World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government threatens to shut firms employing illegal immigrants

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனங்கள் மூடப்படும் என்று பிரெஞ்சு அரசாங்கம் அச்சுறுத்துகிறது

By Antoine Lerougetel
5 December 2009

Use this version to print | Send feedback

ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு (sans-papiees) எதிராக மிகக் கடுமையான விதிகளை நவம்பர் 22ம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களை வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் மீதான திட்டமிட்டதாக்குதலுக்கு சட்டபூர்வ அடிப்படையைக் கொடுக்கிறது. பிரான்சில் கிட்டத்தட்ட 200,000 முதல் 400,000 ஆவணமற்ற தொழிலாளர்கள் வாழ்கிறார்கள்; பெரும்பாலும் கட்டுமானம், ஓட்டல் மற்றும் பணித் துறைகளில் குறைந்த ஊதியத்தை இவர்கள் பெறுகின்றனர்.

குடியேற்றம் மற்றும் தேசிய அடையாளப் பிரிவின் மந்திரியான எரிக் பெசோன் மற்றும் தொழில் துறை மந்திரி சேவியர் டார்கோஸ் ஆகியோர் தனித்தனி அறிவிப்புக்களில் இந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளனர்.

Préfets என்னும் வட்டார சட்ட இயக்கத் தலைவர்கள் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரத்தைப் பெறுவர் என்று டார்கோஸ் அறிவித்தார். அரசாங்கம் "ஆய்வுமுறைகளை வலுப்படுத்தும் என்றும் நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிதிகள் மீது கட்டுப்பாடு, அவற்றின் தோற்றத்தைப் பாதிக்கும் விதத்தில் எடுக்கப்படும் என்றும் இது ஒரு வலுவான தடுப்பாக இருக்கும்" என்றும் அவர் அறிவித்தார்.

France 5TV இடத்தில் முறைகேடுகளுக்கு எதிராக "ஒரு முழு சட்டத் தொகுப்பு வரும்" என்றும் அதில் "வெளிநாட்டவரை சட்டவிரோதமாக வேலையில் வைத்திருக்கும் நிறுவனங்கள் நிர்வாக ரீதியில் மூடப்படுவதற்கும்", ஆவணமற்றவர்களை நியமித்துள்ள பொது அல்லது தனியார் நிறுவனங்கள் "எவ்வித ஒப்பந்தங்களுக்கும் தகுதி பெறுவதை இழந்துவிடும்" என்பவை சேர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். மீறும் நிறுவனங்கள் மீது கூடுதலான அபராதங்களும் "பொது உதவியை திரும்பச்செலுத்துமாறு கோரிக்கைகளும்" திணிக்கப்படும்.

ஆவணமற்ற தொழிலாளர்கள் நலன் கருதித்தான் இந்த விதிகள் அளிக்கப்படுதல் உந்துதல் பெற்றது என்று அதிர்ச்சி தரும் இழிந்த முறையில் பெசோன் காட்ட முயன்றுள்ளார். "நம்முடைய மண்ணில் வெளிநாட்டவர்கள் மாஃபியா வலைப்பின்னல்களால் சுரண்டப்படுகின்றனர் என்றால், அதற்குக் காரணம் நம் மண்ணில் உள்ள முதலாளிகளும் சுரண்டுபவர்களும் அவர்களுடைய நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவதும் ஒரு காரணம் ஆகும்."

préfets செயலாக்க தலைவர்களுக்கு ஆவணமற்ற தொழிலாளர்கள் வசிக்கும் உரிமையை பெறத் தேவையான மூன்று நிபந்தனைகளையும் தான் தெரிவிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்; அவை, பிரான்சில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்க வேண்டும், ஓராண்டிற்கு முன்பேனும் வசிக்கும் உரிமைகளுக்கான தேவையை அதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதில் கஷ்டங்கள் உள்ள பிரிவில் வேலைபார்த்திருக்க வேண்டும். இந்த மிகக் கடினமான தடுப்பு நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய 1000 தொழிலாளர்களுக்குத்தான் இந்த ஒதுக்கீடு என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியேறுபவர்கள், இன, மத வழிச் சிறுபான்மையினரின் மீது ஆளும் வர்க்கம் நடத்தி வரும் பல தாக்குதல்களில் இந்தப் பிற்போக்கு நடவடிக்கை சமீபத்தியதாகும். பிரான்சில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள தேசிய அடையாளம் பற்றிய "விவாதம்", பர்க்காவை பாராளுமன்றக் குழு தடைசெய்துள்ளது என்ற விதத்தில் இது அடங்கியுள்ளது. இதே போன்றவை ஐரோப்பா முழுவதும் நடைபெறுகின்றன; சமீபத்தில் சுவிஸ் வாக்கெடுப்பு ஒன்று மசூதி அமைப்புக்கள் கட்டுதல் பற்றி தடை கொண்டுவந்துள்ளது முக்கியமான உதாரணம் ஆகும்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இரு கட்டாயத் தேவைகளினால் இவை உந்துதல் பெற்றுள்ளன: முதலில் அதன் மக்கள் ஆதரவற்ற, புதிய குடியேற்ற வகையிலான இராணுவத் தலையீட்டை அமெரிக்காவுடன் ஆப்பிரிக்காவில் விரிவாக்க தக்க சிந்தனைப் போக்குச்சூழலைத் தோற்றுவித்தல்; இரண்டாவதாக, இனவெறி உணர்வைத் தூண்டி தொழிலாள வர்க்கத்தின் பெருகிய வேலையின்மை, சமூகச் சிக்கனம் மற்றும் போருக்கு எதிரான பெரும் சீற்றத்தை திசைதிருப்பிப் பிரித்தல் என்பவையே அவை.

நவம்பர் 30ம் தேதி Le Monde சோசலிஸ்ட் கட்சியின் (Parti socialiste PS) தலைவரும் Clichy-sous-Paris ன் மேயருமான Claude Dilain ஐ பேட்டி கண்டது. இந்த இடத்தில்தான் 2005 இலையுதிர்காலத்தில் போலீஸிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இரு குடியேற்ற இளைஞர்கள் இறந்தது பிரான்ஸ் நாடு முழுவதும் நகரச் சேரிகளில் கலகத்தைத் தூண்டி, ஒரு மூன்றுமாதகால நெருக்கடி நிலைமைப் பிரகடனம் செய்யக் காரணமாகவும் இருந்தது. இப்பகுதிகள் "கூர்உணர்வான நகர்ப்பகுதிகள்" என்று அறியப்படுபவை; இவற்றில் 4.5 மில்லியன் மக்கள் உள்ளனர்; 33.1 சதவிகிதத்தினர் வறுமைக் கோடான மாதம் ஒன்றிற்கு 908 யூரோவிற்குக் கீழே உள்ள நிலையில் வாழ்கின்றனர், வேலையின்மை விகிதம் 17 சதவிகிதமாக உள்ளது; இதில் ஆண்களில் 41 சதவிகிதத்தினர் 15 முதல் 24 வயது வரை இருப்பவர்கள் ஆவர்.

Dilain விளக்கினார்: "2005 கலகங்களின் ஒரு சக்தியாக இருந்த இளைஞர்களை மட்டும் கோபம் பாதிக்கவில்லை; இது வயது வந்தவர்களிடையேயும், குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்டு, ஒரு கல்வித்தகுதி கொண்டு, திருமணம் செய்து கொண்டு குழுந்தைகள் வைத்திருப்போரிடமும் உள்ளது; இவர்களோ நெருக்கடியால் வேலையை இழந்துவிட்டனர். 2005ம் ஆண்டு நடந்ததில் தொடர்புபெற்றிருந்தது கலகமா அல்லது சமூக எழுச்சியா என்பது பற்றிய கோட்பாட்டளவு விவாதமும் இருந்தது. இன்று, சில இடங்களில், சமூக எழுச்சி கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம் என்பதை நான் உணர்கிறேன்; இது மிகவும் ஆபத்தானதாகும்."

ஒரு சட்டம், ஒழுங்கு அரங்கில் குடியேற்ற எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஆகியவை நச்சுத்தனமாக அரசியல் இயக்கத்தில் அடித்தளம் கொண்டிருந்த தன்மையில் 2007 தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சமூக பதட்டங்களின் எழுச்சியுடன் பிணைந்துள்ளது. புதிய பாசிச வாக்காளர்கள் ஏராளமானவர்களுடைய ஆதரவுடன் சார்க்கோசி வெற்றி பெற்று, புதிய-பாசிச முன்னணியின் (Front National FN) தலைவரான Jean-Marie Le Pen ஐ ஜனாதிபதியின் எலிசே அரண்மனையில் வரவேற்ற முதல் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஆனார்.

மார்ச் 10 வட்டாரத் தேர்தல்களில் FN போதிய வாக்குகளைப் பெற்று சார்க்கோசியின் UMP ஐ வலுவிழக்க செய்யக்கூடும் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. சார்க்கோசியின் மந்திரிகள் இதை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய பாசிச வாக்காளர்களுக்கு முறையிடுகின்றனர்.

மிக மோசமான அரசியல் உணர்வுகளுக்கு அரசாங்கம் அப்பட்டமாக ஊக்கம் கொடுக்க முடிகிறது; இதற்குக் காரணம் தொழிற்சங்கங்கள் அல்லது "இடது" என்று அழைக்கப்படும் முற்றிலும் திவாலான கட்சிகளிடம் இருந்தோ அரசாங்கம் எவ்வித பயனுடைய அரசியல் எதிர்ப்பையும் பெறாது.

CGT France
பாரிஸில் நவம்பர் 29ம் தேதி ஆவணமற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) க்கு நெருக்கமான CGT எனப்படும் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆவணமற்ற தொழிலாளர்களிடம் காட்டும் அணுகுமுறை இதற்கு ஒரு முக்கிய உதாரணம் ஆகும். 2007ல் ஆவணமற்ற தொழிலாளர்களை நியமிப்பதற்கு எதிராக சார்க்கோசி 2007ல் ஒரு சட்டம் இயற்றியபின், ஆவணமற்ற தொழிலாளர்களைப் பெரிதும் நம்பியுள்ள சுத்தம் செய்தல், உணவுப்பிரிவு, கட்டுமானத் தொழில்களில் உள்ள முதலாளிகளுடன் CGT நெருக்கமாக ஒத்துழைத்து சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தது.

ஏப்ரல் 2008ல் CGT தொழிற்சங்க அரங்கை பாரிஸில் ஆவணமற்ற தொழிலாளர்களின் ஒரு குழு ஆக்கிரமித்து நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியபோது, அவர்களுடைய கோரிக்கைய CGT ஏற்க மறுத்துவிட்டது. CGT யின் பாரிஸ் வட்டாரப் பகுதி அலுவலரான Christian Khalifa இழிவுடன் LCI தொலைக்காட்சியிடம் கூறினார்: "நாங்கள் ஒரு தொழிற்சங்க அமைப்பு, ஆவணமற்ற தொழிலாளர்களின் அமைப்பு அல்ல. எங்களுடைய செயற்பாடுகள் பணியிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன." முழு "இடதும்", PCF, Ligue Communiste Revolutionnaire (ஒலிவியே பெசன்ஸநோவின் NPA வின் முன்னோடி) மற்றும் பல குடியேற்ற ஆதரவு, இனவெறி எதிர்ப்புக் குழுக்களும் CGT க்கு ஆதரவாகத்தான் இருந்தன.

இது தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள அரசாங்கப் பாதுகாப்புப் படைகளுடன் நேரடியாக ஒத்துழைப்பதற்கு ஒரு முன்னோடி ஆகும். இந்த ஆண்டு ஜூன் 24 அன்று, CGT அனுப்பிய ஒரு கமாண்டோப் பிரிவு, CRS கலகப்பிரிவு போலீஸுடன் சேர்ந்து தொழிற்சங்க அரங்கில் எஞ்சியிருந்த 600 ஆவணமற்ற தொழிலளர்களைத் தாக்கி, வெளியே அகற்றியது.

இக்குழுக்கள் தற்போதைய விதிகளை எதிர்கொண்டுள்ள விதமும் பாரிஸ் தொழிற்சங்க அரங்கின்மீது ஆவணமற்ற தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது இருந்த தன்மையை ஒட்டித்தான் உள்ளது.

பிரதம மந்திரி Francois Fillon க்கு ஐந்து தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் மற்றும் CIMADE எனப்படும் குடியேறியவர்கள் தடுப்புக்காவல் மையத்தில் குறுக்கிட அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே அமைப்பு, RESF (எல்லைகள் அற்ற கல்வி இணையம்), LDH (மனித உரிமைகள் குழு) உட்பட ஆறு மனித உரிமைகள் அமைப்புக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை CGT அனுப்பி வைத்தது. "நம் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆவணமற்ற பெண், ஆண் தொழிலாளிகள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பதில் ஈடுபாடு கொண்டுள்ளது" என்று அறிவிக்கிறது. வட்டார சட்ட இயக்குனர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்றும் "அதில் முன்னேற்றமான தர நிர்ணயங்கள்", "சட்டமியற்ற வகைப்படுத்தப்பட்ட வழிமுறைகள்" அடங்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் இது பெரும்பாலான ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு வசிக்கும் உரிமைகளை மறுக்கும் வகைப்படுத்தப்பட்ட வழிமுறைகளாகத்தான் இருக்கும். வழிவகைகளை முறையாக்குவதற்கான கடிதத்தின் முறையீட்டிற்கு தன் ஆதரவைத் தெரிவிப்பதில் பெசனுக்கு எந்த இடர்பாடும் இல்லை.

NPA அதன் அறிக்கையைக் கொடுக்கவில்லை; மாறாக UCIG எனப்படும் United Against Throw-away Immigration உடைய Alain Pojolat "70க்கும் மேற்பட்ட சங்கங்கள், கட்சிகள், தொழிற்சங்கங்களின் கூட்டு நிழற்குடை" விடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. Pojlat புதிய கட்டுப்பாடுகளை வெற்று அச்சுறுத்தல் என்று இழிவான அலட்சியப்போக்குடன் உதறித் தள்ளியுள்ளார்.

அவர் எழுதுகிறார்: "தொழில் துறை மந்திரி சேவியர் டார்க்கோஸ் ஆவணமற்ற தொழிலாளர்களை நியமித்திருக்கும் நிறுவனங்கள் மூடப்படும் என்று "அச்சுறுத்தியுள்ளார்". தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டால் அத்தகைய முடிவு பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முடக்கும் என்பதோடு, உடனடியாக நூற்றுக்கணக்கான கட்டிட அமைப்பு, சுத்திகரம் மற்றும் உணவுப் பிரிவு நிறுவனங்கள் மூடப்பட வகை செய்யும்."

இத்தகைய கருத்துக்கள் முன்னாள் இடது அடுக்குகளின் தடையற்ற மெத்தனத்தைத்தான் நிரூபிக்கின்றன. Darcos, Bason ஆகியோருடைய இலக்கு பிரெஞ்சு பொருளாதாரத்தை அழிப்பது அல்ல, அரசியல் சூழலை நச்சுப்படுத்தி, தொழிலாள வர்கத்தின் எதிர்ப்பை இன்னும் ஆக்கிரோஷமாக தாக்குவதற்காக அரசாங்கத்திற்கு தேவையான கருவிகளை அளிப்பதாகும். இவ்விதத்தில் அரசாங்கம் பகிரங்கமாக ஆவணமற்ற தொழிலாளர்களை நியமித்திருக்கும் நிறுவனங்களை பகிரங்கமாக அடையாளம் கொண்டு மூடுதல் பெரும் சிறப்பாக இருக்கும்.

ஆனால், இன்னும் பரந்த அளவில் அசாதாரணமான அதிகாரங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதும், பாசிச உணர்வுகளுக்கு அது ஊக்கம் கொடுப்பதிலும் ஒரு புறநிலையான தர்க்கம் உள்ளது. சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் உந்ததுதலின்கீழ், ஒரு நெருக்கடிக்கு உட்பட்டுள்ள அரசாங்கம் இதன் உறுப்பினர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்ததைவிட கூடுதலான அளவில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தக்கூடும்.