World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

The Google Book Search copyright settlement and the future of information

கூகிள் நூல்கள் தேடுதல் பதிப்பு உரிமை உடன்பாடும் தகவல்பிரிவின் வருங்காலமும்

இரண்டாம் பகுதி

By K. Reed
13 August 2009

Back to screen version

கூகிள் நூல்கள் தேடுதல் உடன்பாடு பற்றிய முடிவான இரண்டாம் பகுதியாகும் இது. முதல் பகுதி (தமிழில்) ஆகஸ்ட் 15 அன்று வந்தது.

உடன்பாட்டை எவர் குறைகூறியுள்ளனர்?

கூகிள் உடன்பாடு பற்றி அறிவித்த தேதிக்கும் அக்டோபர் 2009 தொடக்கத்தில் வரவிருக்கும் நீதிமன்றத்தின் இறுதியான நியாய விசாரணைக்கும் இடையே, கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள் என்று AG, AAP ஆல் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் இருக்குமானால் அவற்றை தெரிவிக்குமாறு நீதிபதி டென்னி சின் கூறியுள்ளார். வழக்கில் சேர்க்கப்படாத மற்றவர்களும் இந்த வழக்கின் முடிவு பற்றி கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்களுள் முக்கியமானவை பொது நூலகங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தாங்களே நூலை டிஜிட்டல் முறையில் கொண்டுவரும் திட்டத்தை கொண்டவர் ஆகியோர் ஆவர். இதுவரை நீதிமன்றம் இக்குழுக்களை பரிசீலனையில் இருக்கும் சட்டப் பிரச்சினைகளை மாற்றவோ அல்லது தற்பொழுது நடக்கும் நீதிமன்ற வழிவகையை மாற்றவோ நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

மே 4, 2009 அன்று 139,000 நூலகங்கள் மற்றும் 350,000 நூலகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நூலக சங்கம் (ALA) கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் நூலகங்கள் (ACRL) மற்றும் ஆராய்ச்சி நூலகங்கள் சங்கம் (ARL) ஆகியவை, நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் வாதங்களை அளித்தனர். இந்த வாதங்கள் policybandwidth.com உடைய Jonathan Band என்பவரால் கையெழுத்திடப்பட்டது. இவர் இணையதள தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த சொத்துக்கள் சட்டத்திலும் வல்லுனர் ஆவார். வாத ஆவணத்தின் முக்கிய பிரிவுகளில் இந்த உடன்பாடு எப்படி நூலகங்களுக்கு இடையே சமத்துவமின்மையை அதிகரிக்கும், அதில் எப்படி பயன்படுத்துவோரின் அந்தரங்க பாதுகாப்பு இல்லை என்று விளக்கப்பட்டுள்ளது.

Jonathan Band உடைய ஆவணத்தின்படி உடன்பாட்டில் சந்தை உந்துதலால் வரும் விலை, உயர் கல்வி அமைப்புக்கள் மற்றும் K12 பள்ளிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி குறிப்பாக கூறப்படவில்லை எனத் தெரிவிக்கிறது. ஆவணங்களை பயன்படுத்துவோர் அந்தரங்கத்தை பொறுத்தவரையில் அது கூறுவதாவது: "பயன்படுத்துவோர் அந்தரங்கம் பற்றி உடன்பாட்டில் ஏதும் கூறாமல் இருப்பது கூகிளும் முழுப்பங்கு பெறும் நூலகங்களும் தங்கள் டிஜிட்டல் நூல் பிரதிகளை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையில் உள்ளது."

சங்கங்கள், நீதிபதியை உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒரு தீவிர மேற்பார்வைத் திட்டத்தை நீதிமன்றம் நிறுவ வேண்டும் என்றும் அதுதான் வழக்கில் இருக்கும் கட்சிகளின் நடவடிக்கை அடிப்படை நூலக மதிப்புக்களை சமரசத்திற்கு உட்படுத்தாமல் இருக்கும் என்று கோரியுள்ளன. அத்தகைய மதிப்பில் தகவல் பெறுவதில் சமத்துவம், புரவலர் அந்தரங்கம் மற்றும் அறிவார்ந்தமுறை சுதந்திரம் (intellectual freedom) ஆகியவை அடங்கியுள்ளன.

Internet Archive என்ற இலாபத்தில் இயங்காத கூகிள் நூல்கள் தேடலுக்கு போட்டி அமைப்பின் நிறுவனர் Brewster Kahle ஆவார். இந்த உடன்பாடு வர்க்க செயல்பாட்டையொட்டிய வழக்கில் முன்னோடியில்லாத ஒரு விளைவு ஆகும் என்று Kahle சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிட்டல் காலத்தில் நியாயமான பயன்பாடு என்ன என்றும் அவை மீறப்பட்டால் நிதிய அபராதங்கள் என்ன என்பதையும் சட்டபூர்வ வரையறைக்கு உட்பட்டு தெளிவுபடுத்தாமல், இந்த உடன்பாடு கூகிளின் கரங்களில் இணைய நூல்கள் பற்றிய ஏகபோக கட்டுப்பாட்டை கொடுக்கிறது என்று Kahle கூறுகிறார்.

மே 19, 2009 வாஷிங்டன் போஸ்ட்டில் ''கூகிளால் பிடிக்கப்பட்ட புத்தகம்'' ("A Book Grab by Google") என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் Kahle எழுதுவதாவது: "ஒப்புதல் கொடுக்கப்பட்டு விட்டால், இந்த உடன்பாடு நீதிமன்றங்கள் அனுமதித்த ஒரு அல்ல இரு ஏகபோக உரிமைகளை ஏற்படுத்திவிடும். பல நூற்றாண்டுகளாக பொது நிறுவனங்கள் பெறக் கூடிய தகவல் பற்றிய முழு கட்டுப்பாட்டையும் தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு கூகிளுக்கு அனுமதி கிடைக்கும். சாராம்சத்தில் நம்முடைய நூலகங்களை கூகிள் தனியார் மயமாக்கிவிடும்...

"ஒரு வெளிப்படையான, நிரந்தர உரிமையை நூலை பார்வையிட்டு பதிப்பு உரிமை பெற்றவை, அச்சில் இல்லாத உரிமையற்ற நூல்கள் ஆகியவற்றின்மீது நிரந்த உரிமத்தை கூகிள் பெறும். இத்தகைய நூல்கள் 1923க்கு பின்னர் வெளிவந்தவற்றில் 50 முதல் 70 சதவிகிதம் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த டிஜிட்டல் நூல்கள் அளிப்பவருக்கும் இதே போன்ற சட்டபூர்வ பாதுகாப்பை அனுபவிக்க மாட்டார். இந்த உடன்பாடு ஒரு புத்தக உரிமைகள் பதிவேட்டையும் (Book Rights Registry) தோற்றுவிக்கிறது. அது கூகிளுடன் இணைந்து டிஜிட்டல் நூல்களுடன் தொடர்பு கொண்ட அனைத்து வணிக நிலைப்பாடுகளுக்கும் விலையை நிர்ணயிக்கும்."

இப்பிரச்சினைக்கு Kahle உடைய தீர்வு கூகிளுக்கு கிடைக்கவுள்ள ஏகபோக உரிமையைத் தடுக்கும் விதத்தில் அரசாங்கத்தின் சட்டமியற்றும் துறைக்கு ஒரு முறையீடு வேண்டும் என்று உள்ளது. "செல்வக் கொழிப்புடைய, ஜனநாயக டிஜிட்டல் வருங்காலம் என்பது ஏகபோக உரிமைகளினால் தடைக்கு உட்படும். சட்டங்களும் தடையற்ற சந்தையும் பல புதிய முயற்சிகள், புத்தங்களை விற்றல், கடன் கொடுத்தல் இவற்றில் வெளிப்படையான அணுகுமுறைகளுக்கு ஆதரவு கொடுக்கும். பதிப்பு உரிமை என்ற அகன்ற வெற்றிடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நூல்களைப் பற்றிய கவனம் காட்டுவதற்கு நமக்கு சட்டம் தேவைப்படுகிறது. ஏகபோக உரிமைகள் ஏற்படுத்தப்படுவதை நாம் தடுக்க வேண்டும்; ஏனெனில் அப்பொழுதுதான் நாம் துடிப்புடைய பதிப்பகச் சூழ்நிலையை தோற்றுவிக்க முடியும்."

உடன்பாடு பற்றி இன்னும் தொலைநோக்குடைய எதிர்கொள்ளல் Harvard University Library யின் இயக்குனரான ரோபர்ட் டார்ன்டனிம் இருந்து வந்துள்ளது. பேராசிரியர் டார்ன்டன் எழுதியுள்ள ''கூகிளும் புத்தகங்களின் எதிர்காலமும்'' ("Google and the Future of Books") என்னும் புத்தகம் பெப்ருவரி 12, 2009ல் நியூயோர்க் டைம்ஸ் நூல்கள் பரிசீலனை பதிப்பில் வெளிவந்துள்ளது. அமெரிக்க வரலாற்றுப் பண்பாடு மற்றும் 18ம் நூற்றாண்டு பிரான்ஸ் ஆகியவை பற்றி முக்கிய வல்லுனர் என்று அறியப்பட்டுள்ள டார்ன்டன், அறிவொளிக் காலத்தின் அனுபவம் பற்றி வரலாற்றுப் பரிசீலனை மனிதகுலத்தின் மொத்த படைப்புக்கள் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்படுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி தேடப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

வாசகர்களும் எழுத்தாளர்களும் சுதந்திரமாக தங்களுக்குள் கருத்துப் பறிமாற்றம் நடத்திய படைப்புக்களின் குடியரசு (Republi of Letters) என்று அறிவொளிக்காலத்தின் சீரிய பார்வை சமூகத்தில் இருந்த சமத்துவமின்மையை இல்லாதொழிப்பதை அச்சு எழுத்தின் சக்திமூலம் நிகழ்த்த முற்பட்டனர் என்று டார்ன்டன் விளக்குகிறார். இந்த சிந்தனைகள் எப்படி அமெரிக்காவில் முதல் பொது நூலகங்கள் தோற்றுவிப்பதற்கு சிந்தனைகளை கொடுக்கும் என்றும் விளக்குகிறார். போஸ்டன் பொது நூலகத்தின் முக்கிய நுழைவாயிலில் "Free to all-- அனைவருக்கும் இலவசம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது அனைத்தையும் விளக்குகிறது..." இந்த சிந்தனைகள்தான் அமெரிக்க நாட்டின் நிறுவனத் தந்தைகளை சட்டங்களை நிறுவி அவற்றின் மூலம் பதிப்பு உரிமை, காப்பு உரிமை ஆகியவற்றிற்கு வரம்பு கட்டியது என்றும், அதே நேரத்தில் அவர்கள் "தங்கள் அறிவார்ந்த தொழிலுக்கு நியாயமான நிதி படைப்பாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டனர், ஆனால் பொது நலத்தை தனியார் நலத்தைவிட உயர்ந்ததாக முன்வைத்தனர்" என்றும் அவர் விளக்கியுள்ளார்.

ஆனால் காலத்தின் சமூக-பொருளாதார அமைப்புமுறை, "அறிவொளிக்காலத்தின் அரிய உயர் சிந்தனைகளுக்கு முரணாக உள்ளது. கொள்கைகள் இருந்தபோதிலும்கூட, படைப்புக்களின் குடியரசு செயல்பட்டவிதத்தில் மூடப்பட்ட உலகாக, சலுகை அற்றவர்களால் அடையமுடியாததாக போய்விட்டது." டார்ன்டனும் மற்றவர்களும் அறிவொளிக்காலத்தின் கூறப்பட்ட இலக்குகளுக்கும் கூகிளின் கூறப்படும் நோக்கங்களுக்கும் இடையே சமாந்தரத்தன்மைகளைக் காண்கின்றனர். 18ம் நூற்றாண்டு சமூகத்தின் உண்மை நிலைக்கும், 21ம் நூற்றாண்டு ஆரம்பகால வாழ்வின் உண்மைகளையும் இணைத் தன்மையை காண்கின்றனர்.

ஆனால் டார்ன்ட்ன் எழுதுவதாவது: "இணையதளத்தை அறிவொளிக்காலத்துடன் அடையாளம் காண்பது அப்பாவித்தனமாகும். இணையதளம் ஜெபர்சன் கற்பனை செய்த எதைவிடவும் அறிவை பரப்பும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அது கட்டமைக்கப்படும்போது, ஒவ்வொரு தொடர்பும், உயர்தொடர்பும் பிணைக்கப்படும்போது (link by hyperlink), வணிக நலன்கள் சோம்பேறித்தனமாக ஒதுங்கி உட்காரவில்லை... அவர்கள் தப்பிப் பிழைப்பதற்காக நடத்தும் போராட்டம் ஒரு தன்னலக்குழுவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளது. எவர் வெற்றிபெற்றாலும் அந்த வெற்றியின் பொருள் பொதுமக்கள் நலனுக்கு ஒரு தோல்வி என்பதாகும்."

டார்ன்டன் துயர்படுவதற்குக் காரணம் அமெரிக்க காங்கிரஸும், நூலகப் பேரவையும் 1990களின் தொடக்கத்தில் பொது நலனுக்காக டிஜிட்டல் முறைக்கு மாறுவதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை இழுந்துவிட்டன. "நாம் ஒரு தேசிய டிஜிட்டல் நூலகத்தை தோற்றுவித்திருக்கலாம் --Library of Alexandria உடைய 21ம் நூற்றாண்டின் இணை அமைப்பு என்ற முறையில். இப்பொழுது தாமதம் ஆகிவிட்டது. அந்த வாய்ப்பை அடையக்கூடிய நிலையை இழந்துவிட்டது மட்டும் இல்லாமல், அதையும் மோசமான நிலையில் ஒரு பொதுக் கொள்கைப் பிரச்சினையான தகவல் பெறும் உரிமை மீதான கட்டுப்பாட்டை ஒரு தனியார் வழக்கு மூலம் நிர்ணயிக்கப்பட இருப்பதை அனுமதிக்கிறோம்."

சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை கூகிள் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் கொண்டுள்ள உடன்பாட்டின் ஏகபோக உரிமை பற்றிய உட்குறிப்புக்கள் பற்றி அறக்கட்டளை நெறி-எதிர்ப்பு வகையிலான விசாரணை ஒன்றை தொடக்கியுள்ளது. இதன் பொருள் உடன்பாட்டை நீதித்துறை எதிர்க்கும் என்று இல்லை. ஆனால் கூகிள் பற்றிக் குறைகூறுபவர்களின் கருத்துக்கள் ஒபாமா நிர்வாகத்தின் காதுகளை எட்டியுள்ளன என்பது தெரிகிறது.

அடிப்படைப் பிரச்சினைகள் என்ன?

கூகிள் புத்தகம் தேடல் திட்டத்திலுள்ள மிக அடிப்படைப் பிரச்சினை சுதந்திரமாக, எல்லா மக்களுக்கும் தகவல் தளத்தில் இருக்கும் நூல்கள் அனைத்தையும் பெறுதல் எப்படி என்பதாகும். இந்த வகையில் எத்தகைய கோரிக்கைகள் எழுந்தாலும் அவை உடனடியாக கூகிள், அதன் பங்காளிகள் நிறுவ இருக்கும் வணிகக் கட்டமைப்புக்களால் சவாலுக்கு உட்படுத்தப்படும். தகவல் பெறும் பகுதியில்தான் துல்லியமாக சிக்கல்கள் நிறைந்துள்ளன. அவற்றின் விளைவாக உடன்பாட்டில் அனைத்தையும் அடக்கிய கூறுபாடுகள் இல்லாத தன்மை தெளிவாகிறது.

இந்த உடன்பாட்டின்படி கூகிள் நூல் தேடல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் சேவை (Public Access Service- PAS) என்பதை இலவசமாக ஒவ்வொரு பொது நூலகத்திற்கும், தேவைப்படும் இலாபத்திற்காக நடத்தப்படாத உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கும். இந்தப்பணியில், ஒரு நேரத்தில் ஒரு நபர் பயன்பாடு என்னும் PAS இறுதிவடிவம் இருக்கும் அதில் நூலகத்தில் உள்ள கட்டணத்தொகை தகவல் தளத்தில் இருக்கும் அனைத்து நூல்களின் முழு பொருளுரையையும் காண முடியும். ஒரு பயன்படுத்துபவர் PAS இறுதியிடத்தில் இருந்து வரம்பிற்குட்பட்ட பக்கங்களை பக்கத்திற்கு இவ்வளவு என்ற "நியாயமான" கட்டணத்தை, Book Rights Regsitry ஆல் நிர்ணயிக்கப்படுவதை கட்டி பயன்பாடு பெறலாம். PAS மூலம் கிடைக்கப்பட்ட புத்தகங்களை பிரதி எடுக்கவோ, பகுதிகளை மேற்கோளிட வெட்டி ஒட்டவோ, பயன்படுத்துபவர் செய்யமுடியாது. கூடுதலான இறுதி நிலைத் தளம் நூலகங்களுக்கு ஒரு கட்டணத்திற்கு கொடுக்கப்பட்டாலும், இந்த விருப்புரிமையின் விவரங்கள் இன்னமும் முழுமையாக கொடுக்கப்படவில்லை.

இது ஒன்றும் "அனைவருக்கும் இலவசம்" என்ற முறை இல்லை என்பது வெளிப்படையாகிறது. கூகிளின் Brin தெரிவித்துள்ள, "இந்த உடன்பாடு நம் அனைவருக்குமே உண்மையான வெற்றி/வெற்றி, எல்லா வாசகர்களும் உண்மையில் வெற்றி பெற்றவர்கள்" என்ற கூற்றுக்களை பொய் என்று அம்பலப்படுத்துகிறது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ஒருவர் பயன்பாடு இறுதித்தளம், ஒரு உள்ளூர் நூலகத்தில் உள்ளது, எங்கு எதையும் கட்டணம் இல்லாமல் பிரதி எடுத்தல், அச்சடித்தல் முடியாதோ, அது எப்படி வாசகர்களுக்கு வெற்றி என்பதை பிரதிபலிக்கும்? "நம் அனைவருக்கும் வெற்றி/வெற்றி" என்பது கூகிள் மற்றும் அதன் புத்தகம் தேடல் வணிகப் பங்காளிகளுக்கு என்பதோடு Brin நிறுத்தியிருக்க வேண்டும்.

பதிப்பு உரிமை மீறல் பற்றிய இறுதி வடிவமைப்பு உடன்பாடு ஏகபோக உரிமைப் போக்குகள் பற்றிய சில அக்கறைகளை அரவணைத்துச் செல்லுமே அன்றி, சாராம்சத்தில் இது கொண்டுள்ள ஜனநாயக விரோதத் தன்மை அடிப்படையில் மாற்றப்பட்டு விடாது. ஏனெனில் கூகிள் உரிமையாளர்கள் நலன்கள், அதன் பதிப்புப் பங்காளிகள் நலன்கள் ஆகியவற்றை சமூகத்தின் பெரும்பான்மை மக்களுடைய தேவைகளோடு இயைந்த வகையில் செயல்பட முடியாது.

முதலாளித்துவ முறையின் பொருளாதார அஸ்திவாரங்கள் எழுதுதல், அதைத் தயாரித்தல் மற்றும் இணைய உடன்நிகழ்வில் (online) மக்கள் புதிய டிஜிட்டல் வகை நூல்கள் வழியே நுகர்தல் என்பது பெருநிறுவன உரிமை மற்றும் இலாப உந்ததுதல் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்கு தாழ்த்தப்பட்டுவிடும். சமூகத்தின் இந்த உண்மைகள் புத்தகம் தேடுதல் திட்டத்தின் பிரத்தியேகமான, குற்றம்சார்ந்த இயல்பிற்கு அடிப்படையாகும்.

கூகிளின் புத்தகம் தேடல் தொழில்நுட்பம் சமூகத்தை மனித அறிவு ஜனநாயக மயாமாக்குவதற்கு அருகே சமுதாயத்தை கொண்டுவந்துவிட்டது என்பதில் கேள்விக்கு இடம் இல்லை. அனைத்து அச்சிடப்பட்ட நூல்களையும் மின்னணு வடிவமைப்பில் மாற்றுவதற்கு ஒரு தெளிவான பாதையை நாம் காண்கிறோம் என்பதே இதற்கு நிரூபணம் ஆகும். ஆனால் இருபது, இருபத்தியோராம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவ முறையின் ஒவ்வொரு விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியும், மற்ற முன்னேற்றங்களில் இருப்பதைப் போலவே:

1. முக்கியமான வளர்ச்சி, சிதைவு, தொழில்நுட்ப வரம்புகள் ஆகியவற்றின் பாதிப்பு காணப்படும்.

2. படைப்பாளிகள், கண்டுபிடிப்பவர்கள் ஆகியோரின் உறுதிமொழிகளை நிரப்பமுடியாமல் குன்றிய முறையில், சிதைந்த முறையில் இருக்கும்.

3. அரசாங்கத்தின் இராணுவ-உளவுத்துறை கருவிகளாக மாற்றப்படக்கூடும்.

4. சமூகத்தின் மீதும் முழு மக்கட்தொகை மீதும் பொதுவாக வற்புறுத்தி திணிக்கப்படும் அழிவு சக்திகளாக திரிக்கப்படவும் உதவலாம்.

1926 ம் ஆண்டு வானொலி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகம் (Radio, Science, Technique and Society) என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளபடி, "இயற்கையை அறியும் தர்க்கம், மனித நலனுக்காக அவற்றின்மீது முழு ஆதிக்கம் கொள்ளுதல் என தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவை அவற்றின் தனிப்பட்ட தர்க்கத்தை கொண்டுள்ளன. ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் வெற்றிடத்தில் வளர்வதில்லை. இவை மனித சமூதாயத்தில், வர்க்கங்கள் இருக்கும் சமுதாயத்தில் வளர்கின்றன. ஆளும் வர்க்கம், சொத்துக்களை கொண்டுள்ள வர்க்கம், தொழில்நுட்பத்தையும் அதன் மூலம் இயற்கையையும் கட்டுப்படுத்துகின்றன. தொழில்நுட்பம் இயல்பில் இராணுவவாதம் அல்லது அமைதிவாதம் என்ற தன்மையைக் கொண்டிருக்கவில்லை. ஆளும் வர்க்கம் இராணுவவாதத்தை கொண்டிருக்கும் சமூகத்தில், தொழில்நுட்பம் இராணுவவாதத்தின் கீழ் பணி புரியும்."

இதே போக்குகள்தான் கூகிள் புத்தகம் தேடல் திட்டத்தில் இயைந்துள்ளன; பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடைய உயர் இலக்கு உறுதிமொழிகளால் அகற்றப்பட முடியாதவை. அதேபோல் தாராளவாத, இலாபநோக்கு இல்லாத நடைமுறையின் வாதங்களாலும் அகற்றப்பட முடியாதவை. முதலாளித்துவ சமூகத்தின் ஆழ்ந்த நெருக்கடியினால் தர்க்கரீதியான முடிவிற்கு கொண்டுவரப்படும்போது, உலகின் அனைத்துத் தகவலும் கூகிள் போன்ற பெருநிறுவனத்தின் இலாப நோக்கங்களுக்காக கட்டமைக்கப்படுதல், ஒரு காட்டுமிராண்டித்தன, சமூக, அரசியல் விளைவுகளைத்தான் கொண்டிருக்கும். அத்தகைய விளைவுகள் ஜோர்ஜ் ஓர்வெல் கூட கற்பனை செய்யக்கூடியதை விட தீவிரமாகத்தான் இருக்கும்.

இதற்கு மாற்றீடு ஒரு பகுத்தறிவார்ந்த, உண்மையான தேவையாக, மனித குலத்தின் இலக்கியம் அனைத்தும் வரம்பின்றி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எங்கும் படர்ந்துள்ள இணைய உடன்நிகழ்வின் பட்டியலை சோசலிச முறையில் அமைப்பது ஆகும். வெகுஜன சமூகத்தின் தேவைகளால் உந்தப்பெற்று, பண்பாடு, கல்வி ஆகியவற்றின் மையக் கூறுபாடாக அமைக்கப்படும் விதத்தில், இணைய உடன்நிகழ்வு புத்தக தகவல்தளம் அரசாங்கத்தின் நிதியத்தில் நடத்தப்பெற்று இத்திட்டத்தை வெற்றிபெற செய்யும் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல், தொழில்நுட்பரீதியில் விடயங்களை கொண்டுவருபவர்கள் ஆகியோருக்கும் உரிய இழப்பிட்டு தொகையும் அளிக்கப்படும்.

மக்கள் அனைவரும், அவர்கள் இளைஞராயினும், முதியோராயினும் கல்வி கொடுக்கப் பெற்று, இந்த மனித சாதனை என்னும் ஊற்றின் மூலம் தங்களை எப்படி சீரிய வளர்ச்சியை கொண்டவர்களாக ஆக்கிக் கொள்ளுவது என்ற பயிற்சி அளிக்கப்படும். அத்தகைய நடவடிக்கைகள் ஆழ்ந்த ஜனநாயகத் தன்மை வாய்ந்தவை. அவற்றிற்கு தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் செயல்பாடு சரியான முறையில் இயக்குவதற்குத் தேவை ஆகும். இந்த ஒரு விதத்தில்தான் டிஜிட்டல் சகாப்தத்தில் உறுதிமொழி அடையப்படும். அதில் ஒவ்வொரு தனிநபரும் முழு மனித சிந்தனையிலும் இருந்து பயன் அடைவதுடன் அதற்கு பங்களிப்பும் செய்வர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved