WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Dubai's $59 billion default sends tremor through
global financial system
துபாய் 59 பில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்தலில் தாமதம் உலக நிதிய அமைப்பில்
அதிர்ச்சியைக் கொடுக்கிறது
By Alex Messenger
28 November 2009
Use this version to
print | Send
feedback
நகர-அரச நிர்வாகத்தின் மிகப் பெரிய நிறுவனமான
Dubai World
புதனன்று, தான் "குறைந்தது" ஆறு மாத காலமாவது பத்திரங்களின் பணத்தை 59 பில்லியன் டாலரை திருப்பித்
தர தாமதமாகக்கூடும் என்று அறிவித்துள்ளமை உலக பங்குகளை பெரும் சரிவிற்கு உட்படுத்தியுள்ளது. துபாயின் மிகப்
பெரிய கடன் திருப்பிக் கொடுத்தல் தாமதிக்கப்பட்டுள்ளதற்கு சந்தையின் எதிர்கொள்ளல் ஐரோப்பிய, ஆசிய
வங்கிகளுடன் DP World
மற்றும் அதன் சுற்றுலாப் பிரிவு துணை நிறுவனம்
Nakheel ஆகியவை தொடர்பு கொண்டிருந்தது ஓரளவு காரணம்
என்று விளக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருந்துபோதிலும், துபாய் திவாலாகிவிட்டது போல் வெளிப்படையாக
காணப்படுவதன் உண்மைக்காரணம், அதிக கடன்வாங்கும் அரசாங்கங்களின் செலுத்தமதியின்மை உலகெங்கிலும்,
குறிப்பாக மத்திய கிழக்கிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இது உண்மையான ஆபத்தைக் கொடுக்கக்கூடும் என்பது
தெரியவந்துள்ளது. இது நிதிய நெருக்கடியின் பின்னரான தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள செலுத்துமதியின்மையில்
உள்ள நாடுகளில் ஏற்கெனவே மூர்க்கமான நிலைமையை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களின் நிலைமையில் உடனடி
மோசமான விளைவுகளை மட்டுமல்லாது, இரண்டாவதும் மேலும்
தீவிரமானதொரு உலக நிதிய நெருக்கடிக்கு வழிவகுக்கலாம்.
Bank of America
மூலோபாய வல்லுனர்கள் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு, ஒரு பெரும் இறைமை பெற்ற நாடு கட்டணம் திருப்பிக்
கொடுப்பதில் தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரித்திருந்தது. "ஒரு சிறு பணயம் என்பது போல், இது ஒரு பெரிய
இறைமை நாட்டின் கட்டணம் தாமதப்படுத்தும் பிரச்சினையாகலாம் என்பது மறுப்பதற்கில்லை; இது பின்னர்
உலகத்தில் எழுச்சி பெற்று வரும் சந்தைகள் அனைத்திலும் 2000ங்களில் ஆர்ஜென்டினா அல்லது 1990களின்
கடைசியில் ரஷ்யா செய்ததை ஒட்டி வந்த விளைவுகளைப் போல் தோற்றுவிக்கக்கூடும்" என்று குறிப்பு கூறியுள்ளது.
இன்றைய ஃபைனான்ஸியல் டைம்ஸில் வந்துள்ள ஒரு தலையங்கம் செப்டம்பர்
2008 பீதிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஏனெனில் நிதியத் துறைக்கு மாற்று வழிகள் உள்ளன
என்றாலும், "அச்சமுற்றுள்ள முதலீட்டாளர்கள் அரசாங்கக் கடன்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு என்று
கவலைப்படுவதற்கு தொடங்கி விட்டனர்" என்று அயர்லாந்து, கிரேக்கம் என்ற இரு உதாரணங்களை
மேற்கோளிட்டுக் கூறியது.
மொத்த உலக கடன்கள் தொகுப்பில் துபாய் கரைவு மிகச் சிறிய பணத்தைத்தான்
பிரதிபலிக்கிறது. ஆயினும் கூட, உலகப் பொருளாதார மீட்சி என்ற பேச்சுக்களுக்கு இடையே உலகம் கத்தி
முனையில்தான் உள்ளது என்பதை இது குறிக்கிறது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் கொடுத்துள்ள
உத்தரவாத முயற்சிகள் நிதிய, அரசாங்க உயரடுக்குகள் ஏற்கனவே அச்சமுற்றுள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.
இன்று காலை பிரெளன் துபாய் உலகப் பொருளாதாரத்திற்கு ஆபத்தைக்காட்டுகிறது என்று ஒப்புக் கொண்டார்;
ஆனால் ஒரு கவனமான குறைமதிப்புக் காட்டும் வகையில் செய்தியாளர்களிடம், "நாம் சமாளித்துள்ள முந்தைய
பிரச்சினைகளின் அளவிற்கு இது இருக்காது என்றுதான் நினைக்கிறேன்" என்றார்.
துபாய் நெருக்கடி பற்றி செய்திகள் கிடைத்தவுடன் சந்தைச் சரிவுகள் ஜப்பானில் மிக
அதிகமாக இருந்தன அங்கு பல வங்கிகள் (Mitsubishi
UFJ, Semitoro Mitsui) நேரடியாக அல்லது மறைமுகமான
பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. ஜப்பானிய பங்குகள் நேற்று 3.2 சதவிகிதம் சரிந்தன; இது 8 மாதங்களில் சந்தையில்
ஏற்பட்ட ஒரே நாளின் மிகப் பெரிய சரிவு ஆகும்.
ஆஸ்திரேலியாவில் அன்றே 2.9 சதவிகிதச் சரிவு என்பது
Dubai Worldன்
துணைநிறுவனமான துறைமுக இறங்குதுறையில் தொழிற்படும்
DP World, ஆஸ்திரேலியாவின் கடல் போக்குவரத்துவணிகத்தில்
மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது என்னும் காரணத்தால் பிரதிபலிக்கிறது.
நியூ யோர்க்கில் பங்குச் சந்தைக் குறியீடு 2 சதவிகிதக் குறைவில் தொடங்கியது,
ஓரளவுதான் இந்த இழப்புக்களில் இருந்து மீண்டது. 44 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் லண்டன் சந்தையில் இருந்து
துடைத்துக் கட்டப்பட்டன; இது மார்ச் மாதத்தில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு ஆகும்.
இங்கிலாந்தின் HSBC
வங்கியின் பங்குகள் 7 சதவிகிதம் சரிவுற்றன. துபாய்க்கு $17 பில்லியனை
HSBC
கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாய் தொடர்புடைய மற்ற இங்கிலாந்து வங்கிகள்
Standard Chartered, Citigroup UK, Lloyds,
Royal Bank of Scotland ஆகியனவாகும்.
Royal Bank of Scotland
வங்கி இப்பொழுது இங்கிலாந்து அரசாங்கம் அதிக பங்குகளைக் கொண்டுள்ளதாக உள்ளது; உலகில் வேறு எந்த
வங்கியும் வாங்காத அளவிற்கு பிணை எடுப்புப் பணத்தை ($67 பில்லியனை) இது வாங்கியுள்ளது.
துபாயின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் எமிரேட்டின் சொத்துக்கள்
குமிழை வளர்க்க வாங்கிய $80 பில்லியன் பணத்தில் முக்கால் பகுதியை
Dubai World
கொண்டுள்ளது அந்தக் குமிழ்--அக்டோபர் 2008ல் ஒரு சில வாரங்களில் சொத்து மதிப்புக்கள் பாதியாகப்
போன நேரத்தில் முடிவிற்கு வந்தது --உலக உயரடுக்கின் முடிவில்லா சொத்துக்கள் சேர்ப்பு என்ற கற்பனையின்
வெளிப்பாடு ஆகும்; துபாயின் ஆளும் குடும்பம் உலகச் செல்வந்தர்களுக்காக ஒரு பாலைவன விளையாட்டுத் திடலை
ஏற்படுத்தியது. இதன் மிக முக்கியமான கூறுபாடுகள் உலகின் மிக உயர்ந்த கட்டிடம், ஒரு மகத்தான விளையாட்டு
உள்ளரங்கம் Ski
க்கா, மற்றும் பனை மரங்கள், நட்சத்திரங்கள் வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள மனிதனால் நிர்மாணிக்கப்பட்டுள்ள
தொடர்ந்த தீவுகள் ஆகியவை. கட்டுமானத் திட்டங்களில் மில்லியன் கணக்கை நிர்வாகம் செய்யும் துபாய் உலகம்
தன்னுடைய வெளிநாட்டு கடன்களை உலகப் போக்குவரத்தில் செலுத்தியுள்ளது குறிப்பாக துறைமுகங்களிலும் கப்பல்
பிரிவுகளிலும் ஆகும். DP World
எனப்படும் அதன் நிறுவனம் மத்திய கிழக்கில் மிகப் பெரிய துறைமுகச் செயல் ஈடுபாட்டைக் கொண்டது.
துபாய் நெருக்கடியின் அளவு சில மாதங்களாகவே தெரியவந்துள்ளது என்பது
அறியப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தின் தாமதம் பற்றிய அறிவிப்பு உலகச் சந்தைகளை எதிர்பாராமல் அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது என்பது உலக நிதிய முறையில் பெரும் குழப்பம் மற்றும் பகுத்தறிவற்ற தன்மைக்கு சான்று
ஆகும். DP World
உடைய கடனுக்கு அரசாங்கத்தின் உத்தரவாதம் உட்குறிப்பாக உள்ளது என்று வங்கிகள் நினைத்திருக்க வேண்டும்;
துபாய் அரசாங்கம் என்று இல்லாவிட்டாலும், துபாயின் துணை எமிரேட்டான எண்ணெய் வளம் மிக்க அபு
தாபியினால். ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை--Dubai
World ஒரு துபாய் அரசாங்கத்தின் பொறுப்புக்கள்
வரையற்றுக்கப்பட்ட நிறுவனமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை அபுதாபி காப்பாற்றும் என்பது ஒரு வெற்று
நம்பிக்கைதான்.
உலகம் முழுவதும் பங்குச் சந்தைச் சரிவுகளுடன், துபாய் தாமதத்தின் உடனடி விளைவு
தேசிய கடன்வாங்குதல்களின் காப்பீட்டுச் செலவுகளில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருப்பது ஆகும்; குறிப்பாக ஏழை
நாடுகள் கடன் பற்றி. இந்தச் செலவுகள் CDS
எனப்படும் credit default swaps
கடன் தாமத மாற்றப்படுதல்களை பிரதிபலிக்கின்றன. கிரேக்க
CDS செலவினங்கள்
குறிப்பாக மிகப் பெரிதும் உயர்ந்துவிட்டன; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன்கள் மிக அதிக 130
சதவிகிதத்தை கொண்டிருக்கும் கிரேக்கம் பற்றிய அச்சங்கள் துபாயைத் தொடர்ந்து சில வாரங்களில் வெளிப்படும்.
ஹங்கேரியின் CDS
ம் புதன்கிழமையில் இருந்து அதிகரித்து விட்டது; மலேசியா, தென் கொரிய, கத்தார் ஆகியவற்றிலும்
CDS விலை
அதிகங்கள் கிட்டத்தட்ட 11 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
இத்தகைய போக்குகள் ஒன்றும் எதிர்பாராதவை அல்ல. மாறாக துபாய்த் தாமதம்
வெடிமருந்துக் கிடங்கிற்கு அருகே தீக்குச்சியைப் பற்ற வைப்பதற்கு ஒப்பானதுதான்; அதாவது உலக இறைமை நாடுகளின்
கடன் அளவுகள் என. உலக நிதிய நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்புக்களின் முக்கிய விடையிறுப்பு நச்சுக்
கடன்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏற்கவியலாத கடன்களை பொதுக் கடன்களாக பிணை எடுப்புக்கள்,
உத்தரவாதங்கள் மற்றும் இடைக்கால கருவிகள் மூலம் மாற்றியதுதான். மூடியின் (Moody)
புதிய மதிப்பீடுகளின்படி, மொத்த இறைமை நாடுகளின் கடன்
உலகெங்கிலும் 2007ல் இருந்து 2010க்குள் 15.13 டிரில்லியன் டாலராக உயரும் என்பதுதான்.
இறைமை நாடுகளின் கடன்கள் மிக விரைவிலும் மகத்தான தன்மையிலும் மிகப் பெரிதாகிவிட்டிருப்பதால்,
ஏற்கனவே வேலையின்மை மற்றும் குறைந்த வளர்ச்சியில் இருக்கும் இந்த கடன் வாங்கியுள்ள அரசாங்கங்கள், குறுகிய
அல்லது நீண்ட காலத்தில் பணத்தை மறுபடியும் கொடுக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை. கடன் வாங்கும் செலவுகள்
பெருகியுள்ளன, ஏனெனில் பெருகிய தாமத ஆபத்து (நீண்ட வால் ஆபத்து என்றும் அழைக்கப்படுவது) என்ற நிலையில்
கடன்பட்ட நாடுகளின் நிலைமை மோசமாகும் அத்தகைய கடன்களுக்கு உலக நிதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள்
வரண்டு விட்டன. கிரேக்கம், ஹங்கேரி, லாத்வியா, எஸ்தோனியா மற்றும் துருக்கி ஆகியவை உலகின் கண்காணிப்புப்
பட்டியலில் உயரிடத்தில் இருக்கையில், அமெரிக்காவிற்கும் $12 டிரில்லியன் பொதுக் கடன்களைக் கொண்டிருக்கும்
நிலையில் தாமதம் என்பது பின்னர் நேரக்கூடியதுதான். இவ்விதத்தில் அமெரிக்காவிற்கும் மற்ற சிறு நாடுகளுக்கும்
உள்ள முக்கிய வேறுபாடு அமெரிக்கா "மிகப் பெரிய பொருளாதாரம்" என்பதால் சரியாது என்று பத்திரங்களை
வைத்திருப்பவை, சீன அரசாங்கம் உட்பட, கொண்டிருக்கும் நம்பிக்கைதான்.
நன்கு நிர்வகிக்கப்படும் மற்றும் நன்கு கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படும் உலகப்
பொருளாதாரத்தின் தேசியப் பகுதிகள் நிதிய நெருக்கடியின் விளைவுகள், பின் அதிர்ச்சிகள் ஆகியவற்றில் இருந்து
தப்ப முடியும் என்ற கூற்றுக்களை துபாய் தாமதம் தகர்த்துவிட்டது. அரசாங்கமும் பெருநிறுவன செய்தி ஊடகமும்
உதாரணமாக ஆஸ்திரேலியா இதில் இருந்து விலக்கு பெறும் என்று கூறியுள்ளன. ஆனால்
DP World
உடைய ஆஸ்திரேலிய துறைமுகங்கள்--அந்நாட்டின் உள்கட்டுமானத்தில் கணிசமான பங்கு உடையவை, தற்பொழுது
1.5 பில்லியன் டாலர் என்ற மதிப்பைக் கொண்டவை--வருங்காலத்தில் விற்கப்பட நேரிடலாம். ஆரம்ப அறிக்கைகள்
வலுவான அக்கறைகள் ஏதும் இருக்காது, வாங்குவதற்கு ஒருவரும் இல்லை என்று காட்டுகின்றன. உள்ளூர்
நிறுவனங்களிடம் அத்தகைய அளவிற்கு வாங்குவதற்கு பணம் இல்லை; அதுவும் உலக வணிகம் உறுதியற்ற தன்மையில்
இருக்கும்போது அது ஒரு ஆபத்தான சொத்து என்றுதான் கணிக்கப்படும். |