World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European states fall into line behind Obama's Afghanistan surge

ஐரோப்பிய நாடுகள் ஒபாமாவின் ஆப்கானிய விரிவாக்கத்திற்கு துணை நிற்கின்றன

Stefan Steinberg
5 December 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த வாரம் அறிவித்த ஆப்கானிய போர் விரிவாக்கத்திற்கு தாங்கள் அனைத்து ஆதரவையும் தருவதாக பிரஸ்ஸல்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் அவர்கள் சமிக்கை காட்டியுள்ளனர். அவ்வாறு செய்ததன் மூலம், பெரும்பாலும் போரை எதிர்த்துள்ள தங்கள் மக்களின் தெளிவான விருப்பை புறக்கணித்துள்ளனர்.

ஒரு சர்வதேச ஏகாதிபத்தியத் தாக்குதலில் ஐரோப்பிய அரசாங்கங்கள் சேருகின்றன; இதை ஒட்டி இன்னும் இறப்புக்கள், அதிக சித்திரவதைகள் மற்றும் கூடுதலான சமூகப் பேரழிவு போரினால் பீடிக்கப்பட்டுள்ள அந்நாட்டிலும் அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் ஏற்படும் என்பதுதான் பொருள்.

வெளிவிவகார செயலரான ஹில்லாரி கிளின்டன், ஆப்கானிஸ்தானிற்கும் பாக்கிஸ்தானிற்கும் சிறப்புத் தூதரான ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயர் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் அனைவரும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸிற்குப் பயணித்து, ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ ஆக்கிரமிப்பில் ஐரோப்பிய நாடுகள்கூடுதலாக பங்கு பெற வேண்டும் என்று முரசு கொட்டினர்.

பெல்ஜியத்தின் தலைநகரத்திற்குள் வந்தவுடன், ஹோல்ப்ரூக் கூறினார்: "மக்களிடையே இப்போர் செல்வாக்குப் பெறவில்லை என்று நான் அறிந்துள்ளேன். இது ஒரு நீடித்த போராகும், ஈராக், வியட்நாம் மரபுகளும் இதில் உள்ளன." அதன் பின் அவர், ஒபாமாவின் விரிவாக்கத்திற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் போர் ஆதரவிற்கு அமெரிக்கா மகிழ்ச்சி அடைகிறது என்றும் அறிவித்தார்.

ஹோல்ப்ரூக்கின் கருத்துக்கள் கிளின்டனால் எதிரொலிக்கப்பட்டன; கூடுதலான இராணுவ ஈடுபாட்டை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் முக்கிய தடைகளை எதிர்கொள்ளுகின்றன என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

டச்சு அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக கிளின்டனுடைய கருத்துக்கள் இருந்தன; அங்கு கூட்டணி ஆட்சிப் பங்காளிக் கட்சிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் போரில் 2010க்குப் பின்னர் நாட்டின் தொடர்பு தொடரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளும் நேட்டோவிலுள்ள அதன் கூட்டாளிகளும், முதலிலும் முக்கியமானவருமாக நேட்டோவின் தலைமைச் செயலாளர் Anders Fogh Rasmussen- ம் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு ஆப்கானிஸ்தானில் அவற்றின் இராணுவ ஈடுபட்டை அதிகப்படுத்த அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு தீவிரப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய பங்கிற்கு மேர்க்கெல் ஜேர்மனிய அரசாங்கம் அதன் துருப்பு எண்ணிக்கையை அதிகரிக்கத் தயார் செய்துவருகிறது என்றும் அந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் சிறிது அவகாசம் தேவை என்றும் கூறினார்.

ஜேர்மனியின் முக்கிய அரசியல் கட்சிகள் அக்டோபர் மாதத்தில் நடந்த நாட்டின் கூட்டாட்சித் தேர்தலில், ஆழ்ந்த மக்கள் அதிருப்தியைக் கொண்டிருக்கும் இப்போர் ஒரு விவாதக் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதில் உடனபட்டிருந்தன. ஆனால் தேர்தலுக்கு முன்பு போரை விவாதத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் இந்த முயற்சி குண்டுஸ் நிகழ்வுகளின் விளைவாக சரிந்தது.

ஒரு ஜேர்மனிய கேர்னல் எழுச்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த டாங்கரை அழிப்பதற்கு உத்தரவு கொடுத்தார். அமெரிக்க ஜெட் ஒன்றினால் அந்த டாங்கர் தகர்க்கப்பட்டதை ஒட்டி 100 இறப்புக்களுக்கு மேல் நேர்ந்தன; இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் மிக அதிக சிவிலிய இறப்புக்களை ஏற்படுத்தியது.

குண்டுஸ் படுகொலையை அடுத்து எழுந்த பொது விவாதம் ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியின் இராஜிநாமாவிற்கு வழிவகுத்து, ஒரு அரசியல் வர்ணனையாளர் விவரித்தபடி, "ஜேர்மனிய மக்களிடம் ஆழ்ந்துள்ள சமாதான நெறிக்கு" மீண்டும் ஊக்கம் அளித்தது. ARD தொலைக் காட்சி நிலையம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு, ஜேர்மனிய மக்களில் 69 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 4,500 ஜேர்மனியத் துருப்புக்கள் மிக விரைவில் திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்திருந்ததைக் காட்டியுள்ளது. கருத்துத் தெரிவித்தவர்களில் 27 சதவிதத்தினர்தான் படைகள் அங்கேயே தொடர்வதற்கு ஆதரவு கொடுத்தனர்.

ஒபாமாவின் விரிவாக்கத்திற்கு புதிய ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி வலுவான ஆதரவை வெளியிட்டிருந்தாலும், இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் அதன் துருப்பு எண்ணிக்கைகளை அதிகரிப்பது என்பது அரசியல் வகையில் முடியாததாகும். இதுதான் ஒபாமாவிற்கு மேர்க்கெல் கொடுத்த செய்தியாகும். ஆனால் Der Spiegel கூற்றின்படி, ஜேர்மனியப் பாதுகாப்பு அமைச்சரகம் திரைக்கு பின்னால் அந்நாட்டிற்கு இன்னும் அதிகமாக 2,000 துருப்புக்களை திரட்டி அனுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது என்று தெரிகிறது.

பேர்லின் அரசாங்கத்தின் சங்கடத்தைப் போன்ற நிலையைத்தான் பிரெஞ்சு அரசாங்கமும் எதிர்கொண்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் ஆப்கானிஸ்தானிற்கு தன்னுடைய நாடு கூடுதலான படைகளை அனுப்ப இயலாது என்று இரு வாரங்களுக்கு முன்புதான் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அறிவித்திருந்தார். அண்டை நாடான ஜேர்மனியைப் போலவே, பிரெஞ்சு அரசாங்கம் அதன் ஆப்கானிஸ்தான் போர் ஈடுபாட்டிற்காக பரந்த மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளுகிறது.

இதைத் தவிர, பிரான்ஸ் அமெரிக்க அரசாங்கத்தின் ஹமித் கர்சாய் கைப்பாவை ஆட்சி அதிகாரத்தின் மீது கொண்டிருக்கும் ஆட்டம் கண்ட அதிகாரம் பற்றியும் மிகவும் கவலை கொண்டுள்ளது. சமீபத்தில் மிகப் பெரிய அளவு மோசடி, வாக்குச்சீட்டுக்கள் திணித்தல் என்ற நிலையில் கர்சாய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்சாய் உடைய அதிகாரத் தளத்தை விரிவாக்க பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

எப்படிப் பார்த்தாலும், ஒபாமாவின் விரிவாக்கத்திற்கு சார்க்கோசி இந்த வாரம் தன்னுடைய முழு ஆதரவையும் அறிவித்தார். அதே நேரத்தில், மேர்க்கெலைப் போல் இன்னும் படைகள் அனுப்புதல் பற்றி அறிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற குறிப்பையும் காட்டியுள்ளார்.

வாஷிங்டன், பேர்லின் மற்றும் பாரிஸிற்கு இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும், ஜனவரி இறுதியில் லண்டனில் நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய சர்வதேச மாநாடு வரை நேரம் கொடுக்கிறது; அங்கு இரு அரசாங்கங்களும் கூடுதல் ஈடுபாட்டைக் காட்டும் வகையில் வீரர்கள் அதிகரிப்பு பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நிர்வாகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களும் தங்கள் துருப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் விருப்பத்தை அறிவித்துள்ளன என்பதும் எதிர்பார்த்ததுதான்; ஜோர்ஜியா (900), போலந்து (600) மற்றும் ஸ்லோவாக்கியா (250) ஆகியவை இதில் அடங்கும். ஆப்கானிஸ்தானிற்கு மற்றும் ஓர் 1,000 துருப்புக்களைத் தான் அனுப்பும் என்று இத்தாலியப் பாதுகாப்பு மந்திரி அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இப்பொழுது உள்ள பிரிட்டிஷ் தொகுப்பான 9,000 ல் இருந்து இன்னும் 500 வீரர்களை அதிகரிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த வாரம் பிரிட்டனின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் கூறிய கருத்துக்கள் ஆப்கானிஸ்தானிய நடவடிக்கைகள் பற்றி மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது பற்றி பிரிட்டனின் அரசியல், இராணுவ நடைமுறை எச்சரிக்கை அடைந்துள்ளதைத் தெளிவாக்குகின்றன.

லண்டனில் உள்ளRoyal United Services Institute ல் வியாழனன்று ஒரு கூட்டத்தில் பேசிய விமானப் படைத் தலைவர் சர் ஜோக் ஸ்டிரப் நீடித்த போர் மக்களுடைய எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றும் பிரிட்டிஷ் துருப்புக்களின் உள்ளத் திண்மைக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு மிகப் பெரிய விரோதி எழுச்சியாளர்கள் இல்லை அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் இல்லை மாறாக பிரிட்டிஷ் மக்கள்தான் என்றும் தீயமுறையில் அறிவித்தார். "போர்க்களத்தில் உள்ள நம் வீரர்கள் இது பற்றி அறிவர். அவர்களுடை உளத்திண்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் தாலிபான் அல்லது IED க்கள் அல்ல, ஆனால் நாட்டில் குறைந்து வரும் ஆதரவுதான்" என்று அவர் கூறினார்.

ஊக்கம் கொடுக்கப்பட்டுள்ள ஒபாமாவின் ஆப்கானிய மூலோபாயத்திற்கு தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ள நிலையில் ஐரோப்பிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் போர் இராணுவ, அரசியல் தோல்வியில் முடியலாம், அதையொட்டி வியட்நாமில் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட சங்கடத்தைப் போன்ற நிலை இங்கும் ஏற்படும் என்பது பற்றிய ஆபத்தைப்பற்றி நன்கு அறிவர். ஆயினும்கூட முக்கிய பொருளாதார சக்திகளுக்கு இடையே உள்ள வணிக, நிதியப் போட்டி பெருகுகையில், சீனா, இந்தியா போன்ற கீழைநாட்டு சக்திகள் ஏற்றம் பெற்று வரும் நிலையில், ஐரோப்பா அமெரிக்காவின் பொருளாதார, புவி-மூலோபாய முன்னுரிமைகள் பலவற்றில் தொடர்ந்து பங்கு கொண்டு வருகிறது.

இந்த உறவு மற்றும் ஆப்கானியப் போரின் அரசியல் முக்கியத்துவம் பற்றி இத்தாலிய நாளேடு La Stampa-ல் ஆசிரிய உரையில் புதன் அன்று சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இது ஒபாமாவிற்கு ஐரோப்பிய ஆதரவு கொடுப்பதற்கு முரசு அடிப்பதை நோக்கமாகக் கொண்டது. La Stampa எழுதியது: "ஆப்கானிஸ்தானில் நடக்கும் மோதலுக்கும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மிக விரைவில் மறு வரைவிற்குத் தீவிரமாக உட்பட்டுள்ள சர்வதேச வல்லமைச் சமநிலைக்கும் இடையிலான பிணைப்பு, வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் மிக முக்கியமானது ஆகும்....எனவேதான் ஒபாமா அதைக் கைவிட்டுவிட முடியாது, ஈரானுடன் வலிமைப் போட்டியில் இருந்து விலக முடியாது, ஈராக்கில் அமெரிக்கச் செல்வாக்கை வளர்த்தாக வேண்டும்.....மேலைநாடுகள் இப்பொழுது சிறுபான்மை நாடுகளாக ஆகும் நிலை வந்து கொண்டிருக்கிறது. எனவே இச்சிறுபான்மைத் தன்மை ஒரு ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பது மிக முக்கியமானது ஆகும், இது ஐரோப்பாவிற்குப் பொருந்தும்."

ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்கத் தலைமையிலான போர் இப்பொழுது முதல் உலகப் போரைப் போல் இரு மடங்கு காலம் நீடித்துவிட்டது. ஏற்கனவே இது 50,000 ஆப்கானிய குடிமக்கள், எழுச்சியளார்கள், நட்பு நாட்டுத் துருப்புக்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. பட்டினியிலும் ஊட்டமின்மையிலும் 8 மில்லியன் ஆப்கானியர்கள் கஷ்டப்படுவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது; மக்களில் 75 சதவிகிதத்தினருக்கு நல்ல தண்ணீருக்கு வழியில்லை.

வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்க, ஐரோப்பிய துருப்புக்கள் புதிதாக அதிக அளவு நுழையும்போது இந்தக் கொடூர நிலை தவிர்க்க முடியாமல் மோசமாகும். எண்ணெய், எரிவாயு வளமுடைய பகுதியும் யூரேசிய கண்டத்தை ஆதிக்கத்தில் கொண்டு வருவது மூலோபாய வகையில் மிக முக்கியமானது என்று கருதப்படும் மத்திய ஆசியாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இணைந்த தாக்குதலானது, இராணுவ வாதம், போர் இவற்றின்சர்வதேசத் தன்மையை நிரூபணம் செய்கிறது.

ஏகாதிபத்தியத்தின் இயல்பான வன்முறை, காலனிய தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அதே போல் ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் போர்--ஏகாதிபத்திய மூலோபாயம் இயற்றுபவர்கள் அப்பகுதியிலும் எண்ணெய், எண்ணெய்க்குழாய் வழிப்பாதைகளை மற்றும் வர்த்தக வழிப்பாதைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அப்பால் மற்ற நாடுகள்மீதும் நடத்த திட்டமிட்டிருக்கும் போர்கள், இராணுவ வாதம், போர் இவற்றிற்கு மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாளர் வர்க்கத் அணிதிரட்டுவதைத் தவிர வேறு எதனாலும் தடுத்து நிறுத்தப்பட முடியாது.