WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Mercenaries and assassins: The real face of Obama's
"good war"
கூலிப்படையினரும், கொலையாளிகளும்: ஒபாமாவின் "நல்ல போரின்" உண்மை முகம்
By Bill Van Auken
12 December 2009
Use this version
to print | Send
feedback
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இழிந்த
Blackwater-Xe
இராணுவ ஒப்பந்த நிறுவனம் நியமித்திருந்த கூலிப்படையினர்,
CIA ஏற்பாடு செய்த
படுகொலைகளில் பங்கு பெற்றிருந்தனர் என்னும் தகவல்கள் ஒபாமா நிர்வாகம் விரிவாக்கம் செய்யும் "நல்ல
போர்" என்று அழைக்கப்படுவதில் உண்மைத் தன்மையை மேலும் அம்பலப்படுத்தியுள்ளன.
நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகவர்களை மேற்கோளிட்டு
நியூ யோர்க் டைம்ஸ் பிளாக்வாட்டரின் பாதுகாப்பு பிரிவிற்கு என்று பிறருக்கு கூறுவதற்காக ஒப்பந்தம்
செய்யப்பட்டவர்கள், "CIA
வின் சில நயமான நடவடிக்கைகளில் பங்கு பெற்றனர்--ஈராக், ஆப்கானிஸ்தானில் எழுச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு
எதிராக நிறுவன அதிகாரிகளுடன் இரகசிய சோதனை நடத்தியது மற்றும் கைது செய்யப்படுபவர்களை வேறு
இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகியவற்றில் பங்கு பெற்றனர்" என்று வெள்ளியன்று தகவல் கொடுத்துள்ளது.
இத்தகைய "பிடித்து, இழுத்துச் செல்லும்" நடவடிக்கைகள்--அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
எதிர்ப்பில் பங்கு பெறுவோர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபர்கள் பலர் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்--
"கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் 2004 முதல் 2006ல் ஈராக்கிய எழுச்சியின் உயர்கட்டத்தில் நடைபெற்றது,
பிளாக்வாட்டர் ஊழியர்கள் இதில் மையப் பங்கு கொண்டிருந்தனர்" என்று டைம்ஸ் கூறியுள்ளது.
டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டுமே பெயரிடப்படாத உளவுத்துறை
அதிகாரிகள் மற்றும் பிளாக்வாட்டரின் முன்னாள் செயலர்கள் ஆகியோரை மேற்கோளிட்டு, நிறுவனத்தின்
கூலிப்படைகள் படுகொலைகள் மற்றும் கடத்தல்களில் தொடர்பு என்பது திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்றனர்.
மாறாக, இது CIA
முகவர்களுக்கும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினருக்கும் இடையே இருந்த "வேலைப் பகுப்பு முறை";
பிந்தையவர்கள் "கவனச் சிதைவு ஏற்படாவண்ணம்" முந்தையவரை காக்க நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டைம்ஸ் கருத்தின்படி, பிளாக்வாட்டர் காவலர்கள் "சோதனைகளின்போது
சுற்றுப் பாதுகாப்பு மட்டுமே அளிக்க வேண்டும், CIA
அதிகாரிகள், சிறப்புப் படை இராணுவப் பிரிவினர் சந்தேகத்திற்குரிய எழுச்சியாளர்களை கைது அல்லது கொலை
செய்வர்" என்றும் இருந்தது. செய்தித்தாள் மேலும் கூறுவதாவது: "ஆனால் செயற்பாடுகளின் குழப்பத்தில்
பிளாக்வாட்டர், CIA,
இராணுவப் பிரிவினர் இவர்களுடைய பணிகள் இணைந்து நின்றன."
பெரும்பாலான ஆயுதமேந்திய பிளாக்வாட்டர் ஒப்பந்தக்காரர்கள்,
பெரும்பாலானவர்கள் முன்பு அமெரிக்க சிறப்பு படைப் பிரிவிலேயே இருந்தவர்கள்,
CIA முகவர்களுக்கு
பாதுகாப்புக் காவலர்களாக செயல்படுவர் என்ற கூற்றே அபத்தமானது ஆகும். ஒப்பந்தத்திற்கு எவ்வித
நியாயப்படுத்துதல் இருந்தாலும், பிளாக்வாட்டர் அளித்த "திறமைத் தொகுப்பு" அதிக பயிற்சி கொடுக்கப்பட்ட
படுகொலை செய்பவர்களுக்குத்தான் துல்லியமாக அளிக்கப்படுவது.
பிளாக்வாட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகத் தகவல்களுக்கு
விடையிறுக்கையில் "ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ, மற்ற இடங்களிலோ",
CIA அல்லது
சிறப்புப்படைப் பிரிவினரின் சோதனைகளில் பங்கு பெறுவதற்கு எந்த ஒப்பந்தமும் நிறுவனத்துடன் இல்லை என்று
வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: "இதற்கு மாறாக எந்த செய்தி ஊடகமும் எந்தத் தகவல்
கொடுத்தாலும் அது தவறுதான்."
பிளாக்வாட்டரின் பங்கு பற்றி தெளிவாக ஒப்பந்தம் இல்லாதது ஒன்றும் வியப்பு
அல்ல; ஏனெனில் கூலிப்படை நிறுவனத்தின் முக்கிய ஈர்ப்பு
CIA க்கு அதன் அரசாங்க மேற்பார்வை அல்லது சிவில்,
இராணுவச் சட்டங்களை மதியாமல் செயல்படும் திறன் என்றுதான் துல்லியமாக இருந்தது. ஒரு ஓய்வுபெற்ற
உளவுத்துறை அதிகாரியை மேற்கோளிட்டு போஸ்ட் கூறியுள்ளதுபோல், "அரசாங்க ஊழியர்களுக்கு
ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து பணிபுரிதல் சிவப்பு நாடாவை புறக்கணிக்க பல வாய்ப்புக்களைத் தரும்."
ஒரு சட்டத்திற்கு அப்பாற்பட்ட
CIA விரிவாக்க
கரம் என்னும் முறையில் பிளாக்வாட்டரின் பங்கு, தன்னுடைய ஊழியர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வதை
விரும்பாத கறைபடிந்த செயல்களைச் செய்வதற்கு இருந்தது என்பது நன்கு வெளிப்படையாகிறது.
Vanity Fair தற்போதைய
(ஜனவரி) பதிப்பில் ஒரு CIA
இன் முன்னாள் வழக்கறிஞர் ஆடம் சிரால்ஸ்கி எழுதியுள்ள கட்டுரை, குடியரசுக் கட்சியை சேர்ந்த பிளாக்வாட்டர்
நிறுவன-சொந்தக்காரான பல மில்லியன் மதிப்புடைய எரிக் பிரின்ஸ், தனி ஒப்பந்தக்காரர் என்பது மட்டும்
இல்லாமல் CIA
ஆல் இத்தகைய நடவடிக்கைகளுக்கு துல்லியமாக தேர்ந்தெடுக்கப்பட் "முழுத் தகுதி வாய்ந்த சொத்து என்று
உளவுத்துறை ஆதாரங்ளை மேற்கோளிட்டுத் தெரிவிக்கிறது.
CIA நடவடிக்கைகளில்
பிளாக்வாட்டர் கொண்டுள்ள மத்திய பங்கு, CIA
நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அவ்வேலைகளை விட்டு நீங்கி பிளாக்வாட்டர் நிர்வாகத்தில் பணிகளை எடுத்துக்
கொள்வதில் இருந்து பெருகிய முறையில் தெளிவாகிறது.
CIA இன் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைவர்
J.Cofer Black,
மையத்தின் முன்னாள் செயல்முறைத் தலைவர் என்ரிக் பிரேடோ,
CIA யின் இரகசிய
பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவராக முன்பு இருந்த ரோப் ரிஷேர் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
ஈராக்கில் பிளாக்வாட்டரின் ஊழியர்கள் எவ்விதத் தடைகளும் இன்றிச் செயல்பட்டு,
ஏராளமான சாதாரண மக்களை கணக்குக்கூற வேண்டிய அவசியம் இல்லாமல் ஈராக்கிய ஆட்சி அல்லது அமெரிக்க
இராணுவத் தளபதிகள் ஆட்சி இரண்டிலும் கொன்று குவித்தனர். இந்த வன்முறையின் பரப்பு செப்டம்பர் 2007ல்
பிளாக்வாட்டர் செயலர்களின் வாகன வரிசை பாக்தாத்தில்
Nisour Squre
ல் நிறுத்தப்பட்டபோது, இவர்கள் நிராயுதக் குடிமக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தி 17 ஈராக்கியர்களை
கொன்றபோது பொது மக்கள் கவனத்திற்கு வந்தது.
கொலைகள் பற்றி பிளாக்வாட்டர் கைக்கூலிகளில் ஆறு பேர் கூட்டாட்சி
வழக்கறிஞர்களால் கொல்லவேண்டும் என்ற கருத்தின்றி சுட்டதற்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்
குற்றத்தை ஒப்புக்க கொண்டு பெப்ருவரியில் நடக்க இருக்கும் விசாரணையில் மற்றவர்களுக்கு எதிராக சாட்சியம்
சொல்ல உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஈராக்கில் நிறுவனத்தில் ஊழியர்கள் செய்த கொலைகளில் பாதிப்பிற்கு
உட்பட்ட 70 ஈராக்கியர்கள் சார்பாக தனி உரிமையியல் வழக்குகளில் பிளாக்வாட்டர் நிறுவனம் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. பிளாக்வாட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவர் இந்த வழக்குகளில் நிறுவன்தின்
தலைவர் பிரின்ஸ் நிறுவனம் பற்றி நீதித்துறை விசாரணைக்கு ஒத்துழைத்த தனிநபர்களைத் தானே கொன்றிருக்கலாம்
அல்லது அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டிருக்கலாம் என்று உறுதிப் பிரமாணம் கொடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெளியே வரும் தகவல்களை வெள்ளியன்று
டைம்ஸில் வந்த தகவல்கள் தொடர்கிறது; அப்பொழுது
CIA இயக்குனர்
லியோன் பானெட்டா காங்கிரசில் உளவுத்துறைக் குழுக்களுக்கு பிளாக்வாட்டர் தொடர்புடைய இரகசிய
படுகொலைத் திட்டம் பற்றி சாட்சியம் கொடுத்திருந்தார்; அப்பொழுதுதான் அதை அவர் கண்டுபிடித்ததாகவும்,
தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார். அத்திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை என்றும் பானெட்டா
உறுதியாகக்க ஊறினார். அதுவரை இது காங்கிரஸிடம் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது; அதுவும் முன்னாள்
துணை ஜனாதிபதி டிக் ஷெனியின் உத்தரவுகளின் பேரில்.
நிறுவனத்தின் இழிந்த பெயரை அகற்றும் முறையில் பின்னர்
Xe Services
எனப் பெயரிடப்பட்ட பிளாக்வாட்டரின் ஊழியர்கள், தீவிரமாக ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில்
பிரிடேட்டர் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட படுகொலைத் திட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்பது பின்னர்
தெரியவந்துள்ளது. பிளாக்வாட்டர் கூலிப்படையினர் "இலக்கு வைக்கப்பட்ட கொலைகள்" என்று
அழைக்கப்பட்டவற்றை செய்வதற்கு 500 பவுண்டு குண்டுகள் மற்றும் ஹெல்பைர் ஏவுகணைகளை தயார் நிலையில்
கொண்டு வந்து ஏற்றினர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவை நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் உயிர்களைக்
குடித்தன. இதைத்தவிர, அவர்கள் ட்ரோன் தளங்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர் என்றும் சில தகவல்கள்
கூறுகின்றன; இந்த ஆதாரங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் நபர்களை நிர்ணயம் செய்த உளவுத்துறை
நடவடிக்கைகளில் இவர்களும் பங்கு பெற்றிருந்தனர் என்று கூறுகின்றன.
அத்தகைய வான்வழி படுகொலைத் தாக்குலகள் ஆகஸ்ட் 2008ல் இருந்து குறைந்தது
65 நடந்துள்ளன; இவற்றில் 625 மக்களுக்கும் மேலாக உயிரிழந்துள்ளனர். சில மதிப்பீடுகள் எண்ணிக்கை
1,000க்கு மேல் என்றும், அதில் பலரும் மகளிரும் குழந்தைகளும் என்றும் கூறுகின்றன. இத்தாக்குதல்களில்
பெரும்பாலானவை ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்தபின் நடந்துள்ளன.
ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட இருக்கும் 30,000 கூடுதல் துருப்புக்களைத் தவிர,
ஒபாமா CIA
ஐ டிரான் தாக்குதல்களையும் மிக அதிகமாகப் பெருக்குமாறு இசைவு கொடுத்துள்ளது. இத்தாக்குதல்கள் பழங்குடிப்
பகுதிகளைக் கடந்து ஆப்கானிஸ்தானிய பலுசிஸ்தான் எல்லைக்கும் விரிவாக்கப்படக்கூடும் என்று பாக்கிஸ்தானிய
அரசாங்கத்திடம் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்; இது மக்கள் கூட்டம் நிறைந்த குவெட்டா நகரத்திற்குள்
செல்லும் திறனையும் கொண்டுள்ளது; அங்கு ஆப்கானிய தலிபான் தலைவர்கள் புகலிடம் கொண்டுள்ளதாக
கூறப்படுகிறது.
டைம்ஸ் அறிக்கையின்படி எந்த அளவிற்கு இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளில்
பிளாக்வாட்டரின் பங்கு இருந்தது, தரையிலும் வான்வழித் தாக்குலிலும் தொடர்கிறது என்பது தெளிவாகத்
தெரியவில்லை. 2001ல் இருந்து இந்நிறுவனம் அரசாங்க ஒப்பந்தங்களில்
CIA,
வெளிவிவகார அமைச்சரகம் மற்றும் பென்டகனுக்கு ஆயுதமேந்திய கூலிப்படைப் பாதுகாப்பை கொடுப்பதில் 1.5
பில்லியன் டாலருக்கு மேல் பெற்றுள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி; ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் போரின் விரிவாக்கம்
என்னும் ஒபாமா திட்டத்தின்கீழ் பிளாக்வாட்டர் கூலிப்படையினர் தொடர்புடைய படுகொலைகள் இன்னும் அதிக
அளவில் இருக்கும்.
இத்திட்டங்கள் பற்றிய குறிப்பு மத்தியக் கட்டுப்பாட்டுத் தலைவர் தளபதி டேவிட்
பெட்ரீயஸினால் செனட் வெளியுறவுக் குழுவில் புதனன்று கொடுத்த சாட்சியத்தில் வெளிப்பட்டது. "இந்த மோசமான
நபர்களை, சமரசத்திற்கு உட்படுத்த முடியாதவர்களை நாம் கைப்பற்ற வேண்டும் அல்லது கொல்லவேண்டும்
என்பதில் வினாவிற்கு இடமில்லை. அதைத்தான் நாங்கள் செய்ய உள்ளோம்" என்று பெட்ரீயஸ் செனட்
உறுப்பினர்களிடம் கூறினார்.
தளபதி தொடர்ந்தார்: "உண்மையில் மொத்த மூலோபாயத்தில் பயங்கரவாத எதிர்
கூறுபாட்டை அதிகப்படுத்துவோம்." ஆப்கானிஸ்தானிற்கு "கூடுதலான தேசியப் பணி சக்திக் கூறுபாடுகள்" அடுத்த
வசந்த காலத்தில் வரும் என்றும் அவர் கூறினார்.
பெட்ரீயஸ் மேற்கோளிட்டுள்ள "கூறுபாடுகளில்", சிறப்பு நடவடிக்கைகளில்,
இராணுவத்தின் இரகசிய டெல்டாப் படை, CIA
வின் தாக்கும் படைகள் மற்றும் பிளாக்வாட்டர் போன்றவை அளிக்கும் கூலிப்படைகள் ஆகியவை அடங்கும்.
ஆப்கானியப் போரை இயக்க ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்ரான்லி
மக்கிரிஸ்டல், முன்பு மிக இரகசிய கூட்டு சிறப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டின் தலைவராக இருந்தவர்; அதில்
சிறப்புப் படைகளும் படுகொலை இயக்கும் பிரிவுகளும் உள்ளன. செனட் குழுவிற்கு ஒபாமா உத்தரவிட்டுள்ள
விரிவாக்கத்தின் இக்கூறுபாடு பற்றி மூடிய கதவுகளுக்குள், மக்கிரிஸ்டல் தகவல் கொடுப்பார் என்றார் பெட்ரீயஸ்.
செய்தி ஊடகத்தில் பெரும் மோதல், பிளாக்வாட்டர் கூலிப்படை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் தனிநபர்களை வேட்டையாடிக் கொலைசெய்தல்,
ஒரு முக்கிய அரசாங்க செயலை செயல்படுத்த தனியார் ஒப்பந்தக்காரர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவது
முறையா என்பதை மையமாகக் கொண்டுள்ளது.
கொலைகள் ஒன்றும் பிரச்சினையாகக் காட்டப்படவில்லை. 1976ல் ஜனாதிபதி கெரால்ட்
போர்ட் CIA
நேரடியாக படுகொலைகளை நடத்துதல் அல்லது ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்தல் ஆகியவற்றிற்கு நிர்வாக ஆணை
மூலம் தடைவிதித்தார். உலகின் பல பகுதிகளில் CIA
படுகொலைத் திட்டங்கள் தொடர்ந்து வெளிப்பட்டதை அடுத்து எழுந்த மக்கள் சீற்ற அலையை ஒட்டி இந்த ஆணை
வந்தது; இவ்வமைப்பிற்கோ "கொலைகார அமைப்பு" என்ற பெயர் கிடைத்தது.
2001ல் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் போர்டின் ஆணையை அகற்றி அத்தகைய
தடுப்புக்கள் இன "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரில்" பொருந்தாது என்னும் தன்னுடைய உளவுத்துறை
தகவலை வெளியிட்டார். ஜனநாயகக் கட்சியினர் இதற்கு எதிர்ப்புக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை; செய்தி ஊடகம்
இதை முற்றிலும் ஏற்கத்தக்க நடவடிக்கை என்று கருதியது அதே நேரத்தில் கொடிய செயல்கள், பாதிப்புக்கள்
பற்றித் தகவல் கொடுப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டன.
மற்ற அடிப்படை பிரச்சினைகள் பலவற்றைப் போலவே, ஜனாதிபதி பாரக் ஒபாமா,
புஷ்ஷின் "இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள்", அசாதாரண கடத்தல்கள், கூலிப்படையினரை பயன்படுத்துதல்
என்ற கொள்கைகளை ஏற்றுள்ளார்; மேலும் புஷ் நிர்வாகத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட இழிவான குற்றங்கள் அனைத்தும்
தொடர்கின்றன. இந்த மிருகத்தனமாக வழிவகைகள் ஒபாமா போர்க்குற்றங்களை மேற்பார்வையிடுகையில் ஆப்கானிய,
பாக்கிஸ்தானிய மக்களுக்கு எதிராக இரு மடங்காகக் கட்டவிழ்த்துவிடப்படும். |