World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US military and intelligence agencies identify climate change as "national security" threat

அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் காலநிலை மாற்றத்தை "தேசியப் பாதுகாப்பு" அச்சுறுத்தலாக அடையாளம் காண்கின்றன

By Patrick O'Connor
11 August 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புக்கள் பூகோள வெப்பமயமாதலின் மூலோபாய விளைவுகளை பற்றி ஆராய்ந்துவருகின்றன என்றும் இதில் இராணுவத் தலையீடுகளுக்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படுகின்றன என்று ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது.

"மாற்றங் கண்டுவரும் பூகோள காலநிலை அமெரிக்காவிற்கு வரவிருக்கும் தசாப்தங்களில் ஆழ்ந்த மூலோபாய சவால்களை கொடுக்கும் அதாவது கொடூரமான புயல்கள், வறட்சி, ஏராளமான மக்கள் குடிபெயர்தல் மற்றும் உலகம் முழுவதும் பரவும் தொற்று நோய்கள் போன்ற இவைகளின் விளைவுகளினால் இராணுவத் தலையீடு பற்றிய வினாக்களும் எழுகின்றன என இராணுவ மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்" என்று டைம்ஸ் விளக்கியுள்ளது. "இத்தகைய தட்பவெப்பநிலையினால் தூண்டப்படும் நெருக்கடிகள் அரசாங்கங்களை கவிழ்க்கக்கூடும், பயங்கரவாத இயக்கங்களுக்கு இரையாக இருக்கும் மற்றும் முழுப் பிரதேசங்களிலும் சீர்குலைவு ஏற்படக்கூடும் என்று பென்டகன் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களிலிருக்கும் பகுப்பாய்வாளர்களும் வல்லுனர்களும், முதல்தடவையாக தட்பவெப்பநிலையின் மாற்றங்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான விளைவுகளில் எப்படிருக்கும் என்பதை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு கூறியுள்ளனர்."

இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்குள் முன்பு தட்பவெப்பநிலை மாற்றத்தின் உட்குறிப்புக்கள் பற்றிய விவாதங்கள் இருந்தன என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது, "ஒபாமா நிர்வாகம் இதை கவனத்தை ஒருமுகப்படுத்திய மையக் கொள்கையாக மாற்றியுள்ளது" என்று பாதுகாப்பு மூலோபாயத்தின் துணை உதவிச் செயலர் அமன்டா டோரி கூறியுள்ளார். இவர் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத் திட்டத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்தையும் இணைக்கும் பணி நடவடிக்கைகான பென்டகன் குழுவில் வேலை செய்து வருகிறார். நியூயோர்க் டைம்ஸிடம் இவர் கடந்த ஆண்டு இப்பிரச்சினை பற்றி இராணுவ சிந்தனைப்போக்கில் ஒரு "கடல் மாற்றம் அதாவது ஆழமான மாற்றம்" ஏற்பட்டதை கண்டதாகக் கூறியுள்ளார்.

போர் செயற்திட்டங்களும் உளவுத்துறை ஆய்வுகளும் பல பாதிப்பிற்கு உட்படக்கூடிய பகுதிகளை--அதாவது துணை-சகாரா ஆபிரிக்க பகுதி, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு, தென்கிழக்கு ஆசியா அடங்கலான பகுதிகளில்--அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உணவு, நீர்த் தட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான வெள்ளங்கள் ஆகியவற்றை எதிர்கொள்கையில், "அமெரிக்கா மனிதாபிமான முறையில் நிவாரணம் அளித்தல் அல்லது இராணுவ விடையிறுப்பைக் கொடுத்தல் என்ற கோரிக்கைகளை " வாய்ப்பு வளமாக அடையாளம் கண்டுள்ளன.

தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்னும் பாதுகாப்புத்துறை நிதியில் இயங்கும் நிலையம் கடந்த டிசம்பரில் பங்களாதேஷில் ஒரு பெரும் வெள்ளத்தின் மூலோபாய நடவடிக்கை வாய்ப்பை பரிசோதிக்கும் ஒரு செயல் பயிற்சியை நடத்தியது. அதாவது இவ்வெள்ளத்தால் நூறாயிரக்கணக்கான அகதிகள் இந்தியாவிற்குள் அனுப்பப்பட்டதோடு, மதப் பூசல்கள் தூண்டிவிடப்பட்டன, தொற்று நோய்கள் பரவின மற்றும் பெருமளவிற்கு உள்கட்டமைப்புகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன.

இப்பொழுது பாதுகாப்புத்துறை அதனுடைய மூலோபாயக் கணிப்புக்களில் தட்பவெப்பநிலை மாற்றங்களையும் உள்ளடக்கி கொண்டுள்ளது. NASA மற்றும் தேசிய சமுத்திர, வளி மண்டல நிர்வாகமானது அதிஉயர் கடற்படை மற்றும் விமானப்படை திட்டங்களிலும் ஆராய்ச்சியிலும் தட்பவெப்பநிலை அடிப்படையில் மாதிரிகளை நடத்தியுள்ளன.

மேலும், நியூயோர்க் டைம்ஸ் விளக்குவதாவது: "பென்டகனும் வெளிநாட்டு அமைச்சகமும் பல ஆண்டுகளாக வெளிநாட்டு வளங்களை சக்திக்கான வளங்களாக நம்பியிருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்துள்ளன. ஆனால் இப்பொழுதுதான் பூகோள வெப்பமயமாதலின் விளைவுகளை அவற்றின் நீண்ட கால திட்ட ஆவணங்களில் கணக்கில் எடுத்துள்ளன. Quadrennial Defence Review இல் தட்பவெப்பநிலை ஒரு பிரிவாக பென்டகன் சேர்த்துக்கொள்ளப்போகிறது, வருகின்ற பெப்ரவரியில், வெளிநாட்டு அமைச்சு அதனுடைய புதிய Quadrennial Diplomacy and Development Review வில் இப்பிரச்சினை பற்றி ஆராயும்."

உணவு, குடிநீர் வழங்கல்கள், வியாதிகள் மற்றும் பெரும் மக்கள் குடிபெயர்வுகள் ஆகியவைகளில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் உள்ளார்ந்த பாதிப்புக்களை பரிசோதிப்பதுடன், இராணுவத்திற்கு நேரடித் தொடர்புகள் இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சில உத்தியோகபூர்வ ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டமைக்கப்பட்டுள்ள பல முக்கிய கட்டமைப்புக்கள் கடல் மட்டம் உயர்தல் மற்றும் தீவிரப் புயல் காற்றுக்களின் பாதிப்பிற்கு உட்படக்கூடியவையாகும். வெர்ஜீனியாவிலுள்ள நோர்போக்கில் அமைக்கப்பட்டுள்ள Atlantic Fleet உடைய தலைமையகம் வெறும் ஒரு மூன்றடி கடல் மட்டம் உயர்ந்தால் மூழ்கிவிடக்கூடும். இதேபோல் இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரிட்டிஷ் கட்டுப்பாட்டு தீவான Diego Garcia லுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம், கடல் மட்டத்திலிருந்து சற்று மிக குறைந்த உயர்மட்டத்தில்தான் உள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் டிகோ கார்சியா முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அங்குள்ள விமானத் தளம்தான் 2001ல் ஆப்கானிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தவும் 1991 வளைகுடாப் போர் மற்றும் 2003 ஆண்டுகளில் ஈரான்மீதான விமானத்தாக்குதல் நடத்தவும் தளமாகவிருந்தது.

காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகள் பற்றிய வாஷிங்டனின் கவலையானது பூகோள மேலாதிக்கத்தில் அதன் குறைந்துவரும் தன்மை மற்றும் ஆசியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா போன்ற இதன் போட்டி சக்திகளிடமிருந்து முக்கிய வளங்களைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான சவால்களுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிடுவதாவது: "ஆர்க்டிக் பகுதியில் பனி உருகுதல் ஏற்பட்டுள்ளதும் இராணுவத்திற்கு புதிய பிரச்சினைகளை கொடுத்துள்ளது. பனிப்பாறைத் தொகுப்பு குறைந்து வருதல் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இது கப்பல் செல்லக்கூடிய பாதையையே ஏற்படுத்தியுள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும், இதைத்தவிர ஏற்கனவே சர்வதேச போட்டியின் குவியமாவிருக்கும் கடலடி வள இருப்புக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்."

கடந்த ஆண்டு National Intelligence Council (NIC) எனப்படும் தேசிய உளவுத்துறைக் குழு பூகோள வெப்பமயமாதலின் தேசிய பாதுகாப்புக்கள் பற்றிய விளைவுகளின் முதல் மதிப்பீட்டை வெளியிட்டது. NIC தலைவரும் தேசிய பகுப்பாய்வு உளவுத்துறையின் துணை இயக்குனருமான தோமஸ் பிங்கார் ஜூன் 25, 2008 அன்று பிரதிநிதிகள் சிறப்புக்குழுகளான உளவுத்துறை மற்றும் சக்திகான சுயாதீனப் பரிவு மற்றும் பூகோள வெப்பமயமாதல் கூட்டுக் குழுக்களின் முன்பு பேசினார் அதாவது, அமெரிக்காவிற்கு "முக்கியமான மூலோபாய இருப்புக்களான எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை தடையின்றி அடைதல்" என்று அவர் குறிப்பிட்டு, காலநிலை மாற்றம் இந்த அளிப்புக்களை பாதிக்கக்கூடும் என்றும் "அதையொட்டி குறிப்பிடத்தக்க புவிசார்-அரசியல் விளைவுகள் எழுக்கூடும்" என்றும் எச்சரித்தார்.

உலகின் பல பகுதிகளின் மூலோபாய உட்குறிப்புக்கள் பற்றி பிங்கார் விவாதித்தார். குறிப்பாக ஆபிரிக்கா பற்றி வலியுறுத்தினார். "அமெரிக்காவின் பொறுப்பிற்குரிய புதிய இராணுவ பகுதியான ஆபிரிக்க கட்டளைப் பகுதி பரந்தளவில் புதிய செயற்பாட்டு தேவைகளை எதிர்கொள்ளக்கூடும்" என்ற முடிவிற்கு அவர் வந்தார்.

பூகோள வெப்பமயமாதல் என்பது அரச செயலர் ஹில்லாரி கிளின்டனுடைய ஆபிரிக்காவின் ஏழு நாடுகளுக்கு அவர் இப்பொழுது மேற்கோண்டிருக்கும் பயணத்திலும் முக்கியமாக வந்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதாவது; "நாடு ஆபிக்காவில் மட்டும் இல்லாமல் பூகோள அரங்கிலும் பெரிய பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக திருமதி கிளின்டன் கூறினார், உதாரணமாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் அது உதவ வேண்டும்."

ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினரும் 2004 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளருமான ஜோன் கெர்ரியும் ஆபிரிக்காவை தன்னுடைய கருத்துக்களில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது ஞாயிறு நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையினால் மேற்கோளிடப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நடக்கும் வறட்சி மற்றும் பாலைவன விரிவடைதலினால் வந்துள்ளதாக அவர் வாதிட்டார். "இது பல முறையும் மீண்டும் வரவுள்ளது என்றும் இன்னும் பெரிய அளவில்வரும்" என்றும் அவர் கூறினார்.

இங்கு தயாரிக்கப்படுவது ஒரு மனிதாபிமான மற்றும் சுற்றுச் சூழல் போலிக்காரணம் கூட இராணுவத் தலையீட்டிற்காக வாஷிங்டனின் மூலோபாய பொருளாதார நலன்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதுதான்.

வெளியுறவு தொடர்பாளர் குழுவின் தலைவராக இருக்கும் கெர்ரி ஜூலை மாதம் காலநிலை மாற்றத்தின் பூகோள பாதுகாப்பு விளைவுகள் பற்றிய இராணுவ, உளவுத்துறை பகுப்பாய்வாளர்களின் சான்றை செவிமடுக்க ஒரு செனட் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். விவாதத்தை தொடக்குகையில் கெர்ரி அறிவித்தார்: "9/11 ஆனது நமக்கு பயங்கரவாதத்திலிருந்து கடல்கள் நம்மை காப்பாற்ற முடியாது என்ற வேதனையான படிப்பினையை கற்றுக் கொடுத்தபோது, இன்று நாம் நம் எல்லைக்கு அப்பால் காலநிலை மாற்றம் நின்றுவிடும் என்று நினைத்தால் நம்மையே ஏமாற்றிக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்.... தோல்வியுற்ற நாடு என்பதற்கான நிலையை நாம் எரியூட்டிக் கொண்டிருக்கிறோம், எங்களுடைய சர்வதேச முறையில் மோசமான செயற்பாட்டுக்காரர்களுக்கு வெளிப்படையான வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்."

The Massachusetts செனட்டர் நியூயோர்க் டைம்ஸிடம் ஒபாமா நிர்வாகத்தின் "உச்ச வரம்பு மற்றும் வணிக" சட்டம் கார்பன் டயாக்சைட் வெளியேற்றப்படுதல் பற்றிய வரம்பு கொண்டுவருதலை ஆதரிக்க மற்ற செனட்டர்களை நாடும் வகையில் "தேசியப் பாதுகாப்பு" பிரச்சினையை வலியுறுத்தி வருவதாகக் கூறினார்.

ஜூன் மாதம் பாராளுமன்றம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் American Clearn Energy மற்றும் Security Act சட்டத்தை நிறைவேற்றியது. இது கிரீன்ஹவுஸ் வாயு (சூழலை மாசுபடுத்தும் வாயு) வெளியேற்றத்தை 1990 தரங்களை விட 4 சதவிகிதம் குறைவாக 2020க்குள் கொண்டுவரவேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது ஐ.நா.வின் IPCC எனப்படும் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவில் காலநிலை விஞ்ஞானிகள் கொடுத்துள்ள பரிந்துரையை விட மிகக் குறைவாகும். அக்குழு முன்னேற்றமடைந்துள்ள பொருளாதார நாடுகளின் வெளியேற்றம் அதே காலத்தில் 25 முதல் 40 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சில காலநிலை விஞ்ஞானிகள் இதைத்தொடர்ந்து சமீபத்திய காலநிலை புள்ளிவிவரங்கள் 2007ம் ஆண்டு IPCC கொடுத்த பரிந்துரைகள் கணிசமானமளவில் தேவையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன என்று வாதிட்டுள்ளனர். ஒபாமாவின் "Cap and Trade" திட்டம் சட்டமாக இயற்றப்பட்டாலும், சுற்றுச் சூழல் விளைவுகளின் கடுமையான பாதிப்பில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் அதையொட்டி புவிசார்-மூலோபாய விளைவுகளும் கடுமையாகத்தான் இருக்கும் தவிர்க்கப்பட முடியாது என்றும் கூறலாம்.

"Cap and Trade" சட்டம் அக்டோபர் மாதம் திட்டமிட்டுள்ளபடி செனட்டிற்கு வருமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும். அது வந்தால் அதற்கு ஆதரவாக போதுமான வாக்குகள் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. சுரங்க நிறுவனங்கள் மற்றும் பல நிலத்தடி நீண்டகால எரிபொருள் தொழில்களுடன் தொடர்புடைய பல ஜனநாயகக் கட்சியினர், பெரு நிறுவனங்கள் மாசுபடுத்துவதுடன் சம்பந்தப்பட்ட எத்தகைய வாயு வெளியேற்ற வணிகத் திட்டத்தையும் ஏற்க தயங்குவர். அவை குறைந்த செலவில் செய்யப்பட்டாலும் இவர்களுடைய நிலைப்பாடு அதுதான்.

மத்திய கட்டளைப் பிரிவின் முன்னாள் தலைவரான தளபதி ஆன்டனி ஜின்னி வெளியிட்ட முன்னைய அறிக்கையையும் நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. "இதற்கு எப்படியும் ஏதேனும் ஒரு விதத்தில் நாம் விலை கொடுத்தாக வேண்டும். இன்று Green house வாயு வெளியிடுதலை குறைப்பதற்கு கொடுக்க வேண்டும் பின்னர் அதையொட்டிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்க வேண்டும் அல்லது பின்னர் இராணுவ வகையில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். அதில் மனித உயிர்களும் தொடர்புடையவையாக இருக்கும்.