World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British inquiry underscores Australian complicity in Iraqi war crimes

பிரிட்டிஷ் விசாரணை ஈராக்கிய போர்க் குற்றங்களில் அவுஸ்திரேலியா உடந்தையாயிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

By James Cogan
14 December 2009

Back to screen version

சேர் ஜோன் சில்கோட் தலைமையிலான ஈராக் போர் பற்றிய தற்போதைய பிரிட்டிஷ் விசாரணைக்குழு போர்க்குற்றங்கள், குற்றச்சாட்டுக்களுக்கான அடிப்படை அமெரிக்க மற்றும் பிரிட்டனின் முன்னாள் புஷ் மற்றும் பிளேயர் அரசாங்கங்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக இருந்ததைப் பற்றிய சாட்சியங்களை கேட்டறிந்தது.

உறுதிப் பிரமாணத்தின்கீழ் முன்னாள் அரசாங்க அதிகாரிகளும் இராணுவத் தலைவர்களும் புஷ் பதவியேற்ற தினத்திலிருந்து, புதிய நிர்வாகம் ஈராக்குடன் போர் நடத்துவதில் தீவிரம் காட்டியது நன்கு அறியப்பட்டிருந்தது என்று சாட்சியம் அளித்தனர். நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவையான போலிக்காரணத்தை அளித்தன. சில நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு தயாரிக்கப்படுகையில், ஈராக்கையும் 9/11 கொடூரங்களுடன் பிணைப்பதற்கான போலி நிலையைத் தோற்றுவிக்கும் பிரச்சாரம் நடந்தது. ஏப்ரல் 2002 ல் ஜனாதிபதியின் கிராபோர்ட் பண்ணையில் --ஈராக்கிய படையெடுப்பிற்கு 11 மாதங்களுக்கு முன்பு--டோனி பிளேயர் பிரிட்டன் பங்கு பெறும் என்று புஷ்ஷுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் கூறினார் என்று சில்கோட் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டின் கீழ் பதவியில் இருந்த அவுஸ்திரேலிய லிபரல்-தேசிய கட்சியின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு பரிசீலனை ஈராக்கிற்கு எதிரான தூண்டுதலற்ற போர் திட்டமிடுதல், தயாரிப்பு ஆகியவற்றில் அதுவும் சம உடந்தையாக இருந்தது என்பதை நிரூபிக்கிறது. இந்த "விருப்பமுடையோர் கூட்டில்" ஹோவர்ட் அரசாங்கத்தின் பங்கு பிளேயர் அரசாங்கத்துடன் இணையாகத்தான் இருந்தது.

செப்டம்பர் 11, 2001 ல் ஹோவர்ட் வாஷிங்டனுக்கு அரச பயணமாகச் சென்றிருந்தார். தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் இதற்குப் பதிலடி கொடுக்கும் "எந்த நடவடிக்கைக்கும்" ஆதரவு உண்டு என்று அவர் உடனடியாக அறிவித்தார். மூன்று நாட்களுக்கு பின்னர் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியுடைய ஆதரவுடன் ஹோவர்ட் அரசாங்கம் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்காவுடனான ANZUS இராணுவக் கூட்டின் அடிப்படையில் முதல் தடைவயாக ஒரு பயங்கரவாத அமைப்பான அல் கெய்டாவின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் "அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு" சமம் என்று அறிவித்தது.

பிளேயரைப் போலவே ஹோவர்டும் அடுத்த மாதங்களில் புஷ் நிர்வாகத்திற்கு தவிர்க்க முடியாத அரசியல் பங்கைக் கொடுத்தார். இரு முறை அவர் அமெரிக்காவிற்கு பயணித்து தன்னுடைய அரசாங்கத்தின் ஆதரவை புஷ்ஷின் வலிந்த இராணுவவாதத்திற்கு அறிவித்தார்; அதுதான் உலகெங்கிலும் கவலையைத் தூண்டி, எதிர்ப்பையும் பெருக்கியிருந்தது.

பெப்ருவரி 2002ல் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி, புஷ் நாட்டிற்கு நிகழ்த்திய இழிந்த உரைக்கு ஒப்புதல் கொடுக்க அங்கேயே சென்றிருந்தார் அதில் அமெரிக்க ஜனாதிபதி ஈரான், வட கொரியா மற்றும் ஈராக்கை "தீமையின் மையக்கோடு" என்று முத்திரையிட்டிருந்தார்; இதற்கு அடிப்படையாக மூன்று நாடுகளும் "பேரழிவு ஆயுதங்களை" கொண்டிருந்தன என்று கூறினார். இன்னும் விவாதத்திற்கு உரிய விதத்தில் புஷ் அமெரிக்கா அவற்றிற்கு எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்படும் என்றும் அறிவித்தார். அவருடைய சீற்றம் நிறைந்த வனப்புரையைக் கண்டு எச்சரிக்கையை வெளிப்படுத்தாத உலகின் வெகுசில அரசாங்கங்களில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஒன்றாகும்.

ஜூன் 2002ல், அமெரிக்காவிற்கு ஹோவர்ட் மீண்டும் வந்து புஷ்ஷின் "முன்னரே தாக்கி தனதாக்கி கொண்ளும்" கோட்பாட்டிற்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்; இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இருந்த சர்வதேச உறவுகளின் முழு வடிவமைப்பையும் நிராகரித்து அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் கொடுக்கிறது என்று கருதும் எந்த நாட்டின் மீதும் படையெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்று வலியுறுத்தியது.

இதற்கு அடுத்த மாதத்தில் வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டெளனர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கோலின் பவலுக்கு அருகே வாஷிங்டனில் நின்று போரை தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்கும் முயற்சிகளைக் கண்டித்தார். "ஈராக்கை சமாதானப்படுத்தும் முயற்சி அது தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களைக் கட்டமைக்க தொடர்வதைத்தான் அனுமதிக்கும்" என்று அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையும் அமெரிக்க செய்தி ஊடகமும் அவுஸ்திரேலிய நிலைப்பாட்டிற்கு விளம்பரம் கொடுத்து அமெரிக்க மக்களை புஷ்ஷின் போர்த்திட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு உள்ளது என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாகக் கொண்டனர். உண்மையில் பிரான்ஸ், ஜேர்மனி உட்பட பல முக்கிய சக்திகள் அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச படையெடுப்பைத் தடுக்கும் விதத்தில் ஈராக்கிற்கு ஒரு புதிய ஐ.நா.மேற்பார்வையில் ஆயுத ஆய்வு நடத்தும் வாய்ப்பைப் கொடுத்தன. ஆய்வாளர்கள் 1998ல் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். 2002 ஆகஸ்ட்டை ஒட்டி, சதாம் ஹுசைனின் ஆட்சி, அவர்கள் மீண்டும் வருவதற்கான நிலை குறித்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்ந்தது.

ஆனால் புஷ் மற்றும் பிளேயர் அரசாங்கங்கள் இதை எதிர்கொள்ளும் விதத்தில், ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை என்று நிரூபிக்காவிட்டால் இராணுவ சக்தி பயன்படுத்தப்படும் என்ற வெளிப்படையான தீர்மானத்தை இயற்றுவதற்கு பாதுகாப்புக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்தன.

செப்டம்ர் 7ம் தேதி புஷ்ஷும் பிளேயரும் அமெரிக்க ஜனாதிபதியின் கிராபோர்ட் பண்ணையில் சந்தித்தனர்; பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஐ.நா. தீர்மானங்களை மீறி ஒரு ஈராக்கிய அணுவாயுதத் திட்டத்திற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறினர். அந்தக் கட்டம் வரை போருக்கு ஐ.நா. ஒப்புதலின் தேவை பற்றி அதிக ஆர்வம் காட்டாத ஹோவர்ட் புஷ்ஷிடம் இருந்து தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க, பிரிட்டிஷ் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து நின்றார். செப்டம்பர் 7ம் தேதி நடந்த லிபரல் கட்சிக் கூட்டத்தில் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் "பொதுவான அக்கறை கொண்டுள்ளன" என்று கூறினார்.

ஈராக்கிற்கு எதிரான பல பரபரப்பான தவறான குற்றச்சாட்டுக்களில், பலவும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் அதன் செய்தியாளர் ஜூடித் மில்லர் பரப்பியிருந்த நிலையில், புஷ் ஐ.நா. பொது மன்றத்திற்கு செப்டம்பர் 12ம் தேதி இறுதி எச்சரிக்கை விடுத்தார்; அதில் இராணுவ சக்திக்கு ஒப்புதல் தராவிட்டால் மற்றும் "பொருத்தமற்றதாகப் போய்விடும்" என்று அறிவித்தார்.

தன்னுடைய இரண்டம் நிலை, ஆனால் முக்கியமான போருக்கு ஆர்வலர் என்ற பங்கை ஹோவர்ட் அரசாங்கம் தொடர்ந்து நடத்தியது. மறுநாள், செப்டம்பர் 13ம் தேதி, அவுஸ்திரேலிய தேசிய மதிப்பீடுகள் அலுவலகம் (Australian Office of National Assessments ONA) ஹோவர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த வேண்டுகோளைத் தொடர்ந்து உளவுத்துறை அறிக்கை ஒன்றைத் தயாரித்தது; அதில் ஈராக் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது "முற்றிலும் இயலக்கூடியதே" என்றும் "அணுவாயுதங்களை அது பெறாது" என "நம்பாமல் இருப்பதற்கு காரணமில்லை" என்றும் கூறப்பட்டிருந்தது.

இப்படி போலித்தனமாகத் தயாரிக்கப்பட்ட ONA அறிக்கையை ஹோவர்ட் அரசாங்கம் பயன்படுத்தி 2002 செப்டம்பரில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஈராக்கின் "ஆயுதங்கள் களையப்படாவிட்டால்", அதன் பேரழிவு ஆயுதங்கள் "நேரடியான, மறுக்க முடியாத பெரும் ஆபத்தை அவுஸ்திரேலியா அதன் மக்களுக்கு" கொடுக்கக்கூடும் என்ற இறுதி அழிவுநாள் காட்சியை அளிக்கப் பயன்படுத்திக் கொண்டார். இரு ஆண்டுகளுக்குப் பின் 2004ல் அவுஸ்திரேலிய செனட் குழுவில் நடைபெற்ற சாட்சியங்கள் முந்தைய ONA அறிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட மதிப்பீடுகளைக் கொடுத்தன என்றும் ஈராக்கில் இரசாயன, உயிரியல் அல்லது அணுவாயுதங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் அது அவற்றைத் தயாரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறின.

புஷ்ஷன் இறுதி எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புக் குழு 2002, நவம்பர் 8ம் தேதி தீர்மானம் 1441 ஐ இயற்றியது. ஆனால் அதில் இருந்த சொற்கள் வெளிப்படையாகப் போருக்கு அனுமதியைக் கொடுக்கவில்லை. ஒரு புதிய ஆயுதங்கள் பற்றிய ஆய்விற்கு பணியாவிட்டால் "தீவிர விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று மட்டும் அச்சுறுத்தப்பட்டது; சில நாட்களுக்குள் ஈராக்கிய அரசாங்கம் அதற்கு ஒப்புதல் கொடுத்தது.

படையெடுப்பில் தீவிரமாக இருந்த அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை ஈராக் பேரழிவு ஆயுதங்களை ஐ.நா.ஆய்வாளர்களிடம் இருந்து மறைத்து வைத்துள்ளது என்பதற்கான சான்றுகளை கொண்டிருப்பதால் பாதுகாப்புக் குழு இரண்டாம் தீர்மானத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. பெப்ருவரி 6, 2003ல் அமெரிக்க வேளிவிவகாரச் செயலர் பவல் பாதுகாப்புக் குழுவிற்கு சந்தேகத்திற்குரிய அல்லது வெளிப்படையான தகவல் தோற்றங்களை ஆயுதங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்ற இழிந்த அளிப்பைக் கொடுத்தார்.

ஈராக்கிற்கு எதிராக நம்பும் தன்மையான வாதம் ஏதும் இல்லை என்பதை பவலின் உரை உறுதிபடுத்தியதுடன், வரவிருக்கும் படையெடுப்பிற்கு சர்வதேச எதிர்ப்பை வியத்தகு அளவிற்கு உயர்த்தத்தான் உதவியது. பெப்ருவரி 15 இருந்து 17 க்குள் உலகம் முழுவதும் மாபெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் நாடெங்கிலும் நகரங்களிலும் சிற்றூர்களிலும் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அமெரிக்காவில் பிரிட்டிஷ் தூதராக இருந்த சேர் டேவிட் மன்னிங், உலக எதிர்ப்பிற்கு இடையே புஷ் நிர்வாகம் மார்ச் தொடக்கத்திலேயே ஒரு இரண்டாம் ஐ.நா.தீர்மானம் "இயற்றப்படப்போவதில்லை" என்ற முடிவிற்கு வந்தது என்று சில்கோட் விசாரணைக் குழுவிடம் கூறினார். இதன் பின் பிளேயர், "தூதரக நெறிகள் முடிந்துவிட்டன என்றும் இராணுவ நடவடிக்கை தேவை என்பதை தான் ஏற்க இருப்பதாகவும்" முடிவெடுத்தார்.

ஹோவர்ட் அரசாங்கமும் அதே முடிவிற்கு வந்தது. போரில் தான் பங்கு பெற இருப்பதாக உறுதியளிக்கவில்லை என்று ஹோவர்ட் பல முறையும் அறிக்கைகள் விட்டும், FA-18 போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் SAS சிறப்புப் பிரிவுகள் 2002 கடைசியிலும் 2003 ஆரம்பத்திலும் ஏற்கனவே பேர்சிய வளைகுடாவிற்கு, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டிருந்தன.

பெப்ருவரி 26 அன்று 43 ஆஸ்திரேலிய சர்வதேச சட்ட வல்லுனர்கள் ஹோவர்ட் அரசாங்கத்திற்கு இருக்கும் ஐ.நா.பட்டயத்தின்படி, ஈராக்கிற்கு எதிரான போரில் எவ்விதப் பங்கும் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம் என கருதப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்தனர். புஷ்ஷின் "முன்னரே தாக்கி தனதாக்கிக் கொள்ளும்" கோட்பாடு--ஹோவர்ட் இதற்குத் தொடர்ந்து ஒப்புதல் கொடுத்திருந்தார்--"தற்கால சர்வதேச சட்ட ஒழுங்கின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது" என்றும் குறிப்பாகத் தெளிவுபடுத்தினர்.

பெரும்பாலான அமெரிக்க மக்களுடைய எதிர்ப்பையும் மீறியதைப் போல் சட்ட வல்லுனர்களின் கருத்தையும் ஹோவர்ட் அரசாங்கம் மீறியது. ஜனநாயக நடைமுறைக்கு முற்றிலும் வெளிப்படையான இகழ்வுணர்வை காட்டும் விதத்தில், அவுஸ்திரேலிய பாராளுமன்றம் மார்ச் 8ம் தேதி ஒத்திப் போடப்பட்டது; ஹோவர்டும் அவருடைய மந்திரிசபையும் மார்ச் 20 அதிகாலையில் அவுஸ்திரேலிய துருப்புக்கள் சட்டவிரோத படையெடுப்பில் பங்கு பெறும் என்று முடிவெடுக்கும் வரை மறுபடி கூட்டப்படவில்லை. பின்னர் சான்றுகள் அவுஸ்திரேலிய SAS துருப்புக்கள் ஈராக்கிற்குள் போர்த்துருப்புக்கள் கபினெட் இசைவைப் பெறுவதற்கு 30 மணி நேரத்திற்கு முன்பே போர் நடவடிக்கைகளில் சேர்ந்துவிட்டன என்பதைக் கூறின.

ஈராக்கிய படையெடுப்பின் விளைவு அந்நாட்டை பேரழவிற்கு உட்படுத்தியதுடன் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஈராக்கியர்களின் இறப்பையும் ஏற்படுத்தியதாக இருந்தது. பேரழிவு ஆயுதங்கள் அல்லது செப்டம்பர் 11ல் ஈராக்கிய தொடர்பிற்கான சான்றுகள் ஏதும் இல்லை. போரின் நோக்கம் மத்திய கிழக்கின் நடுவே ஒரு அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுதல் ஆகும்; இதையொட்டி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் இருந்தும் முழு பேர்சிய வளைகுடாவில் இருந்து எண்ணெய் வெளியே செல்லுவதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

ஹோவர்ட் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடன் தன்னுடைய பொருளாதார உறவுகளை விரிவாக்குவதற்காக படையெடுப்பில் அது சேர்ந்தது; எல்லாவற்றிகும் மேலாக அமெரிக்க-அவுஸ்திரேலிய மூலோபாயக் கூட்டைத் தக்க வைக்கவும் இது பயன்பட்டது. தெற்கு பசிபிக் பகுதியில் மேலாதிக்கத்தைத் தொடரவும் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் செல்வாக்கை உயர்த்தவும் அவுஸ்திரேலிய நிதிய உயரடுக்கிற்கு வாஷிங்டனின் தூதரக, இராணுவ ஆதரவு தேவையாகும். இப்பகுதியில் சீனாவின் பெருகிய உறுதிப்பாட்டுத்தன்மை அமெரிக்காவிடம் கான்பெர்ரா நம்பியிருக்கும் நிலையை உயர்த்தத்தான் உதவியது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்கு பற்றிய குற்றம் சார்ந்த பொறுப்பு ஹோவர்டுடன் மட்டும் இல்லாமல் நவம்பர் 2007ல் பதவிக்கு வந்ததில் இருந்து ருட் லேபர் அரசாங்கத்தின் செயல்களாலும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பிரதம மந்திரி கெவின் ருட்டின்கீழ் அரசாங்கம் சிறிதும் இடைவெளி இன்றி ஹோவர்ட் அரசாங்கத்தின் வெளியறவுக் கொள்கையே ஏற்றது. ஆஸ்திரேலிய இராணுவப படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பில் தொடர்ந்து பங்கு பெறுகின்றன. ஆஸ்திரேலிய சிறப்புப் படைகள் உருஸ்கன் மாநிலத்தில் கொலை செய்யும் பிரிவுகளாக செயல்பட்டு அந்நாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்வதை எதிர்ப்பதாகக் கருதப்படுபவர்களை படுகொலை செய்கிறது. கடந்த வாரம் ருட் இன்னும் அதிக துணை இராணுவ கூட்டாட்சிப் போலீசை அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது; இது அவருடைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் இராணுவ "விரிவாக்கம்" ஆப்கானிய மக்களுக்கு எதிராக நடத்தப்படுவதற்கு கொடுக்கும் ஆதரவு ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved