World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US firms lose out in bidding for Iraq oil fields

ஈராக்கிய எண்ணெய் வயல்களுக்கான ஏலத்தில் அமெரிக்க நிறுவனங்களின் இழப்பு

By Patrick Martin
14 December 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க இராணுவம் வெற்றி கொண்டு ஆக்கிரமித்துள்ள நாட்டில்கூட, அமெரிக்க முதலாளித்துவத்தின் சரியும் செல்வாக்கிற்கு தெளிவான அடையாளமாக, சீனா, ரஷ்யா, மலேசியா, அங்கோலா ஆகிய நாட்டின் நிறுவனங்களுடன் சில ஐரோப்பிய பெரும் எண்ணெய் நிறுவனங்களும் ஈராக்கிய எண்ணெய் வயல்களை கண்டுபிடிக்கும் ஆய்வையும், அபிவிருத்திசெய்யும் உரிமைகளில் பெரும்பாலானவற்றையும் பெற்றுள்ளன.

வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஈராக்கிய எண்ணெய்த்துறை அமைச்சகத்தால் போட்டிகள் நிறைந்த ஏலத்தில் இச்சலுகைகளில் பெரும்பலானவற்றை ஐரோப்பிய மற்றும் ஆசிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டன. முன்னைய ஏலம் ஒன்று உட்பட இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பத்து ஒப்பந்தங்களில், அமெரிக்கத் தளமாகக் கொண்ட நிறுவனங்கள் முக்கிய பங்கைக் ஒன்றில்தான் கொண்டுள்ளன; இரண்டாவதில் குறைந்த பங்கைத்தான் கொண்டுள்ளன.

சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனம் (CNPC) பெரும் ஆக்கிரோஷமான முறையில் ஏலம் எடுத்தது. ரோயல் டச்சு ஷெல், ENI (இத்தாலி), பிரிட்டிஷ் பெட்ரோலியம், Statoil (நோர்வே) மற்றும் பிரான்ஸின் Total ஆகியவை ஏலங்களில் வெற்றியை அடைந்தன. மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான மலேசிய எண்ணெய் நிறுவனம் மூன்று என்ற அதிக ஏலங்களைப் பெற்றது; அங்கோலா நாட்டின் எண்ணெய் நிறுவனமான Sonangol இரு ஏலங்களில் வெற்றி அடைந்தது.

மொத்தம் 15 எண்ணெய் வயல்கள் ஏலத்திற்கு விடப்பட்டன; ஆனால் ஐந்திற்கு எவையும் ஏலம் கேட்கவில்லை; ஏனெனில் அவை ஈராக்கின் மத்திய, வடபகுதியில் உள்ளன; இவை கிளச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன அல்லது அரசியலில் உறுதியற்று உள்ளன; எனவே கணிசமான முதலீட்டிற்கு ஆபத்து என்று கருதப்படுகின்றன. ஆறாவது வயலுக்கு ஒரு ஏலம்தான் வந்தது. நாட்டின் தெற்கே, பஸ்ராவைச் சுற்றி இருக்கும் எண்ணெய் வயல்களுக்குத்தான் அதிக ஆர்வம் காட்டப்பட்டது.

நிரூபிக்கப்பட்ட இருப்புக்கள் கிட்டத்தட்ட 40 பில்லியன் பீப்பாய்கள் இருப்பவற்றைத்தான் எண்ணெய் அமைச்சரகம் ஏலத்திற்கு விட்டது; இது ஈராக்கின் மொத்த 115 பில்லியன்களில் மூன்றில் ஒரு பகுதியாகும். உலகின் மூன்றாம் மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை ஈராக் கொண்டுள்ளது; ஈரானுக்கும், செளதி அரேபியாவிற்கும் அடுத்த நிலையில் இது உள்ளது. ஆனால் இவற்றுள் பலவும் 25 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன; அதாவது சர்வதேச முதலீட்டு மூலதன வரத்திற்கான பொதுத்தடைகள் வருவதற்கு முன்பு. ஏற்கனவே அறியப்பட்டு இருக்கும் பரந்த இருப்புக்களை போலவே இதுகாறும் கண்டுபிடிக்கப்படாத இருப்புக்களும் நாட்டில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உற்பத்தி-பகிர்வு என்று --அதில் இலாபத்தின் பெரும்பகுதி சர்வதேச நிறுவனங்களுக்கு சென்றிருக்கும்-- தொடக்கத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் திட்டமிட்டதை உதறித்தள்ளிவிட்டு எண்ணெய் அமைச்சரகம் 20 ஆண்டுப் பணி ஒப்பந்தங்களை நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது; இதில் நிறுவனங்கள் ஒரு பீப்பாய்க்கு இவ்வளவு என வரையறுக்கப்பட்ட தொகையைப் பெறும்; எண்ணெய் விலையில் ஏற்றம் இருந்தால் அது ஈராக்கிய அரசாங்கத்திற்கு சேரும்.

ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு $1.35 முதல் $1.50 வரை ஒப்புக் கொண்டுள்ளனர்; சந்தை விலை இப்பொழுது $75 பீப்பாய்க்கு என்று உள்ளது. எண்ணெய் வள மந்திரி ஹுசைன் ஷரிஸ்டானியின் கருத்துப்படி இந்த ஒப்பந்தங்கள் ஈராக்கிற்கு அதன் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய 2.5 மில்லியன் நாள் ஒன்றிற்கு என்பதில் இருந்து 2016 ஐ ஒட்டி நாள் ஒன்றிற்கு 12 மில்லியன் பீப்பாய்கள் வரை உயர்த்தும்; இது அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன்பு இருந்த உற்பத்தி அளவை விட இரு மடங்காகும், இன்று செளதி அரேபியா உற்பத்தி செய்வதை விட அதிகமாகும்.

ஒற்றை மிகப் பெரிய எண்ணெய் வயல், தெற்கில் உள்ள மான்ஜூன், 12.58 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மொத்தத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, Shell, Petronas இரண்டின் கூட்டு முயற்சியில் பெறப்பட்டது; அவை Total, CNPC என்னும் போட்டி அமைப்புக்களை விட குறைந்த ஏலத்தொகையை குறித்தது. Shell-Petronas கூட்டு நிறுவனம் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய 45,900 பீப்பாய்கள் நாள் ஒன்றிற்கு என்பதில் இருந்து 1.8 மில்லியன் பீப்பாய்கள் என்று 2019க்குள் உயர்த்துவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

இரண்டாவது மிகப் பெரிய வயலான West Qurna Phase 2, கிட்டத்தட்ட 12 பில்லியன்களை இருப்பாக கொண்டுள்ளது, ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான Lukoil தலைமையிலான ஒரு கூட்டிற்கு கொடுக்கப்பட்டது. Lukoil முன்பு 1997ல் West Qurna Phase 2 ஐ வளர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது; ஆனால் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் பின்னர் அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டார்.

Halfaya வயலைப் பொறுத்தவரையில், 4.1 பில்லியன் பீப்பாய்கள் இருப்பைக் கொண்டது, Petronas, CNPC மற்றும் Total ஆகியவை வெற்றிகரமாக ஏலத்தைப் பெற்று மற்றய ஐரோப்பிய, ஆசிய நிறுவனங்களை தோற்கடித்தன. இதன் உற்பத்தி நாள் ஒன்றிற்கு 3,100 பீப்பாய்கள் என்பதில் இருந்து 2022 க்குள் நாள் ஒன்றிற்கு 535,000 பீப்பாய்கள் என்று உயரும்.

அமெரிக்கவை தளமாகக் கொண்ட எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் பெறாதது எதிர்பார்க்கப்பட்டதுதான்; ஏனெனில் அவற்றுள் ஏழு பதிவு செய்து, பங்கு பெறக் கட்டணம் செலுத்தியிருந்தாலும், ஒன்றுதான் சமீபத்திய ஏலத்தில் பங்கு பெற்றது. ExxonMobil மற்றும் Occidental Petroleum என்னும் இரு அமெரிக்க நிறுவனங்கள் முந்தைய ஏலங்களில் வெற்றி பெற்றன.

இதற்கு முன்னதாக கோடையில் எடுக்கப்பட்ட முடிவில், BP மற்றும் CNPC இரண்டும் உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயலான Rumaila வை செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றன. ENI, Occidental Petroleum மற்றும் Korea Gas ஆகியவை கடந்தமாதம் Zubayr வயலை வளர்க்கும் திட்டத்தில் கையெழுத்திட்டன; இதில் 4.1 பில்லியன் பீப்பாய் இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ExxonMobil மற்றும் Shell இரண்டும் West Qurna Phase 1 என்று 8.6 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடைய வயலுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டன.

தொழில்துறை பகுப்பாய்வாளர்கள் அமெரிக்க நிறுவனங்களின் தோல்விக்கு இரு முக்கிய காரணங்களை மேற்கோளிட்டுள்ளனர். ஐரோப்பிய-ஆசிய கூட்டு நிறுவனங்கள் தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒப்புமையில் குறைந்த தொழிலாள செலவினங்களையும் இணைக்க முடிந்தது; இதையொட்டி அவை பீப்பாய்க்கு குறைவான கட்டணத்தை ஏற்க முடிந்தது.

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கில் அவை எதிர்கொள்ளும் பாதுகாப்புச் செலவினங்களுக்காக அதிக தொகையின் தேவையை ஈடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இதற்குக் காரணம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரந்த மக்கள் விரோதம் இருப்பதுதான். ஈராக்கில் எந்த அமெரிக்க நிறுவனம் நடத்தும் அமைப்பும் கிளச்சியாளர் தாக்குதலுக்கு அதிகமான இலக்கைக கொண்டிருக்கும்; ஒரு வெற்றிகரமான தாக்குதல் என்பது மகத்தான இழப்புக்களை ஏற்படுத்திவிடும்.

ஈராக்கின் மகத்தான எண்ணெய் இருப்புக்கள் நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றும் புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் முக்கிய காரணியாக இருந்தன. துணை ஜனாதிபதி ரிச்சார்ட் ஷெனியின் எரிசக்தி படைப் பிரிவு, 2001ல் மூடிய கதவுகளுக்குப் பின்னே கூட்டங்களை நடத்தியது, வருங்கால அமெரிக்க எண்ணெய் தேவைகளை நிர்ணயிப்பதற்கு ஆதராமான ஒரு பகுதியாக ஈராக்கின் வரைபடங்களை நன்கு ஆராய்ந்திருந்தது. 1972ல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கில் இருந்து மற்றும் பல சர்வதேச நிறுவனங்களுடன் வெளியேற்றப்பட்டன; அப்பொழுது பாத்திஸ்ட் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நாட்டின் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கியது.

ஈராக்கில் எண்ணெய் உற்பத்திக்கான செலவு மிகக் குறைவாகும்; கிட்டத்தட்ட $1.50ல் இருந்து $2.25 வரை ஒரு பீப்பாய்க்கு என்றிருக்கிறது; இது செளதி அரேபியாவுடன் போட்டித் தன்மையை கொண்டுள்ளது. கனடாவின் தார் மணல் பகுதிகளில் $20 ஒரு பீப்பாய்க்கு என்பதுடன் ஒப்பிடப்பட வேண்டும்; அதேபோல் பெரும்பாலான கடல்பகுதி எண்ணெய் எடுத்தலில் உள்ள செலவுகளுடனும் ஒப்பிடப்பட வேண்டும்; மெக்சிக்கோ வளைகுடாவில் அவ்வாறுதான் நடைபெறுகிறது. இதில் முக்கிய இடர்பாடு காலம் கடந்துவிட்ட கருவிகளுக்குப் பதிலாக புதிய கருவிகளைக் கொண்டு வருவதுதான்; ஏனெனில் நீடித்த பொருளாதாரத் தடைகளை அடுத்து கருவிகள் பல ஆண்டுப் போர்கள், உள்நாட்டுப் போர்கள் ஆகியவற்றால் அழிந்துவிட்டன அல்லது காலம் கடந்துவிட்டன.

ஈராக்கின் எண்ணெய்வள மந்திரி ஷரிஸ்டானி அரசாங்கம் $8 பில்லியனுக்கும் மேலாக உற்பத்தித்திறனை அதிகரிக்க செலவழித்துள்ளதாகவும், இன்னும் $50 பில்லியன் தேவைப்படுகிறது என்றும் அதற்கு உலக எண்ணெய் தொழிலை அது நாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தங்கள் தற்பொழுதுள்ள பாதுகாப்பு பிரச்சினைகளால் ஆபத்து நிறைந்துள்ளவை என்பதோடு, சர்வதேச நிறுவனங்களின் சட்டபூர்வ நிலைப்பாடும் உறுதியாக இல்லை. வாஷிங்டனில் இருந்து இடைவிடாமல் தூண்டப்படும் நிலையில், ஈராக்கிய பாராளுமன்றம் எண்ணெய் தொழிலைக் கட்டுப்படுத்த சட்டத்தை இயற்றவில்லை; எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சட்டபூர்வப் பாதுகாப்பும் கொடுக்க முடியவில்லை.

குர்திஷ் பிராந்திய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு நாடுகளின் ஆய்வு நிறுவனங்களை தன்கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதிகளுக்கு ஒருதலைப்பட்சமாக அழைத்தது. இப்பொழுது அதைத்தான் தேசிய அரசாங்கம் செய்துள்ளது; இதையொட்டி வெளிநாட்டு முதலீட்டிற்கு மகத்தான தெற்கு எண்ணெய் வயல்கள் திறந்துவிடப்படும்.