World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
72 failures so far this year Three more US banks collapse இதுவரை 72 தோல்விகள் இன்னும் மூன்று அமெரிக்க வங்கிகள் சரிவு By Patrick O'Connor கடந்த வெள்ளியன்று அமெரிக்க கட்டுப்பாட்டு அதிகாரிகள் புளோரிடாவில் இருக்கும் First State Bank, Community national Bank, மற்றும் ஓரேகானில் இருக்கும் Community First Bank ஆகிய மூன்று வங்கிகளை மூடினர். FDIC எனப்படும் கூட்டாட்சி சேமிப்பு காப்பீட்டு நிறுவனம் 185 மில்லியன் டாலரை மூன்று அமைப்புக்களுக்கும் வழங்கி மூடல் செலவுகள் மற்றும் காப்பீட்டு சேமிப்புக்களை கொடுப்பதற்கு அளிக்கும். இந்த ஆண்டு இதுவரை 72 அமெரிக்க வங்கிகள் சரிந்துவிட்டன. 2008ல் மொத்தத்தில் 25ம், 2007ல் 3ம் சரிந்தன. சமீபத்திய வங்கித் தோல்விகள் இன்னும் நிதிய அமைப்புமுறையில் தீர்க்கப்படாத பெறுமதியற்ற சொத்து (Toxic asset) நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றன. வங்கிகளின் கணக்கில் 2 டிரில்லியன் டாலர்கள் மோசமான கடன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இவற்றை இழப்பு என காட்டவும் மறுக்கின்றன, அவற்றை விற்கவும் மறுக்கின்றன. அவற்றின் உண்மையான மதிப்பு கணக்கில் கொடுத்திருப்பதில் மிகச் சிறிய பகுதிதான். பல வங்கிகளின் பிரச்சினைகளை பெருக்கும் விதத்தில் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சுருக்கம் உள்ளதால் நிதியத்துறையில் சரிவுகள் உள்ளன. வணிகப்பிரிவு கட்டிடச் சொத்துக்கள் சந்தையில் சரிவு என்பது இப்பொழுது பெரிதும் அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியின் இறுதியில், 220 பில்லியன் டாலர் மொத்த மதிப்பு உடைய 305 பெயரிடப்படாத நிறுவனங்களை "பிரச்சினைகள் நிறைந்தவை" என்று பட்டியிலிட்டு, அவை சரியக்கூடிய ஆபத்தில் உள்ளன என்று FDIC கூறியுள்ளது. சிறு பிராந்திய வங்கிகள் முதலில் சரியும் விதத்தில் உள்ளன. சமீபத்திய சரிவுகளில் Community National Bank இடம் 97 மில்லியன் டாலர் சொத்துக்கள் மற்றும் 93 மில்லியன் டாலர் சேமிப்புக்களும் இருந்தன. Community First Bank இடம் 209 மில்லியன் டாலர் சொத்துக்களும் 182 மில்லியன் டாலர் சேமிப்புக்களும் இருந்தன. First State இடம் 463 மில்லியன் டாலர் சொத்துக்களும் 387 மில்லியன் டாலர் சேமிப்புக்களும் இருந்தன. இந்த எண்ணிக்கைகள் மிகப் பெரிய அமெரிக்க வங்கிகளில் டாலரில் வைத்துள்ள டிரில்லியன் கணக்கான இருப்புக்களோடு ஒப்பிடப்படுகையில் மங்கலான தொகையாகும். பல சிறிய நிறுவனங்களை அகற்றுதல் என்பது ஒபாமா நிர்வாகத்தின் உதவியுடன் பெரிய வங்கிகள் கொண்டுள்ள மூலோபாய வகைக்குள்தான் இருக்கின்றன. பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வங்கி, நிதியமுறையில் பெறும் மறுசீரமைப்பை கொண்டுவந்து, ஒரு சில பாரிய நிறுவனங்களின் கைகளில் சந்தைப் பங்கையும் பொருளாதார சக்தியின் குவிப்புக்களை கூடுதலாக கொள்ளவும் இது உதவும். ஒபாமா நிர்வாகத்தாலும், மத்திய வங்கிக்கூட்டமைப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பிரச்சனைக்குரிய சொத்துக்கள் உதவித்திட்டம் (TARP) மற்றும் பிற பிணை எடுப்பு நடவடிக்கைகள் Goldman Sachs மற்றும் JP Morgan Chase போன்ற நிறுனவங்களை இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் இலாபங்களை ஈட்ட உதவியுள்ளன. அவற்றின் முக்கிய அதிகாரிகளுக்கு 2008க் முன்பாக இருந்த பல மில்லியன் டாலர் மேலதிக கொடுப்பனவு போன்றவற்றையும் விட அதிகமாக ஊக்கத் தொகைகளை வெகுமதியாக கொடுக்க உதவியுள்ளன. இதற்கு ஓரளவு காரணம் அவற்றின் பெரும் போட்டி நிறுவனங்களான Bear Sterns, Merrill Lynch, Washington Mutual, Lehman Brothers போன்றவை அகற்றப்பட்டுவிட்டதுதான். வங்கிப் பிரிவில் மாபெரும் வங்கிகள் வலைப் பின்னலை தோற்றுவிக்கும் நோக்கத்தை கொண்ட ஒருங்கிணைப்பில் FDIC மத்திய பங்கைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பல வங்கிச் சரிவுகள் கூட்டாட்சி காப்பீட்டு நிதியத்திற்கு 15 பில்லியன் டாலருக்கு மேல் காப்பீடு செய்யப்பட்ட சேமிப்புக்களுக்காகவும் பிற செலவுகளுக்காகவும் ஆகியுள்ளன. இதன் விளைவாக, அது சட்டப்படி கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச இருப்பில் 75 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது. இந்த குறைவை ஈடுகட்ட உதவுவதற்கு, அங்கத்துவ வங்கிகள் மீது ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பல சிறிய அமைப்புக்களின் குறைந்த வருமானங்களையும் பாதிப்பிற்கு உட்படுத்துகிறது. சமீபத்தில் Baltimore Business Journal மேரிலாந்தில் இருக்கும் Sandy Spring Bank ஐ மேற்கோளிட்டுள்ளது. ஜூலை 23ல் அது இரண்டாம் காலாண்டில் $1.15 மில்லியன் இழப்பை அறிவித்துள்ளது. FDICக்கு கூடுதல் கட்டணமாக $1.7 மில்லியன் செலுத்தியபின் இந்த நிலை ஆகும். இன்னும் கூடுதலான கட்டணங்களும் இந்த ஆண்டு பிற்பகுதியில் வசூலிக்கப்பட உள்ளன என கூறப்படுகிறது. அதே நேரத்தில் FDIC தோல்வியுற்ற வங்கிகளை பேர விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. பல நேரத்திலும் மோசமான கடன்களுக்கு இழப்பீட்டு உத்தரவாதமும் கொடுக்கப்படுவதில்லை. "வங்கிகள் தோல்வியை மேற்பார்வையிட்டு சரிபார்க்கும் வேலையில் வங்கியாளர்கள் குறை கூறுவதில்லை." என்று Fortune இதழ் கடந்த மாதம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது. அதில் FDIC இன் இழப்புக்களை பகிர்ந்துகொள்ளும் உடன்பாடுகள் எனக் கூறப்படுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. "இந்த கொடுப்பனவுதான் நிதியத்தின் இழப்பில் நிறுவனத்தை பெறுபவரின் இழப்புக்களை சரிகட்டுவது என்பது மிகவும் உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது." பொருளாதார நெருக்கடிக் காலம் முழுவதும் ஒபாமா நிர்வாகத்தின் மத்திய பணி நிதிய உயரடுக்கின் நலன்களை காப்பதாக இருந்தது. இதற்காக அது அதற்கு வரம்பிலால்லாத வகையில் பொது நிதிகளை கொடுத்துள்ளது. பல தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய வங்கிக்கூட்டமைப்பு இயற்றியுள்ளது. இது பற்றிய பொது விவாதங்களோ, சட்டசபை ஒப்புதல்களோ இல்லாமல் பொதுப் பணங்கள் வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளன. கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் பாதுகாப்பு பத்திர வணிகர்களுக்கு மத்திய வங்கிக்கூட்டமைப்பினால் கொடுக்கப்பட்டுள்ள மிகச் சாதகமான நலன்களை சுட்டிக் காட்டியுள்ளது. அப்பிரிவினர் நிதியத்துறையில் மிகப் பெரிய வாடிக்கையாளர்களாக வெளிப்பட்டுள்ளனர். அதிகாரிகளையும் தொழில்துறை நிர்வாகிகளையும் மேற்கோளிட்டு, செய்தித்தாள் முடிக்கிறது; "வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மத்திய வங்கிக்கூட்டமைப்புடன் செயற்பாடுகளைக் கொண்ட விதத்தில் ஏராளமான இலாபங்களை ஈட்டியுள்ளன. தனியார் துறையில் இருக்கும் அமைப்புக்களுடன் நடத்தும் கொடுக்கல்வாங்கல்களிலும் கடினமான பேரங்களை மத்திய வங்கி நடாத்துகிறதா என்ற வினாக்களை இது எழுப்பியுள்ளது." American International Group (AIG) , எனப்பட்ட தோல்வியுற்ற பாரிய காப்பீட்டு நிறுவனத்தை முறிப்பதற்கு கொண்டிருந்த பங்கில் மத்திய வங்கியிடம் இருந்து பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலரை கட்டணமாக வசூலிக்க உள்ளன. இப்புள்ளி விவரத்தை கணக்கிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "இது வோல் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய ஊதியம் அளிக்கும் நாளை பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது. மிக அதிக நன்மைகளை பெறும் அமைப்புக்களில் Morgan Stanley உள்ளது. அது 250 பில்லியன் டாலர்களை பெற உள்ளது. Goldman Sachs, Bank of America, JP Morgan Chase ஆகியவையும் குறிப்பிட்ட விவரங்களுக்கு பொறுப்பேற்ற விதத்தில் ஆலோசனைக் கட்டணமாக கணிசமாக நிதியத்தை பெறும்.இப்பொழுது 80 சதவிகிதம் அரசாங்க உடைமையானதும் காப்பீடு மற்று நிதியப்பணிகள் நிறுவனமான AIG உடைய பங்குவிலை கடந்த வெள்ளியன்று 18 சதவிகிதம் உயர்ந்தது. எதிர்பாராவகையில் இரண்டாம் காலாண்டில் 1.82 பில்லியன் டாலரை இலாபத்தை அறிவித்ததை அடுத்து இது நிகழ்ந்துள்ளது. 2007 கடைசிக்குப் பின்னர் AIG முதன் முதலாக இப்படி இலாபம் ஈட்டியுள்ளது. அதன் வணிகம் உறுதியடைந்தது மற்றும் ஒரு சாதகமான கணக்கீட்டு மாற்றத்தினால் இது ஏற்பட்டுள்ளது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். AIG தான் நிர்வாகிகளுக்கான ஊக்க மேலதிக கொடுப்பனவுகள் 2009 இரண்டாம் அரைப்பகுதிக்கு என்பதற்காக 249 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. இதில் அதன் நிதிய பொருட்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 93 மில்லியன் டாலரும் அடங்கும். அவர்களின் எஞ்சிய பகுதிகளில் நடத்திய ஊகம்தான் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட சரிந்து போனதற்கு வழிவகுத்தது; அதனால் அரசாங்கத்திடம் இருந்து 173 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பு கிடைத்தது. நிறுவனத்தின் முழு தக்கவைக்கும் திட்டமும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.AIG நிறுவனத்தை திவால்தன்மைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு அளித்த மேலதிக கொடுப்பனவுகள் பற்றி பொதுமக்கள் எழுப்பிய கூச்சலை தொடர்ந்து ஐந்தே மாதங்களில் வந்துள்ளது. இது ஒரு ஆத்திரமூட்டும் தன்மையை கொடுக்கும் விதத்தில் இருப்பதுடன் நிதியத் தன்னலக்குழுவின் திமிர்த்தனப் போக்கையும் பிரதிபலிக்கிறது. கடந்த மாதக் கடைசியில் நியூயோர்க்கின் தலைமை அரசாங்க வக்கீல் வெளியிட்ட அறிக்கை ஒன்று ஒன்பது முக்கிய வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் அரசாங்க பிணை எடுப்பை பெற்றவை, கடந்த ஆண்டு 33 பில்லியன் டாலரை மொத்த மேலதிக கொடுப்பனவாக கொடுத்துள்ளன என்று கூறுகிறது. ஒன்பதில் ஆறு அமைப்புக்கள் ஈட்டிய இலாபத்தைவிட அதிகமாக மேலதிக கொடுப்பனவுகளாக கொடுத்தன. (பார்க்கவும்: "Billions in bonuses for bailed-out bankers")அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான Wells Fargo Bank கடந்த வாரம் தான் அதன் மூத்த நான்கு நிர்வாகிகளுக்கு 400 முதல் 600 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உயரதிகாரியான John Stumpf இனி 900,000 டாலர் அடிப்படை ஊதியத்தை மட்டுமல்லாது 4.7 மில்லியன் டாலர் நிறுவனத்தின் பங்குகளிலும் பெறுவார். பாரிய ஊதிய உயர்வுகள் கூட்டாட்சி விதிகளான மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதை குறைக்க வேண்டும் என்பதை தவிர்க்கும் விதத்தில் உள்ளன. அதுவும் பிரச்சனைக்குரிய சொத்துக்கள் உதவித்திட்டத்தின் பிணையெடுப்பை பயன்படுத்திய நிறுவனங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று உள்ளது. இந்த சட்டபூர்வ வரம்புகள் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களால் பெயரளவிற்கு கூறப்பட்ட நடவடிக்கைகள்தான் என்றும் பெருகிய பொது மக்கள் சீற்றத்தை சமாளிக்க கூறப்பட்டவை என்பதையும் Wells Fargo Bank இன் செயல் இப்பொழுது நிரூபித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களின் சமூக அழிவுச் செயல்கள் மக்களின் பரந்த பிரிவுகளுக்கு கடுமையான இடர்பாடுகளைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நுகர்வோர்களுக்கும் சிறி வணிகங்களின் உரிமையாளர்களுக்கும் கடன் கிடைப்பதில்லை, அல்லது மிக அதிக வட்டி என்று உள்ளது. வெள்ளியன்று மத்திய வங்கி கூட்டமைப்பு அமெரிக்காவில் நுகர்வோர் கடன் என்பது ஜூன் மாதத்தில் ஐந்தாவது தொடர்ச்சியான மாதமாக சரிந்துள்ளது என்று தகவல் கொடுத்துள்ளது. வங்கிகள் தங்கள் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன. இது குறைந்த வருமானம் உடைய பிரிவினருக்கு விகிதத்துக்கு மீறிய முறையில் உள்ளன. நேற்று பைனான்சியல் டைம்ஸ் ஆராய்ச்சி நிறுவனமான Moebs Services அமெரிக்க வங்கிகள் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் பெற்ற கடன்களையொட்டி 38.5 பில்லியன் டாலர்கள் வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளது. "பல வங்கிகளையும் இந்த நிதி நெருக்கடி கூடுதல் கடன் பெற்றது, கடன் அட்டைகள் இவற்றில் வட்டியை உயர்த்தி இலாபங்களை அதிகம் பெற உதவியுள்ளது" என்று பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது. "பணம் பெற அவதியுறும் வாடிக்கையாளர்கள் இத்தகைய கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் கடன்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களில் (Overdraft Revenues) 90 சதவிகிதம் 130 மில்லியன் அமெரிக்காவில் உள்ள சரிபார்க்கக்கூடிய கணக்குகளில் 10 சதவிகிதத்தில் இருந்து அடையப்பட்டுள்ளது. குறைந்த கடன் தர மதிப்பு உடைய நுகர்வோர்கள் கூடுதல் கடன் முதல் பணத்தை வாடிக்கையாக எடுத்துக் கொள்ளுவது நடைபெறுவதுதான் என்று Moebs கண்டுபிடித்துள்ளது." அரசாங்கம் கொடுத்துள்ள ரொக்கம் மற்றும் உதவித் தொகைகளை பெரிய வங்கிகள் பில்லியன் கணக்கில் பெற்று ஊக்கம் அடைந்து அதிக வருவாய்களை காட்டியுள்ள நிலையில், அமெரிக்க தொழிலாளர்கள் ஊதியங்களில் கடும் சரிவைக் கண்டுள்ளனர். வணிகத்துறை ஆகஸ்ட் 4ம் தேதி கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள் ஜூன் மாதம் வரை முடிந்துள்ள 12 மாதங்களில் ஊதியச் சரிவு 4.7 என்று காட்டுகின்றன; இது 1960 களில் இத்தகைய விவரங்கள் பதிவு செய்யப்படுவது தொடங்கியதில் இருந்து மிக அதிக சரிவு ஆகும். தகவல்கள் தனிப்பட்ட வருமானம் மற்றும் நுகர்வோர் செலவு குறைந்துவிட்டதையும் காட்டியுள்ளது. நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பொருளாதார நோபல் பரிசு பெற்ற வல்லுனரான Edmund Phelps வணிகத்துறையின் புள்ளிவிவரங்களுக்கு விடையிறுக்கும் வகையில் Bloomberg தொலைக்காட்சிக்கு பின்வருமாறு கூறினார்: "தங்கள் சொத்துக்களை மறு கட்டமைப்பதற்கு மக்கள் பிரிவு மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மிகநயமாக அத்தகைய கட்டமைப்பு நடந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த செல்வத்தரத்தை அவை மீண்டும் அடைவதற்கு 12 அல்லது 15 ஆண்டுகள் ஆகும். |