World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The NPA pursues right-wing alliances for France's regional elections

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி பிரான்சின் பிராந்திய தேர்தல்களில் வலதுசாரிக் கூட்டுக்களை பின்பற்றுகிறது

By Anthony Torres
7 December 2009

Back to screen version

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) க்கும் ஆளும் முதலாளித்துவ இடது கட்சிகளுக்கும் இடையே மார்ச் 2010 பிராந்தியத் தேர்தல்களில் கூட்டணிக்கான நோக்கங்கள், "இடது" என்ற நிறுவலுடன் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு NPA விரைவில் வளர்ச்சியுற்று வருவதை நிரூபிக்கின்றன. இலையுதிர்காலத்திலிருந்து, NPA இந்தக் கூட்டிற்கான விவரங்களை முடிவு செய்ய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது --அதாவது இடது கட்சி (PG, முன்பு Jean-Luc Melenchon ல் தலைமையில் PS சோசலிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்தது) மற்றும் PCF எனப்படும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன்.

நவம்பர் 7-8ல் NPA இன் தேசிய அரசியற் குழு இக்கட்சிகளுடன் "ஒரு தேசிய உடன்பாட்டிற்கு" ஆதரவை 66 சதவிகித வாக்குகளில் கொடுத்தது. முதல் சுற்று வாக்குப் பதிவில், NPA "சோசலிஸ்ட் கட்சி, Europe-Ecology அளித்த நபர்களில் இருந்து வேறுபட்ட" நபர்கள் கொண்ட பட்டியலை கொடுக்கும். இதன் பின் இரண்டாம் சுற்றில் "ஜனநாயக முறையில் இணைப்புக்கள்" இருக்கும்; அது PS, NPA இன்னும் பிற கூட்டுக் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் விகிதத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். NPA இன் தேசிய உடன்பாடு அடிப்படையில் அக்டோபர் 28 ல் இடது முன்னணி நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட பொருளுரையைத்தான் காட்டியுள்ளது.

இந்த உடன்பாடு PS ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் நிர்வாகங்களில் NPA பங்கு பெறும் என்று உறுதி செய்கிறது; NPA ஒரு சுயாதீன அமைப்பு என்ற கூற்றுக்கள் இருந்தாலும், "சமூகத் தாராள" PS கொள்கைகளைப் பற்றி நிறைய குறைகூறல்களை இது செய்திருந்தாலும், அதாவது தடையற்ற சந்தைக் கொள்கைகளைப் பற்றி இருந்தபோதிலும், உடன்பாடு இப்படித்தான் உள்ளது.

இந்த நடவடிக்கையை எடுத்தபின், NPA உடனடியாக பிரச்சினையை மறைக்கும் விதத்தில் இடது முன்னணி அறிக்கையில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர முயன்றது. பிராந்திய நிர்வாகிகளாக தான் பங்கு பெறுவது "PS மற்றும்/அல்லது Europe Ecology ஆதிக்கம் கொண்டிருக்கும் நிர்வாகிகள் வடிவமைப்பிற்குள் இயலாது என்றும், அவர்கள் தாராளவாதக் கொள்கையை மாற்றி ஏற்றுக் கொள்ளும் கொள்கையை தொடர்வதுதான்" இதற்குக் காரணம் என்றும் NPA அறிக்கை அறிவித்துள்ளது.

இது PS இடமிருந்து சுயாதீனமாக இருப்பதைக் காட்டிக் கொள்ளும் ஒரு போலி முயற்சியாகும்; ஏனெனில் இது கீழ்க்கண்ட வினாவை எழுப்புகிறது: PS, PCF அடங்கி இருக்கும் ஒரு கூட்டணியில் ஒரு தடையற்ற சந்தைக் கொள்கையைத் தவிர வேறு எந்தக் கொள்கை இருக்க முடியும்? இக்கட்சிகள் பிரான்சுவா மித்திரோன் (1981-1995) ஜனாதிபதிக் காலத்தில் மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் (1997-2002) காலத்தில், கடும் சிக்கன கொள்கைகளைச் செயல்படுத்தியது நன்கு அறியப்பட்டதுதான். கடந்த ஆண்டு நிதிய நெருக்கடியின் துவக்கம், ஜூன் 2009ல் ஐரோப்பியத் தேர்தல்களில் PS தோற்றதைத் தொடர்ந்து, PS ன் குறிப்பிடத்தக்க பிரிவு கட்சியின் பெயரில் இருந்து "சோசலிஸ்ட்" என்பதைக் கூட அகற்ற விரும்பியது!

இன்னும் நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், NPA ஒரு PS நிர்வாகத்தில் பிந்தையதின் கொள்கை அதன் தாராளவாத வலதுசாரித் தன்மையினால் அதிக குறைகூறலைப் பெறாத வரையில் பங்கு பெறும். ஆனால் பூசல்கள் ஏதேனும் எழுந்தால், அது PS பற்றிக் குறைந்த அளவு குறைகூறும் தன்னுடைய உரிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

NPA இன் திருத்தம், PCF தலைவர் Marie-George Buffe, PG யின் Mélenchon போன்ற தலைவர்களுக்கு ஏற்க இயலவில்லை; இவர்களுடைய கட்சிகள் இன்னும் வெளிப்படையான கூட்டை PS உடன் கொள்ளுவதை நம்பியுள்ளன.

PCF ன் தேசியச் செயலாளரான Buffet தன்னுடைய கருத்துக்களை L'Humanite யில் நவம்பர் 6ம் தேதி, NPA க்கு அழுத்தம் கொடுப்பதற்காக வெளியிட்டுள்ளார்: "இடது முன்னணியின் நோக்கம் உயர்ந்த இலக்குகளுடைய இடதுகளை மக்கள் நலனுக்காக ஒன்றுபடுத்துவது ஆகும். இரண்டாம் சுற்றில் வலதை ஒன்றுபட்டுத் தாக்கி நம் கருத்துக்களை முன்னேற்ற பெரும்பான்மையை அமைப்போம். ஏனெனில் NPA உடைய ஒலிவியே பெசன்ஸநோவைப் போல் இல்லாமல், நாங்கள் ஒன்றும் "ஒரு நல்ல இடது எதிர்ப்பா" என்ற பிரச்சினை அல்ல இது என்று நினைக்கிறோம்; அதாவது பிராந்தியத் தேவைகளுக்கு உகந்ததா என்று இல்லமால் இடது பெரும்பான்மைகளுக்கு உகந்ததா எனக் காண்கிறோம்."

நவம்பர் 16ம் தேதி இடது முன்னணிப் பிரதிநிதிகள் NPA உடன் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்களுக்கு வரவில்லை.

ஒரு நவம்பர் 22 ல் வெளிவந்த கட்டுரையில், NPA இடது முன்னணி நிராகரிக்கும் அதன் முன்னைய கருத்துக்களுக்கு திரும்பியது: "பிராந்திய நிர்வாகிகள் குழுவில் பங்கு பெறும் நிலை என்பது கொள்கைகள் உண்மையிலேயே செயல்படுத்தப்படுவதை முடிவெடுக்கும் அரசியல், சமூக சக்திகளைத் தான் நம்பியுள்ளது....எனவே PS அல்லது Europe-Ecology ஆதிக்கம் உடைய அமைப்பில் பங்கு பெறுவதற்கு நாங்கள் மறுக்கிறோம்; அது ஒரு தடையற்ற சந்தைக் கொள்கையை செயல்படுத்தும்; முதலாளிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைகளை ஒட்டிச் செயல்படும்."

NPA பெரும்பான்மையினால் நவம்பர் 25ம் தேதி இயற்றப்பட்ட கொள்கை A இந்த வலதிற்கான சலுகையை உறுதிபடுத்தியது: "இத்தகைய ஜனநாயக ரீதியான இணைப்புக்கள், நம் தேர்தல் சட்டம் எங்கு 5 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் உள்ளனவோ அங்கு அனுமதிப்பதை, MoDem [பிரான்சுவா பேய்ரூவின் தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி] உடன் உடன்பாடு கொண்டிராத இடது கூட்டணிப் பட்டியல்களுடன் சேர்ந்துதான் முன்னேற்றுவிக்க முடியும்."

இந்த தோல்விக்குப் பின்னரும் NPA, இடது முன்னணியுடன் உடன்பாட்டிற்கு வாய்ப்பை மூடிவிடவில்லை. "வரவிருக்கும் வாரங்களில் NPA விவாதங்களைத் தொடரும்; அத்தகைய கொள்களுக்கு ஆதரவா இருக்கும் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தப் பார்க்கும். PCF தலைமை முன்வைத்துள்ள வடிவமைப்பை மாற்றி எடுத்துக் கொள்ளுவதோ அல்லது தனியே செயல்படுவதோ, எங்கள் கொள்கை அல்ல."

இப்பேச்சுவார்த்தைகள் NPA யின் அடிப்படைத் தன்மைக்கு எதிராகச் செல்லுபவை; இது பெப்ருவரி 2009ல் LCR எனப்படும் NPAயின் முன்னோடி அமைப்பிற்கு எதிரானது. NPA நிறுவன மாநாட்டின் முக்கிய கருத்துப் பிரச்சினை ட்ரொட்ஸ்கிசத்துடன் LCR தொடர்பு பற்றிய எஞ்சியிருப்பவற்றை நிராகரித்தல் ஆகும்; அதுதான் அரசாங்கக் கட்சிகளுடன் ஒத்துழைக்க வகை செய்யும் என்று அது கருதியது. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயப் பிரச்சினை எப்படி இடது கட்சியுடன் (PS), மற்றும் PCF ஆகியவற்றுடன் உடன்பாடுகளை எளிதாக்கலாம் என்பதாகும்; அவற்றைத்தான் NPA தன்னுடைய மாநாட்டிலேயே துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்க அனுமதித்தது.

ஜூன் 2009 ஐரோப்பியத் தேர்தல்களில் NPA சுயாதீனமாகப் போட்டியிட்டது; PCF, PG ஆகிய இடது முன்னணியுடன் உடன்பாட்டைக் கொள்ள மறுத்தது. NPA பெற்ற முடிவுகள் மோசமாயின, இடது முன்னணிக்குப் பின்னே 4, 6 சதவிகித வாக்குகளில் நிறுத்தியது. ஐரோப்பிய தேர்தல் பின்னடைவு நிறுவன மாநாட்டின் மத்திய முன்னோக்கை நியாயப்படுத்த உதவியது --அதாவது PCF ஸ்ராலினிசவாதிகள், இடது முன்னணியின் சமூக ஜனநாயகவாதிகளுடன் நெருக்கமாக வேண்டும் என்பதை.

பேச்சுவார்த்தைகளே ஒரு செயற்கைத் தன்மை கொண்டவை; NPA க்கும் இடது முன்னணிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த பிணைப்புக்களை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. NPA உடைய கணிசமான பிரிவு, Christian Piquet ன் தலைமையில் ஐக்கிய இடதில் ஒரு சிறுபான்மை உண்மையில் இடது முன்னணிக்குள் செயல்புரிகிறது. ஆனால் நிறுவன மாநாட்டில் NPA யின் தேசியத் தலைமைக்கு உத்தியோகபூர்வ அனுமதி கேட்டு வாங்கியபின்தான் இப்போக்கு நடத்தப்பட்டுள்ளது--அங்கு PCF, PG உடன் அணுகுமுறை பற்றி பிரதிநிதிகள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால் அதன் பல பிராந்தியப் பிரிவுகளின் மீது ஒரு தேசிய இயக்கு நெறியை NPA சுமத்துமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இவை தங்கள் விருப்பிற்கு ஏற்ப இடது முன்னணி மற்றும் PS உடன் பிராந்தியத்திற்கு ஏற்ப உடன்பாட்டைக் காணக்கூடும்.

NPA இன் வலதிற்கு எதிரான எதிர்ப்பின் செயற்கைத்தன்மையும் NPA-இடது முன்னணி தொடங்கும் அதன் முயற்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. இடது முன்னணிக்கு வலதுடனான உடன்பாடுகளில் கொள்கையளவு எதிர்ப்பு ஏதும் கிடையாது. 2008 முனிசிபல் தேர்தல்களில் பல கூட்டுப் பட்டியல்களில் PCF இணைந்து பங்கு பெற்றுள்ளது--குறிப்பாக Lille, Dijon ஆகியவற்றில்.

PS ஐப் பொறுத்தவரையில் வலதுப் பிரிவு ஒன்றுடன் கூட்டு என்பது இன்னும் கூடுதலான முகற்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 2004 பிராந்தியத் தேர்தல்களில் இது 22 பிரெஞ்சு மெட்ரோபாலிடன் பகுதிகளில் 20ன் மீது கட்டுப்பாட்டை வெற்றி கொண்டது. ஆயினும்கூட 2007 ஜனாதிபதித் தேர்தல்களிலும், 2009 ஐரோப்பியத் தேர்தல்களிலும் PS தோற்றது. இந்த பிராந்தியங்களை தக்க வைத்துக் கொள்ள PS மிகப்பரந்த தேர்தல் கூட்டுக்களைக் கொள்ள வேண்டும், Modem உடன் மற்றும் பசுமைவாதிகளுடனும் கூட (நீண்டகால PS உடனான நட்பு அமைப்புக்கள்); அதுதான் PS தலைமையில் அதிகமாக விரும்பப்படுகிறது.

NPA இந்த நிலைப்பாட்டின் மீது கொண்டுள்ள அணுகுமுறை PS மற்றும் வலது கட்சிகளுக்கும் காட்டும் பேச்சளவு எதிர்ப்பின் பாசாங்குத்தனம் பற்றி ஒரு காட்சியை கொடுக்கிறது. ஒரு அறிவிப்பில் PS-Bayrou கூட்டு என்பது "இத்தாலியில் பேரழவிற்கு வழிவகுத்த அதே காட்சியைத்தான் கொண்டுவரும். மத்தியவாத பிரோடியுடன் சேர்ந்து கொண்டு இடது முதலில் பெர்லுஸ்கோனியை தோற்கடித்தது, பின் மக்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் இரண்டாம் முறை பெர்லுஸ்கோனி வருவதற்கு வகை செய்தது. இன்று இத்தாலிய பாராளுமன்றத்தில் ஒரு இடது பிரதிநிதி கூட இல்லை."

இத்தாலிய உதாரணம் அடிப்படையானது; ஏனெனில் இது NPA கூட்டுக்களை அமைக்க முயல்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அதுவும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதில்தான் முடியும் என்பதை நன்கு அறிந்தும். 2006 தேர்தல் நேரத்தில் Rifondazione Communista, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (PdCI) பசுமைவாதிகளுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ஏப்ரல் 14, 15 2008 ல் இதே கட்சிகள் சரிந்தன, பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்கு தேவையான வாக்குகளைப் பெறக் கூட இயலவில்லை.

இந்த இரு தேர்தல்களுக்கும் இடையே இருந்த இரண்டு ஆண்டுகளில் Rainbow Left கூட்டாட்சியில் இருந்த கட்சிகள் தீவிரமாக ரோமனோ பிரோடி அரசாங்கத்தில் பங்கு பெற்று, அவருடைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கும் முழு ஆதரவைக் கொடுத்தன. ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் துருப்புக்களை பிரோடி அரசாங்கம் அனுப்பியதோடு ஓய்வூதிய நிதியங்களைத் தாக்கியதின் மூலம் பொது பற்றாக்குறையையும் குறைத்தது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் Rainbow Left கூட்டணியின் ஆதரவைப் பெற்றன; அதற்கு கொடுக்கப்பட்ட காரணம் அது ஒன்றுதான் சில்வியோ பெர்லுஸ்கோனி அதிகாரத்திற்கு மீண்டும் வருவதைத் தடுக்கும் வழியாகும். பிரோடி அரசாங்கத்தின் மிகத் தீவிர வலதுசாரிக் கூறுபாடுகள் தங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை சுமத்தியபோது, "இடது" என்று அழைக்கப்படுபவை இக்கொள்கையை ஏற்று தம்மைத் தேர்ந்தெடுத்த வாக்களார்களை முதுகில் குத்தின.

NPA பிரோடி அரசாங்கத்தையும் அதையொட்டி உட்குறிப்பாக NPA யில் உள்ள இத்தாலிய இணைச் சிந்தனையாளர்களையும் 2007ல் இருந்து பப்லோயிட்டுகள் அமைப்பான Sinistra Criica வில் மறுபடியும் இணைந்திருப்பது பற்றி குறைகூறியிருப்பது, அடிப்படையில் ஆக்கமற்ற செயலாகும். இத்தாலிய பப்லோயிட்டுக்கள் ஸ்ராலினிச கட்சியான Rifondazioni Communista உடன் பங்கு கொண்டனர்; பிந்தையது பிரோடி கூட்டணியின் முக்கியக் கூறுபாடு ஆகும். இன்று NPA வும் இத்தாலிய பப்லோயிட்டுக்கள் போலவே செயல்பட விரும்புகிறது: பிரெஞ்சு ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் கூட்டணிக்கு தயாராகிறது; பிந்தையதின் நோக்கம் ஒரு வலதுசாரி அரசியல் வேலைத்திட்டத்திற்காக PS ஐ மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved