World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP public meeting to launch presidential campaign

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டம்

9 December 2009

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் பிரச்சாரத்தை தொடக்கி வைக்க டிசம்பர் 12 கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது. கட்சியின் வேட்பாளர், பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ் ஆவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ குறித்த காலத்துக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள், இனவாத யுத்தத்துக்கும் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கும் இராஜபக்ஷவுடன் சேர்ந்து பொறுப்பாளியான, கடந்த மாதம் வரை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றன.

எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அடுத்த அரசாங்கம் நாட்டில் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்க உடனடியாக முயற்சிக்கும். தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுத்த இராஜபக்ஷவும் பொன்சேகாவும், தொழில் இழப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவு சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்த தயாராகியுள்ளனர்.

சோ.ச.க. மட்டுமே சோசலிச கொள்கைகளை அமுல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட பிரச்சாரம் செய்யும் கட்சியாகும். எமது பிரச்சாரம் தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துகான போராட்டத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தின் வாசகர்களையும் எமது கூட்டத்துக்கு வருகை தருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: நாராயணகுரு மண்டபம் (ஆமர் வீதிக்கு அருகில்), கொழும்பு 12.

காலம்: டிசம்பர் 12 சனிக்கிழமை, பி.ப. 3 மணி.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved