World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

America's Death Squads Inc.

அமெரிக்காவின் மரணப்படை நிறுவனம்

Bill Van Auken
21 August 2009

Back to screen version

செவ்வாயன்று வெளிவந்த செய்தி ஊடகத் தகவல்கள்படி, அல் குவேடா நடவடிக்கையாளர்கள் என்று கருதப்படுபவர்களை "இலக்கு வைத்து கொல்லுதல்" என்ற இரகசிய திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பு (CIA) இப்பொழுது இழிவுபெற்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமான Blackwater உடன் ஒப்பந்தத்தை செய்திருந்தது தெரிகிறது.

இந்த அமைப்பு அடிப்படையில் கூலிப்படைகளை பயன்படுத்தும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த அரசாங்கப் படுகொலைகளை செய்ய ஒரு துணை ஒப்பந்தத்தை செய்கின்றது.

ஜூன் மாதம் தற்போதைய CIA இயக்குனரான லியோன் பானெட்டா சட்டமன்ற உளவுத்துறை குழுக்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு திட்டம் பற்றி எடுத்துரைத்து இது முடிக்கப்பட வேண்டும் என்று தான் உத்திரவிட்டதாகக் கூறினார். முன்னாள் துணை ஜனாதிபதி டிக் சென்னியின் உத்திரவினால் படுகொலை செய்யும் திட்டம் காங்கிரஸிடம் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் தலைவர் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குப்பின்தான் இது பற்றி அறிந்ததாக பானெட்டா கூறினார்.

பிளாக்வாட்டர் தொடர்பு பற்றி எடுத்துரைத்த New York Times இந்த உடன்பாடு முறையாக ஒரு ஒப்பந்தமாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றார். மாறாக, ஒரு "வார்த்தையளவிலான உடன்பாடு" (gentlemen's agreement) புஷ் நிர்வாகத்தின் உயர்மட்டத்தினர், CIA அதிகாரிகள் மற்றும் பிளாக்வாட்டர் நிறுவனரும் உரிமையாளருமான எரிக் பிரின்ஸ் ஆகியோரிடையே ஏற்பட்டது.

முன்னாள் கடற்படையினராக இருந்த பிரின்ஸின் கீழ் பிளாக்வாட்டர் (இப்பொழுது Xe Services என்று மறுபெயரிடப்பட்டுள்ளது) அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பல பில்லியன்களை கூலிப்படையினரை அமர்த்த வாங்கிக் கொண்டது (அவர்களில் பெரும்பாலனவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இருந்த முன்னாள் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கைகள் உறுப்பினர் ஆவர்.)

பிளாக்வாட்டர் என்னும் பெயர் ஈராக்கிய சாதாரண மக்களுக்கு எதிராக அதன் படையினர் கடுமையான வன்முறையை பயன்படுத்திய பல தொடர்ச்சியான நிகழ்வுகளினால் பின்னர் இழிவுற்றது. செப்டம்பர் 2007ல் பாக்தாத் Nissour Square ல் பிளாக்வாட்டர் துப்பாக்கி ஏந்தியவர்கள் சரமாரியாக சுட்டதில் நிராயுதபாணிகளான 17 ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டதில் வன்முறையும் இகழ்வும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கூலிப்படை பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் சிறிதும் விளைவுகளை எதிர்கொள்ளாமல் மக்களைக் கொல்ல முடியகிறது, நாட்டின் சட்டமோ ஆக்கிரமிப்பு நாட்டின் சட்டமோ இராணுவ நீதி முறையோ அவர்களைத் தடுக்க முடியாது என்ற முறையின் தவிர்க்க முடியாத விளைவுதான் இப்படுகொலை. இச்சிந்தனையும் கூட, மொத்த போருமே கொள்ளை, சட்டவிரோதமானது என்ற பிரதிபலிப்பின் ஒரு பகுதிதான்.

குடியரசுக் கட்சி வலதுடன் நெருக்கமான தொடர்புகளை பிரின்ஸ் கொண்டுள்ளார். இவருடைய சகோதரி மிச்சிகன் குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவராவார். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் (Focus on the Family) போன்ற வலதுசாரி கிறிஸ்துவ அடிப்படைவாத அமைப்புக்களுக்கு முக்கிய நிதி அளிக்கும் அறக்கட்டளையில் அவர் முக்கியமானவர்.

இக் குடியரசுக் கட்சியுடனான தொடர்புகள் பிளாக்வாட்டரின் வெற்றிக்கு திறவுகோல் என பலராலும் காணப்பட்டாலும், பென்டகனும் வெளிவிவகார அமைச்சும் ஒபாமா நிர்வாகத்தின் கீழும் பிரின்ஸின் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை தொடர்ந்து கொடுக்கின்றன.

நிசோர் சதுக்கப் படுகொலையில் ஈராக்கிய பாதிப்பாளர்கள் சார்பில் நடந்த நீதிமன்ற வழக்கு ஒன்றில், பிளாக்வாட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் பிரமாண அறிக்கைகளை தாக்கல் செய்தனர். பிறவற்றுடன் கீழ்க்கண்டதும் அதில் கூறப்பட்டது: "திரு.பிரின்ஸும் அவருடைய ஊழியர்களும் நிறுவனத்தால் நடத்தப்படவிருக்கும் குற்றம் சார்ந்த நடவடிக்கை பற்றி கூட்டாட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க அல்லது கொடுக்கத் திட்டமிட்டிருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை கொன்றுவிட்டனர்." தங்கள் உயிருக்கும் அஞ்சுவதாக அவர்கள் இருவரும் கூறினர்.

ஒரு பெயரிடாத முன்னாள் CIA அதிகாரி, படுகொலைத் திட்டத்தின்கீழ் பிளாக்வாட்டர் ஊழியர்கள் பல நேரமும் "கடத்தலும் தொடர்பு கொண்டிருந்த மாதிரி பணிகள் பலவற்றை நடத்தினர்" என்று கூறியதாக Washington Post கூறியுள்ளது.

பிளாக் வாட்டர் தொடர்பு CIA படுகொலைத் திட்டத்தில் இருந்தது பற்றி வெளிவந்துள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. இரு மாதங்களுக்கு முன்பு திட்டம் பற்றி காங்கிரஸுக்கு CIA இயக்குனர் பானெட்டா தகவல் கொடுத்தும் ஏன் இது அமெரிக்க மக்களிடம் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டது? காங்கிரஸிடம் இருந்து பானெட்டா தகவலை மறைத்தாரா அல்லது உளவுத்துறை குழு உறுப்பினர்கள் இந்த குற்றம்சார்ந்த சதியைப் பற்றி அறிந்தபின் பேசாமல் இருந்தனரா?

இன்னும் அடிப்படையாக, CIA-Blackwater உடன்பாடு அமெரிக்காவில் ஜனநாயகத்தின் ஆழ்ந்த, தொடர்ந்த வீழ்ச்சிக்கு சான்றாக உள்ளதா?

புஷ் நிர்வாகம் ஒரு குற்றம் சார்ந்த ஆட்சி, அமெரிக்க சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை வெளிப்படையாக மீறிச் செயல்பட்டது, வெள்ளை மாளிகையில் இருந்து படுகொலைகள், சித்தரவதை ஆகியவை இயக்கப்பட்டன என்பதற்கு மேலதிகமான ஏதாவது தேவையானால் இது மற்றும் ஒரு சாட்சியமாகும்.

ஆயினும்கூட இதற்கு எவரும் பொறுப்பு ஏற்குமாறு கூறப்படவில்லை. ஒபாமா நிர்வாகம் அதன் முந்தைய நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை மூடிமறைக்கிறது. அதே நேரத்தில் இக்குற்றங்களில் மிகத் தீவிரமான ஆக்கிரமிப்பு போர்களையும் தொடர்கிறது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைமையில் இருக்கும் காங்கிரஸ் இரண்டும் இராணுவ, உளவுத்துறை பிரிவுகளின் அழுத்தத்தில் தொடர்ந்து பின்வாங்குகின்றன. அவை இரண்டும் அரசாங்கத்திற்குள் அரசாங்கமாக செயல்படுகின்றன. குற்றச்சாட்டை தொடர்வது ஒரு புறம் இருக்க, புஷ் நிர்வாகத்தின் குற்றங்கள் பற்றிய எந்த விசாரணைகளையும் நிறுத்தி விடுகிறது.

இத்தகைய பிரச்சாரம்தான் வியாழனன்று CIA இன் முன்னாள் இயக்குனர் மைக்கேல் ஹேடன் பிளாக்வாட்டரை பாதுகாத்து, நிறுவனம் அந்த அமைப்பின் "மிக இரகசியமாக செயல்படும் திறன்களின்" பயன்பாட்டை உபயோகிக்க வேண்டியிருந்தது என்றார்.

இன்னும் தெளிவாக இந்த சமீபத்திய வெளிப்பாடுகளில் தெரிவது பிரின்ஸ், அவரைப் போன்ற நபர்கள் இராணுவத்திலும் உளவுத்துறையிலும் அசாதாரண, பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லாத சக்தியை கொண்டு இயங்கும் ஒரு அரசாங்கத்தின் சித்திரமாகும்.

1960களிலும் 1970களிலும் CIA "Murder, Inc. ("கொலை நிறுவனம்") என்ற அடைமொழியை காங்கோவில் பாட்ரிஸ் லுமும்பாவில் இருந்து கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ வரை பல வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிரான படுகொலை அல்லது படுகொலை முயற்சிகளுக்கான தொடர்பைக் கொண்டதில் இருந்து ஈட்டியது.

ஆனால் CIA-Blackwater உடன்பாடு இன்னும் தீமை பயத்தது ஆகும். குடியரசுக் கட்சியுடன் நெருக்கான தொடர்புகளை கொண்ட ஒரு வலதுசாரி நபரால் அமைக்கப்பட்ட கூலிப்படையின் மரணப்படையுடன் CIA ஒப்பந்தம் கொண்டது.

இதே சக்திகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொல்ல, சித்திரவதை செய்ய அனுமதிக்கப்பட்டவை, போராளித்தன தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவிலேயே இலாபமுறை மற்றும் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு சவால் விடுபவர்களுக்கு எதிராகவும் தூண்டிவிடப்படலாம். சுருங்கக் கூறின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் எல் சல்வடோரில் இருந்து ஈராக் வரை பயன்படுத்தப்பட்ட மரணப்படை உள்நாட்டிற்கும் கொண்டுவரப்படக் கூடும்.

உண்மையில், பிளாக்வாட்டர் ஏற்கனவே மிகுந்த திறமை படைத்த கொலைகாரர்களை உள்நாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது. 2005ல் நிறுவனத்தின் நூற்றுக் கணக்கான கூலிப்படைக்காரர்கள், தானியங்கி ஆயுதங்களை தாங்கி நியூ ஓர்லீயன்ஸில் காட்ரினா பாதிப்பிற்கு உட்பட்ட தெருக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கூறுபாடுகளின் பயன்பாடானது, உள்நாட்டு வேவு பார்த்தல் மற்றும் "தடுப்புக் காவல்" என்ற பெயரில் அரசாங்கத்தின் விரோதிகளை காலவரையின்றி, குற்றச்சாட்டுக்கள், விசாரணை இன்றி சிறையில் அடைக்கும் முறையை செயல்படுத்தியதின் தொடர்ச்சிதான். அமெரிக்காவில் சர்வாதிகாரம் ஆட்சி செலுத்துவதற்கான சாரம் அமைக்கப்பட்டுவிட்டது.

ஒபாமா நிர்வாகத்திலும் இப்போக்கு குறைவின்றி தொடர்கிறது. இக்கொள்கை வர்க்க நலன்கள் மற்றும் அமெரிக்க, உலக முதலாளித்துவத்தை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் தன்மையினால் ஆணையிடப்படுகிறது. அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தை தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரிக்கும் சமூக சமத்துவமின்மையின் முன்னோடியில்லாத தன்மை அடிப்படையில் ஜனநாயகத்துடன் பொருந்தி இருக்காது.

இந்த ஜனநாயக உரிமைகள் மீதான தீவிர அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்பட முடிவது மட்டுமல்லாது உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் அவர்களுடைய குற்றத்திற்கு பொறுப்பு சொல்ல வைக்க முடியும். இதற்கு சமூகத்தை சோசலிச மாற்றத்திற்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டு அதன் கட்சியை அதற்காக அமைத்து அரசியல் போராட்டங்களை மேற்கொள்ளுவது அவசியமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved