World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian officials exclude WSWS from reporting on Pacific Islands Forum

பசிபிக் தீவுகள் அரங்கம் பற்றி தகவல் கொடுப்பதில் இருந்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தளத்தை ஒதுக்கி வைக்கின்றனர்

14 August 2009

Back to screen version

ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ள Pacific Islands Forum PIF- (பசிபிக் தீவுகள் அரங்கு) க்கு, உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களான Patrick O'Connor, Richard Philips ஆகிய இருவருக்கும் மூன்று நாள் நிகழ்விற்கான செய்தி ஊடக அனுமதியை மறுத்துள்ளது ஒர் அப்பட்டமான அரசியல் தணிக்கைச் செயலாகும்.

அரங்கின் ஆரம்பத்திற்கு முன்னரே உத்தியோகபூர்வ விண்ணப்ப வழிவகைகளை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கொடுத்து முடித்திருந்தாலும், PIF அமைப்பாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் அவர்கள் தடுக்கப்படுவர் என்று கூறுவதற்கு கடைசி நிமிஷம் வரை காத்திருந்தனர்.

WSWS உடைய விண்ணப்பத்திற்கு ஏன் பதில்கள் இல்லை என்ற பல தொலைபேசி அழைப்புக்கள் விடுத்தபின்னர்தான் PIF உடைய செய்தித் தொடர்பு அதிகாரி Laurie Hampton இடம் இருந்து இதற்கான போலிக்காரணம் கொடுக்கப்பட்டது. வலைத் தளம் "ஒரு வாதிடும் குழு" என்று கூறப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உடனடியாக இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 7 அன்று ஹாம்ப்டனுக்கு ஒரு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் கூறப்பட்டதாவது:

அன்புள்ள திரு ஹாம்ப்டன்,

உங்கள் ஆகஸ்ட் 5 மின்னஞ்சல் பசிபிக் தீவுகள் அரங்கு பற்றி தகவல் கொடுப்பதற்கு உலக சோசலிச வலைத் தளத்திற்கு அது ஒரு "வாதிடும் குழு" என்று கூறி செய்தி ஊடக அனுமதியை மறுத்துள்ளதற்கு விடையிறுக்கும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

முதலிலும் முக்கியமானதுமாக, உஙகள் முடிவு அரசியல் உந்ததுல் பெற்றது, பாகுபாடு காட்டும் தன்மை உடையது. நீங்கள் "வாதிடும் குழு" என்பதின் மூலம் என்ன பொருள் கொண்டுள்ளீர்கள் என்பது தெளிவாக இல்லை; அதே போல் உலக சோசலிச வலைத் தளத்தை ஏன் இத்தகைய வகைப்படுத்தலுக்குள் ஒதுக்கியுள்ளீர்கள் என்றும் புரியவில்லை. இதன் உட்பொருள் நீங்கள் சான்று கொடுத்துள்ள மற்ற செய்தி ஊடக அமைப்புக்கள் இத்தகைய முறையில் குறிப்படிப்பட முடியாது என்பது ஆகும்.

News Ltd, Fairfax Media Group இன்னும் பல வானொலி, தொலைக்காட்சி இணையங்கள் அரங்கத்தை நிரப்புவதற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவை, தெற்கு பசிபிக் பகுதியில் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு "வாதிடவில்லை" என்று கூறுவது அப்பட்டமான அபத்தம் ஆகும். ஆஸ்திரேலிய அரசாங்கக் கொள்கையுடன் பொதுவாக அரசியலில் ஒத்துப்போகும் செய்தி ஊடகங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து, அதன் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அந்நிலைப்பாட்டிற்கு நீண்ட காலமாக கொள்கை அடிப்படையில் எதிர்ப்புக் காட்டும் அமைப்பை ஒதுக்கியுள்ளீர்கள். குறிப்பிடப்பட்டிருந்த கடைசி நாளுக்கு முன்னதாகவே அனுமதிக்காக கொடுக்கப்பட்ட எங்கள் விண்ணப்பம் பற்றி உரிய நேரத்தில் நீங்கள் விடையிறுக்காத தன்மையும் முற்றிலும் தொழில் பண்பு கொண்டதல்ல மற்றும் உங்கள் பாகுபாட்டு அணுகுமுறைக்கு மேலும் ஒரு நிரூபணமாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் அதன் முன்னோடியான தொழிலாளர் செய்தி என்பதும் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தெற்கு பசிபிக் பகுதியில் நடக்கும் அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை பற்றி பரந்த, துல்லியமான தகவல்களை அளித்து வந்துள்ளது.

WSWS செய்தியாளர்களை பசிபிக் தீவுகள் அரங்கத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல் என்பது முற்றிலும் ஜனநாயகமற்ற செயல் ஆகும்; பரந்த பொதுமக்களுக்கு தகவல் கொடுப்பதை தணிக்கை செய்யும் முயற்சியாக இது உள்ளது. ஆஸ்திரேலேயா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் எங்கள் வாசகர்களுக்கு உங்கள் முடிவு பற்றி தெரிவிப்போம் என்பதை உறுதியாக அறியுங்கள்.

இறுதியாக WSWS க்கு அரங்கில் பங்கு பெறும் மற்ற செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இன்று வரை, இக்கடிதத்திற்கு பெற்று கொண்டதாக ஒப்புதல் தெரிவித்தல் ஒருபுறம் இருக்க, திரு. ஹாம்டனோ அல்லது மற்ற PIF அமைப்பாளர்களோ எந்த விடையும் அளிக்கவில்லை.

இந்த அரங்கின் போது ரூட் அரசாங்க அதிகாரிகள் திரைக்குப் பின் ஆஸ்திரேலியா தயாரித்த இறுதி அறிக்கையை ஒப்புக் கொண்டு கையெழுத்திட ஒவ்வொரு உறுப்பினர் நாட்டிற்கும் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அந்த அறிக்கை காலநிலை மாற்றம், தடையற்ற வணிகம் மற்றும் பிஜி உட்பட்ட பிரச்சினைகளில் பல பசிபிக் அரசாங்கங்கள் எழுப்பிய கவலைகளை நிராகரித்துள்ளது. (See "Australian government tightens grip over Pacific Islands Forum")

உலக சோசலிச வலைத் தள நிருபர்களை PIFல் கலந்து கொள்வதை தடுக்கும் ரூட்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் சாதாரண உழைக்கும் மக்கள் பிரிவினர், கூட்ட நடவடிக்கைகள் அவற்றின் உட்குறிப்புக்கள் பற்றி நியாயமான, பொதுநிலை தகவல்களை அறிவது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது என்பது தெளிவு. "வாதிடும் குழு" என்ற போலித்தன பெயர் இந்த ஆழ்ந்த ஜனநாயக விரோத முன்னோடி முடிவிற்கு இடப்பட்டுள்ளது, ஆஸ்திரேலிய அரசாங்கம் இனி வருங்காலத்தில் நடத்த இருக்கும் நிகழ்வுகளிலும் WSWS ஐ ஒதுக்க இது பயன்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved