World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்Australian government tightens grip over Pacific Islands Forum பசிபிக் தீவுகள் அரங்கின்மீது ஆஸ்திரேலிய அரசாங்கம் பிடியை இறுக்குகிறது By Frank Gaglioti கடந்த வாரம் வடக்கு ஆஸ்திரேலிய நகரமான Cairns ல் நடந்த பசிபிக் தீவுகள் அரங்கின் (Pacific Inslands Forum -PIF) தலைவர்களுடைய உச்சிமாநாடு தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் அரசாங்கத்தின் நடவடிக்கையான இப்பிராந்திய அமைப்பின்மீது தன்னுடைய கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் முயற்சியைக் கண்ணுற்றது. பிஜி தொடர்பான, வெப்பதட்ப மாறுதல் மற்றும் பிராந்திய வணிகம் அடங்கிய பல பிரச்சினைகளில் கன்பெராவின் நிலைப்பாடு பற்றி பல பசிபிக் அரசாங்கங்கள் கவலை தெரிவித்து முன்னதாக அறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும், PIF உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப அது தயாரித்திருந்த இறுதி உச்சிமாநாட்டு அறிக்கையில் கையழுத்திட்டன. ஆகஸ்ட் 5, 6ம் தேதிகளில் நடைபெற்ற PIF கூட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, பாப்புவா நியூகினி, சொலமன் தீவுகள், குக் தீவுகள், மைக்ரோனிசியா கூட்டரசுகள், மார்ஷல் தீவுகள், நெளரு, நியூயி. சமோவா, டோங்கா, துவலு, வனெவுடு நாடுகள் மற்றும் பிற பசிபிக் நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிஜி இராணுவ அரசாங்கம் கடந்த ஜனவரியில் அரங்கில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதால் இராஜதந்திர தடைகளின்படி கூட்டத்தில் இருந்து விலகப்பட்டது. PIF சுதந்திர, சமத்துவ உறுப்பு நாடுகளின் பிராந்திய கூட்டம் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில் ஆஸ்திரேலிய அரசாங்கமும் நியூசிலாந்தில் உள்ள அதன் இளைய பங்காளி அரசாங்கம் இரண்டினாலும்தான் கட்டுப்படுத்தப்பட்டது. முந்தைய ஹோவர்ட் அரசாங்கத்தின் கீழ் இந்த அரங்கம் கன்பெரா அதன் பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் உந்ததலுடன் சீனாவின் பெருகிய பொருளாதார, இராஜதந்திர வலிமை என்னும் பெரும் சக்திகளுக்கு இடையிலான தீவிர போட்டிக்குள் சிக்கியது. 2003ல் ஒரு ஆஸ்திரேலிய அதிகாரியான க்ரெக் உர்வின் PIF உடைய தலைமைச் செயலளாராக முதல் தடவையாக பொறுப்பு அளிக்கப்பட்டார்.பிரதம மந்திரி ரூட் இப்பொழுது ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டை பிராந்திய அமைப்பின்மீது கூடுதலாக உறுதிப்படுத்த முற்பட்டுள்ளது. கைர்ன்ஸில் நடக்கும் இந்த ஆண்டுக் கூட்டம் 1994ல் இருந்து முதல் தடவையாக இது ஆஸ்திரேலியாவில் நடக்கப்படுகிறது என்பதையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் இப்பொழுது PIF ன் தலைமைப் பதவியையும் அடுத்த 12 மாதங்களுக்கு கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. கைர்ன்ஸில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தப்படும் பொறுப்பை அது முறையாக ஏற்கும். இறுதி அறிக்கை "பசிபிக் திட்டம்" செயல்படுத்தப்பட ஆதரவைக்கொடுத்தது. அதுதான் பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கான்பெர்ராவின் கீழ் நடத்தப்படுவதற்கான செயற்பட்டியலை கோடிட்டுக்காட்டுகிறது. PIF உறுப்பு நாடுகள் முறையாக, "உலகப் பொருளாதார நெருக்கடியால் முன்வைக்கப்பட்ட புதிய அறைகூவல்களை" கவனிக்கின்றன என்றும் "வெளி அதிர்ச்சிகளுக்கு அவற்றின் தொடர்ந்த பாதிப்பு நிலையையும்" ஒப்புக் கொண்டன. அறிக்கை மேலும் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான பசுபிக் உடன்பாடு (PACER) மற்றும் பிராந்திய தடையற்ற சந்தை பற்றிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தெற்கு பசிபிக்கை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலீட்டாளர்களுக்கு திறந்து விடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமிட்டுள்ள உடன்பாடு வறிய PIF நாடுகளிடையே கவலையை எழுப்பியுள்ளது. அவற்றின் பொருளாதாரங்கள் இதில் அதிக ஆதாயம் பெறுவதற்கு இல்லை. ஏனெனில் பசிபிக் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலிய சந்தையில் சிறப்பு உரிமைகளை பெற்றுள்ளனர். இன்னும் திறமையான சர்வதேச நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும்போது அவை கொண்டுள்ள குறைந்தளவு தொழிற்துறையையும் இழந்துவிடக்கூடும். மேலும் வரிவிதிப்புகளால் பெறப்படும் முக்கிய வருமானங்கள் இதனால் இழக்கப்படுவதால், பொதுச்சேவைகளுக்கான செலவீனங்களையும் வெட்டுவதற்கு அவை நிர்ப்பந்திக்கப்படும். பல பசிபிக் அரசாங்கங்கள் அவற்றிற்கு பல சட்ட, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆலோசனை கூறுவதற்கு ஒரு சர்வதேச வணிக வல்லுனர் ஒருவரைப் பெற நிதி கிடைக்கும் வரை நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான பசுபிக் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். பாப்புவா நியூ கினி, சோலோமன் தீவுக் மற்றும் வனெவுடு ஆகியவையும் பிஜியைச் சேர்க்காமல் திட்டமிடப்படும் தடையற்ற வணிக உடன்பாட்டு நடவடிக்கையின் சட்டத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தியுள்ளன. ஆனால் இறுதியில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அரங்கில் தன் விருப்பப்படி நடக்க முடிந்தது. பேச்சுவார்த்தைகளில் தாமதம் கிடையாது என்பதுடன் பிஜி ஒதுக்கப்பட்டதும் வெளிப்படையாக ஒப்புதல் பெற்றது. மெலநீசிய முனைப்புக் குழு உறுப்பு நாடுகள் முன்பு PIF யில் இருந்து பிஜி நீக்கப்பட்டுள்ளது இடைக்காலமாகவேனும் அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டிருந்தன. ஆனால் அரங்கத்தின்போது, பாப்புவா நியூ கினி, சோலோமன் தீவுகள் மற்றும் வனெவுடு ஆகியவை பின்வாங்கிவிட்டன; இதற்குக் காரணம் திரைக்குப் பின் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கொடுத்த தீவிர அழுத்தமாகத்தான் இருக்க முடியும். இறுதி அறிக்கை ரூட் அரசாங்கத்தின் கோரிக்கையான உண்மையான, அனைத்தையும் அடக்கியுள்ள உரையாடல் முன்னிபந்தனைகள், விளைவுகளை பற்றி முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்காத வகையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அத்தகைய உரையாடல் பிஜியில் மக்கள் மற்றும் அரசியலமைப்பு ஆட்சி மீண்டும் வருவதை வசதிப்படுத்தும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பிஜி மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான அக்கறை ஏதும் இந்த நிலைப்பாட்டில் இல்லை. மாறாக பிராந்திய அரசியல் உறுதிப்பாடு மற்றும் பெய்ஜிங் பிஜிய இராணுவ ஆட்சிக்குழுவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளின் தாக்கங்கள் பற்றிய கன்பெராவின் கவலைகளைத்தான் இது பிரதிபலிக்கிறது. பிஜியின் இராணுவ ஆட்சிக்குழுவின் இராணுவத் தலைவர் Frank Bainimarama ஓரளவிற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆணைகளை மீற முடிவதற்குக் காரணம் கூடுதலான சீன முதலீடு மற்றும் உதவிதான். பிஜியின் பிடிவாதம் எழுச்சி பெறும் ஆசிய சக்தி தெற்கு பசிபிக் முழுவதற்கும் ஆளும் உயரடுக்குகளுக்கு ஆஸ்திரேலிய செல்வாக்கிற்கு ஒரு எதிர்கனத்தை கொடுக்கும் திறனை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. வெளிப்படையாக கருத்தை காட்டும் வகையில் இருந்த நிகழ்வு ஒன்றில், ரூட்டும் நியூஜிலாந்து பிரதம மந்திரி ஜோன் கே இருவரும் நியூவே பிரதமர் Toke Talagi பிஜி மக்களை எழுச்சி செய்து இராணுவ அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று விடுத்த பொது அறிவிப்பை நிராகரித்தனர். இக்கோரிக்கையை எதிர்க்கும் விதத்தில், ரூட் தான் "ஒரு சமாதானத் தீர்வை" விரும்புவதாகக் கூறினார். ஜோன் கே "முன்னாள் பிஜித் தலைவர்களுடன் பேச்சு நடத்துமாறு Frank Bainimarama விற்கு ஊக்கம் கொடுத்திருக்கிறோம்; அதுதான் சரியான செயல்வகை என்று நினைக்கிறோம், இராணுவ ஆட்சி சதிக்கு எதிரான மக்கள் எழுச்சி அல்ல." எனக்கூறினார். உச்சிமாநாட்டின்போது, ரூட் அரசாங்கம் விவாதத்திற்கு முக்கிய பிரச்சினையாக சுற்றுச்சூழல் வெப்பதட்ப மாற்றத்திற்கு முக்கிய இடமளித்தது. உயர்ந்துவரும் கடல் மட்டங்கள் துவலு, கிரிபட்டி போன்ற சில பசிபிக் தீவுகளை மூழ்கடித்துவிடும் அபாயத்தை கொண்டுள்ளன. க்யோடாவிற்கு (Kyoto) பிந்தைய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு உலக சராசரி வெப்பம் இரு செல்சியஸ் டிகிரிகளுக்கு மேல் போகக்கூடாது என வரம்பு செய்யும் உடன்பாட்டில் உலகத் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும் என்று PIF அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. இதில் உலகில் கார்பன் வெளியீடு 2050க்குள் 1990 மட்டங்களைவிட 50 சதவிகிதத்திற்கும் கீழ் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிக்கையையை தன் அரசாங்கத்தின் சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்தல் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றத்தால் பசிபிக்கில் பாதிப்பிற்கு உட்படக்கூடிய திறன் உள்ளவர்கள் பற்றிய மனிதாபினமான கவலை என்பதற்கு நிரூபணம் என்று ரூட் தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால் உண்மைநிலை செய்தி ஊடகக் கட்டுக்கதைகளில் இருந்து முற்றிலும் மாறானது ஆகும். PIS க்குள் இருக்கும் சிறிய தீவு நாடுகள் (SIS) குழுவான குக் தீவுகள், நெளரு, நியுவே, மார்ஷல் தீவுகள், துவலு, பாலெள, கிரிபட்டி ஆகியவை கைர்ன்ஸ் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டு அரங்கம் 2020க்குகள் பசுமை இல்ல வாயு (Greenhouse gases) வெளியேற்றங்கள் 45 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும், அதுதான் உலக வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரிக்கு அதிகரிக்காமல் இருக்க உதவும் என்றும் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அரங்கத்தின் இறுதி அறிக்கை SIS கவலைகளை புறக்கணித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் இலக்குகளைத்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.வெப்ப மாறுதலால் உயரும் கடல் மட்டங்களையொட்டி வீடிழக்கும் அகதிகள் தங்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேறுவது பற்றிய விவாதமும் ஆஸ்திரேலியாவால் அடக்கப்பட்டுவிட்டது. தெற்கு பசிபிக்கில் இருக்கும் மக்களுடைய இழிநிலை பற்றி ஆஸ்திரேலிய அரசாங்கம் முற்றிலும் பொருட்படுத்தாமல் இருப்பது வரவிருக்கும் சர்வதேச சுற்றுச் சூழல் பேச்சுவார்த்தைகளின்போது பங்கு பெறுவோர் நலனுக்காக DVD ஒன்றைத் தயாரித்து தர இருப்பதாக ரூட் கொடுத்த உறுதிமொழியின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. "இதற்காக நாங்கள் செயல்படுத்தவுள்ள பல செயல்களில் ஒன்று எப்படி இந்த DVD ஐ உற்பத்தி செய்வது என்பதாகும். இது சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் ஒரு DVD ஆவணமுறைச் சான்றுகளை ஒன்றாக இணைத்து உலகத் தலைவர்களுக்கு காட்டும்" என்று அவர் BBC இடம் கூறினார். ரூட் அரசாங்கம் "[இன்னும் கடுமையான வாயு வெளியிடுதல் இலக்குகள்] என்ற பிரச்சினை விவாதிக்கப்படுவதை பகிரங்கமாக வாய்ப்பூட்டு போட்டுவிட்டது" என்று Crickey.com. குறிப்பிட்டுள்ளது. மார்ஷல்ஸ் தீவுகள், கிரிபடி மற்றும் துவலுவின் தலைவர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடையிறுப்பதைத் தவிர்ப்பதற்கு அரங்கின் செய்தியாளர் கூட்ட முடிவில் ஒரு பக்க கதவு வழியே அவசரமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர் என்று Islands Business பத்திரிகை தகவல் கொடுத்துள்ளது. மிகக் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் இயக்கப்பட்ட நடவடிக்கைகளின் தன்மை கூட்டத்திற்கு வந்திருந்த சில செய்தியாளர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது. அப்பட்டமான தணிக்கை முறையில், PIF அமைப்பின் அடித்தளத்தில் இருந்த அரசியல் அக்கறைகளை காட்டிய விதத்தில், ஆஸ்திரேலிய அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நிகழ்ச்சியை பற்றி கண்டறியும் உரிமையை தடுத்தனர். (பார்க்க: "பசிபிக் தீவுகள் அரங்கம் பற்றி தகவல் கொடுப்பதில் இருந்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தளத்தை ஒதுக்கி வைக்கின்றனர்") ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பசிபிக் பற்றிய செயல்திட்டத்திற்கும் முன்னாள் பழைமைவாத அரசாங்கம் கன்பெராவின் பொருளாதார, பூகோள-அரசியல் நலன்களை உறுதிபடுத்தும் தன்மையில் இருந்த மூர்க்கத்தனம் தொடர்வதை கைர்ன்ஸ் அரங்கு அடிக்கோடிட்டுக் காட்டியது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ், துணை இராணுவப் பிரிவு, சர்வதேச தலையீட்டு குழு (International Deployment Group) மற்றும் தொடர்ச்சியான இராணுவ-போலீஸ் தலையீடுகளை ஹோவர்ட் அரசாங்கம் தோற்றுவித்தது. இது கிழக்கு திமோரில் (1999, 2006), சாலோமன் தீவுகளில் (2003, 2006), மற்றும் டோங்கா (2006) ஆகியவற்றில் தலையீடு செய்தது. 2006 தலையீடுகள் பதவியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிரான ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் தூண்டுதல், சட்டவிரோத முறையில் தொடர்ந்தன. அந்த அரசாங்கங்கள் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு தடை என்று கருதப்பட்டன. கிழக்கு திமோரின் மாரி அல்கடரியின் Fretilian நிர்வாகம், சாலோமன் பிரதம மந்திரி மனாசே சோகவரே ஆகியோரின் நிர்வாகம் அத்தகைய முறையில் காணப்பட்டன. இதற்கு எதிரிடையாக தொழிற்கட்சி ஹோவர்டின் ஆரம்ப முயற்சிகளுக்கு முழு ஆதரவையும் கொடுத்தது. ஆனால் பதவிக்கு வந்த பின்னர் ஹோவர்ட் அரசாங்கம் சாதாரண பசிபிக் தீவு மக்கள் மற்றும் வட்டார உயரடுக்குகளில் தோற்றுவித்த விரோதப் போக்கை உணர்ந்த வகையில் ரூட் ஒரு தந்திரோபாய மாற்றத்தை மேற்கோண்டார். புதிய பிரதம மந்திரி "Port Morsby Declaration" என்பதை அறிவித்தார்; இது பரஸ்பர மதிப்பு மற்றும் ஒற்றுமை என்னும் "புதிய சகாப்தத்தை" கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் இதன் அடித்தளத்தில் உள்ள அலங்காரச் சொற்கள் இதே மூலோபாய அவசியத்தைத்தான் கொண்டுள்ளன. அதாவது அதன் செல்வாக்கு மண்டலம் என நினைக்கும் பகுதிக்குள் ஆஸ்திரேலியாவின் நவ காலனித்துவ நலன்களை பெற்று, முன்னேற்றுவிப்பதல் என்பதே. விவாதத்தை அடக்குதல் மற்றும் எவ்வித விமர்சன கண்காணிப்பையும் கைர்ன்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டில் அடக்கிவிட்டது ரூட் அரசாங்கம் தனது நோக்கத்தை தொடர இருக்கும் இரக்கமற்ற தன்மையைத்தான் சுட்டிக் காட்டுகிறது. |