WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஜேர்மனி
Coverup of the German army's role in the Kunduz massacre
continues
குண்டுஸ் படுகொலையில் ஜேர்மனிய இராணுவத்தின் பங்கு பற்றி மூடிமறைத்தல் தொடர்கிறது
By Ulrich Rippert
7 December 2009
Use this version
to print | Send
feedback
கடந்த வியாழனன்று ஜேர்மனிய கூட்டாட்சிப் பாராளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தில்,
ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவ நடவடிக்கைகள் தொடரப்படுவதற்கு பெரும்பான்மையான பிரதிநிதிகள் வாக்களித்த
நிலையில், பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் ஜு குட்டன்பேர்க் குண்டுஸ் பகுதியில் சமீபத்தில் நடந்த
படுகொலை பற்றி ஒரு அறிக்கையை அளித்தார். நிகழ்வைப் பற்றிய அவருடைய முந்தை மதிப்பீட்டிற்கு மாறாக மந்திரி
செப்டம்பர் 4ம் தேதி இரு டாங்கர் லொறிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியது "இராணுவ அடிப்படையில்
அளவு ரீதியாக பெரிதானது" என்று அறிவித்தார்.
நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் லொறிகளைத்
தாக்குதலுக்கு உட்படுத்தியதை முழுமையாகக் காட்டுவதற்கு அது "இராணுவ அடிப்படை அளவிற்கு உட்பட்டதுதான்"
என்றும் உறுதியாகக் கூறினார். ஒரு நேட்டோ விசாரணை பின்னர் "சில வழிமுறைத் தவறுகள்" இருந்தன, "சில
பகுதிகளில் துருப்புக்களுக்கு போதிய பயிற்சி இல்லை" என்ற முடிவிற்கு வரலாம் என்றும் அவர் ஒப்புக் கொண்டார்;
"ஆனால் வழிமுறை குறைபாடுகள் இல்லாமல் இருந்தாலும், விமானத் தாக்குதல் தேவையாக இருந்திருக்கும்" என்றார்.
இவர் "நிகழ்வுகளைப் பற்றிக் கொண்டுள்ள மறுமதிப்பீடு" பல வர்ணனையாளர்களால்
வரவேற்கப்பட்டு Handelsblatt
நாளேட்டினால் "ஒரு 180 டிகிரி மாற்றம்" என்று விவரிக்கப்பட்டது; ஆனால் உண்மை இதுவல்ல.
வியாழனன்று தன்னுடைய பாராளுமன்ற உரையில், குட்டன்பேர்க் செப்டம்பர் 4
அதிகாலையில் வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருந்த கேணல் ஜோர்ஜ் கிளைனுக்குத் தன் ஆதரவை
வெளிப்படுத்தினார். நேட்டோ வான்வழித் தாக்குதலில் 142 பேர் இறந்து விட்டதாகக் கருதினாலும் --பல
சிவிலியன்கள், குழந்தைகள் உட்பட-- குட்டன்பேர்க் கேணலுடைய முடிவிற்கு தன் "முழுப் பரிவுணர்வு" இருப்பதாக
வலியுறுத்தினார். "ஐயத்திற்கு இடமின்றி தெளிவான உணர்வுடனும், மனச்சாட்சியுடனும்தான்" கேணல் கிளைன்
நடந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் வளர்ந்த ஒரு
Breman
வக்கீலான Karim Popal
கருத்துப்படி, இறந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகும்.
ஆப்கானிஸ்தானில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தியபின், போபல் 160 பாதிப்பிற்குள்ளான சிவிலியன்கள்--139
இறந்தவர்கள், 20 காயமுற்றவர்கள், 20 பேரைப் பற்றித் தகவல் இல்லை--இருந்ததாகக் கூறினார்.
தாக்குதலின் விளைவாக 163 அனாதைகள் உள்ளனர்; 91 பெண்கள் அவர்களுடைய கணவன்மார்களை
இழந்துவிட்டனர்.
ஆயினும்கூட மந்திரி பாராளுமன்றத்திற்கு உத்தரவாதம் கொடுக்கிறார்: "என்னுடைய
முழு நம்பிக்கையையும் கேணல் கிளைன் கொண்டுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்." கிளைன்
"தன்னுடைய போக்கின் இராணுவப் பொருத்தம் பற்றி ஏன் தன்னிலை மதிப்பீடு கொடுத்தார்" என்பதற்குத் தக்க
காரணங்கள் உள்ளன. நான் மீண்டும் கூறிகிறேன். கேணல் கிளைன் ஐயத்திற்கு இடமின்றி மிகத் தெளிவான உணர்வுடனும்
மனச்சாட்சியுடனும்தான் செயல்பட்டார், தன்னுடைய சிப்பாய்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்பட்டார்."
பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் பிரிவில் இருந்து விவாதத்தைப் பார்க்க
வந்திருந்த சிப்பாய்கள், அதிகாரிகளை நோக்கி பலமுறையும் மந்திரி பேசினார். நிகழ்வுகள் பற்றி தன்னுடைய மறு
மதிப்பீடு பற்றி அவர் கூறினார். "....ஆனால் கேணல் கிளைன் பற்றிய என்னுடைய பாராட்டு மதிப்பீட்டில்
எந்தவிதத் திருத்தத்தையும் நான் செய்ய மாட்டேன்."
எனவே, குட்டன்பேர்க்கின் நியாயப்படி, ஹிட்லரின் இராணுவப்படைகள் புரிந்த பெரும்
குற்றங்களை அடுத்து மிகப் பெரிய அளவில் ஜேர்மனிய இராணுவம் செய்துள்ள படுகொலை பொதுநிலைத் தன்மையில்
நியாயப்படுத்த முடியாது ஆனால் உண்மையில் தன்னிலைப்பார்வையில் நியாயப்படுத்தப்பட முடியும். இந்த பாதிப்பை
ஏற்படுத்திய நடவடிக்கையை, "இராணுவமுறையில் அளவைவிட அதிகமான" நடவடிக்கைக்குப் பொறுப்பான நபர்,
மந்திரியின் முழுப் பரிவுணர்வையும் தயக்கத்திற்கு இடமில்லாத ஆதரவையும் பெறுகிறார்.
இத்தகைய அபத்தமான வாதம் உண்மை நிகழ்வுகளை மூடி மறைக்கத்தான் உதவும்.
கேணல் "மிகத் தெளிவான உணர்வுடனும் மனச்சாட்சியுடனும்தான்" செயல்பட்டார் என்பதற்கு மந்திரி எந்தவிதச்
சான்றுகளையும் கொடுக்கவில்லை. அறியப்பட்டுள்ள உண்மைகள் அனைத்தும் அத்தகைய முடிவிற்கு எதிராகத்தான்
உள்ளன.
டாங்கர் லொறிகள்மீது தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு அவசரமாகக்
கொடுக்கப்பட்டது, உடனடி ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் என்பதற்கான கூற்று--அதாவது சிப்பாய்களை
காப்பாற்றுவதற்கு என்பது--ஏற்க முடியாததாகும். Der
Spiegel ஏடு நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு பற்றி மிகத்
துல்லியமாக தன்னுடைய ஆய்வு மற்றும் ISAF (நேட்டோ
தலைமையிலான பாதுகாப்பு உதவிப் படையின்) விசாரணை ஆகியவற்றைக் கொண்டு கொடுத்துள்ளது. இது கீழ்க்கண்ட
காட்சியை புலப்படுத்துகிறது.
முதலில் கடத்தப்பட்ட டாங்கர்கள் ஜேர்மனிய இராணுவத்தின்
PRT (மாநில
மறுகட்டமைப்புக்குழு) தலைமையகத்தில் இருந்து குண்டுஸ் ஆற்றுப் பக்கம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தொடக்கத்தில் ஏதேனும் நேரடி ஆபத்து இருந்திருந்தால், அது நடவடிக்கைப் போக்கை குறைத்திருக்கும். முகாமில்
இருந்து கிட்டத்தட்ட 7 கி.மீ. பயணித்தபின் இரு லொறிகளும் ஆற்றின் கரையில் மணலில் சிக்கி, நகர முடியாமல்
போயின.
இரண்டாவதாக, ஒரு அமெரிக்க விமானம், இரவுப்பார்வை தொழில்நுட்பத்துடனும்
குண்டு வீசும் ஆற்றலையும் கொண்டது நேரடி வீடியோக் காட்சிகளை ஜேர்மனிய தள முகாமிற்கு அனுப்பி வந்தது.
பல மணி நேரம் அது கடத்தல்காரர்களை கண்காணித்தது; பின் இரு அமெரிக்க
F15 போர்
விமானங்கள் அதற்குப் பதிலாக அங்கு வந்து நேரடி வீடியோக்களை அனுப்பியிருந்தன. மக்களின் எண்ணிக்கை
அதிகமாகி இருந்தால் அது வீடியோ படங்களில் தெரிய வந்திருக்கும். இந்த நிலையில் ஒரு ஆப்கானிய தகவல்
கொடுப்பவர் ஜேர்மனிய கேணலுக்கு டாங்கர் லொறிகள் மணலில் சிக்கி விட்டதாகவும் பெட்ரோல் கிராம
மக்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் கூறினார்.
மூன்றாவதாக போர் விமான ஓட்டிகள் ஜேர்மனிய துருப்புக் கட்டுப்பாட்டை இரு
முறை அவற்றின் படைகள் எதிரியுடன் தொடர்பு கொண்டனவா, டிரக்குகளுக்குப் பக்கத்தில் அதிக மக்கள் இருக்கும்
நிலையில், குறைந்த உயரத்தில் பறப்பதின்மூலம் அவர்கள் விரட்டப்படுவது தேவையா என்று வினவினர். இருமுறையும்
அவர்கள் எதிரியுடன் தொடர்பு உள்ளது என்ற தவறான தகவலைப் பெற்றனர், எதிரியினால் உடனடி அச்சுறுத்தலை
எதிர்கொள்ளுகின்றனர் என்றும் கூறப்பட்டது; ஆனால் ஜேர்மனிய குண்டுஸ் தளத்தில் இருந்து எந்தப் படைகளும்
ஆற்றுப்படுகையில் என்ன உண்மையில் நடக்கிறது என்பதை மதிப்பிட எவரும் செல்லவில்லை.
கேணல் கிளைன், அவருடைய அதிகாரத்தின் பேரிலேயே ஒரு விமானத்தாக்குதலுக்கு
எதிரியுடன் ஆரம்ப சண்டையில் ஈடுபடுவதற்கான நிலைமையின்மையிருந்து தவிர்க்க முடியாத ஆபத்து இருந்தால் ஒழிய
விமானத்தாக்குதலுக்கு உத்தரவிட அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று
Der Spigel
கூறியுள்ளது. ஏடு மேலும் கூறுவதாவது: "IASF
அறிக்கையில் கேணல் கிளைனுக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள குறைகூறல்கள் கடினமானவை. கிளைன் விமானிகளிடம்
பொய்கூறினார், தவறான தகவலின் அடிப்படையில் குண்டுவீச்சிற்கு உத்தரவிடப்பட்டது என்ற கருத்தைக்
கொடுக்கிறது. ISAF
அறிக்கையை எவர் கவனமாகப் படித்தாலும் கிளைன் கொலை செய்ய விரும்பினார் என்ற உணர்வைத்தான்
அடைவர்."
பாதுகாப்பு மந்திரி குட்டன்பேர்க் ஏற்கனவே நவம்பர் தொடக்கத்தில் லொறிகள்மீது
நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்தபோதே இந்த உண்மைகளை அறிந்திருந்து, இவற்றை "இராணுவ
அடிப்படையில் அளவு ரீதியானவை" என்று விவரித்து, தவிர்க்க முடியாதது என்றும் கூறினார். முறையான
மூடிமறைத்தல் இனி இயலாது என்று போனபின்னர்தான் குட்டன்பேர்க் படிப்படியாக உண்மையை ஏற்கத்
தயாரானார். இப்பொழுது அவர் குண்டுவீச்சு "இராணுவ அடிப்படையில் அளவு ரீதியாகப் பெரிதானது" என்று
அறிவிக்கிறார்; ஆனால் இந்த கூடுதலான ஆக்கிரோஷ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அதிகாரிக்கு ஆதரவளிக்கிறார்.
ஏன்?
கிளைன் தன்னுடைய அதிகாரத்தில் தலைமை அதிகாரிகளைக் கலக்காமல்
செயல்பட்டிருப்பார் என்பது நம்ப முடியாதது ஆகும். ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு பொதுப் பொறுப்பு
கொண்டிருந்த பிரிகேடியர் ஜெனரல் ஏன் படுகொலைக்குப் பின்னர் இரு முறை மாற்றப்பட்டார்? அக்டோபர் 3ம்
தேதி தளபதி Jorg Vollmer
கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தளபதி
Jurgen Setzer
இடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது; அவர் தளபதி
Leidenberger இடம் நவம்பர் இறுதியில் பொறுப்பை
ஒப்படைத்தார். பல ஆண்டுகள் BND,
கூட்டாட்சியின் உளவுத்துறையில் தலைமை அதிகாரியாக வேலை செய்தவர் என்ற முறையில் சிறப்புப் பெருமையை
Leridenberger பெற்றிருந்தார். இங்கு எது
மூடிமறைக்கப்படுகிறது?
குட்டன்பேர்க் குண்டு வீச்சிற்கு உத்தரவிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்,
சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை விவரங்கள் அறியப்பட்டதிலிருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டார்
என்பதில் இருந்து இவர் தாக்குதலுக்குப் பின் இருந்த நோக்கங்கள், இலக்குகளுடன் ஒத்துப் போகிறார் என்பது தெரிய
வருகிறது.
பல ஆண்டுகளாக முக்கிய இராணுவ அதிகாரிகள்--குறிப்பாக வெளிநாடுகளில் செயல்படும்
துருப்புக்களின் தளபதிகள்--1950 களில் அது நிறுவப்பட்டத்தில் இருந்து இராணுவத்தின்மீது சுமத்தப்பட்டுள்ள தடைகள்
அகற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வந்துள்ளனர். இன்னும் அதிக செயல் சுதந்திரத்தை அவர்கள்கோரி,
பாராளுமன்றம் எடுக்கும் முடிவுகளின்மீது குறைந்த பற்றைத்தான் விரும்பினர். மேலும் அவர்கள் அமெரிக்க, பிரிட்டிஷ்,
இஸ்ரேலிய இராணுவங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள கொலை செய்யும் உரிமையையும் வலியுறுத்தினர்.
அவர்களைப் போலவே ஜேர்மனியத் தளபதிகளும் தாக்குதல் நடவடிக்கைகளை, தாங்கள்
எதிரிகள் என்று வரையறுக்கும் மக்களை எந்தப் பொறுப்பும் இல்லாமல் கொலை செய்யும் நடவடிக்கைகளில்
ஈடுபடும் உரிமையை விரும்பினர்.
மந்திரிப் பதவிக்கு முன்பு குட்டன்பேர்க் அரசாங்கத்தின்மீது இராணுவத்தின்
செல்வாக்கை அதிகரிக்க உழைத்திருந்தார். 2007ல் அவர் சான்ஸ்லரியில் ஆப்கானிஸ்தான் பற்றி ஒரு செய்தித்
தொடர்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று அழைப்பை விடுத்திருந்தார்; அப்பொழுதுதான் போர் நோக்கங்கள்
பெருகிய மக்கள் எதிர்ப்பிற்கு இடையே செயல்படுத்தப்பட முடியும் என்றார்.
குண்டுஸ் ஆற்றுப்படுகை படுகொலையை மூடிமறைக்கும் முறையான பிரச்சாரம் இராணுவத்
தலைமை தன்னுடைய நலன்களைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. |