World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: a warning for European workers

கிரேக்கம் : ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை

By Marius Heuser
11 December 2009

Use this version to print | Send feedback

On Vionence -- சீற்றம் (வன்முறை) பற்றி என்னும் தன்னுடைய கவிதையில் ஜேர்மனிய நாடக ஆசிரியர் ஙிமீக்ஷீtஷீறீt ஙிக்ஷீமீநீலீஏ எழுதினார்: மேலிருந்து விழும் நீர்ப்பெருக்கு சீற்றம் (வன்முறை) எனப்படுகிறது. ஆனால் அதை அரவணைத்துச் செல்லும் ஆற்றங்கரை சீற்றமானது என்று எவராலும் கூறப்படுவது இல்லை." கிரேக்கத்தில் சமீபத்தில் நடக்கும் எதிர்ப்புக்கள், மோதல்கள் என்னும் பின்னணியில் ஆற்றங்கரை கடந்த ஓராண்டாக கணிசமாக குறுகிவிட்டது போல் தோன்றுகிறது. இளைஞர்களுடைய வாழ்க்கைத் தரங்களும் வருங்காலம் பற்றிய அவர்கள் நிலைமையும் கடந்த டிசம்பரில் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வீதிகளுக்கு வந்ததில் இருந்து மோசமாகித்தான் போயுள்ளன.

எதிர்ப்புக்களை அடக்க 10,000 பேருக்கு மேற்பட்ட ஆயுதமேந்திய போலீஸார் கடந்த ஞாயிறன்று ஏதென்ஸ் நகரத்தில் கூடியது உலகெங்கிலும் இருக்கும் ஆளும் உயரடுக்கு தன்னுடைய சலுகைகளை பொருளாதார நெருக்கடிக் காலத்தில் காப்பதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சியிலுள்ள மிருகத்தனத்திற்கு நிரூபணம் ஆகும். இவ்விதத்தில், கிரேக்கத்தில் நடந்த நிகழ்வுகள் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் வர்க்க நனவுடைய தொழிலாளர்களுக்குப் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

நாடு திவால்தன்மையை எதிர்நோக்கியிருக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசியல் வாழ்வில் தலையிட்டு மிகக் கடுமையான சிக்கன திட்டத்தை நிறைவேற்ற ஆணையிட்டுள்ளது. பிரஸ்ஸல்சை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரேக்க அரசாங்கத்தை முடுக்கிவிட்டு, தன் பட்ஜேட் மீதே நாட்டின் கட்டுப்பாட்டை "சிறிது காலத்திற்கு" அகற்றிவிட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் குறைத்துள்ளனர்.

தன்னுடைய பங்கிற்கு சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் பிரஸ்ஸல்ஸ் கோரியுள்ளவை அனைத்தையும் செயல்படுத்துவதாக உறுதியளித்து அதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பெரும் மிருகத்தன்மையுடன் நடத்துகிறது. இவ்வாறு செய்கையில் அது தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது" கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றின் நேரடி அல்லது மறைமுக ஆதரவை நம்பியுள்ளது.

கிரேக்கத்தில் சமீபத்திய வளர்ச்சிகள் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் வரக்கூடிய செயற்பட்டியல் பற்றி குறிப்புக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை ஐரோப்பிய நிதி உயரடுக்கு பயன்படுத்தி குறிப்பிட்ட நாடுகளில் அவற்றின் கொள்கைகளை நிர்ணயிக்கவும், ஜனநாயக உரிமைகளைக் கடக்கவும், பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் மக்கள்மீது சுமத்தவும் முற்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை நம்பியிருக்க வேண்டிய நிலையில், கிரேக்கம் குறிப்பிட்ட வகையில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியினால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. நாட்டின் கடன் நிலை மிக உயர்ந்த அளவுகளை அடைந்து, இப்பொழுது யூரோவையும் உறுதி குலைக்கும் அளவிற்கு அச்சுறுத்துகிறது. முக்கிய தரம் பிரிக்கும் நிறுவனங்கள் பிரிதம மந்திரி ஜோர்ஜ் பாபாண்ட்ரூ இந்த ஆண்டு கிரேக்கத்தின் பட்ஜேட் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிம் இருக்கக்கூடும் என்று அறிவித்த உடனேயே கிரேக்கத்தின் தரத்தைக் குறைத்து விட்டன. Fitch கிரேக்கத்தை A- ல் இருந்து BBB+ என்று குறைத்துவிட்டது; இதனால் கிரேக்க அரசாங்கம் கொடுக்க வேண்டிய வட்டிக் கட்டணங்கள் அதிகரிக்கும். சில மதிப்பீடுகளின்படி, பட்ஜேட் பற்றாக்குறை 2010ல் கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 125 சதவிகிதமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது--இதற்கு முக்கிய காரணம் வட்டி விகிதங்கள்தான். இச்சூழலில், நாட்டின் திவால்தன்மை முற்றிலும் ஏற்படக்கூடியதேயாகும்.

இந்த நிலைமை கிரேக்க உயரடுக்கின் பேராசையால் தீவிரமாகியுள்ளது. ஊழல், வேண்டியவர்களுக்கு நலன்கள் கொடுத்தல் என்ற களியாட்டத்தில் நாட்டின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான சமூக ஜனநாயக PASOK மற்றும் பழமைவாத புதிய ஜனநாயகமும் பில்லியன்கணக்கில் உயரடுக்கிற்கு அரசாங்க நிறுவனங்களைத் தனியார் மயமாக்கியதின்மூலம் கொடுத்துவிட்டது. ஊழல் குறியீட்டில் Transpaency International தற்பொழுது கிரேக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்திற்கு அடுத்த இரண்டாம் பெரும் ஊழல் மலிந்த அரசாங்கம் என்று வர்ணித்துள்ளது.

கிரேக்க மக்களில் பரந்த தட்டுக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கு முன்பாகவே பெரும் கஷ்டங்களில் உள்ளன. 2007ம் ஆண்டு நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பகுதி வறுமைக் கோடான ஆண்டிற்கு 4,000 யூரோக்கள் என்பதற்குக் கீழேதான் இருந்தது. பள்ளியை விட்டு நீங்குபவர்களில் 20 சதவிகிதத்தினர் வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அரசாங்கம் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதம்தான் கல்விக்குச் செலவழிக்கிறது.

இப்பொழுது நாட்டின் மகத்தான கடன் சுமை தொழிலாளர்களின் இழப்பில் குறைக்கப்பட உள்ளது. கிரேக்கத்தின் ஊழல் மிகுந்த ஆளும் உயரடுக்கு இதுகாறும் பிரஸ்ஸல்ஸ் கோரும் பொருளாதார நடவடிக்கைகளைச் செசயல்படுத்தும் திறனற்றது என்று தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது; ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது நாட்டின் நிதியங்களை நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. முக்கிய ஐரோப்பிய வங்கிகள் மற்றும் சர்வதேச நிதிய பிரபுத்துவத்தின் மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் அது இதைச் செய்கிறது.

பிரதம மந்திரி பாப்பாண்ட்ரூ ஏற்கனவே 2010ல் நாட்டின் பட்ஜேட் பற்றாக்குறையை கடுமையான குறைப்புக்களை நாட்டின் ஓய்வூதியங்களில் கொண்டு வருவதின் மூலமும் பொதுப்பணி ஊழியர்களின் ஊதியங்களில் 9.1 சதவிகித வெட்டைக் கொண்டு வருவதின் மூலமும் குறைக்க இருக்கும் விருப்பத்தை அறிவித்துள்ளார்; ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் பரந்த குறைப்புக்களை திட்டமிட்டுள்ளது என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன.

ஐரோப்பிய நிதி மந்திரிகள் குழு, ஏற்கனவே கடந்த வசந்த காலத்தில் கிரேக்கத்திற்கு எதிராக மிக அதிக பற்றாக்குறைக்காக நடவடிக்கை எடுத்தது, இப்பொழுது கிரேக்க அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை முறையாக அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கிரேக்க நிதி மந்திரி இGiorgos Papaonstantinou பிரஸ்ஸல்ஸ் குழுவிற்கு நாட்டின் நிதியங்களை ஒருங்கிணைப்பது பற்றி ஒரு விரிவான திட்டத்தைக் கொடுக்க வேண்டும். கிரேக்க நிலைமை டிசம்பர் 17ம்தேதி ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்ட நிகழ்ச்சி நிரலிலும் இடம் பெறும். ECB அரசாங்கததின்மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கிரேக்க நிதிய நிறுவனங்களுக்கு கிரேக்க அரசாங்கக் கடன்களை அவற்றின் கடன்களுக்கு உத்தரவாதமாகக் காட்டும் வாய்ப்பை மறுக்கக்கூடும்.

பல செய்தி ஊடக வர்ணனைகள் இந்த நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையை வலுப்படுத்தத்தான் முயல்கின்றன. The Financial Times Deutschland எழுதுகிறது: "ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை ஏதும் போடாமல் பிரஸ்ஸல்ஸ் ஆணையிடும் போக்கிற்கு ஒருங்கிணைந்த வகையில் ஒப்புக் கொண்டால் தடுமாறிக்கொண்டிருக்கும் உறுப்புநாட்டிற்கு ஆதரவு கொடுக்கத் தயார் என்று அறிவிக்க வேண்டும். ஒரு குறைந்த காலத்திற்கு கிரேக்க அரசாங்கம் பட்ஜேட் கொள்கைமீது தன்னுடைய இறைமையை கைவிட வேண்டும். அது கிரேக்கர்களுக்கு கசப்பானதுதான், ஆனால் முற்றிலும் தேவையானது; அப்பொழுதுதான் ஐரோப்பய ஒன்றியமும் அதன் உறுதிப்பாடு உடன்படிக்கையும் நம்பகத்தன்மையை ஓரளவிற்கேனும் தக்க வைத்துக் கொள்ள முடியும்."

எனவே ஐரோப்பிய நிறுவனங்கள் அதன் உறுப்பு நாடுகளின் பட்ஜேட் கொள்கைகளுக்கு நேரடிப் பொறுப்பை ஏற்குமாறு அழைக்கப்படுகின்றன--இவை அனைத்தும் நிதிய உயரடுக்கின் ஆணையின்பேரில் நடக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், மக்களின் தேவை பற்றிய ஆய்வு, இவை அனைத்தும் பட்ஜேட் ஒருங்கிணைப்பின் தேவையான போக்கிற்கு குறுக்கே நிற்கின்றன. கிரேக்க நாட்டுக் கடன் நெருக்கடியைச் சமாளிக்கும் முறை அனைத்து ஐரோப்பிய தொழிலார்களுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்: ஆளும் உயரடுக்கு மக்கள் முதுகுகளில் நெருக்கடியின் முழுச் சுமையையும் ஏற்றுவதற்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறவும் தயாராக உள்ளது என்பதே அது.

Kostas Karamanlis தலைமையில் இருந்தபழமைவாத ND அரசாங்கம், ஊழல், அவதூறுகள் பலவற்றில் சிக்குண்டு, ஓராண்டிற்கு முன் இளைஞர் எழுச்சிகளில் உச்சக்கட்டத்தை அடைந்த வெகுஜன எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாமல் போயிற்று. கடந்த அக்டோபர்மாதம் நடைபெற்ற தேர்தல்கள் PASOK ஐ மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தை கொண்டவை; மக்களைக் கட்டுப்பாட்டிற்குள் சமூக ஜனநாயகவாதிகள் வைக்க இயலும் என்று ஆளும் உயரடுக்கின் நம்பிக்கையை இது காட்டுகிறது.

ஆனால் இதை PASOK தனியே செய்ய இயலாது. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போக்கில் கட்சி தன்னை முற்றிலும் இழிவுபடுத்துக் கொண்டுவிட்டது. அதற்கு பல பெயரளவு "இடது" குழுக்கள், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE), பசுமைவாதிகள் மற்றும் இடது முன்னணி (Syriza) போன்றவற்றின் ஆதரவு தேவைப்படுகிறது. அவற்றின் வேலை நைந்துவிட்ட PASOK கருவிக்கு புத்துயிர் கொடுத்தல் ஆகும். சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் இக்குழுக்கள் PASOK, புதிய ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடும்போது "குறைந்த தீமையை" பிரதிபலிப்பதாக இடைவிடாமல் அறிவித்ததுடன் முந்தையதுடன் கூட்டணி அரசாங்கத்தில் சேருவதற்கு தயார் என்றும் கூறின.

நாட்டின் இரு பெரும் தொழிற்சங்கங்களான GSSE, ADEDY ஆகியவற்றின் ஆதரவையும் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் கொண்டுள்ளது; இவை இரண்டும் சமூகக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்து அவை ஆலைகளில் செயல்படுத்தப்பட உதவும். இவை இரண்டும் கிரேக்க தொழிலளர்களைக் காட்டிக் கொடுத்த நீண்டகால வரலாற்றை உடையவை; பல நேரமும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஆலைகள் தனியார் மயமாக்கப்படுவதற்கும், பொதுநலச் செலவினக் குறைப்புக்கள் சுமத்தப்படவும் ஆதரவைக் கொடுத்துள்ளன.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைக் குறைக்க வேண்டும் என்னும் அரசாங்கத்தின் உறுதிப்பாடு சமீபத்திய ஆர்ப்பாட்டங்களில் நன்கு வெளிப்பட்டது. "சிறிதும் பொறுத்துக் கொள்ள வேண்டியதில்லை" என்ற நிலைமையைக் காட்டுமாறு போலீஸ் உத்திரவிடப்பட்டு, கடந்த ஞாயிறு முதல் குறைந்தது 784 ஆர்ப்பாட்டக்காரர்களாவது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் கிரேக்கத்தில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரேக்க அரசாங்க அதிகாரிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை; ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள், ஐரோப்பிய நிதிய உயரடுக்கு ஆகிவற்றையும் எதிர்கொள்ளுகின்றனர். இந்த நலன்கள் கிரேக்கத்தில் அரசியல் கட்சிகள், முற்போக்குக் குழுக்கள், தொழிற்சங்கங்கள் இவற்றின் இணைந்த முன்னணியால் பிரதிபலிக்கப்படுகின்றன--இவை அனைத்தும் எந்த எதிர்ப்பையும் முறிக்க உறுதிபூண்டுள்ளன.

வெகுஜன எதிர்ப்புக்கள் கிரேக்கத்தின் ஆழ்ந்த சமூக முரண்பாடுகளில் தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. அவற்றிற்குள்ளும், அவற்றையொட்டியும் இதற்குத் தீர்வு ஏதும் இல்லை; PASOK, அல்லது ND இரண்டில் எதுவும் இத்தகைய அழுத்தங்களுக்கு உட்பட்டு நிதிய உயரடுக்கின் நலன்களைக் காக்காமல் விட்டுவிட மாட்டார்கள்.

பிரஸ்ஸல்ஸின் ஆணைகளையும் அதோடு தொடர்புடைய சமூக, அரசியல் தாக்குதல்களையும் எதிர்த்துப் போரிடக்கூடிய ஒரே உரிய முன்னோக்கு ஒரு சர்வதேசச் நோக்குநிலையைக் கொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான ஒரு பொதுப் போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டம்தான்.