WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greece verges on default
திருப்பிக் கொடுப்பதின் விளிம்பில் கிரேக்கம்
By John Vassilopoulos
12 December 2009
Use this version
to print | Send
feedback
செவ்வாயன்று Fitch
Ratingsd கிரேக்கத்தின் கடன் மதிப்புத் தரத்தை
A- ல் இருந்து
BBB+
என்று குறைத்த பின், கிரேக்கத்தின் திவால்தன்மை பற்றிய கவலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இச்செய்தியை எதிர்கொண்ட விதத்தில் ஏதென்ஸ் பங்குச் சந்தைக் குறியீடு 6 சதவிகிதம்
செவ்வாயன்றும் மற்றும் ஒரு 3.4 சதவிகிதம் புதனன்றும் சரிந்தது.
Bloomberg
க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் Bank of England
ன் முன்னாள் கொள்கை இயற்றுபவர் வில்லியம் ப்யூடெர் கூறினார்: "இப்பொழுது கிரேக்கத்தில் நள்ளிரவிற்கு 5
நிமிஷம். திருப்பிக் கொடுத்தல் என்பது தவிர்க்க முடியாதது அல்ல, ஆனால் தீவிர நிதிய முற்போக்கு நடவடிக்கைகள்
இருந்தால் ஒழிய .... 1948ல் ஜேர்மனி திருப்பிக் கொடுத்தல் தாமதத்திற்குப் பின்
EU 15 இறைமை
நாட்டின் முதல் தாமதத்தைக் காணக்கூடும்."
கிரேக்க நிதி மந்திரி ஜோர்ஜ் பாபாகான்ஸ்டான்டினோ முதலீட்டாளர்களுக்கு
உறுதியளிக்கும் வகையில் கூறினார்: "நாங்கள் புதிய ஐஸ்லாந்து போல் அல்ல, எப்படி அடுத்த துபாய் போல்
இல்லையோ, அதே போல்தான்."
உண்மை என்னவென்றால், 1974ல் இராணுவ ஆட்சி அகற்றப்பட்டதற்குப் பின்னர்,
உலகச் சரிவு அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை கிரேக்கத்திற்கு கொடுத்துள்ளது. ஐரோப்பிய
ஒன்றிய ஆணையம் சமீபத்தில் கிரேக்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறை 2009ல் அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில்
12.2 சதவிகிதம் இருப்பதற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை தீவிரமாகக் கொடுத்துள்ளது இது வெளியேறிவிட்ட
New Democracy
அரசாங்கம் பட்ஜெட் பற்றாக்குறையின் முழுப் பரப்பையும் இரகசியமாக வைத்திருந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
PASOK
அரசாங்கம் அதை வெளியிட்டபின் வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக அதிகமான பொதுக்கடனை கிரேக்கம்
கொண்டிருக்கிறது இது 2010ல் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 99ல் இருந்து 125 சதவிகிதம் உயரும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபாண்ட்ரூ, "ஒரு இறைமை பெற்ற, சீர்த்த நாடாக
விளங்க வேண்டும் என்றால், நம்பகத்தன்மை இடைவெளியை மூடுதல் வேண்டும். பெரும் பற்றாக்குறையை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இயன்றதைச் செய்வதற்கு உறுதி கொண்டுள்ளோம்" என்றார்.
யூரோப் பகுதியிலுள்ள மற்ற உறுப்பு நாடுகளைப் போன்றே, கிரேக்க அரசாங்கமும்
ஜேர்மனிய பத்திரங்களை ஒட்டிய முறையில் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுகிறது; ஆனால் இரண்டிற்கும்
இடையே உள்ள வட்டி வேறுபாட்டு விகிதம் "spread"
(பரந்துள்ளது) என விவரிக்கப்படுகிறது. இந்த பரப்பு
அதிகரித்தால், அரசாங்கக் கடன் வாங்கும் செலவினங்களும் அதிகரிக்கும். கடந்த சில வாரங்கள்
கிரேக்க/ஜேர்மனிய பத்திரப் பரப்பில் கொந்தளிப்பான ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது.
நவம்பர் 25ம் தேதி மத்திய கிழக்கு பெருநிறுவனம்
Dubai World
கடன்களை திருப்பிக் கொடுத்தலுக்கு "விடுமுறை" வேண்டும் என்று கோரியதை தொடர்ந்த பீதியின் கிரேக்கத்தின்
நிலைப்பாடு பற்றியும் அச்சங்கள் முதலில் எழுப்பப்பட்டன. கிரேக்கப் பத்திரங்கின் பரப்பு 118ல் இருந்து 213
புள்ளிகளுக்கு உயர்ந்தன. இந்த வாரம் வந்துள்ள குறைமதிப்பு தகவலை அடுத்து, புதனன்று சந்தைகள் மூடியபோது
பரப்பு 250 அடிப்படை புள்ளிகளுக்கு உயர்ந்தது--இது முந்தைய வாரத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 75
புள்ளிகள் அதிகம் ஆகும்.
கிரேக்கத்தின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 3 சதவிகிதம்தான் என்றாலும், கிரேக்கம் யூரோப்பகுதியில் உள்ளது என்பதால் ஐரோப்பிய நிதிய
முறையின் உறுதிப்பாட்டிற்கு சமீபத்திய நிகழ்வுகள் பெரும் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன.
மீட்பிற்கு வருவதற்கு தயங்கும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுச் செலவுகளை
கிரேக்கம் குறைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறது.
Fitch
குறைமதிப்பு செய்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கி
(ECB) யின்
தலைவர் Jean Claude Trichet,
"நிலைமயின் கடினத்தன்மையில், கிரேக்க அரசாங்கம் போதிய, தைரியமான
நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு." இதன் உட்குறிப்பு கிரேக்கத்திற்கு ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து வருங்கால உதவி பெறுவதற்கும் ஏதென்ஸ் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பது முன் நிபந்தனை ஆகும்.
"ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், சரியோ, தவறோ, கிரேக்கம் ஒருவேளை
தாமதித்தால் மற்ற யூரோப்பகுதி நாடுகளின் மீது ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி, ஒரு பிணை எடுப்பின்
அறநெறி ஆபத்தைப் பற்றியதை விட அதிகம் அச்சப்படுகின்றனர். உறுதி உடன்பாடு அல்லது கிரேக்கத்தின்
ஒருங்கிணைப்பு இவற்றுள் ஒன்றைக் காப்பாற்றும் விருப்பத்தை எதிர்கொண்டால், அவர்கள் முந்தையதைத்தான்
விரும்பும் மனநிலையில் உள்ளனர்."
ஐரோப்பிய வங்கிகளுக்கு அவசர நிதியம் 1.0 சதவிகிதத்திற்கு கொடுக்கபடுவதை
நிறுத்தும் தன்னுடைய விருப்பதையும் Trichet
சமீபத்தில் அறிவித்தார். கிரேக்க மத்திய வங்கி கொடுத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கிரேக்கத்தில் கடன்
கொடுப்பவர்கள் நிதியத்தில் இருந்து மற்ற ஐரோப்பிய கடன் கொடுப்பவர்களைவிட அதிகம் கடன் வாங்கியதாகத்
தெரிகிறது.
ஐரோப்பிய பொருளாதாரத்தில் 2009ல்
ECB உட்செலுத்திய
570 பில்லியன் யூரோக்களில், கிரேக்க வங்கிகள் 42 பில்லியன் யூரோக்களை வாங்கியுள்ளன. நிதி முறையில்
கவலைப்படாத வகையில் அவை இந்தப் பணத்தை அரசாங்கத்திற்கு அரசாங்கப் பத்திரம் வாங்குதல் என்ற வகையில்
கடனாகக் கொடுத்துள்ளன; இவை பின்னர் ECB
க்கு உத்தரவாதமாக காட்டப்பட்டுள்ளன.
தங்கள் கடன்களை தள்ளிப்போட முடியாது என்பதை உணர்ந்த நிலையில், வங்கிகள்
ஆண்டு இறுதி வரை காத்திராமால், ஏற்கனவே தங்கள் பத்திர இருப்புக்களை விற்கத் தொடங்கியுள்ளன. இது
கிரேக்கப் பத்திரங்களின் மதிப்பை சரிவிற்கு தள்ளியுள்ளது; இதையொட்டி அரசாங்கம் கடன் வாங்கும் செலவுகளும்
உயர்ந்து விட்டன.
நச்சுத் திறன் உடைய சொத்துக்களையும் கிரேக்க வங்கிகள் வைத்துள்ளன.
Standard & Poor's
சமீபத்தில், "கிரேக்க வங்கிகளின் கடன் ஆபத்து அவை [சேர்பியா, துருக்கி, உக்ரைனை போல்] அதிக
பொருளாதார ஆபத்துக்கள் நிறைந்த சந்தைகளில் வாங்கியதால் உயர்ந்துள்ளன; இது இலக்குச் சந்தைகள்
சிலவற்றில் பெரும் பொருளாதார சீரற்ற தன்மை மற்றும் அவை கொண்டிருக்கும் திடீரென்ற பொருளாதார மந்தம்
ஆகியவற்றால் அதிகமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.
கிரேக்கப் பொருளாதாரம் ஏற்கனவே பொருளாதார சரிவினால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. தசாப்தத்தின் பெரும் பகுதியில் ஆண்டிற்கு 4 சதவிகித வளர்ச்சி விகிதங்களை காட்டிய
பின்னர், பொருளாதாரம் 1.5 சதவிகிதம் எனக் குறையும் போல் உள்ளது; இது 16 ஆண்டுகளில் முதல் சரிவு
ஆகும். முந்தைய ஏற்றம் ஒரு குமிழ் என்றுதான் ஆகியுள்ளது; அது பெரும்பாலும்
ECB கொடுத்த
மிகக் குறைவான வட்டி விகிதத்தால் உயர்ந்த நுகர்வோர் செலவழிப்பு மற்றும் 2004 ஒலிம்பிக்
விளையாட்டையொட்டிய வருமானம் ஆகியவற்றால் ஏற்பட்டிருந்தது.
பொருளாதார ஏற்ற ஆண்டுகளில்கூட, மாதத்திற்கு 650 முதல் 800 யூரோக்கள்
வரை சராசரி ஊதிய பெற்றதால் செலவைச் சரிக்கட்ட கடன் வாங்கும் கட்டாயத்திற்கு பெரும்பாலானவர்கள்
ஆளாயினர். 2006ல் ஏற்றத்தின் உச்சக்கட்டத்தில், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியவற்றைத் தவிர கிரேக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகக் குறைவான குறைந்த பட்ச ஊதியத்தைக் கொண்டிருந்தது; மக்களில் 27
சதவிகிதத்தினர் உத்தியோகபூர்வமாக ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் கிரேக்க அரசாங்கம் பெருத்துள்ள வரி
ஏய்ப்பை சமாளிக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது; ஆண்டு ஒன்றிற்கு 30 பில்லியன் யூரோக்கள் அரசாங்கம்
இதையொட்டி இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது மக்களை திருப்திப்படுத்தும் ஒரு பேச்சுத்தான்.
கிரேக்கத் தொழிலாள வர்க்கம்தான் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்.
அந்த இலக்கை ஒட்டி, அரசாங்கம் ஏற்கனவே, 2010ல் கொண்டுவர உள்ள
ஓய்வூதியச் சட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் "சமூக உரையாடல்" என்பதை தயாரிக்கிறது.
வேலைகள் மந்திரி Andreas Loverdos
பாராளுமன்றத்தில் கூறியபடி, "தற்பொழுது கிரேக்கம் ஆண்டு ஒன்றிற்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
11.5 சதவிகிதம் கொடுக்கிறது; 2040 ஐ ஒட்டி இது 24.1 சதவிகிதம் என்று உயரும். அந்த நிலையில் நாடு
நீடிக்க முடியாது, தேசியப் பொருளாதாரம் செயல்பட முடியாது. எங்களைப் பொறுத்தவரை 2015 தான்
நெருக்கடியின் தீவிர கட்டம்; அப்பொழுது ஜனநாயகம் வந்த பின் உள்ள தலைமுறை [இராணுவ ஆட்சி வீழ்ச்சிக்குப்
பின்னர் வயதிற்கு வந்தவர்கள்] ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவர்."
வெளியேறிய பிரதம மந்திரி கரமன்லிஸ் கடும் சிக்கன நடவடிக்கை எடுக்க ஆதரவு
பெறும் பெரும் நிகைப்பு முயற்சியில் ஒரு முன்கூட்டிய தேர்தலை அக்டோபர் மாதம் நடத்திய போது,
பாபாண்ட்ரூவின் PASOK
மகத்தான வெற்றியைப் பெற்றது. இன்னும் சமத்துவம் நிறைந்த சமூகக் கொள்கையை செயல்படுத்துவோம்,
தேசியச் செலவுகள் அதிகரிப்பு, உயரும் வேலையின்மையை சமாளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவை எடுக்கப்படும்
என்று உறுதிமொழி அளித்து PASOK
அதன் பிரச்சாரத்தை நடத்தியது. தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே பாபாண்ட்ரூவும்
PASOK -ம்
முந்தைய நிர்வாகத்தின் போக்கைத்தான் கடைபிடிக்கும் என்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது.
பெருகிய முறையில் இளைஞர்கள் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களின்
சீற்றத்திற்கு எரியூட்டுகிறோம் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. கடந்த ஞாயிறன்று 15 வயது அலெக்சிஸ்
கிரிகோரோபோ சுடப்பட்ட ஆண்டு நிறைவைக் குறித்த 10,000 பேர் அடங்கிய கூட்டத்தில் பெரும் போலீஸ்
பாதுகாப்பு இருந்தும் இளைஞர்களுக்கும் போலீஸிற்கும் மோதல் என மாறியது. சீன நிறுவனம்
Cosco விற்கு
Peireaus
துறைமுகத்தை வாடகைக்கு விடும் அரசாங்கத் திட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் அலையென போர்க்குணம்
கொண்ட வேலைநிறுத்தங்கள் நடத்தியதுடன் இதுவும் இணைந்து நிற்கிறது.
தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
தேவை என்னும் ஒருமித்த உணர்வு கிரேக்க ஆளும் வர்க்கத்திடம் வந்துள்ளபோது, இத்திட்டத்தை செயல்படுத்த
மிகக்குறுகிய சமூகத் தளத்தைத்தான் தான் கொண்டுள்ளது என்பதையும் அது நன்கு அறிந்துள்ளது. தொழிற்சங்கள்
மற்றும் குட்டி முதலாளித்துவ முன்னாள் தீவிரக் குழுக்களின் ஆதரவு இதற்குத் தேவைப்படுகிறது.
GSEE எனப்படும் கிரேக்க
தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தை மேற்பார்வையிடும் வல்லுனர் குழுவில் தன்னுடைய
ஆலோசகரையும் அனுப்பியுள்ளது. தொழிற்சங்கங்கள் முதலாளித்துவத்தினருடன் வாழ்க்கைத் தரங்களைத் தாக்குவதில்
ஒத்துழைப்பது ஒன்றும் புதிதல்ல. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, மற்றும் பொது நிறுவனங்களைத் தனியார்
மயமாக்கியது என்று 1990 களில் PASOK
யால் செய்யப்பட்டது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவு இருந்ததால்தான் முடிந்தது.
SEB எனப்படும் கிரேக்க தொழிலதிபர்கள்
கூட்டமைப்பு, "ஒத்துழைப்பில் பொது வழி" என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது; இதில்
GSEE ஊதியங்களைக்
கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். ஒரு சமீபத்திய அறிக்கையில்
SEB யின் தலைவர்
"GSEE
உடனும் பிற சமூகப் பங்காளிகளுடனும் ஒரு சமூக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தொடக்க முயற்சிகள் ஒரு
ஆபத்தைக் காட்டும், SOS (Save our Souls,
எங்களைக் காப்பாற்றவும்)
என்னும் அடையாளத்தை தொழிலாளர் தொகுப்பிற்குக் காட்டுவதாகும் என்று
எச்சரித்தார்.
SYRIZA என்னும் முற்போக்கு இடது
கூட்டணியும் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு "சமூக உரையாடலில்" பங்கு பெறும் விருப்பத்தைக் காட்டியுள்ளது. பாராளுமன்றக்
குழுவில் இந்தக் குழுவின் உறுப்பினராக இருக்கும்
Michales Kristsotakis அரசாங்கத்தின் வலதுசாரித்
திட்டத்திற்கு தன் கட்சியின் எதிர்ப்பைக் காட்டுவதற்கு, "ஏமாற்றம் அளிக்கிறது" என்று கூறி நிறுத்திவிட்டார்.
தேர்தல்களுக்கு பின்னர்
SYRIZA மீண்டும் அது ஒரு அரசியல் கட்சியாகச் செயல்பட
வேண்டுமா அல்லது கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது பற்றி உட்பூசல்களில் ஆழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில்
தன் நிலையை இந்த அமைப்பு தக்கவைத்துக் கொள்ள முயன்றாலும், அதன் ஆதரவுத் தளம் 2007ல் 5 சதவிகிதத்தில்
இருந்து 4.4 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
தன்னுடைய மக்கள் தளத்தை பெருக்கிக் கொள்ள, குறிப்பாக இளைஞர்களிடையே கடந்த
டிசம்பர் மாத வெகு ஜன ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் என்ற நிலையில்,
PASOK உடன்
ஒருவேளை கூட்டணி என்ற வாய்ப்பிற்கு பேச்சுக்கள் என்று வந்த பின்னர் இது விரைவில் குறையத் தொடங்கி விட்டது.
கிரேக்க ஸ்ராலினிச கம்யூனிஸ்ட கட்சி (KKE)
தற்பொழுது "சமூக உரையாடலில் பங்கு பெற மறுத்துவிட்டது; தொழிற்சங்கங்களும் டிசம்பர் 17 ல் ஒரு பொது
வேலைநிறுத்தத்தை அறிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொழிற்சங்கங்களிடையே பிரமைகளை விதைக்கும்
நோக்கத்தைக் கொண்டது. |