World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US presses Pakistan for offensive in South Waziristan

தெற்கு வஜீரிஸ்தானில் தாக்குதல் நடத்த பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது

By K. Ratnayake
22 August 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் ஐந்து நாட்கள் பாக்கிஸ்தானில் தங்கியிருந்து தலிபானின் வலுவான கோட்டையாக கருதப்படும் தெற்கு வஜீரிஸ்தானுக்கு எதிராக பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்திற்கு வந்த ஹோல்ப்ரூக் இஸ்லாமியக் குழுக்களையும் உள்ளடக்கிய பல அரசியல் தலைவர்களுடன் பரந்த விவாதங்களை நடத்தினார். இது நாட்டில் மீதான பிடியை அதிகரிக்க அமெரிக்கா கொள்ளும் பரந்த செயற்பட்டியிலின் ஒரு பகுதியாகும்.

ஒபாமா நிர்வாகம் நாட்டில் பெருகிய முறையில் குறுக்கீடு செய்வதை அடிக்கோடிட்ட விதத்தில் அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவரான தளபதி டேவிட் பெட்ரீயஸும் புதனன்று பாக்கிஸ்தானுக்கு வந்து திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் வழங்குவது பற்றி பாக்கிஸ்தானிய தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்.

வடமேற்கு பாக்கிஸ்தானில் உள்ள தெற்கு வஜீரிஸ்தான் பாக்கிஸ்தானிய பஷ்டூன்களின் தாயகம் ஆகும். இது ஆப்கானிய பஷ்டூன்களுடன் இனவழித் தொடர்பு கொண்ட தலிபான் குழுக்கள் மற்றும் பழங்குடி மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இவை ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக நடக்கும் எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றன.

பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் இந்த ஆப்கானிய எதிர்ப்பிற்கான ஆதரவை நசுக்குவதற்காக, CIA பெருகிய முறையில் பிரிடேட்டர் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி ஏராளமான போராளிகளையும் சாதாரண மக்களையும் கொன்று வருகிறது. அமெரிக்க செயற்பாடுகளுக்கு ஆதரவு தரும் பாக்கிஸ்தானியத் துருப்புக்கள் கடந்த காலத்தில் குறைந்தளவிலான தரைவழித் தாக்குதல், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றை நடத்தியுள்ளன. ஆனால் வாஷிங்டன் கோரும் முழு தரைவழித் தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை.

ஆகஸ்ட் 5ம் தேதி நடத்திய CIA ஆளில்லா விமானத்தாக்குதலில் தலிபான் குழுக்களின் நிழற்குடை அமைப்பான TTP எனப்படும் Tehrik e Taliban பாக்கிஸ்தானின் தலைவரான மெசூத் பைத்துல்லா இன்னும் பலருடன் கொல்லப்பட்டார். அப்பொழுதிலிருந்து வாஷிங்டன் தெற்கு வஜீரிஸ்தானில் ஒரு பெரிய தாக்குதலை நடத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு தலைவணங்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியாலும் (PPP), இராணுவத்தாலும் வழிநடத்தப்படும் இஸ்லாமாபாத் அரசாங்கம் ஏப்ரல் 26ம் தேதி ஒரு மிருகத்தனமான தாக்குதலை ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அண்டை மாவட்டங்களான வடமேற்கு எல்லை மாகாணப்பகுதிகளிலும் நடத்தியது.

இதில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் இடம் பெயர நேர்ந்தது. அவர்களுள் பலர் இன்னமும் இப்பகுதிக்கு திரும்பவில்லை. இப்பகுதியோ போர் ஜேட்டுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆதரவுடைய 15,000 துருப்புக்களின் தாக்குதலால் பேரழிவைக் கண்டுள்ளது. ஜூலை மாதம் இராணுவம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறியது. ஆனால் மலைப்பகுதிக்குள் பின்வாங்கியுள்ள போராளிகள் கெரில்லா முறைப்படி தாக்கிவிட்டு ஓடும் நடவடிக்கைகளை பல முறையும் தொடர்கின்றனர் என்பதை ஒப்புக் கொண்டது. இராணுவக் கூற்றின்படி, 166 படையினரும் கிட்டத்தட்ட 2,000 தலிபான் போராளிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பாக்கிஸ்தான் அதன் தாக்குதலை ஸ்வாட் பள்ளத்தாக்கு நடவடிக்கைக்கு பின்னர் தெற்கு வஜீரிஸ்தானுக்குள் விரிவாக்கம் செய்யும் என்று வாஷிங்டன் எதிர்பார்த்தது. ஆனால் அரசாங்கமும் இராணுவமும் மக்கள் சீற்றத்தையொட்டியும், கடினமாக மலைப்பகுதியில் இராணுவம் செயலற்றுப் போய்விடுமோ என்ற பயத்திலும் தயக்கம் காட்டுகின்றன.

ஹோல்ப்ரூக்கின் பயண நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், New York Times புதனன்று "ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள்... இங்குள்ள இராணுவத்திற்கும் பொதுதலைவர்களுக்கும் தலிபானுக்கும் அல் குவேடாவிற்கு நெருக்கமாக இருக்கும் பிற போராளிகளுக்கும் எதிராக ஆக்கிரோஷத்துடன் நடவடிக்கை எடுக்குமாறு வலுவான செய்திகளை கொடுத்து வருகின்றனர்." என கூறியது.

கட்டுரை தொடர்கிறது: "ஆனால் இது [அமெரிக்க அழுத்தம்] பாக்கிஸ்தானிய இராணுவம் வெற்றி என அறிவித்து இராணுவம் அதன் சமீபத்திய ஸ்வாட் பள்ளத்தாக்கு தாக்குதலில் இருந்து பின்வாங்கி, வஜீரிஸ்தானுக்குள் அதேபோன்ற நடவடிக்கையை தவிர்த்து ....வீட்டிற்கு திரும்பக்கூடுமோ என்ற கவலையையும் மூத்த அமெரிக்க அதிகாரிகளிடையே பிரதிபலிப்பதை காட்டுகிறது."

செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹோல்ப்ரூக் இஸ்லாமாபாத்தையும் அதன் இராணுவத்தையும் ஆப்கானிய பாக்கிஸ்தான் எல்லையில் தலிபான் போராளிகளை வேட்டையாடுவதற்கு ஒத்துழைத்ததற்கு பாராட்டினார். "ஆனால் இன்னும் கூடுதலான ஒத்துழைப்பை இனியும் எதிர்பார்க்கும் விதத்தில் ஊக்கம் கொடுக்கிறேன்." என்று அவர் வலியுறுத்தினார்.

பாக்கிஸ்தானின் இராணுவத் தலவர் தளபதி அஷ்பக் பர்வேச் காயானை செவ்வாயன்று சந்தித்த ஹோல்ப்ரூக் மீண்டும் ஸ்வாட் தாக்குதலுக்கு இராணுவத்தை புகழ்ந்ததுடன் அதே நேரத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்றும் கோரினார்.

காயானி இதற்கு உடன்பட்டாலும், இராணுவத்தை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இருந்து போர்த்தளவாடங்களை, ட்ரோன் தொழில்நுட்பம் உட்பட கோரினார். பாக்கிஸ்தான் செய்தி ஊடகத் தகவல்படி காயானி அமெரிக்கத் தாக்குதல்கள் "அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை பெருகிய முறையில் தூண்டிவிட்டு வருகின்றன என்ற உண்மையை சுட்டிக்காட்டினார்."

பின்னர் ஹோல்ப்ரூக்கை சந்தித்த தளபதி நதீம் அஹ்மத் செய்தியாளரிடம் கூறினார்: "சூழ்நிலை சாதகமாக உள்ளது என்பதை அறிந்து அவர்களுடைய (தலிபானுடைய) உள்கட்டுமானத்தையும் போரிடும் திறனையும் கணிசமாக உடைக்கலாம் என்று உணர்ந்தால், பின்னர் தரைவழித்தாக்குதலில் ஈடுபடலாம்." அமெரிக்காவிடம் இருந்து "பொருத்தமான தளவாடங்களை" அவர் கோரினார்.

திங்களன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அமெரிக்க, நேட்டோ படைகளின் தளபதியான ஜேனரல் ஸ்டான்லி ஏ. மக்கிரிஸ்டல் காயானியைச் சந்தித்தார். அமெரிக்க படைகளின் கூட்டுத் தலைவர் அட்மைரல் மைக்கேல் முல்லன் பாக்கிஸ்தான் படைத்தலைவருடன் தொலைபேசியில் பேசினார். டைம்ஸிடம் நிர்வாக அதிகாரி ஒருவர் இது பாக்கிஸ்தானிய இராணுவத்தை "நிரந்தர போர் நிலையில்" தக்க வைக்கும் மூலோபாயம் என்று கூறினார்.

புதனன்று தளபதி பெட்ரீயஸ் இஸ்லாமாபாத்திற்கு காயானியை சந்திக்க வந்து அதே தகவலை கொடுத்தார். புதனன்று செய்தி ஊடகத்திடம் ஹோல்ப்ரூக் அமெரிக்க Centcom தலைவர் பாக்கிஸ்தான் தலிபானுக்கு எதிரான தாக்குதலை விரிவுபடுத்துவதற்கு அமெரிக்க தளவாட அளிப்புக்களை விரைவுபடுத்த வந்திருந்தார். "அமெரிக்க-பாக்கிஸ்தானிய இராணுவ நடவடிக்கையை வலுப்படுத்தும் கணிசமான முயற்சியின் ஒரு பகுதியாகும் இது" என்று ஹோல்ப்ரூக் Reuters செய்திநிறுவனத்திடம் இடம் கூறினார்.

பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஆசிப் ஜர்தாரியையும் நாட்டின் பிரதமரான யூசுப் ராஜா கீலானியும் ஹோல்ப்ரூக் சந்தித்தார். அவர்கள் இருவரும் மிகநவீன ஆயுதங்கள் தேவை என்னும் இராணுவக் கோரிக்கையை அவரிடம் கூறினார்கள்.

உண்மையில் வாஷிங்டனின் கையாளாக இருக்கும் ஜார்தாரியின் பங்கை எடுத்துக்காட்டும் விதத்தில் ஹோல்ப்ரூக் செய்தியாளர்களிடம் "அவர் (ஜார்தாரி) ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற தனது பங்கை செய்துமுடிப்பார் என்று நான் வெளிப்படையாக நம்புகிறேன். அதில் எத்தவறும் இல்லை...நாங்கள் (பாக்கிஸ்தானில்) ஜனநாயகமயமாக்கல் நிகழ்போக்கிற்கு ஆதரவு கொடுக்கிறோம்." அவர் மூடிமறைத்த உண்மை வாஷிங்டன் ஜார்தாரி அரசாங்கத்தை அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு உதவ அதன் மக்களுக்கு எதிராக போர் நடத்த தூண்டுகிறது என்பதாகும்.

வாஷிங்டனுடைய விருப்பங்கள்படி ஜார்தாரி நடந்து கொள்ளுகிறார். ஆனால் இன்னும் கூடுதலான வகையில் இராணுவ, பொருளாதார வணிக உதவியை பணிகள் அளிப்பதற்கு கட்டணமாக கேட்கிறார். பாக்கிஸ்தானிய ஜனாதிபதியின் அலுவலகம் ஒரு அறிக்கையில் "அமெரிக்க தூதரிடம் பாக்கிஸ்தானிய பொருட்களுக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் இன்னும் கூடுதலான சந்தை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்." என தெரிவித்தது.

மத்திய நிதிமந்திரி ஷெளகட் தாரின் Kerry-Lugar சட்டவரைவின்படி கிட்டத்தட்ட அமெரிக்க $5.1 பில்லியன் ஆண்டு ஒன்றிற்கும், டோக்கியோ நன்கொடையாளர்கள் மாநாட்டில் இருந்து கிட்டத்தட்ட $500 மில்லியனும் அக்டோபர் மாதமளவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அமெரிக்கா பாக்கிஸ்தானின் எரிபொருள் சந்தையின் கட்டுப்பாட்டையும் பெற முற்படுகிறது. "பாக்கிஸ்தானிய மக்கள் எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினைக்கு விடையிறுக்கும் வகையில் எரிபொருள் துறை பற்றி பரிசீலிக்கிறோம்" என்று ஹோல்ப்ரூக்கின் பொருளாதார ஆலோசகர் கூறினார். பாக்கிஸ்தானின் எரிபொருள் தேவைகளில் 80 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது.

கராச்சியில் புதனன்று ஹோல்ப்ரூக் அமெரிக்க வல்லுனர்கள் குழு ஒன்று பாக்கிஸ்தானுக்கு வியாழனன்று வரும் என்றும் எரிபொருள் நெருக்கடி பற்றி அது ஆராயும் என்றும் அறிவித்தார். ஆப்கானிஸ்தானிற்கு பறந்து செல்லும் முன் வணிகத் தலைவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடாத்தினார். அமெரிக்கா 100 வணிக நுழைவுரிமைகளை (Visa) அடுத்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வழங்கும் என்றும், அடுத்த ஆண்டு வணிகப் பிரிவை மீட்டமைத்து "இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தி, சர்வதேச சந்தைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானின் வணிக வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஹோல்ப்ரூக்கின் செயற்பட்டியலில் அரசியல், மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளும் அடங்கியிருந்தது. பாக்கிஸ்தானிய முஸ்லிம் லீக் (PMLN) தலைவர் நவாஸ் ஷரிப்புடன் ஹோல்ப்ரூக் செவ்வாயன்று சந்தித்தார். அமெரிக்க-பாக்கிஸ்தானிய ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு ஷரிப் ஆதரவு கொடுப்பவர். அதேபோல் அவர் ஆவாமி தேசியக் கட்சி (ANP), Jamiat Ulema-e-Fazl (JUF), Jamiat Ulema-e-Islam (JUI), Jamaat-i-Islami (JiI) ஆகியவற்றின் தலைவர்களையும் சந்தித்தார்.

அமெரிக்க தூதர் மதத் தலைவர்களுடன், JUF, JiI உட்பட, பேசியது புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் இருந்து ஒருவித தந்திரோபாய மாற்றத்தை அடையாளம் காட்டுகிறது. அமெரிக்கக் கொள்களைகளுக்கு அவர்கள் ஆதரவைப் பெற இஸ்லாமிய குழுக்களுடன் ஒபாமா ஊடாட முற்படுகிறார். குறைந்த பட்சம் அவர்களுடைய எதிர்ப்பையாவது திசை திருப்ப முயல்கிறார். இவரைச் சந்தித்தவர்களுள் JiI தலைவர் லியாகத் பலோச், மற்றும் JuI தலைவர் மெளலானா பஸ்லூர் ரஹ்மான் ஆகியோரும் இருந்தனர்.

ஹோல்ப்ரூக் இஸ்லாமாபாத்தில் இருந்தபோது, ஒபாமா அவருடைய புதிய அணுகுமுறையை வலியுறுத்தினார். திங்களன்று வெளிநாட்டு போரில் ஈடுபட்ட முன்னாள் படையினரின் அமைப்பில் (Veterans of Foreign Wars Convention) அரிசோனாவில் உள்ள போனிக்சில் பேசிய ஒபாமா, அல் குவேடா இன்னும் பிற "தீவிர எதிரிகள்" ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் இருப்பவற்றிற்கு எதிரான இராணுவப் போரில் மறு குவிப்பை காட்டியுள்ளதாக கூறினார். "இந்த மூலோபாயம் அல்குவைதாவையும் அதன் நட்பு அமைப்புக்களும் அவற்றின் தளத்தை பாக்கிஸ்தானின் தொலை, பழங்குடிப் பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளதை உணர்ந்திருக்கிறது" என்றார். அவர் மேலும் கூறியது: "தடுக்கப்படாவிட்டால், தலிபான் எழுச்சி இன்னும் கூடுதலான பாதுகாப்பான இடத்தை அல்குவேடாவிற்கு வழங்கிவிடும் மற்றும் இன்னும் அதிக அமெரிக்கர்களை கொல்ல அது சதி செய்ய முடியும் என்ற பொருளைத் தரும். எனவே இது செய்ய வேண்டிய போர் என்பது மட்டும் அல்ல. நம் மக்களின் பாதுகாப்பிற்கு அடிப்படையாகும்."

இப்படி அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு என்பது ஆப்கானிஸ்தானை அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பணிய வைக்கும் காலனித்துவ போருக்கு ஒரு மறைப்பு ஆகும். பாக்கிஸ்தானில் பழங்குடி பகுதியில் நடக்கும் போர் அமெரிக்க மூலோபாய நலன்களுடன் பிணைந்துள்ளது. குறிப்பாக மத்திய ஆசியா, அதன் எண்ணெய், எரிவாயு வள இருப்புக்கள்மீது கட்டுப்பாடு கொள்ளுதலும், உலக அரங்கில் அமெரிக்க முதலாளித்தவத்தின் போட்டியாளர்களுக்கு எதிராக உறுதியான புவி-அரசியல் நன்மைகளை பாதுகாத்துக்கொள்வது என்ற பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது.

தெற்கு வஜீரிஸ்தானில் இராணுவத் தாக்குதல் என்பது ஆப்கானிஸ்தான் போரை பாக்கிஸ்தானுக்குள்ளும் குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்குவதை பிரதிபலிக்கிறது. அது அங்குடன் நிற்காது. பயங்கரவாத-எதிர் நடவடிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒபாமாவிற்கு ஆலோசகராக இருக்கும் மூலோபாயத்திற்கும் சர்வதேச ஆய்வுகளுக்குமான நிலையத்தினை சேர்ந்த John Brennan, ஆகஸ்ட் தொடக்கத்தில் நடத்திய உரை ஒன்றில் வாஷிங்டன் பாக்கிஸ்தானின் தெற்கு மாநிலமான பலுசிஸ்தான் மீதும் குவிப்பு காட்டுகிறது என்றார்.

ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் அவர் கூறினார்: "அழுத்தம் அதிகரித்து பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை ஆபத்தாகப் பாதிக்கையில் பலுசிஸ்தான் நம் அனைவருக்கும் கவலை தருகிறது." இந்த கவலை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை; ஆனால் பாக்கிஸ்தான் அரசாங்கம் நிலைமையை கையாளவேண்டும் என்றார்.

ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தான் எல்லையிலும் நடக்கும் அமெரிக்கப் போர் நாடு முழுவதிலும் உறுதிப்பாட்டை சீர்குலைக்கும்; தெற்கு ஆசியப் பகுதி முழுவதிலும் தொலை விளைவுடைய தாக்கங்களை கொண்டுள்ளது.

அமெரிக்க நிலைப்பாட்டிற்கு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையில் இருக்கும் இஸ்லாமாபாத் அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு என்பதில் இதுதான் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. Pew Gl.obal Attitudes கருத்துக் கணிப்பு ஒன்று, ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிடப்பட்டது, பாக்கிஸ்தானிய மக்களில் 64 சதவிகிதத்தினர் அமெரிக்காவை ஒரு விரோதி எனக் காண்பதாக கூறுகிறது. அமெரிக்காவை நாட்டின் பங்காளி என்று 9 சதவிகிதத்தினர்தான் ஏற்கின்றனர். ஜனாதிபதி பாரக் ஒபாமா மீது 13 சதவிகிதத்தினர்தான் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்; அமெரிக்கா பற்றி சாதகமான கண்ணோட்டத்தை 16 சதவிகிதத்தினர்தான் கொண்டுள்ளனர்.