிலை மாநாடு உலக வளிமண்டல வெப்ப (க்ரின்ஹெளஸ்) வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் விதத்தில் எந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கும் திறமையற்றுப் போயின. மாநாடு பற்றிச் சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் பரந்த பிரிவுகள் கூறிய தீர்ப்பு பேரழிவைக் காட்டுவதாகத்தான் உள்ளன. "எத்தகைய பேரழிவு, வெட்கம், போலித்தனம், பேரழிவு" என்று ஜேர்மனிய செய்தித்தாள் Süddeutsche Zeitung ஆன்லைன் பதிப்பு மாநாடு பற்றிய தகவல்களை வெளியிடுகையில் தொடக்கச் சொற்றொடரைக் கூறியது.

இரு வார விவாதங்களுக்கு பின்னர் மாநாட்டின் பிரதிநிதிகள் எந்த கட்டுப்படுத்துதலும் இல்லாத ஒரு மூன்று பக்க இறுதி அறிக்கையை மட்டுமே கொடுக்க முடிந்தது. உலக வெப்பமயமாதல் தீவிரமடைந்துள்ளதின் ஆபத்தைப் பற்றி அது ஆராய்ந்தது முற்றிலும் போதுமானதாக இல்லை என்று விஞ்ஞானிகள் அது கோடிட்டுக் காட்டியுள்ள இலக்குகளைப் பற்றிக் கூறினர்.

உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த பல சிறு நாடுகள் மூடிய அறைக்குள் கூடிப் பேசினர். இறுதியில் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள் உடன்பாட்டை ஏற்பதில் உறுதியாக இல்லாமல், "கோபன்ஹேகன் ஒப்பந்தம்" பற்றிக் கருத்திற் கொள்ளுவதாக வாக்களித்தனர்.

கடைசி இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட நூறு அரசாங்கங்களின் தலைவர்கள் --அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, சீனப் பிரதமர் வென் ஜியாபோ, ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உட்பட-- சமூகமளித்திருந்தும்கூட தேக்கத்தை முறிக்க முடியவில்லை. இறுதி உடன்பாட்டிற்கு மீண்டும் அமெரிக்க ஜனாதிபதிதான் வழிநெறிகளைக் கொடுத்தார்; அமெரிக்காவில் உள்ள வலதுசாரி அரசியல் வட்டாரங்கள் "இங்கு நடப்பது எதனுடனும் சட்டபூர்வமாக கட்டுப்பட மாட்டார்கள்" எனத் தெரிவித்தார். ஒபாமா அமெரிக்காவின் தன்னல நிலைப்பாடு பற்றி அறிவித்ததுதான் மற்றய முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளாலும் எதிரொலிக்கப்பட்டது.

இறுதிப் பகுப்பாய்வில், முக்கிய பொருளாதார சக்திகளின் விரோதப் போக்குடைய நலன்கள்தான்---குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் என--உடன்பாடு ஏற்படுத்துவதைத் தடுத்தன. கோபன்ஹேகனில் இரு வாரங்கள் நடந்த பூசல்கள் கூடுதலான அளவில் மூலோபாய நலன்கள், வணிகப் போட்டிகள், மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதாரப் போட்டிகள் ஆகியவற்றை தளமாகக் கொண்டிருந்தனவே அன்றி உலகின் காலநிலை மற்றும் சுற்றுச் சூழல் தன்மை பற்றி அல்ல.

முக்கிய தொழில்துறை நாடுகள் தங்கள் கார்பன்டையாக்சைட் வெளியேற்றப் பிரச்சினைகளை முற்றிலும் தத்தம் நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் பொருளாதார, மூலோபாய நிலைப்பாட்டில் இருந்துதான் பார்த்தன. உண்மையில், டேனிஷ் தலைநகரத்தின் விவாதங்களுக்குப் பின் இருந்த மூலோபாயப் பிரச்சினைகள்தான் ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் கணக்கிலடங்காத பல சர்வதேசப் பூசல்களைத் தோற்றுவித்தன.

சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி உலகெங்கிலும் எரிபொருளுக்கான தேவை அடுத்த இருபது ஆண்டுகளில் 50 சதவிகிதத்திற்கும் மேல் அதிகமாகும். ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அது இயற்கை எரிசக்தியை அடையும் நிலையைக் கணிசமாகப் பொறுத்துள்ளது. எனவேதான் அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர்களைப் போரில் செலவழிக்கிறது; இப்போர்கள் உலகின் மிக உற்பத்தித் திறன் நிறைந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களின் மீது அதன் மேலாதிக்கத்தைச் செலுத்தும் நோக்கம் உடையவை.

பாரசீக வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தானில்--மத்திய ஆசியாவின் நுழைவாயில்-- இராணுவ நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலைமையில் அமெரிக்கா தன்னுடைய எரிசக்தி தேவைகளை பெறுவதுடன் நிற்கவில்லை. ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றில் உள்ள அதன் போட்டியாளர்கள் மீது அழுத்தம் செலுத்த ஒரு முக்கியமான நெம்புகோலை அடையவும் முயல்கிறது. மாற்றீட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இந்த நிலத்தடி எரிபொருள்கள் மீதான தங்கியிருப்புத்தன்மையைக் குறைக்கக்கூடும்; இவைதான் இன்னும் உலகின் எரிசக்தி நுகர்வில் 80 சதவிகிதத்தைப் பெற்றுள்ளன. மாசு இல்லாத தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுத்துவதற்குத் தேவையான பில்லியன் கணக்கில் செலவை அமெரிக்க செய்வதில் ஆர்வம் காட்டவில்லை; அதன் போட்டியாளர்களை அது இன்னும் சுதந்திரமாக்கிவிடும்.

நிலத்தடி எரிபொருள்களில் தங்கியிருக்கும் எரிசக்திக்குழுக்கள், தொழிற்துறைகள் ஆகியவற்றின் செல்வாக்கு செலுத்தும் குழுக்கள் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. கார்பன்டை ஒக்சைட் வெளியீட்டில் எந்தக் குறைப்பும் செலவினக்கூறுபாடு என்று அவை கருதி, தங்கள் போட்டித்தன்மையை இலாபங்களைக் குறைத்துவிடத் தடையாக இருக்கும் என்றும் நினைக்கின்றன. எனவே அவை பலமுறையும் தங்கள் வலிமையைப் பயன்டுத்தி அமெரிக்க காங்கிரஸ் வெளியீட்டுக் குறைப்பு நடவடிக்கைகளை திறமையாக செய்யும் சட்டம் இயற்றப்படாமல் சேதத்திற்கு உட்படுத்துகின்றன.

இறுதியாக முக்கியத் தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகள், உலகின் எரிசக்தியில் பாதிக்கும் மேலாக இப்பொழுது நுகர்பவை, காலநிலை மாற்றப் பிரச்சினையை வளரும் நாடுகளுக்கு எதிராக ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன; பிந்தையவற்றின் எரிசக்தி நுகர்வு அவற்றின் தொழில்துறை வளர்ச்சிகளோடு இயைந்து உள்ளது.

கோபன்ஹேகனில் அமெரிக்கா, எழுச்சி பெற்று வரும் மற்றும் வளரும் நாடுகள், குறிப்பாக சீனா, CO2 வெளியீடுபற்றி உறுதியான, கண்காணிப்பிற்கு உட்படக்கூடிய விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியது. 77 வறிய நாடுகளின் பிரதிநிதிகள் அந்த மிரட்டும் முயற்சியை வலுவாக எதிர்த்தன.

கனரகத் தொழில்கள் மீது குறிப்பாக தளம் கொண்டிருக்கும் தொழில்துறை விரிவாக்கத்தைப் பெற்றுள்ள சீனா, தன் தேசிய இறைமை மீறப்படும் என்பதை காட்டி சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுக் கண்காணிப்பு எதையும் ஏற்பதற்கில்லை என்று நிராகரித்துவிட்டது. உலகம் வெப்பமயமாதலுக்கு பழைய தொழில்துறை மேம்பாடு அடைந்துள்ள நாடுகள்தான், புதிதாக வளரும் நாடுகள் அல்ல, என்று அது வாதிடுகிறது. எனவே தங்கள் கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதற்கு வளரும் நாடுகளுக்கு நிதிய ஆதரவு வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. கார்பன் வெளியீடு வரம்புகள் வணிகத் தடைகளைச் சுமத்தக் காரணமாகப் பயன்படுத்தக் கூடும் என்ற கவலையையும் சீனா தெரிவித்துள்ளது; அத்தகைய நிலைப்பாடு அமெரிக்க அரசியல் நடைமுறையில் சில பிரிவுகளால் வாதிடப்பட்டுள்ளது.

தன்னுடைய பங்கிற்கு அமெரிக்கா 2005 ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020 க்குள் கார்பன் டையாக்ஸைடு வெளியீடுகள் 17 சதவிகிதம் குறைப்பதாகக் கூறியுள்ளது. 1997ல் க்யோடா உடன்பாட்டில் நிறுவப்பட்ட தரங்களின் அடிப்படையில்--அதற்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுக்கவில்லை--இது 4 சதவிகிதத்தையும் விட குறைவாகும். போர் மற்ற சமூகப் பிரச்சினைகளைப் போலவே, ஒபாமாவிற்கும் அவருக்கு முன் பதவியில் இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கொள்கைகளுக்கும் இடையே காலநிலை கொள்கையிலும் கணிசமான வேறுபாடு ஏதும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸும், தங்களை பொறுப்புள்ள, சுற்றுச் சூழல் உணர்வுடைய நாடுகளாக, சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் கண்டத்தின் CO2 வெளியீடுகள் 2020க்குள் 30 சதவிகிதம் குறைக்கத்தயார், முன்பு கூறிய 20ல் இருந்து, என்று கூறியுள்ளன. இதைத்தவிர ஐரோப்பிய ஒன்றியம் உச்சி மாநாட்டின் முதல் வாரத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு 7.2 பில்லியன் உதவியளிப்பதாகவும் உறுதி கூறியுள்ளது.

ஆனால் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களை அமெரிக்கா, சீனா போலவே முன்னேற்றுவித்துக் கொள்ள தீவிரமாக உள்ளன. கிட்டத்தட்ட 30 சதவிகித வெளியீட்டுக் குறைப்பு கூட உலக வெப்பமயாமாலை இரண்டு செல்சியஸ் பாகைக்கு குறைக்கப் போதாது என்பதில் பெரும்பாலான விஞ்ஞானிகள் உடன்பட்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கா, சீனா ஆகியவை ஒப்புவமையில் குறைக்க வேண்டும் என்பதையும் தங்கள் நிபந்தனையாகத் தெரிவித்துள்ளன.

நிலத்தடி எரிபொருள் இருப்புக்கள் இல்லாத ஜேர்மனி, பிரான்ஸ் இரண்டும், இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பவை, மாற்றீட்டு தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நம்பகத்தன்மையைக் குறைக்க முயலுகின்றன. இவ்விதத்தில் அவை அமெரிக்காவுடன் மோதலில் உள்ளன. அதே நேரத்தில் அவை தங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு சந்தைகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் கார்பன் பற்றி தரம் அளிக்கும் திட்டம் ஏற்கனவே ஒரு பெரிய பணம் செய்துகொள்ளும் முயற்சியாக மாறிவிட்டது.

கோபன்ஹெனில் நடைபெற்ற காலநிலை மாநாடு அறிவார்ந்த முறையில் வழிகாட்டப்பட்டு, சர்வதே ஒத்துழைப்புடன் முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குள் ஒரு காலநிலை பேரழவைத் தவிர்க்கும் கொள்கையை உருவாக்கி, செயல்படுத்துவது இயலாது என்பதைத்தான் நிரூபித்துள்ளது. உற்பத்தி வழிவகைகள் தனியார் மயத்தில் இருப்பதும், முதலாளித்துவம் தளமாகக் கொண்டிருக்கும் போட்டியிடும் தேசிய அரசுகள் என்ற முறையும் பொது சமூக நலன்கள், தேவைகள் இவற்றின் அடிப்படை ஒரு பகுத்தறிவார்ந்த கொள்கை இயற்றப்படுவதை ஒதுக்கி விடுகின்றன. முக்கிய ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பாவும், காலநிலை பிரச்சினையைப் பயன்படுத்தி தங்கள் பொருளாதார, அரசியல் நலன்களைப் பிரதிபலிக்கும் செயற்பட்டியலைத்தான் சுமத்தப்பார்க்கின்றன.

மிகத் தீவிர வகை எதிர்ப்புக்கள்கூட இந்த தன்னையே அழித்துக் கொள்ளும் கொள்கையை தடுத்து நிறுத்த இயலாதவையாக உள்ளன; இது தவிர்க்க முடியாமல் புதிய போர்களுக்கும், வறுமைக்கும், சுற்றுச் சூழல் பேரழிவிற்கும வகை செய்யும். இதற்கான உண்மையான தீர்வு ஒரு சோசலிஸ்ட் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுத்தப்படுவதில்தான் இருக்கிறது; அது பகுத்தறிவார்ந்த முறையில் சமூகத்தையும் உலகெங்கிலும் உற்பத்தியையும் மனிதகுலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கும் அதில் காலநிலை பேரழவில் இருந்து சுற்றுச் சூழலை பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகள் எடுத்தலும் அடங்கும்.