World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama officials drop "withdrawal" ruse

US in Afghanistan to stay

"திரும்பச் செல்லுதல்" என்னும் பேச்சையே ஒபாமா அதிகாரிகள் கைவிடுகின்றனர்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து தங்கியிருக்கும்

Tom Eley and Barry Grey
8 December 2009

Use this version to print | Send feedback

West Point ல் ஒரு வாரம் முன்பு ஆப்கானிஸ்தானில் பெரும் போர் விரிவாக்கத்தைக் கோடிட்டு தன்னுடைய உரையை ஜனாதிபதி நிகழ்த்துகையில், அவர் ஜூலை 2011 ல் ஆரம்பிக்க இருக்கும் படைகளை திரும்பப் பெருவதற்கு முன் நடக்கவிருப்பதாக இதை அறிவித்தார். இந்தக் குறுகிய கால "விரிவாக்கம்" மற்றும் படைகள் விரைவில் திரும்பப் பெறப்படும் என்ற கருத்து முற்றிலும் எதிராக மாறுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த அவகாசமே போதுமானதாக இருக்கிறது.

போர் நீடித்தலைக் குறைப்பதற்கு விரிவாக்கம் செய்வது ஒரு வழிவகை என்று ஒபாமா இழிந்த வகையில் காட்டியுள்ளது அவருடைய உரையில் உள்ள பல பொய்களில் ஒன்றாகும்; உரையில் அவர் அமெரிக்க வன்முறைப் பெருக்கம் மற்றும் கொலை செய்தல்களை ஆப்கான் மக்களைக் காப்பாற்றுதல் மற்றும் அவர்களுடைய சுதந்திரத்தை காத்தல் என்ற ஒரு தன்னலமற்ற முயற்சியாகச் சித்தரிக்க முற்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அல்லது வேறு எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பதில் அமெரிக்காவிற்கு அக்கறை இல்லை என்ற கூற்றும் அடங்கியுள்ளது.

திரும்பப் படைகளை கொண்டு வருவதற்கு ஒரு கால அட்டவணையை ஒபாமா குறிப்பிட்டிருப்பதும் நிர்வாகத்தின் தாராளவாத ஆதரவாளர்களுக்காக ஒரு அரசியல் மறைப்பு ஒன்றை அளிக்கும் நேர்மையற்ற முயற்சிதான்; போருக்கு வெகுஜன எதிர்ப்பு பெருகியிருப்பதைச் சமாளிக்கும் முயற்சிதான். உண்மையில், திங்களன்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளதுபோல் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் அளித்திருக்கும் இராணுவத் திட்டத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஏற்றுள்ளார். மக்கிரிஸ்டல் "மூன்று மாத காலம் வெள்ளை மாளிகை பூசல் பற்றி பரிசீலித்தபின் பெரிதும் மாறாமல் உள்ள போர் மூலோபாயத்தைத்தான் செயல்படுத்துவார்" என்று செய்தித்தாள் எழுதியுள்ளது.

ஒபாமாவின் உயர்மட்ட அதிகாரிகள் வெஸ்ட் பாயின்ட் உரைக்குப் பின் வந்த வாரத்தில் விரைவில் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற கருத்து எதையும் நிராகரித்துள்ளதுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தன்மை நீடித்து இருக்கும் என்றுதான் வலியுறுத்தியுள்ளனர்.

உரை முடிந்த சில நிமிஷங்களுக்குள்ளேயே நிர்வாக அதிகாரிகள் விரிவாக்கம் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற வகை செய்யும் என்ற ஒபமாவின் கருத்தில் இருந்து பின்வாங்கினர். ஜூலை 2011 தேதி பற்றி செய்தி ஊடகத்தின் குறைகூறல்கள் மற்றும் குடியரசு, ஜனநாயகக் கட்சியின் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் அது பற்றித் தாக்கியது ஆகியவை பற்றி விடையளிக்கும் விதத்தில் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதின் உட்குறிப்புக்கள் பற்றி நிர்வாகத்திற்குள் இருக்கும் சில கூறுபாடுகள் கவலை கொண்டிருக்கும் நிலைப்பாடு நிர்வாகம் வலதில் இருந்து குறைகூறுபவர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அவர்களை மெளனமாக்கியுள்ளது.

போர் எதிர்ப்பு உணர்வு என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு நிர்வாகம் இகழ்வைத் தவிர வேறு எதையும் கொண்டிருக்கவில்லை.

உரை முடிந்த மறுதினமே வெளிவிவகாரச் செயலர், ஹில்லாரி கிளின்டன், பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் அட்மிரல் மைக்கேல் முல்லன் ஆகியோர் காங்கிரஸில் விரிவாக்கம் பற்றிச் சாட்சியம் அளித்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குறைப்பு என்பது "போர்க்கள நிலைமையை ஒட்டி இருக்கும்" என்னும் ஒபாமாவின் மதிப்பீட்டை மூவரும் வலியுறுத்தினர்.

இவ்விதத்தில் ஆணைகளும் மாறுபட்ட நிராகரிப்புக்களும் ஒபாமாவின் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவச் செய்தித் தொடர்பாளர்களிடம் இருந்து வாரம் முழுவதும் தொடர்ந்தது. ஞாயிறன்று இது உச்சக்கட்டத்தை அடைந்தது; அப்பொழுது ஒபாமாவின் தேசியப் பாதுகாப்புக்குழு முக்கிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தோன்றி அமெரிக்க இராணுவம் 2011 ஜூலைக்குள் திரும்பாது, அல்லது அதற்கு முன்பும் திரும்பாது என்று உறுதியான அறிக்கைகளைக் கொடுத்தது.

NBC யின் "Meet the Press" ல் பேசிய கிளின்டன், "நாங்கள் ஒன்றும் இப்பொழுது வெளியேறும் மூலோபாயம் பற்றிப் பேசவில்லை." என்றார்.

"Meet the Press" ல் கேட்ஸ் இன்னும் வெளிப்படையாகப் பேசினார். "நாம் அங்கு 100,000 துருப்புக்களை அங்கு வைத்திருப்போம், அவர்கள் ஒன்றும் ஜூலை 2011ல் வெளியேற மாட்டார்கள். ஒரு சில பிரிவுகள், சிறிய எண்ணிக்கையில், நிலைமையைப் பொறுத்து, அந்நேரத்தில் அங்கிருந்து பின்வாங்கப்படும்" என்றார் அவர்.

அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவரான தளபதி டேவிட் பெட்ரீயஸ் "Fox News Sunday" ல், "எந்த காலக்கெடுவும், எந்த குறிப்பிட்ட நிலைப்பாடும், அது போல் இல்லை" என்று அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் CNN இன் "நாட்டின் இன்றைய நிலை" என்பதில் பேட்டி காணப்பட்டபோது, கூறியது: "உறுதியாக, ஜனாதிபதி, நாம் ஆப்கானிஸ்தானை விட்டு அகலப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்."

இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் திங்களன்று முல்லன், ஒபாமாவின் விரிவாக்கத்தை ஒட்டி செல்ல இருக்கும் கடற்படை வீரர்களுக்கு Camp Lejeune ல் கூறினார்: "ஜனாதிபதி ஒபாமா ஒன்றும் நாம் நீங்குகிறோம் என்று கூறவில்லை." முல்லன் மேலும் கூறினார்: "எந்த காலக் கெடுவும் இல்லை, 2011 எந்தத் துருப்புக்களும் வெளியேறாது, திரும்ப வருவதற்கு தேதி என்றோ அது போன்றோ ஏதும் இல்லை என்று வலியுறுத்த விரும்புகிறேன்."

மிகவும் வெளிப்பாட்டுத்தன்மை உடைய கருத்துக்கள் CNN ல் தளபதி ஜோன்ஸால் கொடுக்கப்பட்டன. 2010 ல் ஆப்கானிஸ்தானில் இன்னும் அமெரிக்க இராணுவம் தொடருமா என்று ஜோன் கிங்கால் கேட்கப்பட்டதற்கு, ஜோன்ஸ் "இது நாம் கொள்ளும் முன்னேற்றத்தைப் பொறுத்துத்தான் சரியாகக் கணிக்கப்பட முடியும்" என்றார்.

"தெற்கு ஆசியாவில் நமக்கு மூலோபாய நலன்கள் உள்ளன; அவை குறிப்பிட்ட கால கெடுவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட முடியாது" என்று ஜோன்ஸ் விளக்கினார். "நாம் அப்பகுதியில் நீண்ட காலத்திற்கு இருப்போம்."

ஒபாமா உரைக்கு மறுநாள் Fox News இடம் ஜோன்ஸ், "நாம் அப்பகுதியில் இருந்து நகரப்போவதில்லை. ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு கிழக்கே பாக்கிஸ்தானில், மகத்தான மூலோபாய நலன்கள் நமக்கு உள்ளன; அங்கு நமக்கு ஆதரவு கொடுக்கும், பங்காளிகளுக்கு உதவும் வகையில் பல ஆண்டுகள் செயல்பட்டு நிற்போம்." என்று கூறியதைத்தான் இது எதிரொலிக்கிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் எந்த மூலோபாய நலன்கள் பணயத்தில் உள்ளன என்பது பற்றி ஜோன்ஸ் கூறாவிட்டாலும், இரு நாடுகளிலும் அமெரிக்க தலையீடு செய்துள்ளதின் பரந்த, உண்மையில், உலகளாவிய பரிமாணத்தைப் பற்றித்தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒன்றும் அல் கெய்தாவைத் தோற்கடிப்பது பற்றி அல்ல, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவது பற்றி அல்ல, அல்லது அமெரிக்க மக்களைக் காப்பது பற்றியும் அல்ல. ஜோன்ஸே தற்பொழுது ஆப்கானிஸ்தானில் 100க்கும் குறைவான அல் கெய்டா போராளிகள்தான் உள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் போர் விரிவாக்கம் என்பது ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் உலகந்தழுவிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்; இதையொட்டி வாடிக்கையாளர் ஆட்சிகள் அப்பகுதியின் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் இருக்கும் இடங்களில் நிறுவப்பட்டு அமெரிக்க இராணுவமும் அதற்கு அருகே நிறுத்தப்படும்; இதனால் சீனா, ரஷ்ய, ஈரான் போன்ற போட்டி சக்திகளின் செல்வாக்கிற்கு எதிர்ப்பு கொடுக்கப்படும்.

இந்த நோக்கங்கள் முழு அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையினால் புரிந்து கொள்ளப்பட்டு ஆதரவையும் பெற்றுள்ளது.

ஒபாமாவின் ஆப்கானிஸ்தானிய கொள்கையில் அமெரிக்க மக்கள் எவ்வித செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை. 2006, 2008 ல் நடந்த இரு தேர்தல்களிலும் வாக்காளர்கள் புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளையும் நிராகரித்தனர். ஆனால் இது அரசாங்கத்தின் கொள்கையில் எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை.

தனக்கு முன்பு பதவியில் இருந்தவருடைய இராணுவவாதக் கொள்கைகளை ஒபாமா தொடர்வதுடன், விரிவாக்கியும் உள்ளார்; இது இன்னும் புதிய போர்க்குற்றங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் கூடுதலான இறப்புக்கள், ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் இறப்பு, உடலுறுப்பு இழத்தல், தற்பொழுதைய போரில் இருந்து விளையும் சர்வதேசப் பூசல்கள் தீவிரமாதல், அதையொட்டி வருங்காலப் போர்கள் ஏற்படுதல் ஆகியவற்றிற்கு வகை செய்யும்.

போருக்கு எதிரான போராட்டம் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம், ஜனநாயகக் கட்சி மற்றும் இரு கட்சி முறையுடன் முறித்தல் ஆகியவற்றின் மூலம்தான் இயலும். அத்தகைய போராட்டம் பணிநீக்கங்கள், வறுமை, ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் இருந்த பிரிக்கப்பட முடியாதது ஆகும்.

போருக்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம் ஆகும். அதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் போருக்கு உண்மையான ஆதாரமான முதலாளித்துவ முறைக்கு எதிராக சுயாதீனமாக திரட்டப்படுதலைத் தளமாகக் கொள்ள வேண்டும்.