World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Food stamp usage at record levels

America the hungry

உணவுத் திட்டம் உச்ச நிலையை அடைகிறது

பட்டினியில் அமெரிக்கா

Patrick Martin
30 November 2009

use this version to print | Send feedback

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் உணவு அளிப்புத் திட்டம் எப்படி மிக அதிக அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது பற்றி முதல் பக்கம் வந்துள்ள அறிக்கை, வோல்ஸ்ட்ரீட் மற்றும் ஒபாமா நிர்வாகம் 2009 இறுதிக்குள் பொருளாதார "மீட்பு" பற்றி கூறியுள்ள மெத்தனமான உத்தரவாதங்கள் பற்றியதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தைக் கொடுக்கிறது.

நாட்டில் உணவு அளிப்புத் திட்டம் பற்றி டைம்ஸ் ஒரு புள்ளிவிவரப் பகுப்பாய்வை, தற்பொழுது உளவு அளிப்புத் திட்டத்தில் உள்ள 36 மில்லியன் மக்களைப் பற்றிய விரிவான சமூகச் சித்திரத்தை அளிக்கும் முயற்சியை ஒட்டி நடத்தியது. "இவற்றில் ஒற்றைத் தாய்மார்களும், திருமணமான தம்பதிகளும், புதிதாக வேலையிழந்தவர்களும், நீண்ட காலமாக வறுமையில் இருப்பவர்களும், பல நாட்களாக பொதுநல காசோலை பெறுபவர்களும் குறைக்கப்பட்ட பணி நேரம் அல்லது குறைந்த ஊதியங்கள் ஆகியவற்றால் உணவு சேமிப்பு அறை வெற்றுத்தனமாக இருக்கும் நிலையில் உள்ள தொழிலாளர்களும் உள்ளனர்" என்று எழுதப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க கண்டறிதல்களில் சில

239 நாடுகளில் மக்களில் கால் பகுதிக்கும் மேலானவர்கள் உணவுத் திட்ட நலன்களை பெறுகின்றனர். 750க்கும் மேற்பட்ட நாடுகளில், ஆபிரிக்க-அமெரிக்கர்களில் குறைந்தது மூன்றில் ஒருவர் உணவுத் திட்ட அளிப்பைப் பெறுகிறார். 800க்கும் மேற்பட்ட நாடுகளில் அனைத்துக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி உணவுத் திட்டத்தை நம்பியுள்ளது. 62 நாடுகளில் உணவுத் திட்டப் பட்டியல் கடந்த இரு ஆண்டுகளில் இருமடங்காக ஆகிவிட்டது. 205 நாடுகளில் உணவுத் திட்டப் பட்டியல்களில் பெயர்கள் மூன்றில் இரு மடங்கு அதிகரித்துள்ளன.

மிகப் பெரிய அளவில் உணவிற்கான சமூகத் தேவை அதிகரித்துள்ளது புவியியல் ரீதியாக அதிர்ச்சியை கொடுக்கிறது. வறுமையின் மரபார்ந்த மையங்களான அப்பளாச்சியா கிராமப் பகுதி, உள்நகரப் புறநகர்ச்சேரிகளில் இருந்து Sunbelt ல் கடந்த இரு பத்தாண்டுகளில் வந்துள்ள புறநகர்கள் வரை இவை உள்ளன. உணவுத் திட்டம் நடைமுறையில் இருக்கும் வரைபடம் செழிப்புற்ற அட்லான்டா புறநகரங்களையும், புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதி, விஸ்கோன்சின், மேற்கு வடக்கு ஒகையோ இவற்றின் பெரும் பகுதி மற்றும் Mountain West ன் பெரும்பகுதிகளான நெவடா, உடா, அரிசோனா, வையோமிங், கொலோரடோ மற்றும் ஐடாஹோ ஆகியவற்றின் பகுதிகளையும் காட்டுகிறது.

வேலையின்மை உணவுத்திட்ட பயன்பாடு தூண்டிவிடப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் என்றாலும், உடனடிப் பொருளாதாரக் காரணம் பரந்த முறையில் வேறுபடுகிறது; தென் மேற்கு மாநிலங்களிலும் புளோரிடாவிலும் வீடுகள் குமிழி சரிந்தது, கிரேட் லேக்ஸ் பகுதியில் கார்த்தொழிலின் சரிவு, என்பதில் இருந்து மந்த நிலை மோசமாகியுள்ள நிலையில், அமெரிக்க வெள்ளை காலர் உழைப்பாளிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

நீண்ட காலமாக குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள, செழிப்பாக இருந்த புறநகர்ப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பற்றி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது -- இங்கு உணவுத்திட்டப் பயன்பாடு டிசம்பர் 2007 உத்தியோகபூர்வ சரிவின் தொடக்கத்திற்கு பின்னர் இரு மடங்காகி ஆரஞ்ச் கெளன்டி, கலிபோர்னியா, போர்சித் கெளண்டி, ஜோர்ஜியா ஆகிய நகரங்களிலும் அதிகமாகிவிட்டது. சதவிகித முறையில் டிட்ரோயிட், செயின்ட் லூயி, நியூ ஓர்லீயன்ஸ் போன்ற நகரங்களில் உணவு உதவித் திட்டம் சற்று குறைவாக வளர்ந்து வந்துள்ளது; ஏனெனில் அங்கு மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வறுமையில் இருந்து சரிவு தொடங்கியதில் இருந்தே உணவு உதவியைப் பெற்று வருகின்றனர்.

இந்தப் புள்ளி விவரங்கள் அனைத்தும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இழப்புக்களின் தரம் பற்றி குறைவாகத்தான் கூறுகின்றன. உணவு உதவித்திட்டத்திற்கு தகுதி உடைய 18 மில்லியன் மக்கள் அவற்றைப் பெறவில்லை என்று மதிப்பீடுகள் கூறுகின்றன; ஏனெனில் நிறுவன அமைப்புத் தடைகள் இவற்றிற்கு ஓரளவு காரணம்; புறத்தே அளிக்கும் பணிகள் போதுமானவையாக இல்லை, குறிப்பாக குடியேறியுள்ள சமூகங்களுக்கு. கலிபோர்னியா மாநிலத்தில் பெறத் தகுதி உள்ளவர்களில் பாதிபேருக்குத்தான் உதவி செல்லுகிறது; இதற்குக் காரணம் "பொது நல உதவியை" பெறுதலில் உள்ள சமூக இழிவு, குறிப்பாக புறநகர்ப்பகுதியில் வறுமை என்பது திடீரென வந்துள்ள சமீபத்திய நிகழ்வு என்பது ஓரளவு இதற்குக் காரணம் ஆகும்.

கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Thomas A. Hirschl, மற்றும் செயின்ட் லூயியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்க் ஆர் ராங்கும் நடத்தியுள்ள ஆய்வின்படி, அமெரிக்காவில் பாதிக் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியில் உணவு உதவித்திட்டத்தை நம்பியுள்ளன. இந்த எண்ணிக்கை கறுப்பு இனக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் 90 சதவிகிதமாக உள்ளது. இந்த ஆய்வு Archives of Pediatrics and Adolescent Medicine ல் இந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

இது 29 ஆண்டுகள் தகவல் தொகுப்பை பகுப்பாய்வு செய்ததை அடிப்படையாகக் கொண்டதால், பிந்தைய ஆய்வு வேலையின்மை கடந்த மாதம் தொட்ட 10.2 சதவிகிதத்தை விட குறைந்த சராசரி இருந்த காலத்தின் சமூகத் தேவையைப் பற்றி ஒரு சித்திரத்தைக் கொடுக்கிறது. ஒரு நீடித்த கால இரட்டை இலக்கு வேலையின்மை என்பது--இப்பொழுது வணிக மற்றும் அரசாங்கப் பொருளாதார வல்லுனர்களால் பரந்த அளவில் கணிக்கப்பட்டிருப்பது --இன்னும் கூடுதலான குழந்தைகள் கூட்டாட்சி உணவுத் திட்டத்தை தங்கள் அடிப்படை ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு நம்பியிருக்கச் செய்யும்.

இரு ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களும் நவம்பர் 16ம் தேதி அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்ட அறிக்கையின் முடிவுகளைத்தான் உறுதி செய்கின்றன. அதில் 17 மில்லியன் குழந்தைகள் உட்பட 49 மில்லியன் அமெரிக்கர்கள் 2008ல் தொடர்ச்சியாக போதுமான உணவைப் பெற முடியாமல் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேசையில் உணவை வைப்பதற்குப் பாடுபடும் 17 மில்லியன் என்ற அளவிலுள்ள குடும்பங்கள் குறைந்தது வீட்டிற்கு ஒரு வேலைபார்க்கும் தொழிலாளியையாவது கொண்டிருந்தன; ஆனால் அவர்கள் பெற்ற ஊதியங்கள அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு குறைந்தவை ஆகும். உணவுப் பாதுகாப்பின்மை, 1995ல் USDA இத்தகையவைபற்றி எழுத்துச் சான்றுகள் வைத்துக் கொள்ளத் துவங்கியதில் இருந்து மிக அதிகமாகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களின் இன்றைய சமூக உண்மை பெரு மந்த நிலைக்குப் பின் மிக மோசம் என்பதற்கு நிரூபணம் ஆகும். கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வேலையின்மையில் உள்ளனர் அல்லது தகுதிக்குக் குறைந்த வேலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 50 மில்லியன் பேருக்கு சுகாதாரக் காப்பீடு கிடையாது. கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் உணவை அடைய பெரும் கஷ்டப்படுகின்றனர். 40 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர்; இந்த எண்ணிக்கை உண்மையான குடும்ப வரவு-செலவு திட்டம் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டால் 80 மில்லியன் என்று உயரும்.

இளைஞர்கள் மிகப் பெரும் சவாலை எதிர்கொள்ளுகின்றனர். கடந்த வாரம் வெளிவந்த Pew Research Center அறிக்கை ஒன்று 35 வயதிற்கு கீழ்ப்பட்ட வயதிற்கு வந்தோரில் 10 சதவிகிதத்தினர் மந்த நிலையை ஒட்டி தங்கள் பெற்றோர்களிடம் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கிறது. 18ல் இருந்து 24 வயதுவரையில் உள்ள ஆடவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இன்னும் தங்கள் பெற்றோர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அவர்களில் 48 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். இத்தகைய சான்றுகள் பதிவு செய்யப்படும் 1948ல் இருந்து வேலையில் இருக்கும் இளைஞர்களின் விகிதம் 40 சதவிகிதம் என்று மிகக் குறைவாக உள்ளது.

இப்புள்ளி விவரங்கள் அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் சமூகத்தின் உழைக்கும் சக்திகளை அது குற்றம் சார்ந்த தன்மையில் நாசப்படுத்தியுள்ளதற்கு ஒரு தக்க சான்று ஆகும். கிட்டத்தட்ட உலகம் முழுவதற்கும் உணவு போடக்கூடிய வகையில் உற்பத்தித் திறன் கொண்டிருக்கும் விவசாயப் பிரிவைக் கொண்டிருக்கும் நாட்டில் எவ்வாறு மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவு இல்லாத நிலையில் கஷ்டப்படுகின்றனர்? இதற்குக் காரணம் உற்பத்தி, பகிர்வு முறைகள் தனியார் இலாப அடிப்படையில் நிகழ்வதுதான்; பட்டினியில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில் நிதியச் சந்தைகளில் ஊக விளையாட்டில் ஈடுபடுவதைவிடக் குறைந்த இலாபத்தைத்தான் தரும்.

இப்புள்ளி விவரங்கள் ஒபாமா நிர்வாகம், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகள்மீதான குற்றச்சாட்டுக்களும்தான். வேலையின்மை போல் பசியும் ஒபாமா நிர்வாகத்தால் "பின்தங்கி இருப்பதற்கான குறியீடாக" பார்க்கப்படுகிறது--இதை அமெரிக்க மக்கள் வெறுமனே ஏற்கக்கூடிய ஒன்றாக வேண்டும், ஒரு நெருக்கடி அல்ல, அது பற்றிச் சிறு நடவடிக்கைகூட மேற்கொள்ளப்பட முடியாது.

வோல் ஸ்ட்ரீட்ல் இலாபமும் ஏழு இலக்க போனஸ்கள் திரும்பி வருவதற்கு டிரில்லியன் கணக்கான பணத்தை நிதிய முறையில் உட்செலுத்தி உத்தரவாதம் அளித்தபின், கணக்கிலடங்கா பில்லியன்கள் செலவில் ஆப்கானிஸ்தானில் இராணுவப் போர் விரிவாக்கத்திற்கான போக்கையும் இயக்கியபின், ஒபாமா இப்பொழுது அவருடைய உயர் உள்நாட்டு முன்னுரிமை பற்றாக்குறையைக் குறைப்பது ஆகும் என்று அறிவித்துள்ளார். வோல் ஸ்ட்ரீட், போர் ஆகியவற்றிற்குப் பின் பட்டினியில் வாடும் குழந்தைகளின் தேவைகளை, அல்லது அவற்றின் பெற்றோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகப் பணம் இருக்காது, அல்லது எதுவுமே மிஞ்சியிருக்காது.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

மிக அதிகமான எண்ணிக்கையாக 49 மில்லியன் அமெரிக்கர்கள் 2008ல் பட்டினியை எதிர்கொண்டனர்