World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGermany: What the selection of Left Party candidates in North Rhine-Westphalia reveals ஜேர்மனி: வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இடது கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு எதை வெளிப்படுத்துகிறது? By Dietmar Henning வாக்குப் பதிவு முடிந்த பின் விரைவாக மறக்கப்பட்டுவிடும் தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகளைவிட கட்சியின் முக்கிய தலைவர்கள் அதன் தன்மையை பல நேரமும் நன்கு வெளிப்படுத்துகின்றனர். இவ்விதத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தில் Mülheim-TM நடைபெற்ற இடது கட்சியின் சமீபத்திய மாநாடு பல கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. மே 9, 2010ல் நடைபெற இருக்கும் மாநில தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இம்மாநாடு நடைபெற்றது. மாநிலப் பட்டியலில் உள்ள மிக முக்கியமன தலைவர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் தொழிற்சங்க அதிகாரிகளாகவும், கல்விக்கூட சார்பு உடையவர்களாவும் உள்ளனர் இதில் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) முன்னாள் உறுப்பினர்கள், பசுமைக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஏராளமாக உள்ளனர். வடக்கு ரைன்-வெஸ்பாலியா மாநித்தை ஒரு SPD-பசுமைக் கட்சிக் கூட்டணி 1995 முதல் 2005 வரை ஆண்டு வந்தது. இதே அரசியல் சக்திகளின் கூட்டணிதான் ஜேர்மனியின் தேசிய அரசாங்கத்தையும் அமைத்திருந்தது. பிந்தையது மிக இழிவான பொதுநல விரோத சட்டங்கள் Hartz விதிகள் போன்றவற்றையும் "செயற்பட்டியல் 2010" ஐயும் இயற்றியிருந்தது. அத்தகைய கொள்கைகளுக்கு இரு கட்சிகளும் தமக்கு உரிய பாதக முடிவுகளைப் பெற்றன. 2005ல் NRW MTM SPD பிரதம மந்திரிப் பதவியை கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியக் கட்சியிடம் (CDU) 39 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையாக இழந்தது; பசுமைக் கட்சி மொத்தத்தில் 6.2 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. இப்பொழுது 2005ல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட இக்கட்சியின் செயலர்கள் சிலர், பல தொழிற்சங்க அதிகாரிகளுடன் இணைந்து இடது கட்சியின் ஒரு பகுதியாக தங்கள் அரசியல் போக்கை புதுப்பிக்க முயன்றுள்ளனர்; சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி (Infratest Dimap) இடது கட்சி வாக்காளர்களில் 8 சதவிகிதத்தினரால் ஆதரிக்கப்படுகிறது. இடது கட்சியின் அறிவிக்கப்பட்டுள்ள நோக்கம் SPD மற்றும் பசுமைக் கட்சிகளின் செல்வாக்கைப் புதுப்பித்தல் ஆகும். எந்த அளவிற்கு இடது கட்சி பழைய கட்சி மற்றும் தொழிற்சங்கக் கருவிகளின் பிடியில்--தொழிலாளர் வர்க்கத்தின் பிடியில் அல்ல-- உள்ளது என்பது சமீபத்திய காங்கிரஸில் நடந்த ஒரு நிகழ்வில் உயர்த்திக் காட்டப்பட்டது. Hagen ல் உள்ள ஒரு மின் பொறியியலாளரும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் வேட்பாளராக இருப்பவருமான Jörg Öberwahrenbrock வேட்புப் பதவிக்கு விரும்பும் தொழிலாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீட்டை கட்சி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மாநிலத் தேர்தல் பட்டியலில் 61 வேட்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் எட்டு பேர்தான் தொழிலாளர்கள் என்பதால்தான் அத்தகைய இட ஒதுக்கீடைச் சுட்டிக்காட்ட உந்துதல் பெற்றதாகவும் கூறினார். மாநிலப் பாராளுமன்றத்தில் (Landtag) உறுதியாக இடம் பெற்றுவிடக்கூடிய எல்லா முக்கிய வேட்பாளர்களும் அநேகமாக வட்டார கட்சி நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். பட்டியலில் முதலில் இருப்பவர் ஆசிரியர் Bärbel Beuermann ஆவார்; இவர் கல்வி, அறிவியல் சங்கத்தின் (GEW) உறுப்பினர், சமாதான இயக்கம், ஜேர்மனிய சமாதான சங்கம், ATTAC எனப்படும் உலகமயமாக்குதலை எதிர்க்கும் அமைப்பு, மற்றும் பெண்ணுரிமை இயக்கங்களுடன் இணைந்து உழைப்பவர். இவர் 1999ல் ஜனநாயக சோசலிச கட்சியில் (முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஆளும் ஸ்டாலினிசக் கட்சியாக இருந்த சோசலிஸ்ட் ஒற்றுமைக் கட்சிக்கு பின்தோன்றல்) சேர்ந்து கீழ்மட்டத்தில் விரைவில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் துணைத் தலைவராகும் நிலைக்கு உயர்ந்தார். மாநிலப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் மாநிலக் கட்சியின் தலைவரான 59 வயது Wolfgang Zimmermann உள்ளார்; இவர் நீண்டநாள் பொதுப் பணி தொழிற்சங்கமான வெர்டியில் செயலாளராக இருப்பவர். வெர்டியின் ரைன் வப்பர் மாநிலத்தின் கட்சிப்பிரிவில் தலைவராகவும், வெர்டி மாநில நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் இருந்ததில், சிம்மர்மான் NRW வில் பல தொழிற்சங்க பூசல்கள் காட்டிக் கொடுப்பில் பங்கு பெற்றவர். இன்னும் இடதுசாரித் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் அவர் எப்பொழுதாவது சோசலிசச் செய்தித்தாளான SoZ ல் கட்டுரைகளை வெளியிடுகிறார்; அதுவோ பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் "இடது" வாய்ப்புக்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டது. சமீபத்திய மாதங்களின் சிம்மர்மான் இடது கட்சி SPD, பசுமைக் கட்சிகளுடன் கூட்டணி கொள்ளுவதற்கு வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் உள்ளூர்த் தேர்தல்களுக்குப் பிறகு அவர் CDU வுடன் நகரவைகளில் ஒத்துழைப்பு கொடுப்பதற்கும் இசைவு கொடுக்கும் விதத்தில் "உள்ளடக்கம் பற்றி போதுமான உடன்பாடு இருந்தால்" மேற்கொள்ளப்படலாம் என்று கூறினார். Duisburg ல் வெர்டி தொழிற்சங்க செயலாளராக இருக்கும் Edith Fröse க்கு எதிராக இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்ற Carolin Butterwegge பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். 35 வயதான Butterwegge ஒரு சமூகப்பணியாளர் ஆவார்; Duisburg-Essen பல்கலைக்கழகத்தில் இருந்து "குடியேற்றப் பின்னணி உள்ள குழந்தைகளின் வறுமை" என்ற தலைப்பில் டாக்டர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர். 2008ல் இருந்து பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள Rüdiger Sagel க்கு ஆலோகராக உழைத்துள்ளார்.வெர்டி தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ள Sagel பல ஆண்டுகுள் பசுமைவாதியாக NRW மாநிலத்தில் இருந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான சாகெல் பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவில் பட்ஜெட் மற்றும் நிதியக்கொள்கைகளுக்கு செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார். 2003ல் அவர் பசுமைக் கட்சியின் மாநிலப் பாராளமன்றக் குழுவில் சேர்ந்திருந்தார்; ஆனால் இடது கட்சியில் சேர்வதற்காக 2007 ல் கட்சியைவிட்டு நீங்கினார். மற்றொரு முன்னாள் பசுமைவாதி Ralf Michalowsky ஆவார். இவர் ஆறாம் இடத்தில் உள்ளார். இந்த சமூக அறிவியல்வாதி இடது கட்சியின் வட்டாரக் குழுவின் செய்தித் தொடர்பாளராக உள்ள இவர் 1970ல் SPD யில் முதலில் இருந்தார், பின்னர் 1994ல் பசுமைவாதியாக மாறினார்; அதன் பிறகு 2004ல் தேர்தல் மாற்றீட்டுக் குழுவில் சேர்ந்தார்--அது இடது கட்சியின் முன்னோடி அமைப்பாகும். இவரும் வெர்டியில் ஒரு உறுப்பினர் ஆவார். எஞ்சியிருக்கும் வேட்பாளர்களும் இதேபோன்ற பின்னணியைத்தான் கொண்டவர்கள். பத்தாம் இடத்தில் மைக்கேல் அக்கிலிடிஸ் என்னும் இடது கட்சி வட்டாரக் குழுவின் உறுப்பினர் உள்ளார். தன்னுடைய வேட்பு மனுவில் இந்த 42 வயதான வழக்கறிஞர் தான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக "சமூக ஜனநாயகத்தின் இடது பிரிவில்" இருந்ததாகவும், துவக்கத்தில் SPD, பின்னர் PDS இப்பொழுது இடது கட்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சிம்மர்மானைப் போவே இவரும் பப்லோவாத சோசலிச மாற்றீட்டு (SAV) குழுவில் வேர்களைக் கொண்டவர். சில ஊடகத் தகவல்கள் இடது கட்சிக்குள் SL "Socialist Left" மற்றும் AKL எனப்படும் "முதலாளித்துவ எதிர்ப்பு இடது" பிரிவுகளுக்கு இடையே உள்ள உட்பூசல்கள் பற்றி கவனத்தை ஈர்த்துள்ளன. சோசலிச இடது, முதலாளித்துவ எதிர்ப்புப் பிரிவை விட, இன்னும் நிதானமான, தொழிற்சங்கங்களுக்கு நெருக்கமாக இருகற்கும் பிரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இரு பிரிவுகளுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இல்லை. வேறுபாடுகள் முக்கியமான சொல்லாட்சித் தன்மையிலும், ஓரளவிற்கு அவற்றின் சமூக அமைப்பை ஒட்டியும்தான் உள்ளன. SL என்பது தொழிற்சங்க அதிகாரிகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளது; AKL நம்பிக்கை இழந்த முன்னாள் இடதுகளை, மாநில தலைவர் சிம்மர்மான் போன்றோரை ஒன்றாகக் கொண்டு வருகிறது. இரு பிரிவுகளும் SPD தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க முற்பட்டு, தொழிலாளர்கள் சார்பில் SPD மற்றும் பசுமை வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற பொய்தோற்றத்தையும் பரப்புகின்றன. சமீபத்திய கூட்டாட்சித் தேர்தலில் SPD அடைந்த பெரும் தோல்வியைப் பற்றி SL கீழ்க்கண்ட விதமாகக் கூறியுள்ளது. "SPD யின் பேரழிவுத் தோல்வியைப் பற்றி நாங்கள் ஒன்றும் களிப்படையவில்லை....இடது கட்சி வருங்காலத்தில் இடதில் இருந்து அரசியல் அழுத்தத்தைத் தொடரும், அதையொட்டி SPD இறுதியில் அதன் சமீப காலத்திய மிக மோசமான தோல்வியின் விளைவுகளைத் திருத்திக் கொள்ள முடியும்." AKL ம் இதே கொள்கையைச் சற்று நிதானத்துடன் கூறுகிறது: "ஒரு சமூக-ஜனநாயகப் பிரதம மந்திரி [வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில்] தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடையற்ற ஆதரவை இடது கட்சி கொடுத்துவிடாது. ஆனால் ஒரு மாறுதலுக்கு குறுக்கே நாங்கள் நிற்க மாட்டோம்;: ஏனெனில் கன்சர்வேடிவ்கள் வருவதற்குப் பதிலாக ஒரு SPD-பசுமைக் கட்சி அரசாங்கத்தைப் பொறுத்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்." அதே நேரத்தில் SPD மற்றும் பசுமை வாதிகள் இரு கட்சிகளும் அதிகாரத்தில் இருந்தபோது கொண்டிருந்த அதே கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டும்படி AKL முறையீடு செய்கிறது.இரு குழுக்களின் அறிக்கைகளும் இடது கட்சியின் பங்கை வெளிப்படுத்துகின்றன--சமூகச் சீற்றத்தை ஆளும் உயரடுக்கிற்கு ஆபத்தில்லாத திசைகளில் எதிர்ப்பு என்று திருப்புவதே அது. "சோசலிச இடது" தன்னுடைய நிறுவன மாநாட்டிற்கு இடது கட்சியின் கெளரவத் தலைவராக ஹான்ஸ் மோட்ரோவையே அழைத்திருந்தது. கிழக்கு ஜேர்மனிய ஸ்டாலினிச சோசலிஸ்ட் ஒற்றுமைக் கட்சிக்குள் நீண்டகாலம் மோட்ரோவ் பணியாற்றி, பின் 1989 நவம்பர் முதல் 1990 ஏப்ரல் வரை கிழக்கு ஜேர்மனிய GDR ன் அரசாங்கத் தலைவராகவும் இருந்தார். தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில் மோட்ரோவ் ஜேர்மனியத் தெருக்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை உறுதியளித்த தன் பங்கைப் பற்றி உயர்வாகப் பேசியுள்ளார்; அதுதான் நாட்டை முதலாளித்துவ மறு ஒற்றுமைக்கு வழிவகுத்தது என்றும் சொல்லுகிறார். 1990ல் அவருடைய முக்கியமான பங்கு, "பெரும் குழப்பத்தைத் தவிர்த்து நாட்டை ஆளும்படி செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ள வைப்பதாகும்" என்று எழுதியுள்ளார். இதே கொள்கைதான் இப்பொழுது இடது கட்சியில் கூடியிருக்கும் சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் பொருந்தும். |