WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Oppose Obama's escalation of the Afghan-Pakistan war!
Withdraw all troops now!
ஆப்கான்-பாக்கிஸ்தான் போர்களை ஒபாமா விரிவாக்குவதை எதிர்!
அனைத்துத் துருப்புக்களையும் இப்பொழுதே வாபஸ் வாங்கு!
World Socialist Web Site editorial board
2 December 2009
Use this version
to print | Send
feedback
ஒபாமாவின் நேற்றைய இரவு உரை, திரும்பப் பெறுவதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானுக்கு
கூடுதலான 30,000 துருப்புக்களை அனுப்புவது பற்றிக் கூறப்பட்டது, இது தவிர்த்தல், இரட்டைப் பேச்சு மற்றும்
பொய்மைப்படுத்தலில் ஒரு இழிந்த நடவடிக்கை எனலாம்.
மக்களிடையே ஆதரவற்ற விதத்தில், இப்படி புதிதாக படைகளை அனுப்புவது இன்னும்
கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான ஆப்கானிய, பாக்கிஸ்தான் மக்களின் இறப்பிற்கும், அமெரிக்க துருப்புக்கள் இறப்பில்
கணிசமான உயர்வையும் ஏற்படுத்தும். உண்மையில், ஜனாதிபதி உரையைக் கேட்பதற்காக கூட்டப்பட்டிருந்த
West Point
துருப்புக்களில் பலர், பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்க்கும் போரில் ஆப்கானிஸ்தானிற்குப் போரிட
அனுப்பப்படுவர்.
போரை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று சித்தரிப்பதற்காக
ஒபாமா செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை நினைவு கூர்ந்தது ஒரு மோசடியாகும். ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கான
உண்மைக் காரணம் --வெளியுறவுக் கொள்கை நடைமுறைக்குள் பரந்த அளவில் விவாதிக்கப்படுவது-- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
உலகளாவிய மூலோபாயத்தின் நலன்களுக்காக எண்ணெய் வளமுடைய மத்திய ஆசியாவில் ஒரு மேலாதிக்கத் தன்மையை
தக்க வைத்துக் கொள்ளுவதற்குத்தான்.
இந்த மாதம் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுப்பு நடத்தியதின் 30 ஆண்டு
நிறைவை குறிக்கும் மாதம் ஆகும். அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஒரு சட்டவிரோத
சர்வதேச ஆக்கிரமிப்பு என்று கண்டித்திருந்தார். அந்த நேரத்தில் அதிகமாக அறியப்படாமல் இருந்தது அமெரிக்கா
வேண்டும் என்றே மாஸ்கோவை அதன் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியதுதான்; அதற்காக அது காபூலில்
இருந்து சோவியத் சார்பு ஆட்சியை எதிர்ப்பதற்காக முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு நிதி, ஆயுத உதவிகளை
அளித்தது. CIA
இன் நிதியைப் பெற்றவர்களில் ஒசாமா பின் லேடனும், தாலிபனுடைய தற்பொழுதைய தலைவர்களும் இருந்தனர்.
அப்பொழுது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும் தற்பொழுது
ஒபாமாவிற்கு வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக இருப்பவருமான
Zbigniew Brezezinski
யால் இயற்றப்பட்ட, இந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் விளைவு, மூன்று தசாப்தங்களாக போர், உள்நாட்டுப்
போர் மற்றும் சமூகப் பேரழிவு ஆகியவை விளைந்ததுதான். ஒபாமா நிர்வாகம் இப்பொழுது இந்த காலனித்துவ
வகை முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
2011 ஜூலையில் படைகள் திரும்பப் பெறுவது தொடங்கும் என்னும் ஒபாமாவின்
பேச்சிற்கு எந்த நம்பகத்தன்மையும் கொடுக்கப்பட மாட்டாது. இந்தக் காலக்கெடு "தரை நிலைமைகளை"
அடுத்து வந்த குறிப்புக்களால் உந்துதல் பெற்றுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் போர் என்பது வரவிருக்கும்
இராணுவக் குறுக்கீடுகள் பலவற்றில் ஒன்றுதான் என்னும் அறிக்கைகள் இதைத் தொடர்ந்து வந்துள்ளன.
"தீவிர வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது விரைவில் முடிக்கப்பட
முடியாதது" என்றார் ஒபாமா. "இது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானுக்கும் அப்பால் விரிவடைந்திருக்கக்கூடும்."
இந்தப் போராட்டம் "ஒரு நீடித்த சோதனை" என்று அழைத்த ஒபாமா, "ஒழுங்கற்ற பகுதிகள், பலதரப்பட்ட
பகைவர்கள்" பற்றிப் பேசி சோமாலியா, யேமனை பெயரிட்டே குறிப்பிட்டார்.
உண்மையில், மத்திய ஆசியாவில் அமெரிக்கக் குடியேற்றவகை நடவடிக்கை முடிவில்லாததாகும்.
திங்களன்று ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோளிட்டு வாஷிங்டன் போஸ்ட் எழுதியது: "நம் திட்டம்
அவர்களை [பாக்கிஸ்தானிய இராணுவத்தை] நீண்டகாலம் ஆப்கானிஸ்தானிலும் அப்பகுதியிலும் நாம் கொண்டுள்ள
உறுதிப்பாட்டைப்பற்றி நம்ப வைப்பதாகும். போர் முடிந்த உடனே நாம் ஒன்றும் நம் பைகளை எடுத்துக் கொண்டு
இங்கு திரும்பப் போவதில்லை."
போரை முடிப்பதற்கு ஒபாமா விரிவாக்கும் முயற்சி உள்ளது என்பதற்குப் பதிலாக,
இது புதிய, இன்னும் கூடுதலான இராணுவ மோதல்களுக்கான வழியைத்தான் வகுக்கும். கூடுதலான துருப்புக்கள்
உட்செலுத்தப்படுதல் அப்பகுதியிலும் அதற்கு அப்பாலும் --பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும், இந்தியாவிற்கும்
சீனாவிற்கும், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும், ரஷ்யா, சீனாவிற்கும் என்று-- பதட்டங்களைப் பெரிதும்
எரியூட்டும்.
போர் இப்பொழுது ஆப்கானிய மக்களைக் காப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது
என்பதுதான் மிகப் பெரிய பொய்யாகும். அம்மக்கள் மிகப் பெரிய அளவில் அமெரிக்கத் தலைமையிலான
வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர்.
ஒபாமா முடிவின் பொருள் 2010 என்பது ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும்
கூடுதலான இறப்பு மற்றும் அழிவு இருக்கும் என்பதாகும். புதிய அமெரிக்கப்படை விரிவாக்கத்தின் மைக் குவிப்பு
அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்குல எதிர்ப்பு தரும் எழுச்சிகளின் மையமான காந்தகாரை "சுற்றி வளைத்தல்"
ஆகும். இதன் பொருள் உள்ளூர் மக்களை அச்சுறுத்துவதும் பல எழுச்சியாளர்களையும், எழுச்சிக்கு பரிவு
காட்டுபவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கொலை செய்வதும் ஆகும்.
அதே நேரத்தில் அமெரிக்கா பாக்கிஸ்தான் மண்ணிலும் தரைப்படை நடவடிக்கைகளை
செலுத்தும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது; ஏற்கனவே பாக்கிஸ்தானிய மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று
கொண்டிருக்கும் டிரோன் தாக்குதல்களைத் தவிர இது நடத்தப்படும். திங்கள்று இஸ்லாமாபாத்திற்கு ஒபாமாவின்
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், ஒய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஜேம்ஸ் எல். ஜோன்ஸ் சென்றிருந்தது பற்றித்
தகவல் கொடுக்கையில், ஒரு அமெரிக்க அதிகாரி, "பாக்கிஸ்தானால் முடியாவிட்டால், அமெரிக்கா குறுக்கிட்டு
பாக்கிஸ்தானின் மேலை, தெற்கு எல்லைகள் ஆப்கானிஸ்தானத்துடன் இருக்கும்பகுதிகளில் உள்ள தளங்களில் இருந்து
எழுச்சியாளர்களை சீர்குலைத்துத் துரத்தும் கட்டாயத்திற்கு உட்படும் என்று ஜோன்ஸ் கூறியதாக"
மேற்கோளிட்டுள்ளது.
மத்திய ஆசியா மக்கள் இதற்காக கொடுக்கும் விலை கணக்கிலடங்கா. அமெரிக்க
மக்கள் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் போர் கொள்கைகளுக்கு விலை கொடுக்கும் விதத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கான
உயிர்களை இழக்கும், டிரில்லியன் கணக்கான டாலர்களைச் சூறையாடும், முன்னோடியில்லாத வகையில் சமூகப்
பணிகள் மீது தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் பறிபோகும் என்பவற்றையெல்லாம் காண நேரிடும்.
ஆப்கானியப் போரை ஈராக் போரில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விதத்தில்
ஒபாமா மேற்கொண்ட முயற்சிதான் இருப்பதிலேயே அதிக முரண்பாடுகள் நிறைந்த உரையாகும். "ஈராக் போரை
நான் எதிர்த்தேன், அதற்குக் காரணம் துல்லியமாக நாம் இராணுவத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் நிதானம்
வேண்டும் என்று நம்பினேன்..." ஆனால் அந்தக் குற்றம் சார்ந்த நடவடிக்கைக்கும் ஆப்கானிஸ்தானத்தில் இவர்
நடத்தும் போருக்கும் இடையே அடிப்படை வேறுபாடு எதையும் இவரால் காட்ட முடியவில்லை.
ஒபாமாவின் விரிவாக்கம் அமெரிக்க மக்களுடைய விருப்பத்தை மீறும் மற்றொரு
அப்பட்டமான செயலாகும். ஒவ்வொரு தேர்தலைத் தொடர்ந்தும் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்கள் பற்றி தங்கே விரோதப் போக்கை வெளியிட்டனர். ஒவ்வொரு
தேர்தல் முடிந்தபின்னும் மக்களுடைய விருப்பம் புறக்கணிக்கப்பட்டு போர்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஈராக் போரை எதிர்ப்பவர் என்ற முறையில்தான் ஒபாமா ஜனாதிபதிக்கான ஆரம்ப
வேட்பாளர் போட்டிகளில் இராணுவவாதத்திற்கு எதிரான மக்களுடைய எதிர்ப்பிற்கு முறையிட்டு வென்றார். ஆனால்
பதவிக்கு வந்தபின், அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களை இன்னும் கூடுதலாக 21,000 ஆக
உயர்த்தினார்: அதே நேரத்தில் ஈராக்கில் இருந்து படைகள் விரைவில் திரும்பப் பெறப்படும் என்ற
உறுதிமொழியையும் கைவிட்டார். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்பு எண்ணிக்கையை
100,000 என்று உயர்த்தியுள்ளார்; இது புஷ்ஷின் கீழ் இருந்த எண்ணிக்கையைவிட இரு மடங்குஆகும்.
வோல் ஸ்ட்ரீட் பொருளாதாரக் கொள்கையைப் போலவும், அவருடைய ஜனநாயக
உரிமைகளைத் தாக்குவதையும் போலவே, ஒபாமா தன்னுடைய இராணுவ, வெளியுறவுக் கொள்கையில், புஷ்ஷின்
பிற்போக்குத்தனத் திட்டத்தைத் தொடர்ந்தும், தீவிரப்படுத்தியும் வருகிறார். மத்திய ஆசியாவில் போரை விரிவாக்கம்
செய்யும் முடிவு முழு அமெரிக்க அரசியல் முறையையும் பேரழிவுகரமாக அம்பலப்படுத்தும். இரு கட்சிகளும் காங்கிரஸும்
ஒரு ஆளும் நிதிய பிரபுத்துவத்தின் கருவிகள் ஆகும்; இவை மக்களில் பெரும்பான்மையில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின்
தேவைகள், கருத்துக்களை எதிர்த்து, நிதிய உயரடுக்கின் நலன்களைக் காத்துச் செயல்படுகின்றன.
அமெரிக்கத் தலைமையிலான போருக்குப் பின் ஏகாதிபத்திய சக்திகள் சர்வதேச
அளவில் ஆதரவு கொடுத்து நிற்பதும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ்
மற்றும் சில சக்திகள்போரில் பங்கு பெற்றுள்ளது இப்பகுதி முழுவதையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு தாழ்த்தும்
நோக்கத்தில் ஒரு சர்வதேச தாக்குதல் நடத்துவதைத்தான் காட்டுகிறது. இந்த அரசாங்கங்களில் ஒவ்வொன்றும்
அதன் மக்களின் போர் எதிர்ப்பு உணர்வை மீறித்தான் செயல்பட்டு வருகின்றன.
போருக்கு எதிரான போராட்டத்திற்கு, போருக்கு மூல காரணமாக இருக்கும் உலக
ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப்
போராட்டம் தேவைப்படுகிறது என்று கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்காவில் போருக்கு எதிரான போராட்டம் ஒபாமா நிர்வாகம், இரு கட்சி
முறை மற்றும் அமெரிக்க நிதியத் தன்னலக்குழு இவற்றிற்கு எதிரான போராட்டமாகத்தான் நடத்தப்பட முடியும்.
இது ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, போருக்கு எதிரான
போராட்டத்தை, வேலையின்மை, வறுமை, ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான
போரட்டத்துடன் இணைத்து தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவும் ஒரு சுயாதீன அரசியல் போராட்டமாக,
தொழிலாள வர்க்கத்துள் ஒரு புதிய தலைமையைக் கட்டியமைக்க வேண்டும்.
இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் வேலைத்திட்டம் ஆகும். ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கும் அனைவரும்
SEP யில் சேர்ந்து
அதை ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக கட்டமைக்க முன்வரவேண்டும். |