WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Former president Jacques Chirac to stand
trial for corruption
பிரான்ஸ்: முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக் ஊழலுக்காக குற்ற விசாரணையை எதிர்கொள்ளுகிறார்
By Antoine Lerougetel and Alex Lantier
11 November 2009
Use this version
to print | Send
feedback
அக்டோபர் 30ம் தேதி விசாரணை நீதிபதி
Xavière Simeoni
பாரிஸ் நகரவை நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தி நகரவை ஊழியர்களின் பெயரில் போலித்தனமாகக் காட்டிய குற்றச்சாட்டுக்களுக்கு
முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சீராக் மீது விசாரணை உண்டு என்று அறிவித்தார்.
ஜனாதிபதியாக 1995ல் இருந்து 2007 வரை பதவி வகிப்பதற்கு முன், ஜாக் சிராக்
1977
ல் இருந்து 1995 வரை பாரிஸ் மேயராக இருந்தார். சிமெயோனியின் 215 பக்க குற்றச் சாட்டுத் தாக்குதல்
உத்தரவு அவர் நகரவைக்கு வேலை பார்ப்பதற்குப் பதிலாக அவருடைய அரசியல் செயலர்களாக
charges de mission (சிறப்பு
ஊழியர்கள்)
என்ற பெயரில் நியமித்து 4.5 மில்லியன் யூரோக்களை தவறாகப் பயன்டுத்தினார்
என்று கூறியுள்ளது. குற்றவாளி என்று கண்டறியப்பட்டால் சிராக் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற வேண்டும் என்பதோடு
150,000 யூரோக்கள் அபராதமும் கட்ட நேரிடும். வழக்கு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.
ஒரு முன்னாள் அரச தலைவர் குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்பட்டுள்ளது அரசியல்
நடைமுறையின் நெறித்தன்மைக்கு பெரும் அடி என்பதைப் பிரதிபலிக்கிறது.
அவருடைய விசாரணையின்போது இன்னும் வெடிப்புத் தன்மையுடைய வெளிப்பாடுகள் வரக்கூடும்
என்ற அச்சுறுத்தலையும் இது காட்டுகிறது; அதுவும் நடைமுறையில் பரந்த பிரிவுகளை இலக்கு கொண்ட ஊழல் விசாரணைகளுக்கு
இடையே இது வந்துள்ளது. இவற்றில் முன்னாள் உள்துறை மந்திரி சார்ல்ஸ் பாஸ்குவா, முன்னாள் பிரதம மந்திரி டு
வில்ப்பன் ஆகியோரும் அடங்குவர். அவருக்கு எதிராகச் சாட்டப்பட்டுள்ள குற்றங்களில் சிராக் ஈடுபட்டார் என்பதில்
சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது; அவருடைய குற்றம் பிரான்சின் அரசியல் அரசியல் வாழ்வில் நிறுவன அமைப்புப்
போல் வந்து விட்ட ஊழலின் ஒரு பகுதி என்பதிலும் ஐயமில்லை. ஆனால் இந்த வழக்கில் உள்ள குற்றச் சாட்டுக்கள்
மற்றும் பணத்தின் அளவு, எந்த அளவிற்கு சிராக் பதவிக்காலத்தில் இதைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்கள்
தண்டனையற்று போய்விட்டிருக்கும் என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
(பிரான்சில்
அரசியல்-நிதிய ஊழல்கள்)
பாரிஸ் நகரவை ஊழல் பற்றிய விசாரணைகள் 1999 லேயே தொடங்கின; 2003ல்
சிராக்கின் பல முக்கிய ஒத்துழைப்பாளர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் வந்தன. பதவியில் இருக்கும் ஜனதிபதிகளுக்கு
நீதித்துறை வழக்குகளில் இருந்து விலக்கு என்ற சட்டத்திற்கு சிராக் ஏற்பாடு செய்து தன்னை 2007 வரை பதவியில்
இருந்து விலகாமல் காத்துக் கொண்டார். ஆனால் 2004ல் ஆளும் கன்சர்வேடிவ்
UMP யின்
தலைவரும் சிராக்கின் கீழ் முன்னாள் பிரதம மந்திரியாகவும் இருந்த அலன் யூப்பே இந்த விவகாரத்தில் "பொதுப்
பதவியை தனிப்பட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்கு" தண்டனை பெற்றார்.
டிசம்பர் 5, 2003ல் பாரிஸ் உயர்நீதிமன்றம் பெரும்பாலான தவறான செயல்கள்
மூன்றாண்டு வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று தீர்ப்பளித்தது (அதாவது சட்டபூர்வமாக மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டால்
குற்றச் சாட்டுக்களை கொண்டுவரமுடியாது என்ற விதி இதற்குப் பொருந்தாது என). ஆனால் டிசம்பர் 2005ல்
Court of Cassation
என்னும் பிரான்கின் மிகு உயர் நீதிமன்றம் முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்புக்களைத் தள்ளுபடி செய்தது. 2007ல்
சிமெயோனி மீண்டும் விசாரணைகளை தொடங்கினார்; இறுதியில் அவை 2009 ஏப்ரல் 24ல் முடிவிற்கு வந்தன.
சிமெயோனி எழுதுகிறார்: "பாரிஸ் மேயர் ஒரு உறுதியான பங்கைக்
கொண்டிருந்தார்; முதலில் Charges de
mission
என்னும் சிறப்பு ஊழியர்கள் பற்றிய முடிவு, அவர்களுக்கு பாரிஸ் நகரவையில் 1977ல் இருந்து இருத்தியது, பின்னர்
அவர்களைத் தேர்ந்தெடுத்தது." இவ்வம்மையார் பின் தொடர்வது: "சிறப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அரசியல்,
சமூக, தொழிற்சங்க மற்றும் விளையாட்டு வட்டங்களின் ஆதரவுடன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக்
கொள்ளும் நோக்கத்துடன், தன்னுடைய சொந்த நலன்கள், விழைவுகள் இவற்றிற்கு நீண்ட காலம் பணிபுரியும் வகையில்
ஜாக் சிராக் இந்த நியமனங்களைச் செய்தார்...'
விசாரணைகள் 43 சந்தேகத்தற்கு உரிய ஒப்பந்தங்களை கண்டுபிடித்ததாக குற்றச்
சாட்டு அறிக்கை கூறுகிறது. இவை இரு விதங்களில் உள்ளன: சிறப்பு ஊழியர்கள், "தங்கள் ஊதியத்திற்கு
தொடர்பற்று வேலை புரிந்தவர்கள்", "நகரவைக்கு பணி புரிந்தவர்கள்" என. 15 பேர் மீது வழக்குத்
தொடரப்பட்டுள்ளது; 7 பேர் குற்ற நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுவர். சிராக்கைத் தவிர குற்றம்
சாட்டப்பட்டவர்களில் கீழ்க்கண்டவர்கள் உள்ளனர்: தளபதி சார்ல்ஸ் டு கோலின் பேரர்
Jean de Gaulle,
Jean-Louis Debré
உடைய சகோதரர், தற்பொழுது அரசியலமைப்புக் குழுவின் தலைவர்; மற்றும் முன்னாள் வெளியுறவு மந்திரி
Hervé Charrette
இன் மனைவி.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள் ஒரு முக்கியமான புள்ளி
Marc Blondel
ஆவார்; இவர் Force Ouvrière (FO)
தொழிற்சங்கத்தின் தலைவரும் OCI
(Pierre Lambert
இன் முன்னாள் ட்ரொட்ஸ்கிச சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு, பின் இது
POI என்று சுயாதீன
தொழிலாளர்கள் கட்சி என ஆயிற்று) உடன் ஒத்துழைத்தவரும் ஆவார். நகரவை செலவில் இவர் ஒரு முழு நேர
கார் சாரதியை பதவியில் வைத்துக் கொண்டார்; குற்றச் சாட்டின்படி "பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது,
அதுவும் தெரிந்தே, மற்றும் பொதுநிதியைக் கையாடல் செய்ததை மறைத்தது ஆகியவை. நிலைமையின் சட்டவிரோதம்
பற்றி அவர்கள் முழுமையாகத் தெரிந்திருந்தனர் என்பதை
FO ஓரளவு பணத்தை திருப்பிக் கட்டியதால் நிரூபணம் ஆகிறது."
குற்றச் சாட்டு உத்தரவின் நீண்ட பிரிவு ஒன்று சிறப்பு அலுவலர்கள் பற்றி கூறுகிறது;
1992ல் இருந்து 1995 வரை இவர்கள்
Association Réussir l' an 2000 (2000 ம்
ஆண்டை வெற்றிகரமாக்குக) என்பதில் இருந்தனர். அதன் பணி 1995ல் சிராக் ஜனாதிபதி முயற்சிக்கு
உழைப்பதாகும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த அமைப்பின் நிறுவனரும் பொதுச் செயலாளருமாக
தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இருந்தார். அதன் நிதிப் பொறுப்பாளர் கூற்றின்படி
சார்க்கோசி தன்னுடன் தொடக்க நிதியாக "100,000 பிராங்கிற்கான காசோலையை
Beghin-Sey
நிறுவனம் கொடுத்ததை கொண்டுவந்தார்.". ஆனால் சார்க்கோசி பின்னர் சிராக்குடன் முறித்துக் கொண்டு,
1995 தேர்தல்களில் அவருடைய போட்டி கன்சர்வேடிவ் வேட்பாளர்
Edouard Balladur
க்கு ஆதரவு கொடுத்தார். நிதிப் பொறுப்பாளர்,
"1993ல் இருந்து இந்தச் சங்கம் சிராக் வேட்பிற்கு முழுமையாக
பணி புரிந்தது. பலடூருடைய ஆதவாளர்கள், குறிப்பாக திரு சார்க்கோசி, சங்கத்தைவிட்டு நீங்கினர்.....
இதையொட்டி சிராக் 1995 ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறப்பாக தயாரிக்க முடிந்தது." என்று எழுதியுள்ளார்.
இந்த விசாரணை தொடர்வது இன்னும் சேதத்தை விளைவிக்குமா அல்லது ஒரு முன்னாள்
ஜனாதிபதி விசாரணையை வெற்றிகரமாக தவிர்ப்பது மேலானதா என்று கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
"அங்கோலா கேட்" ஆயுதங்கள் விற்பனை ஊழலில் ஓராண்டு சிறைதண்டனையை
எதிர்நோக்கியிருக்கும் சிராக்கின் கன்சர்வேடிவ் போட்டியாளர் பாஸ்குவா இந்த விசாரணை கணிசமான வகையில்
பரந்த தவறுகள் நடந்திருப்பதை வெளிப்படுத்தக்கூடும் என்று சுட்டிக் காட்டுவதில் முக்கியமாக உள்ளார். பிரெஞ்சு
மக்கள் "வலதிலும், இடதிலும் இப்பொழுது "போலி வேலைகள் என்று அழைக்கப்படுவதில் தொடர்பு
கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிவர்... இதை கடந்த கால நிகழ்வு என்று கொள்ள வேண்டும்" என்ற
கருத்தைக் கூறியுள்ளார். முன்னாள் பிரதம மந்திரியும்
UMP பொதுச் செயலாளருமான
Jean-Pierre Raffarin
ம் சிராக் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்துள்ளார்.
UMP க்குள் இருக்கும் மற்ற
பிரிவுகள் வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன. சிராக்கின் முன்னாள் எலிசே அரண்மனை ஊழியர்களின்
தலைவர், நவம்பர் 2 Le Figaro
தலையங்கத்தில், "போலி வேலகள்" என்பது தொடர்ச்சியான, ஆனால் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற
நிகழ்வுகள்" என்றும் சிராக்கின் பெயரை தூய்மைப்படுத்த "வழக்கு விரைவில் நடத்தப்பட வேண்டும்" என்றும்
எழுதியுள்ளார்.
சார்க்கோசி இதைப்பற்றி அதிகார பிரிவினைக் கோட்பாட்டை காட்டிக் கருத்துக்
கூற மறுத்துள்ள நிலையில், UMP
யின் Christine
Boutine, "உலகில் பிரான்சின் தோற்றத்திற்கு தீமை பயத்தாலும்,
அவர்மீது குற்ற வழக்கு நடத்தப்படுவது சரிதான்; ஆனால் கருணை வேண்டும் என்றே நான் முறையிடுகிறேன்" என்றார்.
2007 தேர்தலில் சோசலிஸ்ட்
கட்சியின் (PS)
ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலீன் ரோயால்,
PS ல் இருக்கும்
சந்தேகத்திற்குரிய நிலைப்பாட்டைத்தான் பிரதிபலித்தார்: "அவருக்கு இது வேண்டியதுதான் என்றாலும், பிரான்ஸின்
தோற்றத்திற்கு இது கெடுதலாகும்....நாட்டிற்கு அவர் பலவும் செய்துள்ளார்...அவரை அமைதியாக இருக்க
விடுவது நல்லது.... அதேநேரத்தில் அனைவருக்கும் நீதி ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்... நலிந்தவர்களாயினும்
சரி, சக்தி வாய்ந்தவர்களாயினும் சரி."
குற்றச் சாட்டுத் தாக்கல் சூழ்நிலையே நீதித்துறைக்குள் இருக்கும் பிளவுகளை
உயர்த்திக் காட்டுகிறது. (விசாரணை நீதிபதிகள்)
juges d'instruction --நிர்வாகத்தின் நேரடிக்
கட்டுப்பாட்டிற்கு உட்படாதவர்கள், ஆனால் 2010 தொடங்கி இந்தப் பதவிகளை சார்க்கோசி அகற்றத்
திட்டமிட்டுள்ளார்), மற்றும் parquet (அரசாங்க
வழக்கறிஞர் அலுவலகம்), நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டு, பதவி நீக்கம் பெறக்கூடிய அதிகாரிகள் அடங்கியது,
இவற்றிற்கு இடையே ஒரு பலப்பரீட்சையாகும் இது. பாரிஸ்
அரசாங்க வக்கீல் அலுவலகம் அக்டோபர் 30 வரை சிராக் விசாரணைக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதைத்
தொடர்ந்து எதிர்த்து வந்தது. இம்முறை அது சிராக்கை குற்ற நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் உத்தரவை
எதிர்த்து முறையிடவில்லை; பாரிஸ் அரசாங்க வக்கீல்
Jean-Claude Marin சமீபத்தில் செப்டம்பர் மாதம்
இந்தவழக்கை தள்ளுபடி செய்தும் இந்நிலைதான் உள்ளது.
Syndicat de Masgistrature ( குற்றவியல்
நீதிபதிகள் சங்கத்தின்) தலைவர் Emmanuelle
Perreux குறிப்பிடுவதாது: "இந்த வழக்கு பற்றி அரசாங்க
வழக்கறிஞர் அலுவலகம் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது; விசாரணை நீதிபதிகள் அகற்றப்பட்டுவிட்டால், இந்த
விவகாரம் மூடிவிடப்படும்."
அரசியல்வாதிகள் புகழ் பற்றி மட்டும் அரசியல் நடைமுறை கவலை கொள்ளுவது
இல்லாமல், நீதிமன்றங்கள் பற்றியும் அஞ்சுகிறது. சிராக் கடுமையான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்,
இது சிமெயோனியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். ஏற்கனவே குற்றவியல் நீதிபதிகள் அமைப்பு ஒன்றும் விவாதத்திற்கு
உட்படாமல் இருந்ததில்லை--குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நீதித்துறை வழக்கு ஊழலில்
Outreau வின்
ஊழல், மற்றும் அமெரிக்கா பிரெஞ்சு குடிமக்களை குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படாமல் பல ஆண்டுகள் குவாண்டநாமோ
குடா சிறை முகாமில் அடைத்தது பற்றிய நீதிபதி
Jean-Louis Bruguière உடைய நிலைப்பாடு போன்றவை
உள்ளன. (ஷிமீமீ "திக்ஷீணீஸீநீமீ: யிuபீரீமீ ஙிக்ஷீuரீuவீகக்ஷீமீutவீறீவீsவீஸீரீ
ணீஸீtவீ-tமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ ணீs ணீ ஜீஷீறீவீtவீநீணீறீ வீஸீstக்ஷீuனீமீஸீt")
சிராக்கிற்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் இறுதியில் ஒரு வர்க்கப் பிரச்சினை
ஆகும். நீதிமன்றக் கருவிகளால் என்று இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தால்தான் இது தீர்க்கப்பட
முடியும். சிராக் சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் நிலை அவருடைய விசாரணை ஒன்றும் அவருடைய ஜனாதிபதி பதவிக்காலத்தைப்
பற்றிய தீவிர விசாரணை இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இது அரசியல் மற்றும் அரசு எந்திரத்திற்குள்
நடக்கும் ஒரு தந்திரோபாய நிகழ்ச்சி ஆகும். ஒப்புமையில் சிறு குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அவரைப் பற்றிய
குற்றச்சாட்டில் சிராக்கின் பதவிக்காலத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நடத்திய பெரும் குற்றங்களைப் பற்றி ஏதும்
கூறவில்லை.
சிராக்கின் பதவிக்காலம் 1994
Rwandan இனப்படுகொலை
செய்திருந்த ஆட்சிக்கு பிரெஞ்சு ஆதரவு இருந்த சான்றுகளை அடக்கிவிட்டதை கண்ணுற்றது. அப்பொழுது ஐவரி
கோஸ்ட், காங்கோ உட்பட ஏகாதிபத்தியக் குறுக்கீடுகள் ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்றன; ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க ஆதரவுடைய படையெடுப்பில் பிரான்ஸும் பங்கு பெற்றது. உள்நாட்டில் தொழிலாளர்களை வறிய நிலைக்குத்
தள்ளும் கடுமையான மக்கள் எதிர்ப்புக் கொள்கையை சமூக நலக் குறைப்புக்கள் மூலம் சிராக் தொடர்ந்தார்;
அதையொட்டி 1995ல் வெகுஜன ரயில் வேலைநிறுத்தம் தூண்டப்பட்டது; 2003ல் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான
தேசிய வேலைநிறுத்த இயக்கம் நடைபெற்றது. எல்ப், தைவான் போர்க்கப்பல்கள்,
EADS ஊழல்கள்
என பல மிகப் பெரிய பெருநிறுவன, அரசியல் ஊழல்களில் இருந்த சான்றுகளையும் அவர் மறைத்தார்.
இத்தகைய அடிப்படையில் தீவிர குற்றங்கள் அனைத்திலும் சிமெயோனியும், முழு அரசியல்,
சட்ட நடைமுறையும் அவருக்கு கடந்துசெல்ல வழி கொடுத்துள்ளன. |